https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 30 May 2018

இன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்

இன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்

💸ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும் 🏦வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. வங்கி ஊழியர்களுக்கான 💸ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது. 2017 நவம்பரில் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்🙄, ஆனால் ஆகவில்லை😟. இதனையடுத்து பலமுறை இது குறித்த பேச்சுவார்த்தைகள்🗣 🏦வங்கி நிறைவாகத்துடன் நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது😐. இதையடுத்து, 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது🔈. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது😓. இதனால் 🏛தமிழகத்தில், 💸300 கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், 💸2,000 கோடி ரூபாய் வரை, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும்😱 என, கூறப்படுகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி, வங்கியின் அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிட வேண்டியவை👍.

50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு

50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு

தஞ்சை பெரிய 🙏கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் திருடப்பட்ட 💸150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு சிலைகள் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டது👏. தஞ்சை கோயிலில் அதனை கட்டிய ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகா மகாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது😱 அண்மையில் தெரிய வந்தது. 🙏கோவிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், ராவு பகதூர் ஸ்ரீனிவாச கோபால் ஆச்சாரி மூலமாக சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்றதை 🗿சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 👮ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்👍. 
அதன் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்🚫 பிரிவு நேற்று விசாரணை நடத்தியது👍. அப்போது இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது🙄. இதில் 2.5 அடி உயரம் உள்ள ராஜராஜ சிலையின் மதிப்பு 💸ரூ.100 கோடியாகும். இரண்டு அடிக்கும் குறைவாக உள்ள உலோகா மகாதேவியின் 🗿சிலை மதிப்பு 💸ரூ. 50 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 29 May 2018

ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வசதி அறிமுகம்

ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வசதி அறிமுகம்

🚆ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருப்பவர்களுக்காக ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது👍. இது குறித்து 🚆ரயில்வே துறையின் மூத்த 👮அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙, "பயணிகள் டிக்கெட் 💻முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை🙂. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது👌. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல் இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா⁉ அல்லது ஆர்ஏசியில் வருமா😟 என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும்😯. இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே 🚆ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்👍" எனத் தெரிவித்துள்ளார்🔈.

Monday, 28 May 2018

கதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉

கதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉

பிரபல கவர்ச்சி நடிகை 💃சன்னி லியோன் தற்போது தமிழில் 🎥'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 🎬வி.சி. வடிவுடையான் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இந்நிலையில், ஏன் சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக மாறினார்⁉ என்ற காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரது சொந்த வாழ்க்கையினை 🎥'கரஞ்சித்' என்ற பெயரில் ஓர் டாக்குமெண்டரி தொடர் எடுத்துள்ளனர்😐. அந்த தொடரை 💃சன்னிலியோனுக்கு தனியே போட்டு காண்பித்துள்ளதாக தெரிகிறது😯. தன்னுடைய கதையை பார்த்து விட்டு மனம் உடைந்து கதறி கதறி அழுதாராம் 💃சன்னி லியோன். மேலும் இது குறித்து அவர்🎙, "இந்த நிலைமைக்கு நான் ஏன் தள்ளப்பட்டேன்🙄 என்று படத்தில் பார்த்த காட்சியை நினைத்து 1000 தடவைக்கு மேல் மனம் நொந்து அழுதேன்😢. நான் வாழ்க்கையில் செய்த சில விசயங்களை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்‘‘ என்று வருத்தத்துடன்😟 கூறியுள்ளார்.

ஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4500 கோடி வேண்டும்!

ஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4500 கோடி வேண்டும்!

மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த 4500 கோடி ரூபாய் தேவைப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த 24 லட்சம் வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும் என்றும், தற்போது தேர்தல் ஆணையத்திடம் வெறும் 12 லட்சம் இயந்திரங்கள் தான் இருக்கின்றன என்றும் தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Wednesday, 23 May 2018

ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் ?

ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் ?
******************************************************************

       ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு )  சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.
அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது.

மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.
வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

வீட்டைக் காலி செய்ய வைக்க குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.
பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்! வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...

ஒப்பந்தம்
********************

முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.

முன்பணம்
********************

வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வாடகை
*******************

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு?

மீண்டும் கட்டணம் உயர்வு?

*டீசல் மானியம் ரத்து, ஊழியர்கள் சம்பள உயர்வு காரணமாக தமிழக போக்குவரத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி இழப்பு. டீசல் விலை கூடுதல் காரணமாக ரூ. 1 கோடி மேலும் இழப்பு. இழப்பை ஈடுகட்டத் தமிழகம் முழுவது 2,000 வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை நிறுத்தப் போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. மேலும் பேருந்து விலை ஏற வாய்ப்புள்ளதாகத் தகவல்.*

Tuesday, 22 May 2018

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி!

கேரளாவில் வேகமாக  பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி!

கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் யாரும் அஞ்ச வேண்டாம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சல், பறவைக் காச்சல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்சல் ஆகியவை கேரளத்திலிருந்துதான் தமிழகத்துக்கு பரவியுள்ளன. அந்த வகையில் புது வரவாக, வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது. இந்த வைரஸை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க, சுகாதாரத்துறை அலெர்ட்டாக இருக்க வேண்டும்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.
அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை நேற்று உறுதிசெய்தனர். மரணமடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், அருகில் இருப்பவர்களிடம் தொற்றாது. ஆனால், நிபா வைரஸ் தாக்கியவர்களின் அருகில் இருப்பவர்களை அது, எளிதில் தாக்குகிறது. நிபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார். நிபா வைரஸ் மேலும் பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக லினியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

பெரம்பாரா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். கோழிக்கோடு மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஜெயஸ்ரீ கூறுகையில், ''பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தகுந்த பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு சிகிச்சைளிக்குமாறு மருத்துவர்கள், நர்ஸ்களை அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.

வௌவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும், மாம்பழங்களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது. இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.
கேரளத்தில் வேகமாகப் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக இறங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை குடிநீர் வாரியம்

1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை 🚰குடிநீர் வாரியம்

🚰குடிக்கத் தவிர மற்ற தேவைகளுக்காக பயன்படும் வகையில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 💸18.40 ரூபாய்க்கு 💦1,000 லிட்டர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்🔈, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 🚰குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தட்டுப்பாடின்றி🚫 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட 💦நீரினை கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு 💸ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்துள்ளது🔈.

அடிமையாகும் மாணவர்கள்...!

அடிமையாகும் மாணவர்கள்...!

*சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 63% பேர் 4 முதல் 7 மணி நேரமும், 23% பேர் தினமும் 8 மணி நேரத்திற்கு மேலும், 14% பேர் 3 மணி நேரத்திற்கும் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். மொபைல் போன் அடிமைகளாக மாறி வரும் மாணவர்கள் ஒரு நாளைக்கு 150 முறை போனை பார்க்கும் பழக்கம் வைத்துள்ளனர்.*

இன்றைய(மே-22) பெட்ரோல், டீசல் விலை விபரம்

இன்றைய(மே-22) விலை: பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87

☀சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்

☀எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் உள்ளன

இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.

"இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் தஞ்சாவூரில் நடக்கிறது. இம்முகாமில் 03.01.1998 முதல் 02.01.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது. இந்தத்தேர்விற்கு கல்வித்தகுதியாக பிளஸ்2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
மேலும், ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.21,700 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த ஏர்மேன் முகாமில் கலந்து கொள்ளும் முன்பே விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விபரங்களை www.airmenselection.gov.in அல்லது www.airmenselection.cdac.in என்ற " - தஞ்சாவூரில் நடக்கிறது இந்திய விமானப்படைக்கு ஜூனில் ஆள்தேர்வு

Monday, 21 May 2018

தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

விஷன் 2023 என்ற திட்டத்தின் கீழ் 🏛தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி 🚰குடிநீர் வழங்குவதற்கான திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் 💦குடிநீர் வழங்கல் துறை 👮அதிகாரிகள் கலந்துகொண்டனர்👍. தமிழகத்தில் உள்ள 🏘குடியிருப்புகளுக்கு தங்குதடையின்றி🚫 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. இதனையடுத்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி🎙, "⌚24 மணி நேரமும் 🚰குடிநீர் வழங்கும் 14 திட்டங்கள் 💸21,050 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 🏛தமிழகம் முழுவதும் சிறப்பான 🚰குடிநீர் விநியோகத் திறனை பெறும் வகையில் அதிகாரிகளுக்கு பிலிப்பைன்சில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 👮170 அதிகாரிகளை 👥7 குழுக்களாக பிரித்து 5 நாட்கள் பிலிப்பைன்சின் மணிலாவிலும் 📆5 நாட்கள் சென்னையிலும் என இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்🔈.

உலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்

உலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்

🎥'காற்று வெளியிடை' படத்தின் மூலம் இயக்குனர் 🎬மணிரத்தினத்தின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை 💃அதிதி ராவ் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்🤗. இந்த நிலையில், தெலுங்கு பட 📹படப்பிடிப்பின் போது, உலோகத்தாலான ஆடை, ஒன்றை அணிந்து நடித்துள்ளார்👍. இப்படத்தின் கதையின்படி 📹காட்சிக்காக பிரத்யேகமாக ஓர் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது😯. ஆனால், அந்த ஆடையை அணிந்து 💃அதிதி நடித்த போது தவறி கீழே விழுந்து😱 அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது😳. மேலும், உடலில் சிராய்ப்புகளும், சிறிய 🤕காயங்களும் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் அதனை பொருட்படுத்தாது தனது 📹காட்சியினை அவர் நடித்து கொடுத்துள்ளார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது*

*கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.*

*ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.*

*தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது, கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.*

*ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம்.*

*அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர்.*

*பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.*

*தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.*

*இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்*

செல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்- ஆசிய வங்கி ஆய்வு

செல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்- ஆசிய வங்கி ஆய்வு

🌏உலக அளவிலான செல்வநிலை மதிப்பீட்டில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி🏦 நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா🌎 முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும்👏, ஜப்பான் 19,522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன👍. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும்🌇, 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது😯. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6⃣வது இடம் பிடித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது👍. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக📈 ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சிக்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள்💸, சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி🏭, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட்🏗 போன்றவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில்🗓 இந்தப்பட்டியலில் 4 அல்லது 5வது இடத்தில்⬆ இந்தியா இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.