Tuesday, 30 June 2020

TN Higher Education Minister K P Anbalagan stable after testing positive for #COVID19, says hospital bulletin.





TN Higher Education Minister K P Anbalagan stable after testing positive for #COVID19, says hospital bulletin.

தேசியளவில் ‌தமிழநாட்டின் சிறந்த ஊராட்சியாக புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவில் கிராம ஊராட்சியும் தேர்வு..!










தேசியளவில் தமிழ்நாட்டின் சிறந்த கிராம ஊராட்சியாக புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவில் கிராம ஊராட்சியும் மத்திய அரசின் "தீனதயாள் உபாத்யாய கிராம விருதிற்காக(DDUPSP)" தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிராம மேலாண்மை மையம் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, குடிநீர், மருத்துவம், தனிநபர் கழிப்பறை, மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும், சிறந்த மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளை தேர்வுசெய்து தீன தயாள் உபாத்யாய கிராம விருதினை வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் தேசியளவில் தமிழ்நாட்டின் சிறந்த கிராம ஊராட்சியாக அம்புகோவில் கிராம ஊராட்சியும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை - கறம்பக்குடி செல்லும் சாலையில் கறம்பக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது அம்புகோவில் கிராம ஊராட்சி.

சிங்காரி ஆப் நோக்கி டிக்டாக் பயனாளர்கள்..!!




மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சீன நிறுவனங்களின் 59 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் டிக்டாக் பயனாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். டிக்டாகினால் சாதரன நபர்களும் பிரபலமானவர்களும் உண்டு.
இதனிடையே சீன நிறுவனத்தின் டிக்டாக் தடை செய்யப்பட்டதையெடுத்து தற்போது இந்திய நிறுவனத்தின் "சிங்காரி ஆப்" தற்போது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது இந்த ஆப் 10 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுவண்டிக் கடை சிறுவனை தாக்கிய எஸ்.ஐ க்கு - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவையில் பெற்றோருடன் தள்ளுவண்டி கடையில் வியாபாரம் செய்த 16 வயது சிறுவனை உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரத்தினபுரி பகுதியில் கடந்த 19 ஆம் தேதி இரவு தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்த வேலுமயில் என்பவர் தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை எனக் கூறி கடையை மூடுமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் செல்லமணி கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வேலுமயிலின் 10ஆம் வகுப்பு படிக்கும் மகன், உதவி ஆய்வாளரின் பைக்கில் இருந்து சாவியை எடுத்ததோடு, அவரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் சிறுவனை லத்தியால் தாக்குவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இச்சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

30-06-2020 கொரோனா விபரம்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 90,167ஆக உயர்வு. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,325ஆகும். இது வரை  குணமானவர்களின் எண்ணிக்கை 50,074ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 1,201ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 60பேர் பலியாகி உள்ளனர் - தமிழக சுகாதார துறை .

புதுக்கோட்டையில் வீடுவீடாகச் சென்று கபசுரக் குடிநீர் மாஸ்க் துளசி தண்ணீர் ஆகியவை வழங்கிய சமூக ஆர்வலர்



புதுக்கோட்டையில் கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த சமூக ஆர்வலர் மூர்த்தி தற்போது கபசுரக் குடிநீர் மாஸ்க் போன்றவற்றைப் வீடு வீடாகச் சென்று வழங்கிவருகிறார் புதுக்கோட்டையில் ஆண்டுதோறும் ரத்த தான முகாம் நடத்தி இதுவரை ஆயிரக்கணக்கான ரத்ததான ஆர்வலர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வந்துள்ளார் மூர்த்தி என்ற சமூக ஆர்வலர் . தற்போது கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியும் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது . இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் அவ்வாறு உள்ள பொதுமக்களை காக்கும் விதமாக தானே கபசுரக் குடிநீர் தயாரித்து புதுக்கோட்டை நகராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் வீடு வீடாக தள்ளுவண்டியில் வைத்து கபசுர குடிநீர் மாஸ்க் துளசி ஆகியவற்றை வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார் . இவரது செயலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட நபரின் குடும்பத்திற்கு வயி. சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் சார்பாக காசோலை வழங்கப்பட்டது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணியன் அவர்களது குடும்பத்திற்கு புதுக்கோட்டை வயி. சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் சார்பாக அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் அழைத்து  காசோலை ரூபாய் 25,000 VES.ராகுல் அவர்கள் வழங்கினார்கள் அதுமட்டுமில்லாமல் அவரது மனைவிக்கு தங்களது நிறுவனத்திலேயே ஒரு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் அறிக்கை







மாஜிஸ்திரேட் அறிக்கை: 

சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது.

