Friday, 31 August 2018

வீடு தேடி வரும் பணம்: நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

வீடு தேடி வரும் பணம்: நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்த திட்டத்திற்காக ஏற்கெனவே 800 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 650 அஞ்சலகங்களில் இந்த திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் , கேம்பிரிட்ஜ் கேட்டரிங் காலேஜ் மற்றும் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்த தான முகாம் .

அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் ,  கேம்பிரிட்ஜ் கேட்டரிங் காலேஜ் மற்றும்  அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்த தான முகாம் .

 நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் சொ.கவிகார்த்திக் தலைமைதாங்கினார். செயலாளர் ர.தினேஷ் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி 3000த்தின் மக்கள் தொடர்பு இணைச்செயலர் கண.மோகன்ராஜ், வானவில் திட்டத் தலைவர் ஜெ.ராஜேந்திரன், பட்டயத்தலைவர் ச.தெட்சிணாமூர்த்தி முன்னாள் தலைவர் மு.கான் அப்துல் கபார்கான் மருத்துவ முகாம் திட்டத் தலைவர் சி.விஜய் கல்லூரி தாளாளர் ரோட்டரியன் அப்துல் பாரி மற்றும் இரத்த தான திட்டத் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பித்து  அரசு மருத்துவமனையைச் சென்றடைந்து நிறைவுப் பெற்றது.

 பின்னர் இரத்த தான முகாம் தொடங்கி 35 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.   
 
 சென்னை பெருநகர காவல் ஆணையர் சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரை.

நேற்று பட்டாக் கத்தியை சாலைகளில் தேய்த்தவாறு பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ததையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரை.

எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும்- ஆணையர் விஸ்வநாதன்.

எனது தாத்தா காவலர்; எனது தந்தை எஸ்.ஐ; நான் அரசு பள்ளியில் படித்தவன்.

கிராமத்தில் இருந்து வந்து மாநில கல்லூரியில் படித்தது பிரமிப்பாக இருந்தது- காவல் ஆணையர் விஸ்வநாதன்.

மாணவர்கள் ஒருசிலர் செய்யும் தவறால், மற்ற மாணவர்கள் மீதும் தவறான எண்ணம் ஏற்பட்டு விடுகிறது- ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பக் கூடாது.

குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் அன்பாக உதவும் மனப்பாங்கை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்- ஏ.கே.விஸ்வநாதன்.

டோர் டெலிவரி ஆகும் அரசு சர்டிஃபிகேட்ஸ்: கேஜ்ரிவால் அசத்தல்!

டோர் டெலிவரி ஆகும் அரசு சர்டிஃபிகேட்ஸ்: கேஜ்ரிவால் அசத்தல்!

டெல்லி மக்களுக்கு அம்மாநில அரசின் 100 விதமான சேவைகள் வீடு தேடி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்தான் இந்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளார். பள்ளி, சாதி, திருமணம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் என அரசின் சேவைகள் வீட்டுக்கே தேடி வரும் இத்திட்டம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி அமலுக்கு வருகிறது

சுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் உயர்வு...

சுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் உயர்வு...

சென்னை: - தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை 72.9 கி.மீ. தூர நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, திருச்சி- திண்டுக்கல் 82.27கி.மீ. சாலையில் பொன்னம் பலப்பட்டி சுங்கச் சாவடி உள்பட 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ரூ.1.09 வசூலிக்கப்படுகிறது.

பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் கி.மீ.க்கு ரூ.2.02 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது போல் மற்ற 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் பெருமளவில் கட்டணம் வசூலாகிறது. ஆனால் சாலைகள் பராமரிப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

குமாரபாளையம்- செங்கம் பள்ளி சாலையில் விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் நாள்தோறும் 80,413 வாகனங்கள் செல்கின்றன. இதன் மூலம் தினமும் ரூ.19.47 லட்சம் வசூலாகிறது. ஆனால் இந்த சாலை 40,000 வாகனங்கள் செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டது. அதைவிட இரு மடங்கு வாகனங்கள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ல் சுங்கச்சாவடிகளில் கி.மீக்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் இப்போது ரூ.1.08 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படும் சுங்கச்சாவடிகள் வருமாறு:-

