Tuesday, 31 October 2017

5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்!

*நவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்!*

*டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை வரும் நவம்பர் 7ம் தேதி மூடப்படுகிறது*

*பராமரிப்புப் பணிகளுக்காக 11-29 என்ற ஓடுபாதை நவம்பர் 10ம் தேதி வரை மூடப்பட உள்ளது*

*இதையடுத்து அன்று குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மற்ற ஓடுபாதைகளில் இயக்கப்பட உள்ளன*

படித்தது ரசித்தது 31.10.2017

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''

"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''

"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்''

"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..
-
படித்தது.....ரசித்தது ..

பிசினஸ் தந்திரங்கள்

1⃣ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.
கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:
பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?
எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு " தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.
உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.
மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"

2⃣.பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார்.
பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.
அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.

'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.
அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

3⃣பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்.
அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

🌰🌰🌰🌰🌰🌰🌰🌰

Monday, 30 October 2017

இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;

இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;

5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது.

இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார்.

இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார்.

அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார்.
கோவணத்துடன் கிளம்பினார்.

கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.

ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார்.
அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.
வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின.

ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர்.

பட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்த காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது.

அவர்களுக்கு அவர் பட்டினத்தார் என்பது தெரியாது.
யாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர்.
அப்போது அதில் ஒரு பெண், “”யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது,”என்று கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.
இதைக் கேட்ட இன்னொரு பெண் மணியோ, “”இவரா பெரிய மகான்..???

ஆசையை அடக்க முடியாமல் தூங்குவதற்குக் கூட வரப்பை தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டு தூங்குகிறார் பாரு,” என்று இளக்காரமாகவும்,கோபமாகவும் பேசினாள்.

இதனைக் கேட்ட பட்டினத்தார் அதிர்ச்சி அடைந்தார்.
“அந்தப் பெண்ணுக்கு இருக்கும் புத்தி கூட தனக்கில்லாமல் போய் விட்டதே…’ என்று வேதனைப்பட்ட அவர்,

அந்த பெண்கள் அங்கிருந்து கடந்து போனதும், வரப்பிலிருந்த தலையைக் கீழே வைத்துப் படுத்தார்சற்று நேரத்தில் அந்தப் பெண்கள் திரும்பி வந்தனர்.
அப்போது அந்த சாமியார் வரப்பிலிருந்து கீழே படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி,
“”பார்த்தாயா, நீ சொன்னதை கேட்டு வரப்பிலிருந்து தனது தலையைக் கீழே வைத்துப் படுத்துவிட்டார்.
இப்போது சொல் அவர் மிகப் பெரிய மகான்தானே?” என்று அகமகிழ்ந்து கூறினாள் ஒரு பெண்.
“”இவரா பெரிய மகான்...???

இந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன பேசிச் செல்கின்றனர் என்று ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்.
இவரைப் போய் பெரிய மகான் என்று சொல்கிறாயே..!!!” என்றாள் அந்த இரண்டாவது பெண்மணி.

இதைக் கேட்டு பட்டினத்தார் உண்மையிலேயே அதிர்ந்து போனார்.
இனிமேல் யாருடையே விமர்சனத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது கூடாது என்று அப்போது முதல் அவர் திடமாக முடிவெடுத்தார்.

விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு.
ஒன்று நேர்மறை விமர்சனம்;
இன்னொன்று எதிர்மறை விமர்சனம்.
நேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் விமர்சனம் எப்போதும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும்.

அந்த முதல் பெண்மணி கூறியதைப் போலவே அது இருக்கும்.

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் செய்யும் விமர்சனம் எப்போதும் குற்றம், குறைகளைக் காண்பதாகவே இருக்கும்.

அதாவது அந்த இரண்டாவது பெண்மணியைப்போல
நியாயமான விமர்சனம்தான் உண்மையானதாக இருக்கும்.
ஆனால், அந்த வகை விமர்சனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது.
அதில் குற்றம் குறைகள் சுட்டிக் காட்டப்படவும் செய்யும்.
நல்ல தன்மைகள் பாராட்டப்படவும்கூடும்
எனவே, இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களுக்காக காத்துக் கிடக்காமல் உங்கள் உள்ளத்திற்கு எது நேர்மையானதாகத் தெரிகிறதோ,
அந்த பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டேஇருங்கள்.

