Thursday, 31 August 2017

Blue whale கேம் என்றால் என்ன?

Blue whale கேம்
என்றால் என்ன?

இது ஒரு எச்சரிக்கை பதிவு.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் மொபைலில் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கவனியுங்கள்

Blue whale கேம்னதும் ரெண்டு திமிங்கலம் சண்டை போடும்னு தான் நானும் நினச்சேன் ...!!

வெளிய இருந்து பாக்குரப்ப அப்படி தான் எல்லாருக்கும் தோனும் ...!!

ஆனா அங்க தான் இருக்கிறது
Twist,,,,

இது ஒரு ஆன்லைன் கேம் முக்கியமாக தற்கொலைக்கு
தூண்டும் Game,,,.

இது குறித்து பல பேருக்கு
இன்னும் முழுதாக தெரியவில்லை,,,

Game blue plan இதுதான்,,,

இந்த கேம் உள்ளே போனதும் பிக் பாஸ்ல கொடுப்பது போல டெய்லி டாஸ்க்கு போலகொடுப்பாங்க,,, .

அங்கே மாரி பந்தை கூடைக்குள்ள போடுவது  குதிப்பது தாண்டுவது போல இல்லை,,,,

கத்தி ஊசி ரத்தம் இதான்
Task,,,,,

ஆரம்பத்தில் டாஸ்க் ஈசியா தெரியும் அதனால ஈசியா ஏமாந்துருவாங்க இவ்வளவுதானென்று,,,

அது என்னான்னா ஒரு குண்டூசிய எடுத்து விரல்ல லைட்டா குத்த சொல்லுவாங்க,,,,அதுவும் ஆதாரத்தோட குத்தி அந்த கேம்ல அப்லோட் பண்ணனும் அதான் கேம்.

இந்த கேம் மொத்த டாஸ்க்கு 50 நாளைக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு Task,,,,

கையை கத்தியால கிழிக்கணும் காலை கிழிக்கணும்னு,,,,

கொஞ்ச நாள் போன பிறகு கையிலே திமிங்கலத்தோட படம் வரையனும் கத்தியால,,,,

அப்புறம்,மொட்டை மாடில நின்று போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் சுவர் மேலே ஏறி,,,,

அப்புறம் கால தொங்க போட்டு உட்கார வேண்டும்.

சுவர் மேல ஒரு காலை தூக்கி
கொண்டு நிற்க வேண்டும்,,,

இப்படி 50 நாட்கள்விளையாடி அவர்கள்சொல்வதையெல்லாம் செய்து போட்டா எடுத்து அனுப்பினால் நீங்க தான் அந்த கேம் வின்னர் ...!!

பரிசு என்ன தெரியுமா ?? கார் பங்களா பலகோடி பரிசு வைரம. 10கிலோ தங்கம் அப்படிலாம் நினைச்சு கூட பார்காதீர்கள். அதான் இல்லை,,,

பரிசு விளையாடுரவங்க உயிர்

ஆமாங்க 50வது நாள் டாஸ்க்கே அதான் மொட்ட மாடி சுவத்துல ஏறி நின்னு கீழ குதிக்கனும் குதிச்சா நீங்க தான் வின்னர் ...!!

எப்படி குதிப்பாங்க இதெல்லாம் சின்னபுள்ளதனமாக இருக்கிறது என்று கேட்பீங்க.,,,

எந்த விஷயத்த எடுத்தாலும் 21 நாள் தொடர்ந்து அதை செய்தால் அதற்கு நாம் அடிமை,,,,

இதான் கேம்.உயிர்கொல்லி பிக் பாஸ் கேம்,,,

மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்,,,, உங்கள் பக்கத்தில் share செய்யுங்கள்.

நிறைய இளைஞர்கள் உயிர் விட்டிருக்கிறார்கள்,,, addict ஆகி,,,

சமீபத்தில் கேரள மாணவன் ஒருவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

Always be alert and watch what your children are doing in mobile games,,

ஆசிரியர் தின சிறப்பு மலர்


🙏 *நன்றி மறப்பது நன்றன்று*

📕 எழுத்தறிவித்தவன் இறைவன்.  அந்த இறைவடிவிலான மனித தெய்வங்களைப் போற்றும் தினம் ஆசிரியர் தினம்.

📕 தமக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை மனதில் போற்றிப் பாதுகாக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்த்துக்களை, நன்றிகளை, பள்ளி கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நற்றிணை வாய்ப்பளிக்கிறது.