1. நல்லூர் (சென்னை- தடாசாலை), 2. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), 3.எலியார்பத்தி (மதுரை- தூத்துக்குடி), 4. கொடைரோடு (திண்டுக்கல்- சமயநல்லூர்), 5. மேட்டுப்பட்டி (சேலம்- உளுந்தூர்பேட்டை), 6. மன்வாசி (திருச்சி-கரூர்), 7. விக்கிரவாண்டி (திண்டி வனம்- உளுந்தூர்பேட்டை).

8. பொன்னம்பலம்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), 9. நந்தக்கரை(சேலம்-உளுந்தூர் பேட்டை), 10. புதூர் பாண்டியபுரம் (மதுரை- தூத்துக்குடி), 11. திருமந்துரை (ஊளுந்துர்பேட்டை- பாடலூர்), 12. வாழவந்தான் கோட்டை (தஞ்சை- திருச்சி), 13. வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), 14. விஜயமங்கலம் (குமார பாளையம்- செங்கம் பள்ளி). #Tollgate

வருகின்ற நாளை 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வருகின்ற நாளை 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த வாக்காளர் பட்டியலில்   புதிதாக பெயர் சேர்த்தல்  பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை  09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது. 

இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள்  அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து  தங்களை இணைத்து கொள்வதற்காகவும் ,  பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்  இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து சிலிக்கான் மணலை கடத்தி வந்து கலப்படம் செய்து விற்பனை

ஆந்திராவிலிருந்து சிலிக்கான் மணலை கடத்தி வந்து கலப்படம் செய்து விற்பனை

🔹🔸சென்னை செங்குன்றத்தில், ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக சிலிக்கான் மணல் கடத்திவந்து, அத்துடன் கட்டுமானத்துக்கு தகுதியற்ற மணலை கலப்படம் செய்து வந்த 3 குடோன்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

🔹🔸கட்டிடங்கள் கட்ட தகுதியற்ற மணலை சிலிக்கான் மணலுடன் கலப்படம் செய்யும் குடோன்கள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஏராளமாக இயங்குவதாக புகார் எழுந்தது. கனிமவளத்துறை, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம், சென்னை காவல் ஆணையரிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தனர்.

🔹🔸ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக சிலிக்கான் மணல் கடத்தி வரப்பட்டு, கூவம் முகத்துவாரத்தில் அள்ளப்படும் கடற்கரை மணல், பழவேற்காடு உப்புநீர் ஏரியில் அள்ளப்படும் மணல், சவுடு மணல் ஆகியவை குடோன்களில் கொட்டி கலப்படம் செய்யப்படுகிறது என புகாரில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணிகளுக்கு சிறிதும் தகுதியற்ற இந்தக் கலப்பட மணலை,  கட்டுமானத்துக்கு ஏற்றது எனக்கூறி விற்பனை செய்வதாகவும், நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கலப்பட குடோன்கள் இயங்குவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டன.

🔹🔸இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் செங்குன்றம் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டது. அதில், செங்குன்றம் வடகரை என்ற இடத்தில் மணல் கலப்படத்தில் ஈடுபட்டிருந்த 3 குடோன்களை கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றுக்கு சீல் வைத்தனர். கலப்படத்துக்காக மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 லாரிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல, இன்னும் ஏராளமான இடங்களில் மணல் கலப்படம் செய்யும் குடோன்கள் இயங்குவதாகவும், அவை அனைத்திலும் ஆய்வு செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமையை காப்போம்..கரம்கோர்ப்போம்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமையை காப்போம்..கரம்கோர்ப்போம்!

