Tuesday, 31 January 2017

நகைச்சுவை-4

Wife  ;- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா?? "
Husband  ;- "இல்லையேமா"
Wife  : "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."
Husband  : "அது இல்லடா செல்லம் தண்டவாலத்துல தலை வைக்க போறவன் வருகிற ரயில் 🚊சேரன் எக்ஸ்பிரஸா,  நீலகிரி எக்ஸ்பிரஸான பாத்துட்டு இருப்பான்..."😂😂😂😂

நகைச்சுவை-3

மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?

நகைச்சுவை-2

கணவர் :‍ இன்னைக்கு ஒரு கருப்பு கலர் நாய்க்கு மதியம் சாப்பாடு போட்டாயா ?.

மனைவி :‍ ஆமாங்க !. ஏன், எப்படி கரெக்டா கேட்கிறீங்க.

கணவர் : தெருவோரமா, அந்த நாய் செத்து கிடந்தது. அதான் கேட்டேன்

நகைச்சுவை-31.1.17

மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!!

வாழை இலையின் நடுவில ஒரு கோடு

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல ,
நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
... என்ன பதில் சொல்வது இதற்கு..?
எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!
நேற்றைய வாழை இலைப் பதிவில் விடுபட்டுப் போன சில விஷயங்களை , இன்றைக்குப் பரிமாறி முடித்து விடலாம்...!
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?
😀😃

Saturday, 21 January 2017

வாழைப்பழ_காமெடி_ஸ்டைல்

#வாழைப்பழ_காமெடி_ஸ்டைல்...

:நாங்க உங்ககிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னோம்...

: அனுமதி வாங்கிட்டு வரசொன்னீங்க

:எதுக்கு அனுமதி...

:ஜல்லிக்கட்டுக்கு அனுமதி...

:மோடிகிட்ட கேட்டீங்களா...

:கேட்டேனே...

:அவரு கொடுத்தாரா...

: கொடுத்தாரு...

: நீங்க வாங்கிட்டு வந்த அவசர சட்டம் இங்க இருக்கு... நாங்க கேட்ட நிரந்தர சட்டம் எங்க...

: அட அதாங்க இது...

மறுபடியும் மொதல்ல இருந்து...

#justiceforjallikattu...

மிருகவதை

ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள்  !!

Thursday, 19 January 2017

இன்று இளைஞர்களால் ....

இன்று இளைஞர்களால் ....

மெரினா - மிரண்டது
அலங்காநல்லூர் - அலறியது
சிவகங்கை - சீறியது
தஞ்சை - தகர்ந்தது
திருநெல்வேலி - திணறியது
சிதம்பரம் - சிதறியது
O.M.R - உயர்ந்தது
கோவை - கொண்டாடியது
விருதுநகர் - விளையாடியது
ராமநாதபுரம் - ரணகளமானது
பெரம்பலூர் - பெண்டு கழண்டது
தேனி - தெறித்தது
திருப்பூர் - திருந்தியது 
பொள்ளாச்சி - பொளந்துகட்டியது
வேலூர் - வேட்டையாடியது
காஞ்சிபுரம் - கர்ஜித்தது
நாகை - நடுங்கியது
திருவள்ளூர் - திமிறியது
அரியலூர் - அமர்க்களமானது
புதுக்கோட்டை - புறப்பட்டது
திருச்சி - திருப்பு முனையாகியது
நீலகிரி - நின்றது
ஈரோடு - எழுந்தது
நாமக்கல் - நடனமாடியது
சேலம் - செழித்தது
திருவாரூர் - திளைத்தது
திருவண்ணாமலை - திருவிழாவாகியது
தர்மபுரி - தத்தளித்தது
கரூர் - கலக்கியது
கிருஷ்ணகிரி - கிறுகிறுத்தது
கன்னியாகுமரி - கரகாட்டமாடியது
விழுப்புரம் - வீறுகொண்டது
திண்டுக்கல் - திசை மாறியது
மதுரை - மலர்ந்தது

தமிழகம் - தலை நிமிர்ந்தது!

Tuesday, 17 January 2017

State Level Chess Tournament For The Visually Impaired

State Level Chess Tournament For The Visually Impaired

💐Tournament Junglee Organiser -;
National Association for the blind & Tamilnadu breilly chess association

🗓Date -; 28th January 2017 ( Saturday)

⏰Reporting time -; 08.00 AM

Place -; Christ Church Anglo Indian Hr Sec School Anna Salai Chennai 600002
(Land Mark Cosmos Politian Club / Shanthi Theatre)

Entry Last Date -; 25-01-2017

Contact person -; Mr R.Sathishkumar 9787455137
Mr B.Rajkumar 9894074820

Entry -; Whatsapp Number Mr R.Vignesh 8438260207

Send Email -; tnbca64@gmail.com

By Tamilnadu breille  chess association.