கறை படிந்த லத்திகளை ஒப்படைக்க மறுப்பு.

விடிய விடிய தந்தை, மகனை தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் உள்ள ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் 

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.

சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம்.

கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து




அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்ற 1-ம்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கின்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும்
நிலையில் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்ற 1-ம்
தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கின்றது
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2-மணி வரை மட்டுமே
திறக்க வேண்டும்
கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் மாஸ்க் மற்றும் கையுறை
அணிந்திருக்க வேண்டும்
கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக கடை முன் அடையாள
குறியீடு போட வேண்டும்
டீ கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2-மணி வரை மட்டுமே அனுமதி
கட்டாயம் சில்வர் டம்ளரோ, கண்ணாடி கிளாசோ பயன்படுத்தக்கூடாது
சில்வர் கோட்டிங் கப் பயன்படுத்தலாம்
ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு - 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க
வேண்டும். ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
கிடையாது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்
மெடிக்கல், பால் விற்பனை மையம் மட்டும் வழக்கம் போல் செயல்படும்
குறிப்பு: கொரோனா தொற்று பரவுவதை தவிர்த்து நம்மை காத்துக் கொள்ள
நடவடிக்கை எடுக்கும் இது போன்ற காலகட்டத்தில் முக கவசம் அணியாமல்
வெளியே செல்வதையோ, தேவையில்லாமல் வெளியில்
சுற்றித்திரிவதையோ ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதையோ தவிர்க்க
வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சந்திகர சேகர் சகமுரி நியமனம்.

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சந்திகர சேகர் சகமுரி நியமனம்.



கடலூர் ஆட்சியராக உள்ள அன்புச்செல்வன் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து புதிய ஆட்சியர் நியமனம்.

புதுக்கோட்டை மீன் மார்க்கெட் இரு தினங்களுக்கு விடுமுறை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் படி புதுக்கோட்டை நகராட்சி மேல மூன்றாம் வீதியில்  செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் இரு தினங்களுக்கு அடைக்கப்பட்டது.

புதுக்கோட்டை ஆக்சிஸ் வங்கிசீல் வைப்பு

புதுக்கோட்டை ஆக்சிஸ் வங்கிசீல் வைப்பு

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் உதவி மேலாளர் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா நோய் இருப்பது கண்டுபிடிப்பு இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் வங்கிக்கு சீல் வைத்து கிருமிநாசினி அடிக்கும் பணி துவக்கம். வங்கிக்கு வந்து சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ய முடிவு.

சென்னையில் இருந்து வரும் வாகன கொரியர் (Courier)ஓட்டுநர்களால் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சம்

சென்னையில் இருந்து வரும் வாகன கொரியர் (Courier)ஓட்டுநர்களால் கொரோனா தொற்று  ஏற்படும் என அச்சம்

புதுக்கோட்டை பெரியார் நகர் RTO அலுவலக ரோட்டில் செயல்பட்டு வரும். ST கொரியருக்கு தினமும் சென்னையில் இருந்து பார்சல் லாரி வருகின்றது அதன் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை, இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து பார்சல் எடுத்துச் செல்கின்றனர் மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பார்சல் அனுப்பப்படுகிறது, நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில் தினமும் சென்னையில் இருந்து வரும் வாகனம் மற்றும் ஓட்டுநர்களால் நோய் தொற்று  பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர் 


ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா சஸ்பெண்ட் :-



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலராக பதவியேற்ற ராஜா இரண்டு மாத காலத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய காரணத்தினால் பேரூராட்சி இயக்குனர் அவர்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு :-

சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீநிமன்றத்திற்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வந்தார்.  ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் இவர் சென்னை உயரநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

 இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இவர், இப்பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தி. வரதர் நீரிலிருந்து எழுந்தருளியுள்ளார் தினம் இன்று :-




போன வருடம் இதே நாள் அத்தி.  வரதர் நீரிலிருந்து எழுந்தருளியுள்ளார் தினம்

Monday, 29 June 2020

சாத்தான்குளம் இரட்டை கொலை- சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்றி தமிழக அரசு அரசாணை

சாத்தான்குளம் இரட்டை கொலை- சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்றி தமிழக அரசு அரசாணை


ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவு UNLOCK 2.0

ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவு


டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை

 டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் 
தடை

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அறிவுரை

சாலைகளில் அல்லது தெருக்களில் நீங்கள் அணியும் மாஸ்க்கை தூக்கி எறியாதீர்கள். ஏனென்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தெருவில் விளையாடும் சிறுகுழந்தைகள் அதனை அறியாமல் எடுத்து செல்வார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவ அதிகமாக வாய்ப்பிருக்கிறது என புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அறிவுரை 


இது இன்றைய எல்லாம் பேராசிரியர்களின் நிலை மனம் வலிகின்றது முறுக்கு விற்பனை செய்யும் கம்ப்யூட்டர் சயன்ஸ் ஹெச் ஓ டி...!!

கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ்  துறைத்தலைவராகப் பணியாற்றியவர் பேராசிரியர் டி மகேஸ்வரன்....

கரோனா காரணமாக கல்லூரி நடக்கவில்லை...கடைசியாக பிப்ரவரி மாதம் சம்பளம் தந்து அனுப்பிவிட்டார்கள்...

அடுத்து ஐந்து மாணவர்களை கல்லூரியில் சேர்த்தால் மீண்டும் வேலை என்று நிபந்தனை...

அதுவும் அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய்... மாணவர்கள் சேர்த்து விடுவதற்கு ஏற்ப கூடுதல் சம்பளம்...

பேராசிரியர் தற்போது நெய்வேலி நகரில் முறுக்கு தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்...

தினம் 800 ரூபாய் கிடைக்கிறது....தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை நடத்தும் விதம் பிடிக்கவில்லை...கல்லூரி நிர்வாகம் அழைத்தாலும் வேலைக்குப் போகும் எண்ணம் இல்லை....நஷ்டம் வந்தாலும் முறுக்கு விற்கவே விரும்புகிறேன் என்கிறார் முன்னாள் பேராசிரியர் மகேஸ்வரன்....!!

Sunday, 28 June 2020

உடல் வெப்பநிலை கண்டறிதல், இலவச முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி!!



புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உடல் வெப்பநிலை கண்டறிதல் மற்றும் இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி கீழ ராஜ வீதி தமிழ்நாடு மொபைல்ஸ் அருகில் சங்கத் தலைவர்  மருத்துவர் K.ஆறுமுகம்  தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பட்டையைத் தலைவர் க.நைனா முகம்மது, துணைஆளுநர் சோ.பார்த்திபன், பார்த்திபன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், சங்க செயலாளர் P.செல்லத்துரை, சங்க பொருளாளர் M.ஜபருல்லா, M.நசீர் முகம்மது, B.அசோகன், K.மணிகண்டன், V.செல்வம், T.அன்பழகன்,  முககவசத்தினை S.செந்தில்வேல் வழங்கித் தந்தார் சுமார் இரண்டாயிரம் முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.







கீழே கிடந்த மாஸ்க்கால் 5 பேருக்கு கொரோனா!!!!

எச்சரிக்கை:


  • வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது.
  • வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர்.
  • இதில் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் 20 வயதான வாலிபர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர்.
  • அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த வாலிபர் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். ‍வீட்டிற்கு சென்ற ‍ அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.


Please do not reuse the medical product as well as thrown product any cost during this pandemic situation  ..!!

புதுக்கோட்டையில் வேகமெடுக்கும் கொரோனா..!