வணக்கம்.நமது அரசாங்கம் தூய்மை பாரத இயக்கம் - ஊரகம்,2014ஆம் ஆண்டு துவங்கபட்டது. அதன் கீழ் நமது ஊரக பகுதிகளில், தனிநபர் இல்லக்  கழிப்பறைகள்  , திடக்கழிவு மேலாண்மைகான ஏற்பாடுகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மைகான   ஏற்பாடுகள்  செயல்படுத்தபட்டு வருகிறது.   இதன்மூலம் நம் ஊரகப்பகுதிகளில் பொது சுகாதாரம் மேம்பட்டிருக்கிறாதா  என்று ஆய்வு செய்ய தூய்மை கணக்கெடுப்பு-ஊரகம் 2018 துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் நம் அனைவரும் பங்குபெறுவதற்கு "SSG 18" என்ற app ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த appஐ download செய்து  நம் கிராமத்தின் சுகாதார நிலை எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது  என்ற விவரத்தினை நம் பதிவு செய்ய வேண்டும். Appஐ download செய்ய இந்த linkஐ https://play.google.com/store/apps/details?id=com.fmgizmo.ssg அழுத்தவும். அதற்குபின் மொழி தேர்வு செய்யவும். அதற்கு பின் மாநிலம் 'தமிழ்நாடு' மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினை தேர்வு செய்து நான்கு கேள்விகளுக்கு பதில் அளித்தால்  போதும். ஐந்து நிமிடங்களுக்கு மேல் எடுக்காது. பங்கேற்றபின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளவும்

Pls share the message at your user groups.

புதுக்கோட்டையில் நாளை மின்தடை அறிவிப்பு 1.9.18

மின் தடை அறிவிப்பு

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சார்லஸ்நகர், கீழராஜவீதி, நிஜாம்காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், கலீப்நகர், மருப்பணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பு-துக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராமசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Thursday, 30 August 2018

புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்ததை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்க தலைவர் கண.மோகன்ராஜ் சம்பவ இடத்தில் இருந்து  உதவி செய்த போது

வருமான வரித்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. கணக்கை முடிக்காவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை!

வருமான வரித்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. கணக்கை முடிக்காவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை, கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. நாளைக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும் என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணியை தாண்டி தாக்கல் செய்யப்படும், அனைத்து கணக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர்,ரூ. 1,000 தாமத கட்டணமும், ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள், ரூ.5,000 தாமத கட்டணத்துடன், டிசம்பர் 31க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல்

கறம்பக்குடி ரோட்டரி சங்கம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சீனிக்கடை முக்கத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணார்வு பிரதி பலிப்பான் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் v.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் s.மாரியப்பன் கலந்து கொண்டு வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்புநிற வில்லை ஸ்டிக்கர் ஒட்டினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் m.k.ஆரோக்கியசாமி வரவேற்றார். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கோஷங்களை முன்னாள் தலைவர் P.ஜோதிமணி படிக்க அனைவரும் சேர்ந்து சொன்னார்கள.; ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் s.சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் ஜெ.ஜேம்ஸ், k.சுரேஷ், அப்துல்கரீம,; பகர்தீன், t.ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக  செயலாளர் a.அந்தோணிசாமி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
                           

கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் தேசிய தலைவர்கள்: சென்னையில் தடபுடல் ஏற்பாடுகள்

கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் தேசிய தலைவர்கள்: சென்னையில் தடபுடல் ஏற்பாடுகள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக தனது 95 வயதில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு துறையினரும் புகழஞ்சலிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற பெயரில் புகழஞ்சலிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில்  உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில்,  முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர்  குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சுரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி மாநில முதல்வர் நாரயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்  சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி  டெரிக் ஓ.பிரெய்ன், இந்திய யூனியன் மூஸ்ஸீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக, பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்திற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீளம் 40 அடி அகலத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கில் 15,000  பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மைதானத்தில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு 15,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேசிய தலைவர்களின் பாதுகாப்பிற்காக வருகை தரும் காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Wednesday, 29 August 2018

பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்திக்கு பூஜை வைபோகம் செய்ய தாங்களுக்கு ஏதுவான விநாயகர் பொம்மைகள் தயார் நிலையில் உள்ளது.. 

