https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 31 July 2018

வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் + பதிவுகளை மட்டும் பதிவிடவும்

இந்த தளத்தில்
வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் + பதிவுகளை மட்டும் பதிவிடவும்

மற்ற எவ்வித பதிவுகளுக்கும் அனுமதி இல்லை

இந்த தளத்தில் தங்களுடைய வியாபாரம் மற்றும் தொழில்  - பதிவுகளை பதிவு செய்து
தங்களுடைய தொழிலை அறிமுகப்படுத்துங்கள்

Whatsapp Groupe Link
https://chat.whatsapp.com/5fJr2HQjwYAAiZ2wgAiwyr

Monday, 30 July 2018

சிரிப்ப அடக்க முடியல போங்க...


via

பத்திரிக்கையாளர் பணி அளபெரியது

காவேரி மருத்துவமனை வெளியே இரவு முழுவதும் கருணாநிதி உடல் நிலை குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர் பணி அளபெரியது.                                                                                                                                         பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி

தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல், தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல், தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணையின் போது, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என உச்சநீதிமன்றத்திடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது. இதனையடுத்து தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை, தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது

தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது

அதிகபட்சமாக டெல்லியில் 66, நாடு முழுவதும் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன

போலி பல்கலை., கல்லூரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலர்களுக்கு யுஜிசி கடிதம்

- மத்திய அமைச்சர் சத்யபால் சிங்

காவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்கள்

சென்னை காவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்கள்...         

யமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்

யமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்

தலைநகர் டெல்லியில் யமுனா ஆற்றில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டதன் காரணமாக லோஹா புல் ரயில்வே பாலத்தை நிர்வாகம் மூடப்பட்டது.

யமுனா ஆற்றின் பாலம் மூடப்பட்டுள்ளதால் 27 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழு ரயில்கள் மாற்று பாதையில் மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு

கொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு

திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
                                                                                                                                                                                                                 கர்நாடக மாநில அணைகளின்  உபரி நீர் தமிழகத்துக்குத் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது.
                                                                                                                                                                                                                       இந்த நிலையில், பாசனத்துக்காக கடந்த 19 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி வீதமும் திறக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்பட்டது.   இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூரிலுள்ள கதவணையை வந்த பின்னர், அங்கிருந்து முக்கொம்பு மேலணைக்குத் திறக்கப்பட்டு, அங்கிருந்து முதலில் காவிரியிலும், நீர்வரத்து அதிகரிப்பால் கொள்ளிடத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டது.
                                                                                                                                                                                                      காவிரியில் வினாடிக்கு 30,000 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 47,000 கன அடி வீதமும் முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைப்பால் இந்த அளவு குறைக்கப்பட்டது. இதனால்,  கொள்ளிடக்கரைப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ள அபாயமும் சற்று நீங்கியது.
                                                                                                                                                                                                 இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளிலிருந்து வரும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.  வெள்ளிக்கிழமை  வினாடிக்கு 61,291 கன அடி தண்ணீர் வந்த நிலையில், சனிக்கிழமை அதன் அளவு 68,660 கன அடியாக உயர்ந்தது. இதனால்,  அந்த அணையிலிருந்து திறக்கப்பட்ட  67,000 கன அடி தண்ணீரில், காவிரி டெல்டா பாசனத்துக்காக 30,000 மும்,  உபரிநீர் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட 16 கண் மதகுகள் வழியாக எஞ்சிய நீரும் திறக்கப்பட்டது.
                                                                                                                                                                                     ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 59,135 கனஅடி  வீதம் தண்ணீர் வந்த நிலையில்,  59,714 கன அடி வீதம் திறக்கப்பட்டது.
                                                                                                                                                                                                            எனினும், மாயனூர் கதவணையிலிருந்து திறந்துவிடப்பட்டதன் அடிப்படையில் முக்கொம்பு மேலணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 60,000 கன அடி வினாடிக்கு வந்து கொண்டிருந்தது. இதில் காவிரியில் வினாடிக்கு 25,000 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 35,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  கொள்ளிடத்தில் சனிக்கிழமையைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக 3000 கன அடி திறக்கப்பட்டதால், மீண்டும் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் குறைந்து காணப்பட்டதால் சலவைத் தொழிலாளர்கள் ஆற்றங்கரையோரத்தில் துணிகளைத் துவைத்த நிலையில்,திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகமானதால்,  படித்துறைப் பகுதிகளில் மட்டுமே துவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
                                                                                                                                                                                               கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் தண்ணீரைப் பார்க்க பொதுமக்கள் ஆற்றின் பாலப் பகுதிகளில் நின்று செல்கின்றனர். பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பாலப் பகுதிகளில் நின்று செல்பி எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்த நிலையிலும், பலர் அதை கண்டுகொள்ளாமல் செல்பி எடுத்தவாறு இருந்தனர்.

கருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...

கருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று (ஜூலை 30) காலை 8 மணி முதல் அவரது குடும்பத்தினர்கள், கட்சி நிர்வாகிகள் வரத்துவங்கி உள்ளனர்.
                                                                                                                                                                                                 இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை!

காவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை அறிந்துகொள்ள பல்வேறு பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்

விடுமுறையா?: அண்ணா பல்கலை மறுப்பு

விடுமுறையா?: அண்ணா பல்கலை மறுப்பு

சென்னை : கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இந்நிலையில், இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும், இது வெறும் வதந்தி தான் எனவும் அண்ணா பல்கலை.,யின் பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோ


via

காவேரி மருத்துவமனையில் போலிசார் தடியடி


via

Sunday, 29 July 2018

உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சென்னை நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல அறிவுரை!

மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்குள் சென்றுள்ளனர்.

அனைத்து ஆயுதப்படை காவலர்களும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு!

நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி*

*தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி இரவு 12.30மணி விமானத்தில் கோவையிலிருந்து  சென்னை வருகிறாா்.*

*நாளை காலை 11.15 விமானத்தில்தான் கோவையிலிருந்து சென்னை வருவதாக இருந்தது.*

*தற்போது அவசரமாக முன்னதாகவே வருகிறாா்.*

*நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி*

*முதல்வர் இரவு ஒருமணிக்கு மருத்துவமனை வர உள்ளதால் அதுவரை அறிவிப்பு ஏதும் வர வாய்ப்பு குறைவு என தகவல்*

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நிலையில்-மருத்துவ அறிக்கை விரைவில்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நிலையில்-மருத்துவ அறிக்கை விரைவில்

🌞திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து, இன்னும் சில நிமிடங்களில் அறிக்கை📜 வெளியாக உள்ளது. கருணாநிதி உடல்நிலையை அறிந்து கொள்ள திமுக தொண்டர்கள் 🏥காவிரி மருத்துவமனையை சுற்றிலும் குவிந்துள்ளனர்😳. முன்னாள் 🏛மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் இன்று இரவு, கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்து🗣 சென்றனர். இந்நிலையில் தற்போது குடும்ப 👥உறுப்பினர்கள் அனைவரும் மருத்தவமனையில் வந்துள்ளார்கள்😯. வெளிநபர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்🙄 என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், 👮போலீஸ் பாதுகாப்பு அதிகம் உள்ளதால் பதற்றம்😓 நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..!

சம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..!

வயதான பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சகோதர. சகோதரிகளை பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15% பிடித்தம் செய்ய அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வருகிறது.

கடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி : விஏஓ, டிரைவர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

கடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி : விஏஓ, டிரைவர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

சாயல்குடி : கடலாடி அருகே மணல் கடத்தலை தடுக்கச்சென்ற தாசில்தார் ஜீப் மீது, டிராக்டரை மோதி கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தின்போது விஏஓ, ஜீப் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மலட்டாற்றில் இரவு பகலாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்க கடலாடி தாசில்தார் முத்துலட்சுமி, மலட்டாறு பகுதியில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது கடலாடி அருகே மணிவலசை என்ற இடத்தில் மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில், ஆர்.ஐகள்  மாலதி, கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், உசிலங்குளம் விஏஓ பிரசாத், தலையாரி இருளாண்டி ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதை தாசில்தார் முத்துலட்சுமி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது தாசில்தார் ஜீப் டிரைவர் கண்ணதாசன் அங்கு நின்ற 2 பைக்குகளின் சாவியை எடுக்க முயன்றார். உடனே 2 பேர், தாசில்தார் ஜீப் டிரைவர் கண்ணதாசன், விஏஓ பிரசாத் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். மேலும், டிராக்டர் டிரைவர் வேகமாக ஓட்டி வந்து, தாசில்தாரின் ஜீப் மீது மோதி, அவரை கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஜீப்பின் முன்புறம் சேதமடைந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், வழக்கு பதிந்த கடலாடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தாசில்தார் செல்போனில் பதிவு செய்த வீடியோவின் அடிப்படையில், எம்.கரிசல்குளத்தை சேர்ந்த ராம்குமாரை(23) கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவு!

நீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் அமெரிக்க சொத்துகள் விற்கப்பட்டால், இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் பிஎன்பி வங்கிக்கு உரிமை உண்டு என நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ விமான சேவை தொடக்கம்....

திருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ விமான சேவை தொடக்கம்....

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி நேரடிப் போக்குவரத்தைத் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.

திருச்சி-சிங்கப்பூர் இடையே ஏற்கெனவே, இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் டைகர் (ஸ்கூட்) நிறுவனங்கள் நேரடி விமானப் போக்குவரத்தை நடத்தி வருகிறது. டைகர் தினசரி காலை மற்றும் இரவு வேளையில் என மொத்தம் இரு விமானங்களையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி ஒரு விமானத்தையும் இயக்கி வருகிறது.

தினசரி 3 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையிலும் திருச்சி -சிங்கப்பூர் இடையே விமானத்தில் இருக்கை கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம், திருச்சி மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் நிறுவனமான சில்க் ஏர்வேஸ், ஜெட் பிளஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் கால்பதிக்க, கள ஆய்வுகள் முடிந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் தனது திருச்சி-சிங்கப்பூர் சேவையை தொடங்கவுள்ளது.

பயண கால அட்டவணை: அதன்படி தினசரி அதிகாலை 2.45-க்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் (எண். 6 இ-44) 4.40-க்கு திருச்சியை வந்தடைந்து, மீண்டும் இங்கிருந்து (எண். 6இ 43) அதிகாலை 5.35-க்கு புறப்பட்டு பகல் 12.40-க்கு சிங்கப்பூரை அடையும்.

Friday, 27 July 2018

தலைகீழாக விழும் கோபுர நிழல்...

தலைகீழாக விழும் கோபுர நிழல்...

இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி.

இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது.

அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.

அன்னை பார்வதி, பம்பா தேவி என்ற பெயரில் பூமியில் பிறந்தாள். இத்தலத்தில் தவமிருந்து, சிவனைக் கணவராக அடைந்தாள்.

அரக்கர்களை வெல்வதற்காக வீரம் மிக்க ஆண் குழந்தையை பெற்றாள்.

 பம்பாதேவியை மணந்த சிவன் இங்கு லிங்க வடிவில் கோவில் கொண்டார்.

சிவனுக்கு "பம்பபதி' என்றும், ஊருக்கு "பம்ப ஷேத்திரம்' என்றும் பெயர் ஏற்பட்டது.

இதுவே நாளடைவில் "ஹம்பி' என மாறியது.

கோவிலின் வெளி பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள ஒரு மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது.

இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்திரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து, வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது 



இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சில சமயம் வீடு நரகம் Old age home சொர்க்கம் -சிறுகதை

சிறுகதை

சில சமயம்
வீடு நரகம்
Old age home சொர்க்கம்

"ராதிகா, இப்பத்தான் நம்ம பசங்க பெரியவங்களாகி வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க,  நானும் ரிடைர்ட் ஆயாச்சு.இப்பவவாவது, எங்கப்பாவை வீட்டில் கொண்டு வச்சுக்கலாம். பாவம் அவர், எத்தனை வருஷமா ஓல்ட் ஏஜ் ஹோமில் இருப்பார்.

ராதிகா, சரியென்றாள். ரமேஷுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே ஹோமுக்கு ஃபோன் செய்தான்

சங்கரன் சார். உங்க பையன் ரமேஷ் ஃபோன் பண்ணார். உங்களை வீட்டுக்கு கூட்டிடு போறாராம். ரெடியா இருங்க.