புதுக்கோட்டையில் வேகமெடுக்கும் கொரோனா..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 36 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில்:-

மொத்த பாதிப்பு - 167

இதுவரை குணமடைந்தவர்கள் - 48

தற்போது சிகிச்சையில் - 117

இறப்புகள் - 2

பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் மொத்தம் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொன்னமராவதி ஜூன்- 28

பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் மொத்தம் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் வடுகநாதன் சாலையில் மதுரையிலிருந்து வந்த ஒருவருக்கும், சென்னையிலிருந்து வந்த மேலைச்சிவபுரி ஊராட்சியை சேர்ந்த ஒருவருக்கும், தொட்டியம்பட்டி ஊராட்சியில் இருவருக்கும் என மொத்தம் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அரசமலை ஊராட்சியில் ஒருவருக்கும் பூக்குடி வீதியில் மூவருக்கும் என மொத்தம் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உள்ள நபர்கள் பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகளை வழங்கி அவர்களை புதுக்கோட்டை இராணியார் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றது.

வரலாற்றில் இன்று நாள்: 28.06.2020

வரலாற்றில் இன்று நாள்:  28.06.2020

கிரிகோரியன் ஆண்டின் 179 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

🖌️1389 – ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.

🖌️1519 – ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.

🖌️1651 – 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.

🖌️1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

🖌️1776 – ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த “தொமஸ் ஹின்க்கி” தூக்கிலிடப்பட்டான்.

🖌️1880 – அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.

🖌️1881 – ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.

🖌️1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.

🖌️1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.

🖌️1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

🖌️1922 – ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

🖌️1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.

🖌️1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.

🖌️1964 – மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.

🖌️1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

🖌️1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.

🖌️1995 – மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

🖌️2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

🖌️1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
  
🖌️1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)

🖌️1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)

🖌️1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995

🖌️1940 – முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.

🖌️1940 – கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)

இறப்புகள்

🖌️1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)

🖌️1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)


Saturday, 27 June 2020

சிறப்பு ரயில்கள் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்ய படுகிறது.

தமிழக அரசின் வேண்டுகோளின் படி கீழ் கண்ட சிறப்பு ரயில்கள் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்ய படுகிறது. இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப தரப்படும் - தெற்கு ரயில்வே




தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

 # சென்னையில் மட்டும் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# இன்று ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

# தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் | பயத்தையும் கவலையையும் மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு ஆக்கப்பூரவமாகச் சிந்தியுங்கள்



கொரோனா வைரஸ் | பயத்தையும் கவலையையும் மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு ஆக்கப்பூரவமாகச் சிந்தியுங்கள்.. !!!

வரலாற்றில் இன்று :27.06.2020-சனி




1693 : லண்டனில் பெண்களுக்காக முதன் முதல் தி லேடிஸ் மெர்குரி எனும் வார இதழ் வெளிவர ஆரம்பித்தது.

1759 : கியூபெக் மீதான பிரிட்டனின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.

1806 : பிரிட்டன் படையினர் புவெனஸ் அயர்ஸை கைப்பற்றினர்.

1887 : சிங்கப்பூரில் சிங்கை நேசன் எனும் வார இதழ் வெளிவர ஆரம்பித்தது.

1896 : ஜப்பான், சன்ரிக் எனும் இடத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 27,000 பேர் உயிரிழந்தனர்.

1905 : ரஷ்ய - ஜப்பான் போரின்போது பொத்தெம்கின் என்ற ரஷ்யப் போர்க் கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.

1941 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள் 
பியாஸ்டாக் நகரை பார்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
ருமேனியா, யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது.
குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950 : கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்ப தீர்மானித்தது.

1954 : சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1957 : டெக்சாஸ் - லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1967 : உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்பில்டில் அமைக்கப்பட்டது.

1973 : உருகுவே ஜனாதிபதி ஜிவான் மரியா போர்டாபெரி நாடாளுமன்றத்தை கலைத்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.

1974 : அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.

1976 : ஏர் பிரான்ஸ் விமானம் பாலஸ்தீன இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

1977 : ஜிபூட்டி பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 : முகமது அலி குத்துச் சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1980 : பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற 81 பேரும் உயிரிழந்தனர்.

1982 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.

1988 : பாரிஸில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.

1991 : ஸ்லோவேனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யூகோஸ்லோவியா அதன் மீது படையெடுத்தது.

1998 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2013 : சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.