#தயார் #நிலையில் #விநாயகர்....
பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்திக்கு பூஜை வைபோகம் செய்ய தாங்களுக்கு ஏதுவான விநாயகர் பொம்மைகள் தயார் நிலையில் உள்ளது.. 
தேவைக்கு தொடர்பு எண்கள்.. அழ.இளையராஜா 9842064728  அழைக்கவும்...

சென்னையில் 7 மணி நேரம் பவர் கட் : உங்க ஏரியா இந்த லிஸ்டில் இருக்கா?


சென்னையில் 7 மணி நேரம் பவர் கட் : உங்க ஏரியா இந்த லிஸ்டில் இருக்கா?

சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டேன்ஜெட்கோ) அறிவித்துள்ளது.எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்ற விவரங்கள்  பின்வருமாறு...

இந்திரா நகர் பகுதி : கஸ்தூரிபாய் நகர் 1வது தெரு முதல் 3வது மெயின் ரோடு, கொனல் பேங்க் ரோடு ஒரு பகுதி, 2, 3வது குறுக்கு தெரு கஸ்தூரிபாய் நகர், கோவிந்தராஜ்புரம் 1வது மற்றும் 2வது தெரு, சர்தார்பட்டேல் ரோடு ஒரு பகுதி.பெசன்ட் நகர் பகுதி : ஆர்.பி.ஐ குடியிருப்பு 14முதல் 28வது குறுக்கு தெரு, 32 முதல் 35வது குறுக்கு தெரு, 4வது மெயின் ரோடு பெசன்ட் நகர், 2வது அவென்யூ , மத்திய பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்புவேளச்சேரி பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, கே.ஆர். ராமசாமி நகர், குருநானக் கல்லூரி, ரானே மதரஸ், வேஸ்டர் கெட்ல் ஓட்டல், ஸ்பான்சர்.உஸ்மான் ரோடு பகுதி : கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, பிள்ளையார் கோயில் தெரு, பாலு முதலி தெரு, கோலமாமணி அம்மன் கோயில் தெரு, பார்த்தசாரதிபுரம், அபிபுல்லா சாலை, தியாகராய கிராமணி தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, உண்ணாமலை அம்மாள் தெரு , ராமகிருஷ்ணா தெரு, விவேகானந்தா தெரு, சாரி தெரு, பசுல்லா சாலை, கிருஷ்ணன் தெரு, கிருஷ்ணசாமி தெரு, ஆனந்தன் தெரு, ராமசந்திர தெரு, காந்தி தெரு, வண்டிபாதை தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, வாசன் தெரு, கிரிபித் சாலை, தஞ்சாவூர் சாலை, மாம்பலம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, லஷ்மி நரசிம்மன் தெரு, துரைசாமி, சாலை, ரங்கன் தெரு, ராமேஸ்வரம் சாலை ஒரு பகுதி, உஸ்மான் சாலை ஒரு பகுதி, சோமசுந்தரம் தெரு, வியாசர் தெரு, கோட்ஸ் சாலை, முருகேசன் தெரு, கோவிந்தன் தெரு, பிரகாசம் சாலை, கன்னய்யா தெரு, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, லஷ்மணன் தெரு, பாகிரதி அம்மாள் தெரு, சாரங்கபாணி தெரு, சதாசிவம் தெரு, திருமூர்த்தி தெரு, திருமலை பிள்ளை சாலை, தங்கவேல் தெரு, பின்ஜாலா சுப்ரமணியன் தெரு, அனுமந்தா தெரு, ரங்காசாரி தெரு, பத்மநாபன் தெரு, சாம்பசிவம் தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ராகவய்யா சாலை.சேத்துபட்டு பகுதி : கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை, பி.சி. ஹால்டல் ரோடு, நௌரோஜி ரோடு, மெக்கனிக்கல்ஸ் ரோடு, ஹரிங்க்டன் ரோடு, பழைய செனாய் நகர், குருசாமி ரோடு, சேத்துபட் ஜெகநாதபுரம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டேர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் 1வது தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீத்தா நகர் 2வது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, அவென்யூ ரோடு, பொன்னாகிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் சாலை, மங்களாபுரம், பிருந்தாவனம்.வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் பகுதி : 2, 3, 4 வது குறுக்கு தெரு உதயா குரியன் நகர், 1வது பிளாக் முதல் 17வது பிளாக் வரை மற்றும் 5வது, 6வது மெயின்ரோடு, 1 முதல் 4வது லிங்க் தெரு வரை, சத்திய மூர்த்தி நகர் 24வது பிளாக் முதல் 28வது பிளாக் வரை, சாமியார் தோட்டம் 3 மற்றும் 4வது தெரு ஒரு பகுதி.வில்லிவாக்கம் பகுதி : திருநகர், திருமங்கலம் ரோடு, தெற்கு ஐ கோர்ட் காலனி, நியூ ஆவடி ரோடு, எம்.டி.எச். ரோடு(பகுதி), எம்பார் நாயுடு தெரு, ஆதி நாயுடு தெரு, திருவெங்கட தெரு, ராஜா தெரு, லட்சுமி தெரு, லட்சுமிபுரம் 1 முதல் 3வது தெரு வரை.வில்லிவாக்கம் ஐ.சி. எப். பகுதி :தந்தை பெரியார் நகர் 1,2,3வது தெரு, பி.வி. கோயில், வடக்கு மற்றும் மேற்கு தெரு, வெள்ளாள தெரு, திரு.வி.க. தெரு, குஞ்சிதம் குருசாமி தெரு, காமராஜ் தெரு, பட்டாசாரியார் தெரு, முத்தம்மன் கோயில் தெரு, முத்தம்மன் நகர், ஆதி அந்திரா நகர்.வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதி : சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், சி.டி.எச். ரோடு, தெற்கு ஜெகநாதன் நகர், அகத்தியர் நகர் M,N,O,P,Q பிளாக் பொன்விழா நகர், ராஜாஜி நகர், தெற்கு, வடக்கு ஹைகோர்ட் காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட தெரு, பெருமாள் கோயில் வடக்கு, தெற்கு மாட தெரு, ரெட்டி தெரு, பாளையம்மன் கோயில் தெரு, பாரதி நகர், வில்லிவாக்கம்.ஈஞ்சம்பாக்கம் பகுதி : ஆலிவ் ஸ்டண்ஸ், ஜுகு பீச், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், பாரதி தெரு, அருணா, கே.கே.ஆர். பாஃம்.