🙏🙏All Are Welcome.🙏🙏

🏆🎖🏆🎖🏆🎖All the best🏆🎖🏆🎖🏆🎖

Thursday, 5 January 2017

2016 வருடத்தில் மறக்க முடியாத மூன்று முத்திரை பதித்தவர்கள்

2016 வருடத்தில் மறக்க முடியாத மூன்று முத்திரை பதித்தவர்கள்

1.அம்மா (Amma)😢
2.டிரம்ப்(Trump)😎
3.மோடி(Modi)😁

சுருக்கமாக சொன்னால் ATM
😂😂😂😂

இறைவன் தந்த வாழ்க்கையில் !!!

இறைவன் தந்த வாழ்க்கையில் !!!

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.         
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

*மறக்காமல் இதை பகிருங்கள்..*
Dr.Kader Ibrahim.....

தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள

*தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்*

_தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2.93 கோடியும், பெண்கள் 2.99 கோடியும் உள்ளனர்.  3ம் பாலினத்தவர் 5040 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 6,22,333 வாக்காளர்கள் உள்ளனர்._

அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!

பெருசா இருக்கே னு படிக்காம போய்டாதீங்க, செம காமெடி 😜😜😜😜😜😜😜

அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!

நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார்.

அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.

நானும் அருகில் சென்று கவனித்தேன்.

அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான்.

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகிறான்.

லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.

யுத்தம் முடிகிறது.

அனைவரும் அயோத்திக்கு திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.

ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது. காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1.   அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2.   அனுமன் ஒரு 4th Grade Officer.

எனவே அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3.   அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage. Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப் படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப் படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.

“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.

அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று பேசிப்பார்க்கிறார்.

ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில் அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்” எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

    
அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின்  பயணப்படி sanction ஆகி அவருக்கு கிடைத்தது.


ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1.   அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப் பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப் பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2.   அனுமன் LAST GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான அனுமதி அளிக்கப் படுகிறது.

3.   அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்

எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப் படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

நாராயணா! இந்த ஆடிட்டர்/அக்கவுன்டன்ட் இம்ச தாங்க முடியலப்பா!😬😬😬😬

ரேஷன்_கார்டு

வருஷத்துக்கும் ஒவ்வொரு #பேப்பரா கொறஞ்சா அது #காலண்டர் 😉😁 வருசத்துக்கு ஒரு #பேப்பரா கூடுனா அது #ரேஷன்_கார்டு 😏

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

*
1. Axis bank-------------------- 09225892258

2. Andra bank------------------ 09223011300

3. Allahabad bank-------------09224150150

4. Bank of baroda-------------09223011311

5. Bhartiya Mahila bank----- 09212438888

6. Dhanlaxmi bank----------- 08067747700

7. IDBI bank-------------------- 09212993399

8. Kotak Mahindra bank--- 18002740110

9. Syndicate bank------------ 09664552255

10. Punjab national bank---18001802222

11. ICICI bank----------------- 02230256767

12. HDFC bank-------------- 18002703333

13. Bank of india------------- 02233598548

14. Canara bank------------- 09289292892

15. Central bank of india-- 09222250000

16. Karnataka bank-------- 18004251445

17. Indian bank-------------- 09289592895

18. union bank of india---- 09223009292

19. UCO bank---------------- 09278792787

20. Vijaya bank--------------- 18002665555

21. Yes bank------------------ 09840909000.

22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800 
                                                23. Corporation bank------- 092-688-92688. 
                                                24. South Indian Bank----- 092 23 008488

🔴படித்தால் மட்டும் போதுமா.....? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
⭕🔴⭕🔴⭕🔴⭕

தினம் ஒரு திருக்குறள் 05.01.2017

குறள் படிக்க முடியாதவர்கள் பொருள் மட்டுமாவது படிங்கள்...