2014 : ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்தபெண் இன்ஸ்பெக்டர்







பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்த
பெண் இன்ஸ்பெக்டர்..

🔲 சென்னை ஓட்டேரியில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 3 சகோதரிகளில் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் இறுதிச்சடங்கை சென்னை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் டீமே முன்னின்று செய்தது.

🔲 சென்னை ஓட்டேரி S.V.M நகரில் உள்ள பிளாட்பாரத்தில்
▫️ராஜேஸ்வரி (59),
▫️விஜயலட்சுமி(58),
▫️பிரபாவதி (57)
என மூன்று சகோதரிகள் தங்கியிருந்தனர். 

🔲 இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் நேற்று காலை பிளாட்பாரத்திலேயே பிரிந்தது. அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வழிதெரியாமல் அவரது சகோதரரிகளான விஜயலட்சுமியும், ராஜேஸ்வரியும் கதறி அழுது கொண்டிருந்தனர்.

🔲 அவ்வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் பிரபாவதியின் சடலம் நீண்ட நேரமாக பிளாட்பாரத்திலேயே கிடந்தது. அதன் அருகில் சோகத்துடன் அவரின் சகோதரிகள் அமர்ந்திருந்தனர்.

🔲 இந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களுக்கு கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் தலைமையில் ▫️சப்-இன்ஸ்பெக்டர் மீனா,
▫️ஏட்டு பழனி,
▫️ஏட்டு ஜான்,
▫️ஏட்டு மேனகா,
▫️ஏட்டு குமரன், மற்றும்
காவலர் சிலம்பரசன்..
ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

🔲 அங்கு எலும்பும் தோலுமாக, கிழிந்த சேலை அணிந்தபடி பிரபாவதி கிடந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன் போலீஸ்காரர்களை அனுப்பி...
▫️சேலை,
▫️சோப்,
▫️பூ,
▫️மாலை
என இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும்படி கூறினார்.

🔲 அந்தப் பொருள்கள் வந்ததும், அருகில் உள்ள வீட்டிலிருந்து தண்ணீரை குடங்களில் போலீஸ் டீம் கொண்டு வந்தது.

🔲 பிளாட்பாரத்திலேயே சேலை மறைவில் பிரபாவதியைப் பெண் போலீஸார் மற்றும் அங்குள்ள பெண்கள் சிலர் குளிப்பாட்டினர்.

🔲 பிறகு புதிய சேலை அணிவித்து, பிரபாவதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று போலீஸ் டீம் செய்தது. ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

🔲 இதுகுறித்து தலைமைச்செயலக காலனி போலீஸார் கூறுகையில், ``இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். உயிரிழந்த பிரபாவதி மற்றும் அவரின் சகோதரிகளுக்கு பலமுறை உணவு வழங்கியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள். சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்துவந்தனர்.

🔲 இந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர்.

🔲 பிரபாவதி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று, அவரின் இறுதிச்சடங்கை இன்ஸ்பெக்டர் தலைமையில் நாங்களே செய்தோம். 

🔲 ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியின் சடலத்தை ஓட்டேரி மயானத்துக்குக் கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்தினோம். இன்ஸ்பெக்டர் முன்னின்று அனைத்தையும் செய்தார். 

🔲 மூன்று சகோதரிகளுக்கும் குடிசைமாற்று வாரியத்தில் வீடு உள்ளது. அந்த வீடு முழுவதும் குப்பைகளைச் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீட்டைச் சுத்தம் செய்து விஜயலட்சுமி, ராஜேஸ்வரியை தங்க வைத்துள்ளோம்" என்றனர்.

🔲 இறுதி சடங்கு முடிந்து இன்ஸ்பெக்டர் அங்கு இருந்து புறப்படுவதற்கு சகோதரியை இழந்த சகோதரிகள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறினார்.

🔲 அப்போது, `அம்மா நீங்க நல்லா இருக்கணும்’ என கண்ணீர்மல்க அவர்கள் கூறினர். அதைக்கேட்ட போலீஸாரின் கண்களும் கலங்கின. அதன்பிறகு, கொரோனா வைரஸ் குறித்த அறிவுரைகளைக் கூறிவிட்டு போலீஸ் டீம் அங்கிருந்து புறப்பட்டு, சென்றது. ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை போலீஸ் டீம் உடனடியாகச் செய்துகொடுத்தது.