Tuesday, 28 August 2018

கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 3.25 லட்சத்தில் புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

              புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சியில் மதுரை மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மதுரை மெட்ரோ ரோட்டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் சார்பாக சுமார் 4 இலட்சம் மதிப்பிலான கழிவறைக்கட்டிடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ,நாப்கின் எரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது, ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ஏ.எல்.சொக்கலிங்கம் தலைமையேற்றார் ,மதுரை மெட்ரோ ரோட்டரி சங்க மேனாள் துணை ஆளுநர் VST.PL.சிதம்பரம் , மேனாள் தலைவர் அருனாசலம் ,தலைவர் அருன்விஜய் மாலி,செயலாளர் அருன்அமர்நாத் மற்றும் பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆர் .யூ.இராமன்,வெள்ளைச்சாமி, இரமேஷ்,ஆறுமுகம்,முரளிதரன் ,வெங்கடேசகுப்தா,சிதம்பரம் பள்ளி முதல்வர் முருகேசன்,ஊராட்சி ஒன்றிய துணை ஆனையாளர் வெங்கடேஷ், வட்டாரவளமைய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார்,பயிற்றுநர் சரவணன்மற்றும் பலர் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை மேனாள் ஊராட்சிமன்ற தலைவர் ப.முருகேசன் செய்திருந்தார்                                                                                                 

பொன்னமராவதி அருகே வலையப்பட்டி சிதம்பரம் பதின்மப்பள்ளியில் நடைபெற்ற ரோட்டரி இண்ட்ராக்ட் கிளப் துவக்கவிழா...

