https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 31 May 2017

திநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர தீவிபத்து தற்போதைய தகவல்

தற்போதைய தகவல்

*📡சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸில் முதல் தளத்தின் சுவர் இடிக்கப்படுகிறது*

*📡அதிகாலை அடித்தளத்தில் பற்றிய தீ 7 தளத்திற்கும் பரவியுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் உள்அலங்காரம் செய்து இருந்ததால் தீ வேகமாக பரவுகிறது.*

*📡புகை உறிஞ்சும் கருவி, நுரை உள்ளிட்டவை பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.*

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பிடித்த தீயை அணைக்க 10 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.*

*📡15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர.*

*📡தீ விபத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*



மாற்று திறனாளிகளுக்கு அதிக இடஒதுக்கீடு-முதல்வர் அறிக்கை

மாற்று திறனாளிகளுக்கு அதிக இடஒதுக்கீடு-முதல்வர் அறிக்கை

♿மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3⃣சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 4⃣சதவீதமாக உயர்த்தி முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்👍. அதன் படி அவர் கூறியிருப்பதாவது🎙,"1981ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஊனமுற்றோருக்கு 3⃣சதவீதம் தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சத வீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3⃣சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4⃣சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்". என்று கூறியுள்ளார்😯. அதன் படி, 
🔰பார்வை குறைவுடையோருக்கு 1% 
🔰செவித்திறன் குறைபாடு உள்ளவர்க்கு 1% 
🔰கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 1% 
🔰புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு 1% 
மேலும், இந்த ஒதுக்கீடு, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடு நேரம் அதிகாரபூர்வமாக வெளியிட வில்லை இன்று மாலைக்குள் வரலாம் என நன்பகதக்க தகவல்

அனைவரும் வெற்றி பெற   வாழ்த்துகள்

தேர்வு முடிவுகள் அறிய

www.intradote.tn.nic.in

பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தை

👩பெண் 👶குழந்தையை கொல்ல முயன்ற தந்தை😱

கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையின் தந்தையே கொல்ல முயற்சி செய்துள்ளார்😱. கன்னியாகுமரி மாவட்ட‌ம் குளச்சலில் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மனைவி மேரி பியர்லி, பிரசவத்துக்காக குளச்சல் தனியார் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது😯. ஏற்கெனவே இ‌ரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதும் பெண் குழந்தையாகப் பிறந்ததில் ராபின்சன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது😳. இதனை அடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே கொல்ல முயன்ற தந்தை ⛓கைது செய்யப்பட்டார். 
இந்நிலையில், ⛓சிறையில் உள்ள கணவரை காப்பாற்றுவதிலேயே தாய் கவனம் செலுத்துவதால் பெண் குழந்தையை தாயிடம் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டுள்ளனர்😯. சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் நெல்லையில் உள்ள காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தெரிவித்துள்ளார்🔈.

திநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர தீவிபத்து

திநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர 🔥தீவிபத்து😱

தி.நகரில் உள்ள பிரபல துணி கடையான சென்னை சில்க்.ல் இன்று காலை 4.45 மணியளவில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது😱. கட்டிடத்தின் அடிப்புறத்தில் இருந்தே தீ எரிய ஆரம்பித்துள்ளது😯. தொடர்ந்து பல மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை😟. புகையும் தொடர்ந்து வெளியேறி வருகிறது. மேலும், 🔥தீ.யின் வெப்பம் அதிகமாக உள்ளதால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடிகளும் உடைந்து வருகிறது😳. தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது😳. புகையால் 7⃣மாடி கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தீ பிடித்து எரிந்ததால் லட்சதிர்ற்கு மேலான துணிகள் எரிந்துள்ளதாக தெரிகிறது. மேலும்,பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்👍. மேலும், அந்த வழியில் செல்லும் 🚗வாகனங்களும் மாற்று வழியில் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது😳.

தினம் ஒரு திருக்குறள் 31.05.2017

இன்றைய திருக்குறள் (Thirukkural of the Day)

அதிகாரம் 1. கடவுள் வாழ்த்து (The Praise of God)

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்  நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

English Meaning:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

தினம் ஒரு பழமொழி


பழமொழி
🔰கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர். 
💥இதன் அர்த்தம்: குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.

Sunday, 28 May 2017

குறைகள் ( படித்ததில் பிடித்தது)

குயிலைப் பார்த்து மனிதன் சொன்னான், நீ மட்டும் கருப்பா இல்லனா ரொம்ப நல்லாருக்கும் என்று ...

