Wednesday, 28 June 2017

தினம் ஒரு திருக்குறள் 28.06.17

இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day)

*அதிகாரம் 11. செய்ந்நன்றியறிதல் (Gratitude)*

*குறள் 103:*
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்  நன்மை கடலின் பெரிது

*மு.வ உரை:*
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

*English Meaning:*
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

Tuesday, 27 June 2017

வரலாற்றில் இன்று 27/06/2017

வரலாற்றில் இன்று 27.06.2017

*நிகழ்வுகள்*

🔖♨1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.

🔖♨1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.

🔖♨1801 – கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.

🔖🔖1806 – புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.

🔖🔖1896 – ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.

🔖🔖1950 – கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.

🔖🔖1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

🔖🔖1954 – உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.

🔖🔖1957 – லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

🔖🔖1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.

🔖🔖1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

🔖🔖1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

🔖🔖1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

🔖🔖1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

🔖🔖1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

🔖🔖2007 – டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.

பிறப்புகள்

1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)
1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்
1927 – டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்

இறப்புகள்

1999 – ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)
2007 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
    2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)

   ┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

பொன்னியின் செல்வன் - 3

முதல் பாகம் : புது வெள்ளம்
ஆடித் திருநாள் - பகுதி 3

👦 ஆடவர்களில் சில வம்புக்காரர்கள், தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சு டியிருந்த மலர்களை, அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

👦 இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப் பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள். மிகுந்த குதூகலத்துடன் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது

வந்து பாருங்கள், பள்ளியரே!

வெள்ளாறு விரைந்து வருது

வேடிக்கை பாருங்கள், தோழியரே! காவேரி புரண்டு வருது

காண வாருங்கள், பாங்கியரே!
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

👦 வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணு}ற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பு ண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.

👦 ஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது, 'ஆ! ஆ!" என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

👦 குதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கூர்ந்து கவனித்தாள். 'தம்பி! வெகு தூரம் இருந்து வந்தாய் போலிருக்கிறது. மிகவும் களைத்திருக்கிறாய்! குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!" என்றாள்.

👦 உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒருபக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இள மங்கைமார்கள் பலரும் அவனைச் சு ழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன? அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா? அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவும் தோன்றினார்கள்!

👦 ஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலைக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.

👦 ஏரிக் கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்தப் படகுகில் வருபவர் யார் என்பதை நாளைப் பார்க்கலாம்...!

விவசாய நிலத்தை கொண்டு கல்வி கடன் வழங்கலாம்-உயர்நீதிமன்றம்

விவசாய நிலத்தை கொண்டு கல்வி கடன் வழங்கலாம்-உயர்நீதிமன்றம்

📚எம்பிபிஎஸ் படிக்க கல்விக்கடன் கேட்ட மாணவனுக்கு கடனை வழங்க 🏦இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. விழுப்புரத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்😯.அதில் அவர்✍, "நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ் 2 தேர்வில் 95.75% மதிப்பெண் பெற்றுள்ளேன்.எனக்கு மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டெர்னா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. எப்படியாவது டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்விக் கடன் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் கல்வி கடனுக்கு விவசாய நிலத்தை வைத்து தர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களை எனக்கு கல்வி கடன் கொடுக்க கோரி உத்தரவிடும்படி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்😯. 
இந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது🙂. அப்போது நீதிபதி கூறியது என்னவென்றால், "கல்விக்கடன் வாங்குவதற்கு விவசாய நிலத்தை ஈடாக வைப்பதில் எந்த தடங்கலும் இல்லை என்று பதில் தரப்பட்டுள்ளது. கல்விக்காகத்தான் மனுதாரர் கடன் கேட்கிறார். உயர் கல்விக்காகத்தான் கல்விக்கடன் என்ற திட்டமே கொண்டுவரப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் மனுதாரரிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க முடியும். அதனால், வங்கி கல்விக்கடன் விஷயத்தில் அச்சப்படத் தேவையில்லை." என்று உத்தரவிடப்பட்டது⚖. 
மேலும், "மனுதாரரின் கோரிக்கையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரிசீலித்து அவருக்கு முன்னுரிமை அளித்து கல்விக்கடன் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை 4 வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட வங்கி அமல்படுத்த வேண்டும்." என்றும் கூறியது 🏛உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது👍.

Monday, 26 June 2017

26/06/2017 இன்றைய இராசிபலன்கள்

இன்றைய இராசிபலன்கள் -

♈ மேஷ ராசி :

புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

♉ ரிஷப ராசி :

பயணங்களால் வீண் செலவு ஏற்படும். ஒரு சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவார்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். கடன்கள் வசு லாகும்.

♊ மிதுன ராசி :

தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு சாதனைப் படைப்பீர்கள். மேலதிகாரியின் உதவி கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

♋ கடக ராசி :

இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வும், பாராட்டும் கிடைக்கும்.

♌ சிம்ம ராசி :

விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் வெளியு ர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களின் காதல் கைகூடும். நெருங்கிய உறவினரின் உதவிகள் கிடைக்கும்.

♍ கன்னி ராசி :

உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றி மறையும். பிள்ளைகள் கோபமூட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

♎ துலாம் ராசி :

தொழிலில் சிறந்து விளங்குபவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பிரச்சனை நீங்கும். விருந்தினர் வருகையால் மன உளைச்சல் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.

♏ விருச்சக ராசி :

உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

♐ தனுசு ராசி :

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுமையால் எதிரிகளை வீழ்த்துவீர்கள்.

