Labels
- DURAI SARAVANAN SPEECH
- LATEST NEWS
- MY FAVORITE VIDEOS
- ponnamaravathi news
- pudukkottai news
- pudukkottai rotary news
- SAMAYAL
- school news
- sports news
- story
- TAMIL
- tamil kathai
- TNPSC
- today rasi palan
- whatsapp tips
- YouTube
- இயற்கை விவசாயம்
- இரவின் மடியில்
- இன்றைய பஞ்சாங்கம்
- உணவே மருந்து
- எச்சரிக்கை
- கணினி
- கதை
- கல்வி
- கவிதை
- கிருபானந்த வாரியார்
- கீதாச்சாரம்
- சட்டம் அறிந்துகொள்வோம்
- சமையல்
- செய்தி
- டி.என்.பி.எஸ்.சி
- தத்துவம்
- தமிழ்
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு தத்துவம்
- தினம் ஒரு கதை
- தினம் ஒரு தகவல்
- தினம் ஒரு தமிழ் வார்த்தை
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு நகைச்சுவை
- தினம் ஒரு பழமொழி
- தூய்மை இந்திய
- தேர்தல்
- தேர்தல் விழிப்புணர்வு
- நகைச்சுவை
- நற்றிணை
- நான் ரசித்த வீடியோ பதிவு
- படித்ததில் பிடித்தது
- படித்து சிரித்தது
- புதுக்கோட்டை மாவட்டம்
- பொது தகவல்
- பொன்னமராவதி
- பொன்னியின் செல்வன்
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- மாடி தோட்டம்
- முக்கிய அறிவுப்பு
- மூத்தோர் வார்த்தை
- விவசாயம்
- விழிப்புணர்வு
- வேலை வாய்ப்பு செய்தி
- வேளன்மை

Wednesday, 28 February 2018
ஒரு அன்பு மனைவியின் கடமை
via IFTTT
ஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி? HOW TO GET PORT NUMBER IN AIRCEL
கவனத்திற்கு...


The UPC generation through WEB is identical to IVR based UPC generation Process.
Below is the URL to access the web based UPC generation. Kindly get this functionality checked and confirm
Note : This functionality will not work on LAN and will work only on Internet.
URL : https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html
Hope this helps…..Sincere thanks to everyone involved in this quick help.
STEP 3: SIM Number(Last 5 digits)
STEP 4: CLICK GENERATE UPC