கடலைப் பார்த்து கூறினான் உப்பு மட்டும் இல்லனா உன் மதிப்பே தனி என்று...

அடுத்து ரோஜாவைப் பார்த்து கூறினான் முட்கள் இல்லனா நீ இன்னும் சிறப்பு என்று!

இவை மூன்றும் சேர்ந்து மனிதனிடம் சொன்னது குறைகளை மட்டுமே பார்க்கும் குணம் மட்டும் இல்லனா நீ எங்கயோ போயிருப்ப என்று! !!

🙏🏻🙏🏻🙏🏻

இன்றைய வெப்பநிலை முன்னறிவிப்பு நாள்- 28.05.17

.  
☀இன்றைய வெப்பநிலை☀
            *முன்னறிவிப்பு*
            *நாள்--- 28.05.17*

*🌍தமிழக  வெப்பநிலை🌍*

*☀அரியலூர்☀*
      அதிகபட்சம் 39°c
   குறைந்தபட்சம் 28°c

*☀சென்னை☀*
      அதிகபட்சம் 41°c
   குறைந்தபட்சம் 30°c

*☀கோயம்புத்தூர்☀*
      அதிகபட்சம் 34°c
   குறைந்தபட்சம் 25°c

*☀கடலூர்☀*
      அதிகபட்சம் 37°c
   குறைந்தபட்சம் 29°c

*☀தர்மபுரி☀*
      அதிகபட்சம் 35°c
   குறைந்தபட்சம் 25°c

*☀திண்டுக்கல்☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 24°c

*☀ஈரோடு☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 25°c

*☀காஞ்சிபுரம்☀*
      அதிகபட்சம் 40°c
   குறைந்தபட்சம் 29°c

*☀கன்னியாகுமரி☀*
      அதிகபட்சம் 33°c
   குறைந்தபட்சம் 28°c

*☀கரூர்☀*
      அதிகபட்சம் 37°c
   குறைந்தபட்சம் 27°c

*☀கிருஷ்ணகிரி☀*
      அதிகபட்சம் 35°c
   குறைந்தபட்சம் 25°c

*☀மதுரை☀*
      அதிகபட்சம் 39°c
   குறைந்தபட்சம் 27°c

*☀நாகப்பட்டினம்☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 29°c

*☀நாமக்கல்☀*
      அதிகபட்சம் 37°c
   குறைந்தபட்சம் 26°c

*☀பெரம்பலூர்☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 27°c

*☀புதுக்கோட்டை☀*
      அதிகபட்சம் 39°c
   குறைந்தபட்சம் 28°c

*☀இராமநாதபுரம்☀*
      அதிகபட்சம் 37°c
   குறைந்தபட்சம் 29°c

*☀சேலம்☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 24°c

*☀சிவகங்கை☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 28°c

*☀தஞ்சாவூர்☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 29°c

*☀நீலகிரி☀*
      அதிகபட்சம் 28°c
   குறைந்தபட்சம் 22°c

*☀தேனி☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 26°c

*☀திருவள்ளூர்☀*
      அதிகபட்சம் 42°c
   குறைந்தபட்சம் 30°c

*☀திருவண்ணாமலை☀*
      அதிகபட்சம் 39°c
   குறைந்தபட்சம் 28°c

*☀திருவாரூர்☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 29°c

*☀திருநெல்வேலி☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 29°c

*☀திருப்பூர்☀*
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 25°c

*☀திருச்சிராப்பள்ளி☀*
      அதிகபட்சம் 40°c
   குறைந்தபட்சம் 27°c

*☀ தூத்துக்குடி☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 29°c

*☀வேலூர்☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 28°c

*☀விழுப்புரம்☀*
      அதிகபட்சம் 40°c
   குறைந்தபட்சம் 29°c

*☀விருதுநகர்☀*
      அதிகபட்சம் 38°c
   குறைந்தபட்சம் 27°c

*☀கொடைக்கானல்☀*
      அதிகபட்சம் 22°c
   குறைந்தபட்சம் 15°c

*☀ஊட்டி☀*
      அதிகபட்சம் 20°c
   குறைந்தபட்சம் 15°c

      ☀புதுச்சேரி☀
      அதிகபட்சம் 36°c
   குறைந்தபட்சம் 29°c
_____________________
    

தினம் ஒரு திருக்குறள் 75

இன்றைய திருக்குறள் (Thirukkural of the Day)

*அதிகாரம் 8. அன்புடைமை (The Possession of Love)*

*குறள் 75:*
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து  இன்புற்றார் எய்தும் சிறப்பு

*மு.வ உரை:*
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

*English Meaning:*
These are the fruits of tranquil life of love

🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
https://goo.gl/xRdC1E (364 kB)