♑ மகர ராசி :

பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. எதிர்பார்த்த சுபசெய்தி ஒன்று இல்லம் தேடி வரும். கடன்கள் வசு லாகும்.

♒ கும்ப ராசி :

நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். அரசு வழிகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள்.

♓ மீன ராசி :

ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளியு ரில் இருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று.

Wednesday, 21 June 2017

பொன்னியின் செல்வன் பகுதி - 03

முதல் பாகம் : புது வெள்ளம்
ஆடித் திருநாள் - பகுதி 3

👦 ஆடவர்களில் சில வம்புக்காரர்கள், தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சு டியிருந்த மலர்களை, அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

👦 இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப் பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள். மிகுந்த குதூகலத்துடன் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது

வந்து பாருங்கள், பள்ளியரே!

வெள்ளாறு விரைந்து வருது

வேடிக்கை பாருங்கள், தோழியரே! காவேரி புரண்டு வருது

காண வாருங்கள், பாங்கியரே!
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

👦 வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணு}ற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பு ண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.

👦 ஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது, 'ஆ! ஆ!" என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

👦 குதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கூர்ந்து கவனித்தாள். 'தம்பி! வெகு தூரம் இருந்து வந்தாய் போலிருக்கிறது. மிகவும் களைத்திருக்கிறாய்! குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!" என்றாள்.

👦 உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒருபக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இள மங்கைமார்கள் பலரும் அவனைச் சு ழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன? அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா? அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவும் தோன்றினார்கள்!

👦 ஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலைக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.

👦 ஏரிக் கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்தப் படகுகில் வருபவர் யார் என்பதை நாளைப் பார்க்கலாம்...!

தினம் ஒரு திருக்குறள் 21.06.2017

இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day) 📜

*அதிகாரம் 10. இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)*

*குறள் 96:*
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை  நாடி இனிய சொலின்

*மு.வ உரை:*
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

*English Meaning:*
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

நன்றி
Duta

Tuesday, 20 June 2017

அதிகரிக்கும் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்

அதிகரிக்கும் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்😱

🇮🇳இந்தியாவின் தலை நகரான டெல்லியில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவி வருகிறது😱. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி பேர் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர்😟.அந்த வகையில், கடந்த 3⃣ஆண்டுகளில் டெல்லியில் இந்த நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது😳. 
கடந்த 2016ம் ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு டெல்லியில் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்😳. அதில் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்😟. சிக்குன்குனியா நோயால் 12,221 பேர் பாதிக்கப்பட்டு அதில் 20 பேர் உயிரிழந்ததாகவும் ஆய்வு தெரிவிக்கிறது😱. இதனை தடுக்க சீரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், டெல்லி சுகாதாரத் துறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியுள்ளதென்றும்😯, சமூக ஆர்வலர்கள் 🙏வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

FASTAG ?

FASTAG என்ற ஒரு விஷயத்தை எத்தனை பேர் அறிந்து இருப்பீர்கள் என தெரியவில்லை. TOLL Plaza ( சுங்கச் சாவடி) வில் இப்போது ஒரு லைன் Fastag க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஒரு RFID tag வாங்க வேண்டும். இந்த Tag வாகனத்தை பொறுத்து விலை இருக்கிறது (உதாரணம் car ரூ 600.00). ஒரு முறை இந்த Tag வாங்கி வண்டியில் ஒட்டி விட்டால், அதன் பிறகு அவ்வப்போது வெளியூர் செல்லும் பொது Recharge செய்துகொள்ளலாம்.
நீங்கள் toll ல் Fastag லைனில் செல்லும்போது தானாகவே அந்த Toll க்கான தொகையை கழித்துக்கொண்டுவிடும். அதே Toll ல் 24 மணி நேரத்துக்குள் நீங்கள் திரும்ப நேர்ந்தால் two way க்கு உள்ள
வித்தியாசத்தை மட்டுமே எடுக்கிறது.
உதாரணத்திற்கு காலையில் ரூ 45.00 எடுத்த அதே TOLL ல் மாலையில் திரும்ப நேர்ந்தால் ரூ 25.00 மட்டுமே எடுக்கிறது.
1 . இதனால் போகும்போது 2 Way எடுப்பதா அல்லது 1 Way எடுப்பதா என குழப்பம் இல்லை
2 . சில்லறை பிரச்னை இல்லை
3 .தனி track இருப்பதால் சீக்கிரம் செல்ல முடிகிறது
4 .மேலும் 7.5% Reimbursement கிடைக்கிறது.
இந்த சேவை இப்போது KVB , HDFC, ICICI மற்றும் EQUITAS வங்கிகள் மூலம் கிடைக்கிறது.
தங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுத்து Fastag வாங்கி உபயோகிக்கவும்.......

பொன்னியின் செல்வன் பகுதி - 2

ஆடித் திருநாள் - பகுதி 2

🐎 ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டும் என்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேதான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர் நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்" என்ற சிறப்புப் பெயர் பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

🐎 இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தாம்! அவர்கள் வீரத்தில் எப்படியோ அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பு ரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

🐎 இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக்கரையின் தென் கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும் போது கரைக்குச் சேதம் உண்டாகாமல் இருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் புது வெள்ளம் வந்து வீரநாராயண ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

🐎 அந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

🐎 அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும்கூட புதிய ஆடைகள் அணிந்து, விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பு , செவ்வந்திப்பு , மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள்.

நாளையும் தொடரும் ஆடித் திருநாள் கொண்டாட்டம்...!