ரமேஷ் தன் தந்தையை காரில் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியெல்லாம் சங்கரன் தன் பேரன் ரவியை பற்றியும், பேத்தி சுஜாதா பற்றியும் நினைத்துக்கொண்டே வந்தார்.

" என்னடா ரமேஷ், வீட்டில் யாரும் இல்லை."

" அப்பா அவுங்களெல்லாம் வேலைக்கு போயிருக்காங்க. சாயந்திரம் வந்துருவாங்க. "

சாயந்திரம் ஆயிற்று, இரவு 9 மணியும் கடந்தது.

என்னடா இன்னும் யாரையும் காணோம்?.

அவுங்களுக்கு வேலை ஜாஸ்தியா இருந்துருக்கும். நீங்க வாங்க சாப்பிடுங்க.

சங்கரன் சாப்பிட்டு உறங்கி போனார்.

காலை 7 மணி

டேய் ரமேஷ், எங்கடா என் பேரக்குழந்தைகள்.

அப்பா அவுங்க காலையிலெயே வேலைக்கு போயிட்டாங்க.

உன் மனைவி ராதிகா என்கேடா?

அவள் நேற்று ராத்திரியே கம்பெனி விஷயமா சிங்கப்பூர் போயிட்டா. வர ஒரு வாரம் ஆகும்.

2 நாட்கள் கழிந்தன.

என்னடா வந்து 2 நாளாச்சு, பேரக்குழந்தைகளை பார்க்கவே முடியல.

அப்பா அவுங்க வேலை அப்படி. சில சமயம் நானே பார்க்க முடியாது.

ரமேஷ். நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதே. என்னை இங்கு கூட்டியே வந்திருக்க வேண்டாம். ஹோமில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் அரட்டை அடித்தால் பொழுது போவதே தெரியாது. நானும் உங்களைப்பற்றி நல்ல நினைவோடு இருப்பேன். என்னை திருப்பி அங்கேயே விட்டுடு.

சரிப்பா. பிள்ளைகளின் கல்யணம் முடியட்டும், நானும் அங்கேயே வந்துடறேன், என்று கூறி, கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

இதுதான் யதார்த்தம், இந்த காலத்தில். யாரும் அய்யோ என் பிள்ளை என்னை ஹோமில் விட்டுவிட்டானே என்று கலங்க வேண்டாம். சில சமயங்களில் வீடு நரகம், ஓல்டேஜ் ஹோமே சொர்க்கம்.

because you meet like minded people there and your thoughts are of same wave length.
நட்புடன்! !!!!!!

கோபக்கார முனிவர்!

கோபக்கார முனிவர்!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன், தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான்.
தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக, மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது சகாவின் நிலையைக் கண்டு கதறி அழுதான்.
இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம், மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்ட, “எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர, சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குரு சுசாந்தரிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா!” என்று சொல்லிவிட்டு தன் குருவைத் தேடிச் சென்றார் சுதீவர்.

தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார் குரு சுசாந்த முனிவர்.
“மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம்!” என்றார். அதற்கு இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார்.
“சுதீவா! விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம்!” என்றார்.
சுதீவர் அந்த மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே கிறங்கிப் போய் அவளையே உற்றுப் பார்க்க, அதனால் கோபமடைந்த அந்தப் பெண், “முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றுகேட்டதும், சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று.
“அடி பெண்ணே! உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய்!” என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள்.
(ச.க.ம.25.7.18🙏🙏)
பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார்.
ஆனால் அவன், “மாதவனுடைய பெண் மிக அழகானவள். அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா? உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா?” என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு ஒருவாறு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்தார்.
சுதீவரை மாதவன் வரவேற்று அமரச் செய்தார். “என் குருவான சுசாந்தர் தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து, என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள்?” என்று கேட்டார்.
“காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு, வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம், பொறாமை, ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும், வாக்கினாலும், உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன்!” என்றார் மாதவன்.
பூஜை, புனஸ்காரம், தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர், “நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா?” என்றார்.
“கடவுள் என்னிலும் இருக்கிறார்.

 மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் உறைகிறார். அவரைத் தனியாக பூஜையோ, தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே, அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும்!” என்றார் மாதவன். சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது.
“நீர் நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படக் கூறுகிறீரா?” என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார்.
“சுவாமி! நான் உங்களைப் பற்றியோ, உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்!” என்றார் மாதவன் பணிவுடன்.
கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். “உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய்!” என்று சாபமிட்டார்.
ஆனால், மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன், “சுவாமி! சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான்!” என்று மன்னிப்புக் கேட்டார்.
“மாதவா! என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை. நீ என்ன மகாத்மாவா?” என்றார் சுதீவர்.

சுவாமி! அப்படியில்லை. காட்டுவாசி, அழகான இளம்பெண், வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து தங்கள் தவவலியை நஷ்டமாகிவிட்டது. நான் மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன்.
“அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும்.

உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும்!” என்றார்.
தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த சுதீவர் மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில், தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார்.
“தவத்தினால் பல சக்திகளை அடையலாம்.

ஆனால், தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும், பிறருக்கு உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்டவனுமான ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான்!” என்றார்.
“குருவே! இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா?” என்று சுதீவர் சந்தேகம் கேட்டார்.
“மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது!” என்றார் சுசாந்த முனிவர்.
“குருவே! முன்னைவிட என் தவவலிமையை அதிகமாக்குவேன். நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன்!” என்று கூறி விடை பெற்றார் சுதீவர்...
நட்புடன்! !!!!!!!

நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில்


நார்த்தமலை முத்துமாரியம்மன்..

 முத்துமாரியம்மன் கோயில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.  கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை  ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைப்பை கொண்டுள்ளது இத்திருத்தலம்.  மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால்  கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் கனிவுடன் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன்.  கட்கம், கபாலம், டமருகம் மற்றும்  சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன்.   

நார்த்தாமலையில் இருந்து 4 கல் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம்.  இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள்  ஒருவர், வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில் தினமும் நடந்து செல்லும் போது குறிப்பிட்ட ஓரிடத்தில் ஏதோ ஒன்று  காலில் இடருவதும் இதில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தது.  இதனால் வயல்களில் வேலை செய்து  கொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார் குருக்கள்.  அந்த இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று  தென்பட்டது.  உடனே ஒரு அசரீரி குரல் கேட்டது “அருகில் உள்ள மலையடிவாரத்தில், சிவனார் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள்.  சுற்றியுள்ள ஊர் மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான்  காப்பாற்றுகிறேன்” என்றது அந்த குரல்.
அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோயில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.   இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று  பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்,       

பெருமைமிக்க நார்த்தாமலையில் குடி கொண்டிருக்கும் முத்துமாரியம்மன், சக்தி  மிக்க திருத்தலமாகப் புகழ் பெற்றதற்கு மலையம்மாள் என்ற பெண் காரணம், அப்பெண்மணியை பற்றி  பார்ப்போம்,வேட்ட வலம் என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது.  வேட்ட வலம் ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவள்  தான் மலையம்மாள்.  சிறு வயதில் மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்கியதால் ஜமீன்தார், மலையம்மாளைத்  தூக்கிக் கொண்டு நார்த்தாமலை மாரியம்மன் கோயில் வாசலில் விட்டுச் சென்றுவிட்டார்.  அம்மை நோயால் தகிக்கும்  வெப்பத்தில் தவித்த சிறுமியின் குரல் கேட்டு, கண் திறந்த முத்துமாரியம்மன், மலையம்மாளுக்கு அருள்புரிந்ததால் உடல்  முழுவதும் பரவியிருந்த முத்துகள் அந்த நிமிடமே சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.மலையம்மாள், கோயிலை சுத்தப் படுத்துவதும், அம்மனுக்கு முன்னே அமர்ந்து தவம் இருப்பதும் என இங்கேயே வாழ்ந்து  உள்ளார். முத்துமாரியம்மன் தன் பூரண அருளை மலையம்மாளுக்கு வழங்கினாள். இதன் பின்பு குறைகளும் கவலைகளுமாக  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தாள் மலையம்மாள்! அவளது அருள்வாக்கு பலித்தது;  முத்துமாரியம்மனை வணங்கி, மலையம்மாளிடம் அருள்வாக்கு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். மலையம்மாள் கோயிலை விரிவுபடுத்தி எழுப்பினாள்.  பிறகு பிரசித்தி பெற்ற தலமானது நார்த்தாமலை.கோயிலுக்கு சற்று  அருகில் உள்ளது மலையம்மாள் சமாதி! ஆண்டு தோறும் வேட்டவலத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினர், இங்கு வந்து  மலையம்மாளுக்கு பலியிட்டு, பூஜை செய்து வழிபடுகின்றனர்.

