Sunday, 26 April 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .


இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

Fb��கடவுளும், திராவிடர் கழக
தமிழனும் - ஒரு உரையாடல்
----------------------------------------------------
(கடவுளை சந்திக்கும் வாய்ப்பு
திராவிடர் கழக தமிழன்
ஒருவனுக்கு கிடைக்கிறது..
எனவே தமிழன் உரையாடலை
துவக்குகிறான் )
தமிழன் : என்ன கடவுளே எப்படி
இருக்கீங்க..
கடவுள் : கடவுளை பார்த்தே எப்படி
இருக்கீங்கவா..
தமிழன் : யாரையும் எதிர்த்து
கேட்கும் துணிவை எங்களுக்கு
பெரியார் போதித்திருக்கிறார்.
கடவுள் : அப்புறம் ஏனப்பா இந்து
மதத்தை மட்டும் எதிர்த்து கேள்வி
கேக்குரீர்கள்.. என் பார்வையில்
அனைத்தும் என்னிடம்
சேருபவையே..
தமிழன் : மூட நம்பிக்கைகளை
எதிர்த்தவர் பெரியார்.. சிலை
வழிபாட்டை எதிர்ப்பவர் பெரியார்..
கடவுள் : அப்புறம் ஏனப்பா
அவருக்கு ஊருக்கு ஊர் சிலை
வச்சிருக்கீங்க..
தமிழன் : நாங்க சிலை
வச்சிருக்கோமே தவிர
வழிபடலையே..
கடவுள் : அப்படியா.. அப்போ அந்த
சிலைக்கு மாலை அணிவிச்சு..
வணக்கமும் வைக்குரீங்களே.. அது
என்ன..
தமிழன் : அது வழிபாடில்லை..
மரியாதை..
கடவுள் : அதையேதான்
இந்துமதத்தில் தினமும்
செய்கிறார்கள். அதையும்
மரியாதை என்று எடுத்துகொள்ள
வேண்டியதுதானே..
தமிழன் : எங்களை குழப்பாதீங்க
கடவுளே.. நாங்க அப்படித்தான்
இந்து மதத்தை எதிர்ப்போம்.
கடவுள் : அது அப்படியே
இருக்கட்டும்.. அந்த பெரியவரை
ஏன் பெரியார் என்று
அழைக்குரீர்கள்??
தமிழன் : அவர் மக்களுக்காக பல
நல்ல அறிவுரைகளை சொல்லி
இருக்கிறார்..
கடவுள் : அப்படியா.. உனக்கு மகன்
இருக்கிறானா தமிழா..
தமிழன் : இருக்கிறான்.
கடவுள் : அவனை தினமும்
குளிக்க சொல்வாயா..
தமிழன் : காலையிலேயே
குளிச்சிடனும்.. இல்லைனா
எனக்கு கோபம் வந்திடும்..
கடவுள் : ஏன் கோபம் வரணும்.. அந்த
பெரியார் பல நாள் குளிக்க
மாட்டாராமே.. அதையே நீங்களும்
பின்பற்றலாமே..
தமிழன் : அது அவருக்கு சரியா
இருக்கும்.. நமக்கு சரி வராது..
கடவுள் : உனக்கு அப்பா
இருக்கிறாரா..
தமிழன் : என்ன பேசுறீங்க
கடவுளே.. அப்பா இல்லாம நான்
எப்படி..
கடவுள் : அவசரபடுறியே.. உன்
அப்பா இப்பொழுது இருக்கிறாரா
என்கிற அர்த்தத்தில் கேட்டேன்.
தமிழன் : அப்படி தெளிவா
கேளுங்க.. என் அப்பா 75 வயசுல
கின்னுன்னு இருக்கிறார்.
கடவுள் : உன் அம்மா இப்பொழுது
இருக்கிறார்களா.
தமிழன் : இல்லை கடவுளே.. அவங்க
போயி பத்து வருஷம் ஆவுது..
கடவுள் : அப்போ உங்கப்பாவுக்கு
ஒரு 20 வயசு பொண்ணா பாத்து
கலியாணம் செய்து
வைக்குரதுதானே..
தமிழன் : எங்கப்பன் உன்கிட்டே
தனக்கு கலியாணம்
வேணுமின்னு கேட்டானா..
வீட்டுக்கு போயி அவனுக்கு
வச்சிக்குறேன்.. 20 வயசு
பொண்ணு கேக்குதா அவனுக்கு..
சாவப்போற வயசுல.. 50 வயசு
குறைச்சலா பொண்ணு
கேக்குதா..மவனே..
கடவுள் : ஏனப்பா கோபம்
வருகிறது.. அந்த பெரியார்
தன்னைவிட 60 வயது குறைந்த
பெண்ணை திருமணம்
செய்துகொண்டபொழுது உனக்கு
இந்த கோபம் வரவில்லையே..
தமிழன் : அது அவர் வீட்டு
சமாச்சாரம்.. பொண்ணு
கொடுத்தவன்தான் கோபப்படனும்..
கடவுள் : உனக்கு தமிழ் மொழி
பிடிக்குமா
தமிழன் : என்ன அப்படி
கேட்டுட்டீங்க.. தமிழ் என் உயிர்..
தமிழ் என் மூச்சு..
கடவுள் : அந்த பெரியார் தமிழை
காட்டு மிராண்டிகள் மொழின்னு
சொன்னாரே.. நீ
காட்டுமிராண்டியா..
கடவுள் : அது சரி.. இப்போ
சொல்லு.. ஒரு ஆள்
குளிக்கிறதில்லை.. 80 வயது
தாண்டியும் திருமண ஆசை
விடவில்லை.. உன் மொழியையும்
குறை சொல்லுகிறார்.. இதை
எல்லாம் ஏற்றுகொள்ளாத நீ, அவர்
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும்
எதிர்ப்பதை ஏன் ஏற்றுகொண்டாய்.
தமிழன் : ( யோசிக்கிறான்)
கடவுள் : ஒரு குறிப்பிட்ட மதத்தை
மட்டும் எதிர்ப்பதும் மூட
நம்பிக்கைதான். உள்நோக்கத்தோடு
ஒருவன் ஒரு காரியத்தை
செய்யும்பொழுது, அந்த
உள்நோக்கத்தை அறிந்துகொள்ள
முயற்சி செய்.. அதற்குத்தான்,
மனிதர்களுக்கு அறிவை
கொடுத்திருக்கிறேன்.
தமிழன் : கடவுளே.. நான் ஒன்னு
கேக்குறேன்.. பதில் சொல்லு.. நீ
இந்துவா, முஸ்லிமா,
கிறித்துவனா அல்லது
வேறெதுவுமா..
கடவுள் : நான் எதுவுமே இல்லை..
உனக்குள் இருக்கும்
நம்பிக்கைதான் நான்.
ஒவ்வொருவர் ஒரு உருவாக
என்னை நினைக்கிறார்கள்.. நான்
அனைவருக்கும் பொதுவானவன்.
தமிழன் : அப்போ இந்துக்கள் மட்டும்
பல ஆயிரம் கடவுள்களை
வழிபடுகிறார்களே.. அது
தவறுதானே..
கடவுள் : உன் எண்ணம் தவறு
என்றுதான் சொல்வேன்..
ஒவ்வொருவருக்கும் தனி
எண்ணங்கள் உள்ளது. அதன்படி
அவர்கள் வழிபடுகிறார்கள். ஆனால்
அனைத்திலும் இறுதியாக
இருப்பது நானே.. அதனை அவர்கள்
புரிந்துள்ளார்கள்.
தமிழன் : அப்போ அவங்க செய்யும்
பல காரியங்கள் இப்பொழுதைய
நடப்புக்கு ஒத்து
போகவில்லையே.. அது மூட
நம்பிக்கைதானே..
கடவுள் : உன்னை பொருத்தவரை
அப்படி நினைக்கிறாய். ஆனால்
ஏதோ ஒரு காலத்தில் ஒத்து
போனதால்தான் அவர்கள் இன்றும்
அதனை கடைபிடிக்கிறார்கள்
என்று எடுத்துகொள்.
தமிழன் : என்னவோ சாமி..
எனக்கொண்ணும் புரியலை..
நான் கிளம்பனும்.. நாளைக்கு
பெரியார் நினைவுநாள்..
மாலை வாங்கணும்..
கடவுள் : எல்லாவற்றையும்
புரிந்துகொள்ளும் அறிவை நான்
மனிதர்களுக்கு வழங்கவில்லை.. நீ
நினைவுநாள் என்று சொல்வதை,
இந்துக்கள் திவசம் என்று சொல்லி
அவரவர்கேற்ப வழிமுறைகளை
செய்கிறார்கள்.. இது புரிகிறதா.
தமிழன் : அப்போ நாளைக்கு
பெரியாருக்கு திவசமா.. ஐயரை
கூட்டிகிட்டு போயி சாங்கியங்கள்
செய்ய வேண்டுமா..
இதை கேட்ட கடவுள் சிரித்து
கொண்டே மறைந்து விடுகிறார்