ALTERTNATE METHOD -2
கேள்வி கேட்கும் துபை சகோதரன் இந்த சகோதரனை பாராட்ட வேண்டும்.
via IFTTT
டவர் சிக்னலில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஏர்செல் நிறுவன சிஇஒ சங்கரநாராயணன் அறிவிப்பு
ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை!!!
மின்வாரிய நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!!!
சென்னை மாநகரப் பேருந்துகளில் இனி நடத்துநர்கள் சீட்டில் அமர்ந்துகொண்டு பயணச்சீட்டு வழங்க கூடாது எனப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை படங்களில் நடிக்க விருப்பம்-காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் அடுத்ததாக நகைச்சுவை படங்களில் நடிக்க ஆசை உள்ளதாம். இது குறித்து அவர் அண்மையில் அளித்த பேட்டியில், "நயன்தாரா, அனுஷ்கா கதாபாத்திரம் சார்ந்த கதைகளில் நடிக்கட்டும். ஆனால் எனக்கு நகைச்சுவை படங்களே பிடிக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக அவர் இளம் இயக்குநர்களிடம் ஆர்வமாக கதை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ
இன்றைய தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2,921.
இன்றைய வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.41.60 காசுகள்.
பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.15 காசுகள்.
டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 65.52 காசுகள்.
இன்றைய வெப்பநிலை நிலவரம்
சென்னை :☀அதிகபட்சமாக 33°C, குறைந்தபட்சமாக 24°C
திருச்சி : ☀அதிகபட்சமாக 35°C, குறைந்தபட்சமாக 24°C.
மதுரை : ☀அதிகபட்சமாக 37°C, குறைந்தபட்சமாக 24°C.
கோவை : ☀அதிகபட்சமாக 35°C, குறைந்தபட்சமாக 25°C.
THANK DUTA
காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்
காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும், கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜெயேந்திரர், 1935-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில்பிறந்தார். 1954-ம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994-ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
நடு இரவில் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள்-ஆர்ப்பாட்டத்தில் அதிமுக
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு திருவண்ணாமலை போலீசார் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிமுகவினர் சிலைகளை அகற்றக் கூடாது🚫 என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது😱. இதற்கு முன்னதாக ஏற்கனவே இதுபோல் ஆரணியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் தானம் செய்தார் நடிகை அமலாபால்
அண்மையில் நடிகை அமலாபால் சொகுசு கார் விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதனையடுத்து அண்மையில் அவர் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தனது சர்ச்சை எழுப்பிய காரில் சென்றுள்ளார். அந்த சொகுசு காரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மேலும் இவ்விழாவில் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் அமலாபால். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்😯. புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது” என்று கூறியிருக்கிறார்.
ஜோதிகா இணையும் அடுத்த படம்
நடிகை ஜோதிகா தற்போது நடித்து வெளிவந்த நாச்சியார் படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ஹிந்தியில் வெளிவந்த துமாரி சுலு எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை ராதா மோகன் இயக்கவுள்ளார். தனஞ்சயன் தயாரிக்கவுள்ளார்.மேலும் இதை பற்றி ராதா மோகன் பேசுகையில், ஹிந்தியில் பெரிய அளவில் பாராட்டை வாங்கிய துமாரி சுலு படத்தில் தமிழில் இயக்குவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.மேலும், இப்படத்தில் ஜோதிகா உடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி.முன்னதாக அவருடன் மொழி படத்தில் இணைந்த போது நல்ல புரிதல் இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தை பற்றிய மற்ற செய்திகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி கட்டாத 4.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 4.5 லட்சம் பேருக்கு👥 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😯. சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் ரூ.800 கோடி சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.593 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் பணிக்காக அனைத்து மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வருவாய் துறையினர் வரி வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.மேலும், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது, தபால் மூலம் நினைவூட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கிகளில் ரூ.50 கோடி கடன்பாக்கி வைத்திருந்தால்🏢 சிபிஐ விசாரிக்க உத்தரவு
ரூ.50 கோடிக்கு மேல் கடன்பாக்கி வைத்து ஆண்டுக்கணக்கில் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், சிபிஐயிடம் புகார்தெரிவிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக அதிகரித்ததை தொடர்ந்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி அதை செலுத்தாமல், தப்பி செல்லும் பலரை நினைவுகொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புகாரின் பேரில் சிபிஐ உடனே விசாரணையை துவக்கும். மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Tuesday, 27 February 2018
'நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை'-விஷால்
'நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை'-விஷால்
நடிகர் ⭐விஷால், ஒற்றை தலைவலி காரணமாக 🏛டெல்லியில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்😟 என்று முதலில் கூறப்பட்டது. மேலும், அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ✈அமெரிக்காவில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று செய்திகள் வெளியானது😳. இந்நிலையில் தற்போது ⭐விஷால் இதற்கு மறுப்பு🚫 தெரிவித்து தனது 💻ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்😯.
அதில்💻, "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது😳. என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் நலமாக இருக்கிறேன்👍. எனக்கு ஒற்றை தலைவலி இருப்பதால்😟, அதற்கு சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறேன்😯. இதையடுத்து, வரும் மார்ச் முதல் வாரத்தில் நான் வந்துவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்🔈.
ஸ்ரீ தேவி உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி
ஸ்ரீ தேவி உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி
துபாயில் 😟மரணமடைந்த 💃ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது😳. குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார்😟 என அறிக்கையில்📜 தெரிவிக்கப்பட்டது😱. எனினும், அவரது உடல் நேற்று பதப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் 👮போலீசார் விசாரணை செய்தனர்😯. விசாரணைக்கு பின்னர் 💃ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் 👮போலீசார் 📄அனுமதிக்கடிதம் அளித்துள்ளதாக👍 இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது🔈. மேலும் இன்று இரவுக்குள் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு தனி ✈விமானம் மூலம் நள்ளிரவுக்குள் ✈மும்பை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது😳.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பயணம்-போக்குவரத்து கழகம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பயணம்-போக்குவரத்து கழகம்
📆மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு ✍பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் ✍தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் 🚌பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர 🚌போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, 📆1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு 🏛அரசு பொது ✍தேர்வுகளும் மற்றும் 📆16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது ✍தேர்வு நடைபெறவுள்ளதால், மாணவர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டுமென்றும்🙂, உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு⚖ குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்👍 என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 🏫பள்ளி நேரங்களில் 🚌பஸ்ஸை நிறுத்தி ⌚காலம் தாழ்த்த கூடாது👏 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.
தலைவணங்கு🙏🙏
அசோக மன்னர் ஒரு நாள் தன் நாட்டை சுற்றிக் கொண்டு ரதத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவி, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.
அதைப் பார்த்த அசோக சக்கரவர்த்தி உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கி சென்று அந்த வயோதிக துறவியின் காலில் நெடுஞ்சண் கிடையாக விழுந்தார். துறவியும் தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒரு நாட்டின் மன்னர் ஒன்றும் இல்லாத துறவி காலில் விழுவதா? என்று சங்கடப்பட்டார். அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதைக் கேட்ட அசோக மன்னர் சிரித்துவிட்டு, அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.
ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே! என்று கட்டளையிட்டார். அரச கட்டளையை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் அனுப்பி வைத்தார். ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலையும் ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
மனிதத் தலைக்கு, சுடுகாட்டிற்கு சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள் என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்கு சென்றார்.
ஆட்டுத் தலை அதிக சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை கடைசியில் ஒரு வேட்டைக்காரன் எடுத்துக் கொண்டான். ஆனால் மனிதத் தலையைப் பார்த்தவர்கள் அருவருப்புடன் பின் வாங்கினர். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்! என்றார் அசோகர். ஆனால் இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.
இப்போது அசோக மன்னர், தன் அமைச்சரிடம் பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் துறவிகள். அத்தகைய துறவிகளின் காலில் விழுந்து வணங்குவதில் தவறில்லை என்றார்.
நீதி:,
பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.