🔲 இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் டீமின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.

#நன்றி: #விகடன்_மின்னிதழ்.

💖 மனிதாபிமானத்துடன் இப்பணியை மனநிறைவாக செய்து அந்த ஆத்மாவின் ஷாந்திக்காகவும், சகோதரிகளின் சடங்குகளுக்காகவும்
இக்காரியத்தை செய்த 
#தலைமைச்_செயலக_காலனி #காவல்நிலையத்தின்_ஆய்வாளர் #மனிதகுல_மாணிக்கம்
#திருமதி_ராஜேஸ்வரி அவர்களுக்கும், அவர்தம் குழுவினரான...
▫️#சப்_இன்ஸ்பெக்டர்_மீனா,
▫️ #ஏட்டு_பழனி,
▫️ #ஏட்டு_ஜான்,
▫️ #ஏட்டு_மேனகா,
▫️ #ஏட்டு_குமரன், மற்றும்
#காவலர்_சிலம்பரசன்..
ஆகியோரின் சிறப்பான
மனிதாபிமானப் பணியினை பாராட்டி வணங்கி மகிழ்ந்து அனைவருக்கும் 

#எம்_சிரம்_தாழ்ந்த_நன்றிகளை
#தெரிவித்துக்_கொள்கிறோம்.

வாட்ஸ்-அப்பில் கோரிக்கை மனுக்களை அனுப்புங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

வாட்ஸ்-அப்பில் கோரிக்கை மனுக்களை அனுப்புங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்போது நடத்தப்படவில்லை எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வராமல் yseccoll.tnpdk@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் மேலும் Covid-19 தொடர்பாக வேறு இதர கோரிக்கை மனுக்களை pag.pdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.



Friday, 26 June 2020

3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் - தமிழக அரசு நடவடிக்கை




3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் - தமிழக அரசு நடவடிக்கை

அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க முடிவு

தமிழகத்தில் நேற்று பல இடங்களில் நல்ல வெப்பச்சலனம் பதிவாகியுள்ளது..!

தமிழகத்தில் நேற்று பல இடங்களில் நல்ல வெப்பச்சலனம் பதிவாகியுள்ளது..!

நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 191மிமீ (வெறும் 3 மணிநேரத்தில்) மழை கொட்டி தீர்த்ததுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:-

> காரையூர் (புதுக்கோட்டை) - 131.4மிமீ

> புதுக்கோட்டை டவுன் (புதுக்கோட்டை) - 29.6மிமீ

> குடுமியான்மலை (புதுக்கோட்டை) - 24மிமீ

> இலுப்பூர் (புதுக்கோட்டை) - 20மிமீ

திருச்சியில் கொரோனோ பரவிய 40 இடங்கள் பட்டியல் வெளியீடு

திருச்சியில் கொரோனோ பரவிய 40 இடங்கள் பட்டியல் வெளியீடு :-

Ward – 18 டைமன் பஜார்,
 காந்தி தெரு, தக்கார் சத்திரம், சின்னசெட்டி தெரு,

Ward  52 காந்திநகர்,

Ward  12 கல்யாணசுந்தரம்

Ward  25 கீழப்புதூர்.

Ward  35 கொட்டப்பட்டு

Ward  18 குஜிலித்தெரு

Ward 37 குவளப்பட்டி, ஏர்போர்ட்

Ward 38 முருகன் கோவில் தெரு

Ward 63 நேதாஜி தெரு

Ward 36 – பொன்மலைப்பட்டி

Ward 38 போலிஸ் குவாட்டர்ஸ்

Ward 33 சங்கிலியாண்டபுரம் , ஹனிபா காலானி

Ward 14 தாராநல்லூர்

Ward 64 – திருவரம்பூர்

Ward 35 சுப்ரமணியபுரம்

Ward 64 மலைக்கோவில்

Ward 45 கருமண்டபம்

Ward 49 காஜா தோப்பு

Ward 49 அப்துல்காலம் நகர்

Ward 60 தியாகராஜ நகர்

Ward 39 – கீழப்புதூர்

லால்குடி – அகிலாண்டாபுரம்

வையம்பட்டி –
 அன்னசமுத்திரம்

வையம்பட்டி – இலங்காகுறிச்சி

அந்தநல்லூர் – கம்பரசம் பேட்டை,
கோப்பு மேலத்தெரு, முத்தரசநல்லூர்

மருங்காபுரி – பில்லுபட்டி

வையம்பட்டி வெள்ளிவாடி

மண்ணச்சநல்லூர்  – ராஜீவ்நகர்
(சென்னை – 1)

இது பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை..