#தீர்த்தம்
ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், தளும்பு சுனை, பாழுதுபடா சுனை, (சுனை என்பது மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று நிலை).

#தலவிருட்சம்             
வேம்பு

நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள்  முத்துமாரியம்மன்.  ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர்  பெற்றாள்.   

தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில்  நார்த்தாமலை என மருவியதாக பெருங்களூர் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகள் மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை,  ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, பொன்மலை, மண்மலை என எண்பதுக்கும் மேற்பட்ட சிறிய குன்றுகள் உள்ளன.  இவை  அனைத்தும் இலங்கையில் இராமன் – இராவணன் நடத்திய போரின் போது மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து  சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே மலையைத் தூக்கி வரும் போது  அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் குன்றுகளாக, மலைகளாக உள்ளது.

இந்த மலைப்  பகுதிகளில் அரிய மூலிகைகள் பலவும் இப்போதும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.

இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில் வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது.  இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது ,முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி  எடுத்தும் வழிபடுகின்றனர்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் பங்குனியின் இரண்டாம் ஞாயிறு பூச்சொரிதல் விழா; 3-ம்  ஞாயிறு அம்மனுக்கு காப்புக் கட்டுதல்; 4-ம் ஞாயிறு அன்று எட்டாம் நாள் திருவிழா; மறுநாள் திங்கட்கிழமை தேரோட்டம்;  பத்தாம் நாள் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுகிறது.  பக்தர்கள் நார்த்தாமலையில் திரண்டு வந்து அம்மனின் அருள் பெற்றுச்  செல்கின்றனர்.   

ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  அம்மை, திருமணத் தடை, பிள்ளை  வரம், தீராத நோய், ஓயாத கவலை என கண்ணீரும் கம்பலையுமாக தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக  அருள்பாலிக்கிறாள்,

முகூர்த்த நாளில், கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

மேலமலைகுச் செல்லும் வழியில் உள்ள தலையருவி சிங்கம் என்னும் சுனை (மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று  நிலை) ஒன்று உள்ளது.  இச்சுனையின் கிழே லிங்கம் ஒன்று உள்ளது, அப்பெருமானுக்கு ஜிரஹரேஸ்வரர் என்று பெயர்.  இச்சுனை நீரை இறைத்து பின் இப்பெருமானுக்கு வழிபாடு நடந்து வருகிறது. நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்து,                   

நலத்தை  அள்ளித் தருபவள்.  இந்த முத்துமாரி அம்மன் என்றும், அவள் அருளால் தான் புதுக்கோட்டை மாவட்டமே செழிப்பாக இருக்கிறது ,அம்மைநோய் கண்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கரும்பு தொட்டில் கட்டி  வேண்டினால் பலன் உண்டு என்பது நம்பிக்கை....

இலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்!

இலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்!

கூகுள் டாக்ஸ் (Google Docs) செயலியில் பயனர்களின் இலக்கணப் பிழைகளைத் தானாகவே சரிசெய்யும் புதிய அம்சம் ஒன்றை அந்த நிறுவனம் சோதித்து வருகிறது. கிராமர் சஜெஷன்ஸ் (Grammar Suggestions) என்ற பெயரில் உருவாகிறது இந்த அம்சம். இது ஏற்கனவே கூகுள் டாக்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஸ்பெல்-செக்கிங் (Spell-checking) அம்சத்துடன் இணைக்கப்படும்.

இன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம்


இன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம்


21ம் நூற்றாண்டிலேயே மிக நீளமான முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது 103 நிமிடங்கள் நீடிக்கும். இதைப் பார்வையிட சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று ஏற்படவுள்ள முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிகிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும். மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது. அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029ம் ஆண்டு, ஜூன் மாதம் 25ந் தேதி நிகழும், அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும் என்பது கூடுதல் தகவல். இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பதனையடுத்து, இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.