🙏🏼வாழ்வை 👍🏼வளப்படுத்த
📜தினம் ஒரு குறள்📜 *05/01/17*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*குறள் 108 :* நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

👉🏻மு.வரதராசனார் உரை:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

👉🏻சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
  வாழ்வது☝🏼ஒருமுறை,
வாழ்த்தட்டும்👬தலைமுறை
      🙌🏻வாழ்க🙏🏼வளமுடன்🙌🏻
😎என் 👀அன்பு 💞இனிய👌🏼 காலை🌅வணக்கம்🙏🏼.....

JPL.. Jallikattu Premier League..!

*பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கறோம்.. ஏலம் விட்றோம்.. அபிஷேக் பச்சன்,ஷாருக்கான், அம்பானி, மல்லைய்யா நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கறோம்.அப்புறம் பாருங்க நடக்கற கூத்தை.உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும். JPL.. Jallikattu Premier League..!!*

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11, 12, 13 தேதிகளில் கோயம்பேட்டில் இருந்து 11,270 பேருந்துகள் இயக்கம் - பிற ஊர்களில் இருந்து 6,423 பேருந்துகள் இயக்கப்படும்

மீண்டும் திரும்ப ஜனவரி 15, 16, 17 தேதிகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படும்

பொங்கலுக்கு பின் சென்னை திரும்ப 3658 பேருந்துகளும், பிற ஊர்களுக்கு செல்ல 7,076 பேருந்துகளும் இயக்கப்படும்

கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்லும் பேருந்துகள் அடையாறில் இருந்து புறப்படும்

விக்கிரவான்டி வழியே தஞ்சை, கும்பகோணம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியத்தில் இருந்து புறப்படும்

செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும், தமிழக, ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்க்கில் இருந்து புறப்படும்

தருமபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து புறப்படும்

நாகை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, காஞ்சிபுரம், சேலம், நெய்வேலி, திருவண்ணாமலை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்.

தற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்ல
200 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்

பேருந்துகள் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் புகார்கள் கூற
044 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Word of the day:- 05/01/2017

Word of the day:-  05/01/2017

Word:-Irreverent
அவமதிப்புச் செய்கிற

Definition:-Not feeling
மதிப்புணர்வு இல்லாத

Synonyms:-Rude
முரட்டுதனமான

Antonyms:-Reverent
மரியாதையாக

Sentence:-The student behaved in an irreverent manner to the principal.
அந்த மாணவன் தலைமை ஆசிரியரை அவமதிப்பு செய்யும் வகையில் நடந்து கொண்டான்.

Grammar:-Adjective
பெயர் உரிச்சொல்

வரலாற்றில் இன்று (05/01/2017)

*வரலாற்றில் இன்று (05/01/2017)*

ஷாஜகான்

💖 இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாஹூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான்.

💖 இவர் 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

💖 இவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு (1636), பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் (1653), மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர் (1655) ஆகியனவாகும்.

💖 ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.

💖 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி மறைந்தார்.

ரா.கிருஷ்ணசாமி நாயுடு

🏁 விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🏁 இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத்திற்கு 1952இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும், தமிழ்நாடு சட்டசபைக்கு 1957இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🏁 மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜரால் புகழாரம் சூடப்பட்ட இவர் தன்னுடைய 72வது வயதில் (1973) மறைந்தார்.

பரமஹம்ச யோகானந்தா

✋ இந்திய ஆன்மிக ஞானச் சுடரொளியை உலகெங்கும் பரவச் செய்தவரான பரமஹம்ச யோகானந்தா 1893ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்தார். இவர் இயற்பெயர் முகுந்தலால் கோஷ்.

✋ தனக்கு யோகானந்தா என்ற பெயரை அவரே தேர்ந்தெடுத்தார். திஹிகா நகரில் ஆண்களுக்கான பள்ளியை 1917-ல் தொடங்கினார். இங்கு பாடங்களோடு, யோகாமுறைகளும் கற்றுத்தரப்பட்டன. பின்னாளில் இது யோகதா சத்சங்க சொசைட்டியாக மாறியது.

✋ இவருக்கு பரமஹம்சர் பட்டம் 1936-ல் சூட்டப்பட்டது. இவர் ஆட்டோபயோகிராபி ஆஃப் எ யோகி என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இது தமிழ் உட்பட 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

✋ மகா அவதார் பாபாஜி குரு பரம்பரையில் தோன்றிய இவர் தன்னுடைய 59-வது வயதில் (1952) முக்தி அடைந்தார்.

📻 1940ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

🎾 1971ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்றது.

📰 1944ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி டெய்லி மெயில், கடல் தாண்டி சென்ற முதல் செய்தித் தாளானது.

🌗 2005ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.