📕 நற்றிணை இணையதளத்தில்  www.natrinai.org மற்றும் யூட்யூப்-ல்
https://m.youtube.com/c/Natrinai

📕 செப்டம்பர்-5ல் வெளியாகவிருக்கும் ஆசிரியர் தின சிறப்பு மலரில் உங்கள் கருத்துக்களை கட்டுரையாக அல்லது கவிதையாக வெளியிடலாம்.

📕 படைப்புகள் எழுத்து வடிவில் அல்லது ஒலி வடிவில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் தயார் செய்து natrinaihelpcenter@gmail.com  என்ற முகவரிக்கு e-mail மூலமாகவோ, (அல்லது) 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவோ அனுப்பவும்.

📕 3.9.2017 ஞாயிறு இரவு 12 மணிவரை படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

📕 ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கருத்துக்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

🙏 சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.

அன்புடன்
-நற்றிணைக் குழு

ஜென் கதை

கண்ணாடி😎😎🤓🤓

அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி.

அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார்.

இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள்.

‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகன்னு நெனப்புடா.

எப்பப்பார் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்.....!!!’

சிஷ்யர்கள் இப்படிப் பேசுவது குருநாதருக்கும் தெரியும்.

ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான்.

அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது,

துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம்.

‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர்.

ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா..???’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

துறவி சிரித்தார்.

‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன்.

                

அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழுமுதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்'

‘அப்புறம், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டாமா......???

அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன்,

மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன்.

அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன்.’

‘எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால்,

என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை'

என்றுகூறி சீடர்களுக்கு விளங்க வைத்தார்.

ஜிஎஸ்டி: ஒரு மாதத்தில் வசூலான வரி பணம் எவ்வளவு தெரியுமா??

ஜிஎஸ்டி: ஒரு மாதத்தில் வசூலான வரி பணம் எவ்வளவு தெரியுமா??

கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி-யின் மூலம் முதல் மாத வரி வருவாய் எவ்வளவு வசூலாகியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் வரி வசூல் ரூ.92,283 கோடி என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுமார் 59.57 லட்ச மக்கள் ஜூலை மாதத்துக்கான வரித்தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை 64.4% வரி செலுத்தப்பட்டுள்ளது. மொத்த வரி வசூல் தொகையான ரூ.92.283 கோடியில், ரூ.14,894 கோடி மத்திய அரசுக்கு வந்த ஜிஎஸ்டி வரி தொகை, ரூ.22,722 கோடி மாநில அரசுக்கு வந்த ஜிஎஸ்டி வரி தொகை, ரூ.47,469 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி தொகை என் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ரூ.91,000 கோடி வரி பணம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.92,283 கோடி வசூலாகியுள்ளது. இந்த வசூல் தொகை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

Wednesday, 30 August 2017

1000ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வராது'-மத்திய அரசு

'1000ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வராது'-மத்திய அரசு

'1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 - 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன. இதையடுத்து, புதிதாக, 50 - 200 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாதெனவும், 1000ரூபாய் நோட்டுக்கள் இனி புழக்கத்திற்கு வராது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நன்றி
Duta

Monday, 28 August 2017

அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்.12-ம் தேதி நடைபெறுகிறது

அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்.12-ம் தேதி நடைபெறுகிறது

அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாத, 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்🏛 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை☀ நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டு அணிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இதுதொடர்பான அழைப்பு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 27 August 2017

இலக்கு

இலக்கு.

அது ஒரு விளையாட்டு அரங்கம். அங்கே சில இளைஞர்கள் வில், அம்புப் போட்டியில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆனால், அந்த இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் தங்களுடைய இலக்கு வட்டத்தை எட்டமுடியவில்லை. அம்பு திசைமாறிச் சென்றுகொண்டே இருந்தது.

ஒரு ஜென் துறவி அந்த பக்கமாக மெதுநடை போட்டுக்கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஜென் துறவி மெல்லச் சிரித்தார்.

இளைஞர்களுக்குக்கோபம் வந்துவிட்டது. "உனக்கு என்ன சிரிப்பு,! தியானம் செய்யற உனக்கு வில், அம்பைப்பற்றி என்ன தெரியும்? இவ்ளோ தூரத்தில் இருந்து அந்த இலக்கை குறிவைப்பது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?" என்றார்கள்.

பணிவாகச் சொன்னார் ஜென் துறவி.
"இருந்தாலும், நான் ஒரு சின்ன முயற்சி செய்து பார்க்கறேன், கொஞ்சம் அந்த வில், அம்பைக் கொடுங்கள்!"