                  பொன்னமராவதி அருகே வலையப்பட்டி சிதம்பரம் பதின்மப்பள்ளியில் நடைபெற்ற ரோட்டரி இண்ட்ராக்ட் கிளப் துவக்கவிழா விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் தேர்வு அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்ராக்ட் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சிதம்பரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் சிதம்பரம், மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் கண.மோகன்ராஜ் மதுரை மெட்ரோ சங்கத் தலைவர் பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தலைவர் முன்னாள் தலைவர் ராமன்  பள்ளித்தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள்  கலந்த கொண்டனர்                                                                                                                         

கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

முப்பெரும் விழா
           கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. ரோட்டரி பிரர்த்தனையை மதியழகன் வாசித்தார்.
          முதல் நிகழ்ச்சியாக தலைவர் வு.குருசேவ்-மகேஸ்வரி, மு.ரகுநாதன் - சு.சுமதி, ஏ.அறிவழகன்-யு.பாலாமணி தம்பதியினரின் திருமண நாள் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
           இரண்டாவது நிகழ்ச்சியாக ரோட்டரியின் சேவையினை பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்லும் விதமாக அனைத்து இருசக்கர வாகனங்களிலும் கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரதிபலிப்பானை கரம்பக்குடி ரோட்டரி சங்கத்தலைவர் சதாசிவம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.மு.ஆரோக்கியசாமி இணைந்து வெளியிட மண்டல ஒருங்கிணைப்பாளர் னுச.ஏ.N.சீனிவாசன் மாவட்டச் செயலாளர் து.ராஜேந்திரன் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
          மூன்றாம் நிகழ்ச்சியாக கந்தர்வகோட்டை பகுதியில் வியாபாரம் செய்யு; பத்து ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச நிழல் குடைகள் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் க.மோகன்ராஜ் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார். துணை ஆளுநர் ஊ.அருண்குமார் இரண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.
           கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் யு.அந்தோணிசாமி, வழக்கறிஞர் ளு.ஆசைத்தம்பி, டு.வைரக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள். வுpழாவில் முன்னாள் தலைவர்கள் மு.நரேந்திரன், ஆ.கணேசன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ரோட்டரி நங்கையர்கள், குழந்தைகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ளு.குணசேகரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
               திருமயம் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா யுமுP மஹாலில் தலைவர் ளு.பாவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சென்ற வருட அறிக்கையினை செயலாளர் ஊ.வு.குமார் வாசித்தார். 2018-19-ம் ஆண்டின் தலைவராக அ.சொக்கலிங்கம், செயலாளராக மதியழகன், பொருளாளராக ஆ.சுப்பையா ஆகியோருக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பட்டயத் தலைவர் மு.கருப்பையா வரவேற்றார். முன்னாள் தலைவர் யுP.அருண், கணக்காளர் ளுP.உலகப்பன் மக்கள் தொடர்பு இணைச் செயலாளாளர் மாருதி.க.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ளு.சீனிவாசன், துணை ஆளுநர் ஏசு.வெங்கடாச்சலம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்கள.; மாவட்ட நிதியக்குழு செயலாளர் மீனா சுப்பையா சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு ரோட்ரி சங்கத்தின் சேவைகள் குறித்தும், நோக்கம் குறித்தும் பேசினார். மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரோக்கியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தண்ணீர் டேங்க், மின் மோட்டார் பொருத்தி இணைப்பு வழங்க (ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்பு) அதனை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார். கம்மங்குடிப்பட்டி தூய மைக்கேல் சிறுவர் இல்லத்திற்கு ரூபாய்.4000ஃ- மதிப்புள்ள குழந்தை தொட்டில் வழங்க அதனை பள்ளி நிர்வாகி மாரிக்கண்ணு பெற்றுக்கொண்டார். அரசினர் பிற்பட்டோர் மாணவியர் விடுதிக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2016-17 ஆம் ஆண்டு மாவட்ட ஆளுனர் முருகானந்தத்தின் கனவுத்திட்டமான பெண்களுக்கான இன்சினேட்டர் நாப்கின் எரியூட்டு இயந்திரம் ரூபாய் 25000ஃ--ம் மதிப்புள்ள இயந்திரத்தை விடுதிக் காப்பாளர் பெற்றுக்கொண்டார். அரசினர் தொழிற்பயிற்சியில் படிக்கும் மாணவன் ப.கோபிநாதன் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூபாய்.5000ஃ-வழங்கினார். ஆதரவற்ற தாய்மார்களான அ.லெட்சுமி, கமலம், கருப்பாயி ஆகியோருக்கு தலா 1500ஃ-வழங்கப்பட்டது.
               ஆதரவற்ற மாணவி செல்வி.நாகலெட்சுமி என்ற மாணவிக்கு கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000ஃ- வழங்கப்பட்டது. ஆதனை மாவட்ட ஆளுனர் கரங்களால் வழங்கி பேசும் போது எனது ஆண்டின் முதன்மைத்திட்டம் ரோட்டரி மகிழ்ச்சி கிராமத் திட்டம் ஆகும். மாவட்ட அளவில் இதற்கென ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் சங்கங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஊக்கமும், ஆக்கமும் அளிப்பார். 500 வீடுகள் அல்லது 2000 மக்கள் தொகைக்கு கீழ் உள்ள சிறு கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டம். கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், வேலை வாய்ப்புப் பயிற்சி, மகளிர் மேம்பாடு குடிமக்கள் நலன் அக்கறை, சமுதாய மேம்பாடு போன்ற ரோட்டரி மகிழ்ச்சி கிராமத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய சேவைத்துறைகளாகவும் தத்தெடுக்கப்பட உள்ள கிராமத்தின் மக்கள் தொகை புள்ளி விபரங்களை முதலில் சேகரிக்க வேண்டும். கிராமத்தின் பெயர், ஆண்கள் எண்ணிக்கை, பெண்கள் எண்ணிக்கை, ஆறு வயதிற்குட்பட்டவர் எண்ணிக்கை, முதியோர்கள்; எண்ணிக்கை, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து ரோட்டரி சங்கங்கள் இத்திட்டத்தினை முதன்மையான திட்டமாக செயல்படுத்தவேண்டும் என்றார். புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அ.சொக்கலிங்கம் ஏற்புரை வழங்கும் போது ஆளுனரின் கனவுத்திட்டத்தை ஏற்கும் விதமாக கிராமத்தை தத்து எடுத்து திட்டத்தை அமல்படுத்தி கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர் ராஜசேகரபாண்டியன், P.கணேசன், டாக்டர்.கிருஷ்ணகுமார், ஊ.அழகப்பன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு), ளு.வள்ளிக்கண்ணு, ஐ.சையது ரிஸ்வான், சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் முடு.முத்துராமன், N.கலியுகவரதன், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வுpழாவினை சுஆ.லெட்சுமணன் தொகுத்து வழங்கினார் நிறைவாக செயலாளர் ளு.மதியழகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.Sunday, 26 August 2018

