https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 31 January 2019

புதுக்கோட்டை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட  ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்டார்.

*புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 I 2019 நாளை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 - சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 56ஆயிரத்து 262 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 25ஆயிரத்து 523 பேர்களும், பெண்கள் 6 லட்த்து 30 ஆயிரத்து 708 பேர்களும், இதர வாக்காளர்கள் 24 பேர்களும் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்..*.

*கந்தர்வகோட்டை - 189106*

*விராலிமலையி-208972*

*புதுக்கோட்டை - 226762*

*திருமயம் - 2,11,974*

*ஆலங்குடி - 2,00058*

*அறந்தாங்கி - 219390*

மொத்த  வாக்காளர்  12562 02

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு? மக்களின் உரிமை குரல் கையப்பம்


ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டையில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

31.01.2019 அன்று ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டையில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  கூட்டம் சுமார் இராண்டாயிரத்து நூற்றி ஐம்பது மாணவிகள் பங்கேற்றனர் மேற்ப்படி நிகழ்ச்சியில் கல்லூரிதாளாளர் ஐp.தனசேகரன் அறங்காவலர் கிரு~;ணமூர்த்தி கவிஞர் மு.பாலசுப்ரமணியன் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ப.செந்தாமரை  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

Tuesday, 29 January 2019

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90-வது பிறந்தநாள் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90-வது பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் டாக்டர்.சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா, மாநாடு மற்றும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, பேச்சு, நடனம் கட்டுரை, பாட்டு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நகரத் தலைவர் பி.அசோகன் வரவேற்றார். குழந்தைகள் நலமருத்துவர் ராம்தாஸ், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.ஆறுமுகம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளை வாழ்த்தி கவிஞர்.ஜீவி வாழ்த்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 740 மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆர்.வெங்கடேசன், வழக்கறிஞர் வாகை.எம்.சேகர், காவல் ஆய்வாளர் எஸ்.பன்னீர்செல்வம், ஓவியர்.ஆறுமுகம், வி.பழனியப்பன், எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன், எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் மொத்தம் சுமார் 850 பேர் கலந்து கொண்டனர். விழாவினை புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கதலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தொகுத்து வழங்கினார். நிறைவாக கவிஞர்.புதுகை புதல்வன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.





Monday, 28 January 2019

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து குடியரசு தினவிழா அலுவலக மேலாளர் ஆர்.அன்னபூரணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து விழா பேருரையாற்றினார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூறு சதவிகித பயிற்சிப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கோடீஸ்வரா எஸ்.அழகப்பன் விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எதிர் கால சிந்தனை என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர்கள் ஆர்.ராஜேந்திரன், பி.மனுவேல் ஜேசுராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் கே.என்.செல்வரெத்தினம,; பயிற்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக விளையாட்டு பயிற்சி அலுவலர் வி.கதிரேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.


Sunday, 27 January 2019

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா?  தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட  பிரயோஜனம் இல்லாதவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
#படித்ததில்
#ரசித்தது

ஊரெல்லாம் கறுப்புக் கொடி, பலூன்.. அதிரடியாக கறுப்புக் காரில் ஏறிப் பயணித்த மோடி!

ஊரெல்லாம் கறுப்புக் கொடி, பலூன்.. அதிரடியாக கறுப்புக் காரில் ஏறிப் பயணித்த மோடி!

மதுரை: என்னதான் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினாலும் அதற்கு பதிலடியாக கருப்பு காரில் பயணம் செய்தார் மோடி.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.

கறுப்பு கொடி
அப்போது அவரது வருகையை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவை கறுப்பு கொடி ஏந்தினர்.
 
வரவேற்பு
மேலும் வைகோ உள்ளிட்டோர் மோடியை கண்டித்து கறுப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இதனிடையே விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
 
கறுப்பு காரில் பயணம்
இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை முடித்துக் கொண்டு தோப்பூர் செல்ல பிரதமர் மோடி கறுப்பு காரில் பயணம் செய்தார்.
 