அந்த இளைஞர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
"இவன் அம்பு விடப்போறானா!" என்று கேலி செய்தபடி அவரிடம் வில், அம்பைக் கொடுத்தார்கள்.

துறவி வில்லை நிமிர்த்தி நிறுத்தினார். அம்பைப் பொருத்தி எய்தார். அவ்வளவுதான், அது இலக்கைத் தாக்கியது!

இளைஞர்கள் அசந்துவிட்டார்கள். "மன்னிக்கவும்..,நீங்க பெரிய வில்வித்தை நிபுணரா?" என்றார்கள்.
"இல்லவே இல்லை. நான் இப்போதுதான் முதல்தடவையாக வில், அம்பைத் தொட்டேன் ஆனால், என்னோட கவனம் மொத்தமும் தான் இலக்கில் மட்டுமே குவிந்து இருந்தது. உங்களுக்கு அப்படியில்லை, கிடைக்கப்போற பரிசு, பாராட்டு, புகழ், பணம் இதைப்பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டே முயற்சி செய்தீர்கள். அதனாலதான் எத்தனையோ திறமை இருந்தும் உங்களால அந்த இலக்கைத் தொடமுடியலை!" என்றார் ஜென் துறவி.

செயலில் மட்டுமே கவனம் கொண்டவர்கள் அதை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். பலனை எதிர்பார்த்து செயலாற்றுபவர்கள் பதட்டத்துடன் செயலை பாழாக்கி விடுகிறார்கள்

Saturday, 26 August 2017

பாலியல் குற்றவாளி ராம் ரஹீம்-சிறையில் சொகுசு வாழ்க்கை

பாலியல் குற்றவாளி ராம் ரஹீம்-சிறையில் சொகுசு வாழ்க்கை

பாலியல் வழக்கில் குற்றவாளி என ⚖தீர்ப்பளிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது😳. மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்படுவதுடன், அவருக்கு உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😱. இதனிடையே, கோர்ட் ⚖உத்தரவுப்படி அவருக்கு சொந்தமான 2 ஆசிரமங்களுக்கு அரியானா மாநில அரசு சீல் வைத்துள்ளது😯. 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங், 60, பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், 😡ஆத்திரமடைந்த அவருடைய ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 31 பேர் உயிரிழந்தனர்; பலர் 🤕காயமடைந்தனர். 👮போலீஸ் வாகனங்கள் உட்பட பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன😱. 
இந்நிலையில் குற்றவாளி ராம் ரஹீமை, 👮போலீசார் 🚁ஹெலிகாப்டர் மூலம் ரோதக் அழைத்து சென்றுள்ளனர்😯. அவருடன் ஏராளமான பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது நீதிமன்ற 📹வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோதக்கில் சொகுசு 🏨விடுதி ஒன்றிற்கு ராம் ரஹீம் அழைத்து செல்லப்பட்டு, ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது😱. பின்னர் மாலை சிறையில் அடைத்தனர். ஆனால், இவருக்கு ⛓சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டது என்பதனை 👮அதிகாரிகள் 🚫மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

''பட்டறிவே உயர்ந்தது."

''பட்டறிவே உயர்ந்தது."

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர்.

அவர்கள், “இந்த இளைஞன் வெளிச்சத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர்.

அப்போது பார்வையற்ற இளைஞன், “வெளிச்சத்தை நான் தொட்டுப் பார்க்க வேண்டும். சுவைத்துப் பார்க்க வேண்டும்.

அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.

இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைப்படாது.

அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது.

உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான்.

உடனே புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன்,

“கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

ஆம்..

"அனுபவமே சிறந்த ஆசான்!" அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்.

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம் ''நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும்" என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம்.

ஆனால், பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.

Thursday, 24 August 2017

திருப்பதி தேவஸ்தானத்தில் 1400 கேமராக்கள்

திருப்பதி தேவஸ்தானத்தில் 1400 கேமராக்கள்

திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 1400 📹கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது👏. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது👍. அதில் ஒருகட்டமாக அலிபிரி சோதனை சாவடி முதல் திருமலை முழுவதும் 📹சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது😯. இந்நிலையில் குற்றவாளிகளை அலிபிரி சோதனை சாவடியிலேயே அடையாளம் காணப்பட்டு அவர்களை பிடிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👌. 
தற்போது கட்டுப்பாட்டு அறையில் 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்😯. ஒரு சிப்டுக்கு 5 பேர் என நியமிக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது👍. மேலும் இதில் 10 பேர் நியமிக்கப்பட்டு எந்த விதத்திலும் குற்றவாளிகள் நடமாட்டம் இல்லாமல் இருக்க கண்காணிக்கப்பட உள்ளது👏. தொடர்ந்து பக்தர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍.