அனைவருக்கும் இனிய ஞாயிறு காலை வணக்கம். இன்று விடுமுறை வீட்டில்  இருந்து ஒரு  வாரம்  நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய தகவல்களை இந்த குரூப்பிர்க்கு அனுப்பும் முயற்சி செய்வீர்கள். இம்ம்ம் ஆரம்பம் ஆகாட்டும் பட்டையை கிளப்புங்கள்

இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:

இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:

✨தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨ நிறைய புத்தகம் படியுங்கள்.
✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
✨ மன்னிக்கப் பழகுங்கள்.
✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Tuesday, 21 April 2015

ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும்,
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை,  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை  இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும்,
அனைவரும் அறிவர்.
"ஓம்" என நாம் ஒலிக்கும்போது,  பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த,  ஒரு சம்பவமே காரணம் ஆகும்.

29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து,  அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக,  அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி,
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு,
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து,  ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,

1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு,  உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
"ஓம்".
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை,  அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக,  உள் காது,  இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை,  சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி "ஓம்" ன் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில்குர்ஜர்.
அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார், அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.
இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள்  இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

Saturday, 18 April 2015

தமிழ்

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

ஆங்கிலம்----- முடியாது
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!

திருடன்

இரண்டு நண்பர்கள்
வெகு நாள் கழித்து
சந்தித்தனர்
எனக்கு 4 பசங்க
என்ன செய்றாங்க?
1 வது பையன் BE
2 வது பையன் MBA
3 வது பையன் Ph.D
4 வது பையன் திருடன்
திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?
என்ன பண்றது
அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்
மத்தவங்க எல்லாம்
jobless..

கொஞ்சம் சிரிங்க, கொஞ்சம் யோசிங்க பாஸ்...

கொஞ்சம் சிரிங்க, கொஞ்சம் யோசிங்க பாஸ்...

1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள் கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள முடியும்"...
மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு மீண்டும் போக மாட்டான்...
ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு...

பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
சங்க நண்பர்கள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு சங்கம் பொருப்பேற்க்காது....

Friday, 17 April 2015

மூன்று தலைகள்

$மூன்று தலைகள்! -$

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!