போஸ்டர்கள்
இதை பார்க்கும் போது கறுப்பு கொடி காட்டியவர்களுக்கு பாஜக உரிய பதிலடி கொடுத்ததாகவே பார்க்கப்படுகிறது. இது போல் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட வருகை தந்த வைகோவுக்கு வரவேற்பு அளித்து மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

Saturday, 26 January 2019

புதுக்கோட்டையில் 30 வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னேற்பாடு கூட்டம்

30 வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னேற்பாடு கூட்டம்
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக வருகின்ற 4.2.2019 முதல் 10.2.2019 வரை நடைபெற உள்ள சாலை பாதுகாப்பு வாரவிழா நடத்துதல் முன்னேற்பாடு குறித்த கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் ப.செந்தாமரை முன்னிலை வகித்தார் கூட்டத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், போக்குவரத்து கிளை மேலாளர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாமஸ் ராஜன், அனைத்து ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Wednesday, 23 January 2019

பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி அளித்த கொடையாளர்களுக்கு பன்னாட்டு ரோட்டரி சார்பாக கொடையாளர் பின் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா


கொடையாளர்களுக்கு பாராட்டு

                பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி அளித்த கொடையாளர்களுக்கு பன்னாட்டு ரோட்டரி சார்பாக கொடையாளர் பின் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் தலைமையில் சரவணபவன் ஹாலில் நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க உடனடி தலைவர் எஸ்.பார்த்திபன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் ரோட்டரி மாவட்டம் 3000ன் உடனடி மாவட்ட ஆளுநர் ப.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசனுக்கு பெருங்கொடையாளர் பின் அணிவித்து சான்றிதழ் வழங்கினார.; மேலும் திருமயம் ரோட்டரி சங்கத் தலைவர் எ.சொக்கலிங்கம், திருமயம் சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் என்.குமரேசன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் சி.பழனியப்பன், செயலாளர் வி.கார்த்திகேயன் உடனடி முன்னாள் தலைவர் எஸ்.ரமேஷ் கொடையாளர் (இரண்டாவது லெவல்) எஸ்.ராம்குமார் புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் டி.எச்.ராஜேந்திரன், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என்.சுப்பிரமணியன், பி.அசோகன் ஆகியோருக்கு கொடையாளர் விருது மற்றும் பின் அணிவித்து பேசும் போது நீங்கள் பெருங்கொடையாளராக வளர வாழ்த்துகிறேன் என்றார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவர் க.நைனாமுகம்மது, ஜி.தனகோபால், கே.என்.செல்வரெத்தினம், எஸ்.தங்கமணி 2017-2018 ஆம் ஆண்டின் மாவட்ட செயலாளர் எல்.சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.       

மறுமணத் தேதியை அறிவித்தார் ரஜினி மகள்?

மறுமணத் தேதியை அறிவித்தார் ரஜினி மகள்?

நடிகர் மற்றும் தொழில் அதிபரான விஷாகன் வணங்காமுடியை செளந்தர்யா ரஜினிகாந்த் பிப்ரவரி 11-ம் தேதி மறுமணம் செய்யவிருக்கிறார் .

2010-ல் தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விஷாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்து அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஷாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஷாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து தற்போது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற உள்ளது.

சங்கீத், மெஹந்தி உள்ளிட்ட மண விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரஜினிகாந்த் வீட்டில் தடபுடலாக நடந்து வருகிறது.  திருமணத்துக்கு முன்னர் போயஸ் கார்டனிலுள்ள அவர்கள் வீட்டில் ஒரு பூஜை விமர்சையாக நடைபெற உள்ளதாம். அதனைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த் மற்றும் மணப்பெண்ணின் அக்கா ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களும் தனித்தனியாக விருந்தளிக்கவிருக்கிறார்கள்.

இது குறித்து செளந்தர்யா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 22 January 2019

தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினம்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம,; பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராமக்கல்விக்குழு இணைந்து நடத்தும் முள்ளங்குறிச்சி அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சங்கத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் தலைமைப் பண்பு, நேர மேலாண்மை பயிற்சி முகாம் (சுலுடுயு); நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.நாகராஜன் வரவேற்றார். துணை ஆளுநர் சி.அருண்குமார், மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் மாவட்ட ஆளுநர் ம.முருகானந்தம் அவர்களின் கனவுத்திட்டமான பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் இரா.இராஜாகோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை வழங்கினார். மேலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நமக்கு நாமே சுய பரிசோதனை என்ற தலைப்பில் வழிகாட்டி கையேட்டினை வழங்கி மேலும் இந்தப்பள்ளி 99 சதவிகிதம் தேர்வு பெற்றதை பாராட்டி நினைவு பரிசு வழங்க அதை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார். மேலும் பேசுகையில் இன்றைய தேசிய இளைஞர் தினத்தில் நீங்கள் எல்லாம் நல்ல கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர் மேலும் பேசுகையில் நம் வாழ்வில் எப்போதுமே உயர்வான விஷயங்களை எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணி அவை நிறைவேறாவிட்டால் கூட நாம் உயர்வாகச் சிந்திப்பதை மாற்றிக்கொள்ளக்கூடாது. எட்மண்ட் ஹிலாரி முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முயன்றபோது தோல்வியுற்றார். அப்போது நிருபர்கள் அவரிடம் அதனைப் பற்றிக் கேட்டபோது நிச்சயம் அடுத்த முறை எவரெஸ்ட்டை நான் வெல்வேன். ஏனென்றால் எவரெஸ்டிற்கு இனி வளர்ச்சி இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு நாளும் வளர்கிறேன் என்றார். அவர் சொன்ன வளர்ச்சி, அறிவால், மனத்தால், நம்பிக்கையால், அனுபவங்களால் வளரும் வளர்ச்சி, அவர் சொன்னது போலவே அடுத்தமுறை எவரெஸ்;டில் ஏறி சாதனை புரிந்தார். நாமும் இதுபோல் எப்போதுமே உயர்வாக எண்ண வேண்டும். எதிலும் 100 சதவீதத்தை அடைய முயற்சி எடுத்தால் நீங்களும் வெற்றிபெற முடியும் என்றார். விழாவில் மதுரை உதயக்குமார் ரோட்டரி சங்க உறுப்பினர்கள,;  இருபால் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ஆர்.பிச்சையா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவினை சுதாகர் தொகுத்து வழங்கினார்.

இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம்


இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம்
ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து பள்ளி வளாகத்தில் தாளாளர் சி.எம்.கருப்பையா தலைமையில் இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கணபதி கல்லாலங்குடி சுபபாரதி பள்ளி தாளாளர் எஸ்.விஜயா முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் துணை ஆளுநரும் வழக்கறிஞருமான எஸ்.பி.ராஜா வரவேற்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். மதுரை மன்னர் நாயக்கர் கல்லூரி இயக்குநர் இரா.இராஜாகோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'உலகை நீ வெல்வாய்" என்ற தலைப்பில் இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாமினை தொடங்கிவைத்து பேசும் போது ஒரு சிறந்த தலைவராகத்திகழ வேண்டுமானால் மூன்று குணங்கள் மிகமிக முக்கியமானவை காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடமை, துணிவுடமை, எந்த தலைவனுக்கும், வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு ஒருவரின் காலம் தாழ்த்தும் பண்பினால் எத்தனையோ விஷயங்கள் தள்ளிப் போவதுண்டு தோல்வியில் முடிவதுண்டு, ஒரு விஷயம் செய்யவேண்டி இருக்கிறதென்றால் அதை உடனுக்குடன் செய்ய வேண்டும் என்று கூறினார்.
உலகை நீ வெல்வாய் என்ற தலைப்பில் கீழே தரப்பட்டுள்ள மேலும் பத்துக் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கவும். என் வாழ்வில் நான் என்றும் கடைப்பிடிக்க விரும்பும் கொள்கைகள். என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிக மகிழ்ச்சியான நிகழ்ச்சி, என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிக சோகமான, கசப்பான நிகழ்ச்சி, மேற்கூறிய இரு கேள்விகளுக்கும் எழுதிய பதில்களின்படி கிடைத்த படிப்பினை என்ன? என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நான் ஏற்றிருக்கும் எழுச்சி வாசகம், மற்றவர்கள் என்னைப்பற்றி எப்படி நினைக்க வேண்டும் என விரும்புகிறேன்? நான் நன்றாகச் செய்ய விரும்பும், ஆனால் செய்ய முடியாத சில விஷயங்கள், என் வாழ்நாளில் நான் சாதிக்க விரும்புவன, என் முன்னேற்றம் சம்பந்தமாக உடனடியாக நான் செய்ய வேண்டிய சில விஷயங்கள், என் வாழ்வின் இன்றியமையாத முன்னுரிமைகள் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிரமங்கள் தோன்றலாம் பதிலளித்து முடித்தவுடன் பதில்களில் சொன்ன நல்லவற்றைத் தொடர்ந்து செய்வதும். குறைகளைச் சரி செய்து மீளுவதும் மேலும் சிரமமாகத் தோன்றலாம். பயப்பட வேண்டாம். இது ஓர் ஆரம்ப நிலைச் சிரமம்தான். மன உறுதியோடு செயல்பட்டால் சுய முன்னேற்றம் விரைவில் கையகப்படும். சுயமதிப்பீடு என்ற 15 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் எண்ணமும், செயலும் இன்னும் குழந்தைத்தனமாக இருக்கிறதா? நண்பர்களை, அதாவது தொடர்ந்து நட்பு பாராட்டும் நண்பர்களைப் பெற்றுள்ளாயா? மனதில் அவ்வப்போது பொங்கி எழுந்து மனதிலேயே அமுங்கிக் கிடக்கின்ற ஆசாபாசங்கள், கோபதாபங்களை அவ்வப்போது யாரிடமேனும் கொட்டித் தீர்த்து நிவாரணம் தேடுகிறாயா? சுயமாகத் திறமையாகச் செய்யமுடியும் என்று சொல்லுமளவிற்கு ஏதேனும் நுட்பங்கள் கற்றுள்ளாயா? பொருள்களை வீட்டிலும், வெளியிலும் ஒழுங்கான முறையில் வைத்திருக்கிறாயா? கூச்ச சுபாவம் இல்லாமல் வீட்டில், பள்ளியில், வெளியில் ஏதேனும் விஷயத்தைப் பற்றிக் கேட்க முடியுமா, சொல்லமுடியுமா? வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கடைப்பிடிக்கக் கூடிய பொழுது போக்கு ஏதேனும் ஒன்றையாவது தேர்ந்தெடுத்துவிட்டாயா? குடும்பத்தாரோடு அன்புடனும், மரியாதையுடனும் பழகுகிறாயா? சமுதாய உணர்வு உடன்பாட்டு உணர்வாக (Pழளவைiஎந கநநடiபெ) இருக்கிறதா? உடல் நலம் நன்கு பேணுகிறாயா? கற்பதில் சிறந்த முறை வெறும் மனப்பாடம் செய்வதல்ல, ஆனால் பாடங்களைப் புரிந்து மனதில் பதிய வைத்தல் என்பதைக் கடைப்பிடிக்க முடிகிறதா? தோல்வி மற்றும் பயம் பெரிதும் மனதைப் பாதிக்கிறதா? சுய முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாயா? பிடிவாத குணம் உள்ளதா? பிடித்த நல்ல செயலைச் செய்து முடிப்பதில் உறுதிப்பாடு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்த 6 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் மதுரை ராஜாராம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.பி.பழனியப்பன், முன்னாள் தலைவர் எ.ஜெரால்டு ஞானப்பிரகாசம், கே.சுப்பிரமணியன், எ.அய்யப்பன், டி.வியாகுல ராபர்ட், ஆசிரியர்கள் மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் நிறைவாக பொருளாளர் மரிய சூசை நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. 
.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39% உயர்வு