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.....!

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.....!  • தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

  • இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.

  • பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.

  • பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்.

  • பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை..!


மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை..!
மும்பைச் சிறையில், மல்லையாவுக்காக, 3 மின்விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஐ ஒதுக்கியுள்ளது.

மேலும், நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில்
சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார். தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.
ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்றும், இந்தியச் சிறைகளில் தான் சித்ரவதை செய்யப்படலாம்; தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் என்று மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார்.

குறிப்பாக, இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்றும் அவர் புகார் கூறிவருகிறார்.
லண்டன் நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில் எழுப்பியது.
மல்லையா அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது.
இதையடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் அறையில்தான் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறை எப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்துமான வீடியோவை ஒன்றை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.

◼“ஆர்தர் சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில், நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி டிவி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவ வசதிகளும் இருக்கின்றன; மேலும், மல்லையா தங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்; எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால் அவருக்கு அறையில் நூலகமும் அமைத்து கொடுக்கப்படும்என்று வசதிகளை சிபிஐ அடுக்கியுள்ளது.

இதனை லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறைசெல்வோரெல்லாம் சித்ரவதை செய்யப்படும் நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபருக்கு சொகுசு வசதிகள் செய்துதரப்படுவது பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.