விமர்சனங்களைப் புறக்கணித்து விடுங்கள்

வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்திருக்கும் உரிமை.

இந்த மண்ணுலகில் பிறந்து விட்டோம்.

நல்லதை செய்து நலமாக வாழ்வோம்

Friday, 27 October 2017

மின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி

மின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி

🚃ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் அண்மையில் பொறுப்பேற்றதும் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன👍. பழுதடைந்த ரயில் தண்டாவாளங்களை சீரமைக்க கூடுதல் 💸நிதி ஒதுக்கீடு, 🚃ரயில் பயண நேரக்குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன🔈. இந்நிலையில் தற்போது நாட்டில் அனைத்து 🚉ரயில் பாதைகளையும் முழுக்க முழுக்க 🔌மின்சாரத்தால் இயங்கும் வசதியுடன் மாற்ற 💸ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை 🏛மத்திய அரசு வகுத்திருக்கிறது. இதன் மூலம், 2021ஆம் ஆண்டிற்குள் அனைத்து 🚇ரயில்களும் முழுமையாக 🔌மின்சாரத்தில் இயங்கும் வசதி ஏற்படுத்தப்படும்😯. இதனால், 🚃ரயில்களுக்கான எரிபொருள் செலவு 💸ரூ.26,500 கோடியில் இருந்து 💸ரூ.16,000 கோடியாகக் குறையும் என்று கூறப்படுகிறது👍.

வடசென்னைக்கு அபாயம்-எச்சரிக்கிறார் கமல்

வடசென்னைக்கு அபாயம்-எச்சரிக்கிறார் கமல்

சமீப காலமாகவே ⭐கமல் பொது நலன் கருதி பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்🔈. அதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என்பது தான்👍. இந்நிலையில் ⭐கமல் தன் 💻டுவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது, இதனால், தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து" என்று கூறியுள்ளார்😱. மேலும் அவர் வரவிருக்கும் ஆபத்து எவ்வகையை சார்ந்தது😳 என்பது குறித்த விவரத்தையும் 💻ட்விட்டரில் கூறியுள்ளார்😯.

தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு

தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு

ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தலின் தேதியினை போலி வாக்காளர்களை நீக்கும் வரை, அறிவிக்கக் கூடாது🚫, என தலைமை 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி⚖, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது😳. ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்🚫, என தலைமை தேர்தல் அதிகாரி 👮ராஜேஷ் லக்கானியிடம், கடந்த 23ம் தேதி திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்😯. இதுதொடர்பாக 🗳தேர்தல் ஆணையம் எவ்வித முடிவும் எடுக்காததால், 🏛உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்😟. அதில், போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது🚫, என 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட⚖ வேண்டுமென👍 வலியுறுத்தப்பட்டுள்ளது😯. மேலும், முறைக்கேடு நடக்காமல்😳 இருப்பதற்கு 🗳வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சி 👮அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை, நியமிக்க வேண்டுமெனவும்👍 அந்த 📜மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது😯.

ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா சேர்ப்பு

ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா சேர்ப்பு

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் தமிழ் வார்த்தையான அண்ணா என்ற வார்த்தையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது👍. ஆக்ஸ்போர்டு அகராதியில் எப்போதும் பல்வேறு மொழிகளில் இருக்கும் பிரபல வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்கள் சேர்க்கப்படுவது வழக்கம்😯. கடந்த மாதம் ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக 70 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது😳. இது வரை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் அனா என்ற வார்த்தை இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நாணயமான அனாவை குறிக்கும் அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது😱. தற்போது இதனை மாற்றி தற்போது தமிழ், தெலுங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணாஎன்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது👌. அண்ணா என்றால் பெயர்ச்சொல் அதற்கு மூத்த சகோதரர்👍 என்பது அர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது😯. மேலும் 2017 செப்டம்பர் மாதத்தில் ஆயிரம் புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

Wednesday, 25 October 2017

மருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால பணி நீக்கம்-விஜயபாஸ்கர்

மருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால😳பணி நீக்கம்-விஜயபாஸ்கர்

சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்😯. அப்போது அவர் கூறுகையில்🎙, "டெங்கு காய்ச்சலுக்கு நோயாளிகள் ஊசி போடச்சொல்லி மருத்துவர்களை கட்டாயப்படுத்த கூடாது, அவ்வாறு செய்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும்" என்று கூறினார்😱. அதனை தொடர்ந்து🎙, "744 எம்.டி. மற்றும் எம்.எஸ். மருத்துவர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்" என்று கூறினார்👍. மேலும் அவர், நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொள்ளும் 🏥மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்👍 எனவும் தேவைப்பட்டால் புகாருக்கு உள்ளானவர்கள் பணி நீக்கமும்🚫 செய்யப்படுவார்கள் என்றும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்😳.

திருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்

*திருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்

திருப்பதியில் பாதுகாப்பு கருதி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு இருக்க வேண்டும்👍 என்று முடிவு செய்யப்பட்டு திருமலை முழுவதும் 1400 அதிநவீன சிசிடிவி 📹கேமராக்கள் பொருத்தப்பட போவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது🔈. இது குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ 📰செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, "முதற்கட்டமாக 250 சிசிடிவி கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 30 நாட்களுக்குள் பொருத்தப்பவுள்ளது. பாதுகாப்பு பணிகள் குறித்து திருமலையில் என்.எஸ்.ஐ.சி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து படிப்படியாக திருமலை முழுவதும் மீதமுள்ள இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்😯. மேலும், திருமலையை பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற😳 தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து 📹சிசிடிவி கேமரா, 📺டிவி டிஸ்ப்ளே உள்ளிட்டவை வாங்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

Saturday, 21 October 2017

நிதானம்

நிதானம்!
========
புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும் தீவிரத்தையும் கடைப்பிடித்தான். அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச் சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.
அப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, "ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே?'' என்றான்.

உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்... அவனோ, "ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே?'' என்று கேட்டான்.

இப்போது புத்தர் சொன்னார், "நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. இதோ போலத்தான் முறையற்ற அதிகப் பயிற்சியினால் உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ சோம்பலைத் தரும்.

எனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்

Thursday, 19 October 2017

வேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின

வேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின :-

  • வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின்⛈ காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், தமிழக, ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பின.
  • மோர்தானாவுக்கு 700 கன அடி ராஜா தோப்புக்கு 93.97 கன அடி, ஆண்டியப்பனூர் அணைக்கு 67.43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
  • வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில், 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 32 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 350 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர் நிரம்பியுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….

*வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….*

இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….

18/10/2017

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, *“லைவ் ஷேரிங்”* எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.

உலகம் முழுவதும் 20 கோடி வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான “ஷேரிங்” வசதியைப் போல் இல்லாமல், அதாவது எந்த இடத்தில் நிலையாக இருக்கிறோமோ அதைக் குறிக்காமல்,  நாம் எந்த இடத்தில் சென்று இருக்கிறோமோ(“லைவ் ஷேரிங்” ) அந்த இடத்தை நமக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியும். வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவர்களின் தங்களின் நண்பர்கள்,  குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா, நாம் செல்லும் இடத்துக்கு பாதுகாப்பாக அடைந்துவிட்டோமா என்பதை தெரிவிக்க இந்த வசதி பயன்படும்.

இதற்கு முன் உபர், ஸ்நாப் மேப் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தார்போல் இப்போது வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேலாளர் ஜூகைர் கான் கூறுகையில், “ வாட்ஸ்அப் லைவ்ஷேரிங் வசதிக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக இப்போது நாம் ெசல்லும் இடங்களை நமக்குவிருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

*எப்படி இந்த வசதியைப் பெறுவது?*

வாட்ஸ் அப் பயன்படுத்திவருபவர்கள் கூகுங் ப்ளே ஸ்டோரில் சென்று, “அப்டேட்” செய்ய வேண்டும். அப்டேட் முடிந்தவுடன், நம்முடைய கான்டாக்ட் தளத்தில் சென்று யாருக்கு நம்முடைய இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த இடத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு, லைவ் சாட்டிங்கிலும் ஈடுபட முடியும். நாம் செல்லும் இடத்தை தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு குரூப்புக்கோ பகிர்ந்து கொள்ள முடியும்.