ஶ்ரீரங்கம் – 61

பொன்மலை – 51

கோஅபிசேகபுரம்  -67

அரியமங்களம் – 52

துவாக்குடி – 2

மண்ணச்சநல்லூர் – 15

மணப்பாறை –26

மருங்காபூரி -19

லால்குடி – 8

அந்தநல்லூர் – 5

மணிகண்டம் – 16

முசிறி – 4

புள்ளம்பாடி – 6

தொட்டியம் – 2

தா.பேட்டை – 1

திருவரம்பூர்  – 3

துறையூர் – 5

வையம்பட்டி   – 3

உப்பிலியாபுரம்  – 2

கொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு














  • கோவிட்-19 நோயை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணையில் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையில் எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • மேலும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானங்களை செய்யும் செய்முறை விளக்கமும் சரியான அளவு குறியீட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டில் நாம் தினசரியாக பயன்படுத்தும் பொருட்களை கொண்டே தயாரிக்கும் வண்ணம் இந்த செய்முறை விளக்கம் அமைந்துள்ளது.
  • காலையில் யோகாசனம் செய்தல், தினசரி உணவில் ஊட்டச்சத்தான காய் மற்றும் பழ வகைகளை சேர்த்துக்கொள்ளுதல், நீராவி பிடித்தல், மிதமான வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளும் இந்த மாதிரி அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
  • மஞ்சள் தூளை கண்டிப்பாக நமது உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு 3 -4 லிட்டர் வரையில் தண்ணீர் பருக வேண்டும் என்பன உள்ளிட்ட குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
  • மக்களின் நலனை மனதில்கொண்டு தமிழக அரசு இந்த மாதிரி உணவு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி விழிப்புடனும் சுகாதாரத்துடனும் இருப்பார்கள் என நம்புகிறோம்.

Grand Statement of Indian Tradition

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

பார்த்ததில் பிடித்தது :- இதில் 50 வருடம் கழித்து போலீசுக்கு கடிதம் வேறு. ! நான் தப்பிட்டேன் என்று Incredible Escape



இதில் 50 வருடம் கழித்து போலீசுக்கு கடிதம் வேறு. ! நான் தப்பிட்டேன் என்று Incredible Escape | Alcaraz

Thursday, 25 June 2020

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில்கள் ரத்து - ரயில்வே அமைச்சகம்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில்கள் ரத்து - ரயில்வே அமைச்சகம்


கோவிட் 19 பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.2020 புதன்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து வழங்குதல்!!புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சமத்துவம் அறக்கட்டளை இணைந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 (ARSENICUM ALBUM 30) என்ற மருந்து வழங்கும் நிகழ்ச்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து வழங்குதல்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சமத்துவம் அறக்கட்டளை இணைந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 (ARSENICUM ALBUM 30) என்ற மருந்து வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் டாக்டர் K.ஆறுமுகம் தலைமையில்   கீழ இரண்டாம் வீதி சந்திப்பில் நடைபெற்றது  நிகழ்ச்சியினை இயற்கை மருத்துவர் S.திவ்யா ஏற்பாட்டில் வழங்கினார் நிகழ்ச்சியில் பட்டயத்தலைவர் க.நைனாமுகம்மது, துணை ஆளுனர் சோ.பார்த்திபன், மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், க.தனகோபால், செயலாளர் பழ.செல்லத்துரை, பொருளாளர், தன்வீர்,முத்துப்பாண்டி, கணபதி, ஆரோக்கியசாமி, அட்வகேட் சந்திரசேகரன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர் கொரோனா தொற்று பரவாமல் விழிப்புணர்வுடன் அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்தப்பட்டது