Wednesday, 23 August 2017

'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு

'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ 📚படிப்பிற்கான மாணவ சேர்க்கை ✍'நீட்' தேர்வின் அடிப்படையில் நடக்கவேண்டும் என்று 🏛மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது⚖. இதன் படி, நாளை நடைபெறவுள்ள மருத்துவ கவின்சிலுக்கான, மருத்துவ தரவரிசை 📜பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது👍. மேலும், இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதோ👇 
⭐ மாநில பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 27,488.  
⭐ சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 3,418 .  
⭐ கடந்த ஆண்டுகளில் படித்து தற்போது விண்ணப்பித்தவர்கள்: 5,636.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள 📜பட்டியலின் தரவரிசைப்படி முதல் ஐந்து மாணவர்களும் அவர்களது மதிப்பெண்களும் இதோ👇 
🔰 ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ், 656 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்  
🔰 கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா, 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம். 
🔰 திருச்சியை சேர்ந்த சையத் ஹபீஸ் 645 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம்  
🔰 சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் நான்காவது இடம்  
🔰 சென்னை அடையாறை சேர்ந்த ஜீவா ஐந்தாவது இடம்

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, மற்றும் சிலரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, மற்றும் சிலரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது

மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரது பதவி பறிக்கப்படுவதாக தினகரன் கூறியுள்ளார்🎙. இது குறித்து அவர் அறிவித்துள்ள🔈 அறிக்கை📜 வருமாறு👇

🔰 திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் காமராஜை நீக்கிவிட்டு, எஸ்.காமராஜ் என்பவர் நியமிக்கப்படவுள்ளார்  
🔰 கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு செந்தில்பாலாஜி நியமிக்கப்படவுள்ளார். 
🔰 வேலூர் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து அமைச்சர் வீரமணி நீக்கப்பட்டு, ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.பாலசுப்ரமணி நியமிக்கப்படுகிறார்.  
🔰 தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தமிழன் நியமிக்கப்படுகிறார்.  
🔰 திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து பலராமன் நீக்கப்பட்டு, பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை நியமிக்கப்படுகிறார்.  
🔰 புதுக்கோட்டை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டு, கார்த்திகேயன் நியமிக்கப்படுகிறார்.  
🔰 காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து ஆறுமுகம் நீக்கப்பட்டு கோதண்டபாணி நியமிக்கப்படுகிறார்.  
🔰 அமைப்பு செயலாளராக இருக்கும் சுதா கே. பரமசிவன் நீக்கப்பட்டு, எஸ் முருகன், குடவாசல் எம்.ராஜேந்திரன், வேலாயுதம் ஆகியோர் அப்பதவியில் நியமிக்கப்படுகின்றனர். 
இவ்வாறு தினகரன் 🔈வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் கூறப்பட்டுள்ளது😳.

எண்களை தமிழில் எழுத....


எண்களை தமிழில் எழுத....

“1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′
இதை எப்படி மனப்பாடம் செய்ய?

“க’ டுகு,                    1

“உ’ ளுந்து,               2

“ங’ னைச்சு,.            3

“ச’  மைச்சு,              4

“ரு’ சிச்சு,                   5

“சா’ ப்பிட்டேன்,.       6

“எ’ ன, “.                     7

அ’ வன்,                     8

“கூ’ றினான்;           9

“ஓ’  என்றாள்.          0

Tuesday, 22 August 2017

பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படவேண்டாம் !

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.

இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !

அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!

*பெரிய தொகைதான்,

இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.*

இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது.

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான்.

பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.

அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

*புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் .

அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.*

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.

*அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்.

அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.

வந்தவன் திடீரென்று ,  "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே.

கல்லு மாதிரி இருந்தீங்களே !
உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.*

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " .

அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

*" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் .

நான் உங்க தீவிர ரசிகன்.

இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.

அதுல சந்தேகமே இல்லை.

ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.

போட்டி துவங்கும் நேரம் வந்தது.

பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே  என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .

அவ்வளவுதான்  வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது .

அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்
இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.

எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் .

அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை விழத்தள்ளி விடுகிறது.

பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால் !

*பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படவேண்டாம் !   👍🏻👍🏻