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39% உயர்வு

தாவோஸ்: இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த நிறுவனம் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டு கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018ம் ஆண்டு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாள் ஒன்றுக்கு 2,200 கோடி அதிகரித்துள்ளது. உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு 250 கோடி டாலர் என, 12 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியர்களில் 13.6 கோடி பேர் 2004ம் ஆண்டு முதல் ஏழையாகவே உள்ளனர் நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 77.4 சதவீதம், இந்தியாவில் கோடீஸ்வரர்களாக உள்ள 10 சதவீதம் பேரிடம் உள்ளது.

ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களிடம் 51.53 சதவீத சொத்து உள்ளது. கடந்த ஆண்டில் 18 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 28 லட்சம் கோடியை ஒட்டியுள்ளது.  60 சதவீதம் மக்களிடம் 4.8 சதவீத செல்வளம் உள்ளது.  இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு 2,08,166 கோடி செலவிடுகின்றன. ஆனால், இந்திய பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் மட்டும் 2.8 லட்சம் கோடி என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குவிந்து கிடக்கும் வருமான வரி வழக்குகள் வாபஸ் பெற இந்த மாத இறுதி வரை கெடு

குவிந்து கிடக்கும் வருமான வரி வழக்குகள் வாபஸ் பெற இந்த மாத இறுதி வரை கெடு

புதுடெல்லி: நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளை வாபஸ்பெற இந்த மாத இறுதி வரை கெடு விதித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை கண்டறியும் வருமான வரித்துறை, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இவற்றில் பல மேல் முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் போடப்பட்ட 8,300 மேல் முறையீடு வழக்குகளில் 23 சதவீதம் வழக்குகளும், வருமான வரி தீர்ப்பாயங்களில் போடப்பட்ட 7,785 மேல் முறையீடுகளில் 22.8 சதவீதம் வழக்குகளும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் கிடக்கின்றன.