நன்றி
Duta

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு ✍தேர்வு முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது💻. மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ✍முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்திருந்தனர்😟. இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி (இன்று ) காலையில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது🔈. மேலும், ✍தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய 💻இணையதளங்களில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ மக்கள் தொடர்பு அதிகாரி 👮ராமசர்மா அறிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

Saturday, 27 May 2017

விரைவில் 108 🚑ஆம்புலன்ஸ் சேவைக்கு 'மொபைல் ஆப்' வசதி

விரைவில் 108 🚑ஆம்புலன்ஸ் சேவைக்கு 📱'மொபைல் ஆப்' வசதி👏

விரைவில் தமிழகத்தில் 108 சேவைக்கு🚑 என்று பிரத்யேகமான 📱'மொபைல் ஆப்' சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்🔈. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள 108 🚑தலைமை சேவை மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றியோருக்கு 📜சான்றிதழ்களை வழங்கிய விஜயபாஸ்கர் பேசுகையில்🎙,"புரட்சித் தலைவி அம்மாவின் 108 அவசர கால ஊர்தி சேவையை மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உபயோகப்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்தை தெரிவிக்கும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு பிரதியேகமாக கைப்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இச்சேவையை முதல்-அமைச்சர் விரைவில் துவங்கி வைப்பார்." என்று தெரிவித்துள்ளார்👍.


இன்றைய திருக்குறள் (Thirukkural of the Day) 27.05.2017

இன்றைய திருக்குறள் (Thirukkural of the Day)

*அதிகாரம் 8. அன்புடைமை (The Possession of Love)*

*குறள் 74:*
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்  நண்பென்னும் நாடாச் சிறப்பு

*மு.வ உரை:*
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

*English Meaning:*
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
https://goo.gl/BuZD0h (389 kB)

Friday, 26 May 2017

பயிர் காப்பீட்டிற்காக ரூ.4.3 கோடி நிதி ஒதுக்கீடு

பயிர் காப்பீட்டிற்காக ரூ.4.3 கோடி நிதி ஒதுக்கீடு

வறட்சியால் பாதிக்கப்பட்ட 🌱விவசாயிகளின் கடன் சுமையையும் நஷ்டத்தையும் சமாளிக்க தமிழக பயிர் காப்பீட்டிற்காக ரூ.487கோடி 💸நிதியை ஒதுக்கியுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது👏. பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக விவசாயத்துறை இந்த அரசாணை வெளியிட்டுள்ளது😯. இதனை அடுத்து, 🌱விவசாயிகள் அனைவரும் தேசிய, தனியார் 🏦வங்கிகளில் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்👍 என்று தமிழக அரசு 🙏வேண்டுகோள் விடுத்துள்ளது. 🌾நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது👍.

ஹோட்டல் சங்கங்கள் பந்த்

ஜி.எஸ்.டி. 💸வரித்தொகையை 🚫எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஹோட்டல் சங்கங்கள் பந்த்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜி.எஸ்.டி.யின் புது விலை நிர்ணயங்களை 🚫எதிர்த்து 🏨ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்🔈. குளிர்சாதன படுத்தப்பட்ட ஹோட்டல்களில் 18% விலை நிர்ணயத்தில் இருந்து 10%மாகவும், குளிரூட்டப்படாத உணவகங்களில் 12% விலை நிர்ணயத்தில் இருந்து 5%மாகவும் குறைக்க வேண்டும் என்று கூறி தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்😳. மேலும், அவர்கள் கூறியிருப்பதாவது🎙, மத்திய அரசு எங்களது இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிடில் வரும் மே.30ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்👍 என்றும் தெரிவித்துள்ளனர்🎙. உணவக சங்கத்தினர் அறிவித்துள்ள பந்த்.தில் வர்த்தகர்களும் சேர்ந்து கொள்வார்கள் என்றும் தகவல் கூறுகிறது😯. எனினும், நாளை நடைபெறவுள்ள வர்த்தக சங்க 🤔ஆலோசனையை அடுத்து, அவர்களது முடிவு என்ன என்பது தெரியவரும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

வறட்சியை சமாளிக்க செயற்கை மழை

வறட்சியை சமாளிக்க செயற்கை மழை

வறட்சியை சமாளிக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயற்கை ☔மழை பெய்ய வைக்க புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது👏. நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இந்த வருடம் ☔மழை இல்லாததால் நாடு முழுக்க வறட்சி நிலவி வருகிறது😳. வறட்சியை சமாளிக்க 🏛மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது😯.அதில் ஒன்று தான், செயற்கை மழை☔. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில்🎙,"செயற்கை மழை பெய்விக்க மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு மழை மேகங்களை உருவாக்குவதற்காக 200 மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இத்திட்டம் 3⃣ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதற்காக 2⃣ஆய்வு ✈விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன". என்று கூறினார். 
மேலும், "ஒரு விமானம் மழை மேகம் உருவாக்கும் பணியை மேற்கொள்ளும், மற்றொன்று மழை மேகத்தை உருவாக்கும் பகுதிக்கான மாதிரியை எடுக்க பயன்படுத்தப்படும். வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின் துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்துகள்களாக மாறி மழையாக பொழியும்" என்று தெரிவித்தார்🔈.சீன நாடுகளில் இந்த செயற்கை மழை திட்டம் வெற்றிகரமாக மழையை பொழிய செய்துள்ளதாம்👍.சோலாப்பூரில் நடத்தப்படும் இந்த ஆய்வு வெற்றியடையும் பட்சத்தில் வறட்சி நிலவுகிற மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது👍.

தினம் ஒரு பழமொழி 25.05.2017

பழமொழி: 
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும். 

இதன் அர்த்தம்: ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

தினம் ஒரு திருக்குறள் 26.05.2017

இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day)

அதிகாரம் 8. அன்புடைமை (The Possession of Love)

குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு  என்போ டியைந்த தொடர்பு

மு.வ உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

English Meaning:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
https://goo.gl/0RL3jN (345 kB)

Thursday, 25 May 2017

படித்ததில் பிடித்தது 25.05.2017

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!

ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!

.
.
.
.
.

மத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றம்

மத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றம்

🏛மத்திய அரசு திட்டங்களுக்கு நேரு, காந்தி பெயர்கள் வைக்கப்படுவதை மத்திய அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது😳. அந்த வகையில் தற்போது ஒரு திட்டத்தில், முன்னாள் பிரதமர் 'இந்திரா' பெயர் நீக்கப்பட்டுள்ளது😱. 60 ஆண்டுகளுக்கு மேல் காங்., தலைமையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வந்தது👍. அதனால் எல்லா 🏛மத்திய அரசு திட்டத்திற்கும் காந்தி, நேரு, ராஜீவ், இந்திரா போன்ற பெயர்கள் தான் வைக்கப்பட்டு வந்தனர்😯. ஆனால், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து திட்டங்களுக்கும், 'பிரதம மந்திரி திட்டம்' என, பொதுவாக பெயரிடப்பட்டு வருகிறது😳. அந்த வகையில், கர்ப்பிணி 👩பெண்கள், பாலுட்டும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்க, 2010ம் ஆணடில், காங்க்., தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்திற்கு, ' இந்திரா காந்தி மாத்ரித்வா சயோக் யோஜனா' என்று பெயரிட்டது👍. இதனை தொடர்ந்து, தற்போதைய மத்திய அரசு இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளது👍. மேலும், திட்டத்தின் பெயரையும், 'பிரதம மந்திரி மாத்ரித்வா சயோக் யோஜனா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது😟 என்பது குறிப்பிடத்தக்கது😳.

முதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூல்

முதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூல்

உதகையில் உள்ள முதுமலை 🐯புலிகள் சரணாலயத்தில் 📱செல்போன்களில் செல்பி எடுக்க தடை🚫 விதிக்க பட்டுள்ளது😳. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இதுவரை விதிகளை மீறி செல்பி எடுத்ததாக கூறி சுற்றுலா பயணிகள் மீது இதுவரை 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது😱. மேலும், இதற்கான அபராதமாக ரூ.4.3 லட்சம் 💸வசூலிக்க பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது😳. சாலையை கடக்க முயலும் 🐘மிருகங்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காக 🚗வாகனத்தை நிறுத்தி இறங்கி செல்கின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்களை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்👍 என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

முதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூல்

முதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூல்

உதகையில் உள்ள முதுமலை 🐯புலிகள் சரணாலயத்தில் 📱செல்போன்களில் செல்பி எடுக்க தடை🚫 விதிக்க பட்டுள்ளது😳. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இதுவரை விதிகளை மீறி செல்பி எடுத்ததாக கூறி சுற்றுலா பயணிகள் மீது இதுவரை 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது😱. மேலும், இதற்கான அபராதமாக ரூ.4.3 லட்சம் 💸வசூலிக்க பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது😳. சாலையை கடக்க முயலும் 🐘மிருகங்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காக 🚗வாகனத்தை நிறுத்தி இறங்கி செல்கின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்களை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்👍 என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.