வருமான வரி வழக்கு எண்ணிக்கைகளை குறைக்கும் வகையில், மத்திய அரசு மேல் முறையீட்டுக்கான வழக்கு மதிப்பின் வரம்பை உயர்த்தியுள்ளது. இதன்படி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களில் குறைந்தது 10 லட்சம் மதிப்பிலான வழக்குகள் மட்டுமே மேல் முறையீட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. இது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும், உச்ச நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்ய வரம்பு 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக 41 சதவீத வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோல் நிலுவையில் உள்ள மேற்கண்ட வழக்குகளை வாபஸ்பெற இந்த மாத இறுதி வரை கெடுவிதித்து மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் நீனா குமார் வருமான வரித்துறை முதன்மை ஆணையர்களுக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள மூத்த அதிகாரிகளுன் சிறப்பு கூட்டங்கள் நடத்தி விரைவு படுத்த கேட்டுக்கொண்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்' தகவல்; கடும் கட்டுப்பாடு....

வாட்ஸ் ஆப்' தகவல்; கடும் கட்டுப்பாடு....

புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' மூலம், ஒரே நேரத்தில், ஐந்து பேருக்கு மட்டுமே, தகவல்களை பகிரலாம் என்ற கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும், அந்த நிறுவனம் அமல்படுத்தி உள்ளது.

'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் பரவும் வதந்திகளால், அசம்பாவிதங்கள் நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலையில், 'வாட்ஸ் ஆப்' மூலம், ஒரு சமயத்தில், ஐந்து பேருக்கு மேல், தகவல், படங்கள், வீடியோக்களை பகிர முடியாது என்ற கட்டுப்பாடு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை, உலகம் முழுவதும் அமல்படுத்த, 'வாட்ஸ் ஆப்' முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, 'வாட்ஸ் ஆப்' நிறுவன இணைய தளத்தில் கூறியுள்ளதாவது: 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் தகவல்களை, ஒரு சமயத்தில், ஐந்தாக குறைக்க, கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, பயனாளர்களின் கருத்துகள், ஆறு மாதங்களாக கேட்டு பெறப்பட்டன. இந்த கட்டுப்பாட்டால் பகிரப்படும் தகவல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக, பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் சிறப்பானதாக உள்ளதால், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, 21 January 2019

தைப்பூசத் திருவிழா....அரோகரா கோஷம் முழங்க அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்...

👉 👉 தைப்பூசத் திருவிழா....அரோகரா கோஷம் முழங்க அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்...

பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும் கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணி அளவில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. பின்னர் 7 திரைகளை விலக்கி காட்டப்பட்ட இந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே குடுபத்துடன் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாட்டூவண்டி போட்டி..ஜெயித்தே ஆகவேண்டும் எங்களை வளர்த்தவனுக்காக!...


via

தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'....

👉 👉 தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'....

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த, 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பட்டியலில், நிறைய தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

'கேரளாவிலுள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற பெண்கள், கள்ள பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு கேட்டு, இந்த பெண்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, சபரிமலையில், 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, மாநில அரசு சார்பில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதில், பல குளறுபடிகள் இருந்தன. அந்தப் பட்டியலில், சில ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சில பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்....

👉 👉 தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்....

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், வரும் நாட்களில், வறண்ட வானிலை நிலவும்; பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை காலம், டிச., 31ல் முடிந்தது. எதிர்பார்த்த மழை பெய்யாததால், மழை முடியும் முன், பனிக் காலம் துவங்கியது.

குளிர்:
நவ., முதல், பனி காலம் படிப்படியாக அதிகரித்து, மாநிலம் முழுவதும், குளிர் நடுங்க வைத்து உள்ளது. குறிப்பாக, மாலை, 4:00 மணிக்கு மேல் குளிர் அதிகரித்து, காலை, 8:00 மணி வரை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பகுதிகளில், குறைந்த பட்ச சராசரி வெப்பநிலை, 15 டிகிரி செல்ஷியசாக உள்ளது. நீலகிரி மலை பகுதியை ஒட்டிய கிராமங்களில், உறை பனி நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை, 3 முதல், 5 டிகிரி செல்ஷியசாக உள்ளது.

இந்நிலையில், 'வரும் நாட்களில், பகல் வெப்பநிலை அதிகரித்து, குளிரின் அளவு குறையும்' என, வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பகல் நேர வெயிலின் அளவு உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, திருத்தணி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், வேலுார், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில், 30 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெயில் பதிவானது.

மூடுபனி:
சென்னையில், 29 டிகிரி செல்ஷியசாக, அதிக பட்ச வெப்பநிலை பதிவானது. வானிலை முன் அறிவிப்பை பொருத்தவரை, 'வரும் நாட்களில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும். மலையோர பகுதிகளில் குளிர்ந்த காற்றும், பனியும் நீடிக்கும். 'அதிகாலையில், சில இடங்களில் உறை பனியும், பல இடங்களில் மூடுபனியும் நிலவும்' என, கூறப்பட்டுள்ளது.