Saturday, 19 November 2016

திருட போனவீட்டில் எல்லோரும் தூங்கிட்டிருந்ததை பார்த்த திருடன், அவர்கள் மேல் மயக்க மருந்தை தெளித்துவிட்டு  பீரோவினுள் பார்த்திருக்கான், அனைத்தும் 1000, 500 கட்டுகள். கடுப்பான திருடன் மயக்கத்தில் இருந்த அனைவரது விரலிலும் மை தடவிவிட்டு சென்று விட்டான்...

சுபம்
😂😂😂

Wednesday, 16 November 2016

தினம் ஒரு தத்துவம் 16.11.16

வேகமாக முடிவெடுக்கக் கூடாது!
ஏனென்றால் வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல!
- ரூசோ

மிக விரைவில் பறந்து செல்லும் நேரத்தைப் பிடி!
அது உன்னை விட்டுச் செல்லும் போதே
அதைப் பயன்தரும் வகையில் பயன்படுத்து!
வாழ்க்கை மிகவும் குறுகிய காலம்!
மனிதன் அதில் மலர்ந்த மலர்!
எனவே நேரத்தை நன்றாகப் பயன்படுத்து!
-ஜான்சன்

எல்லோரிடத்திலும் சம அன்பு கொள்ளுதல் மிகக்கடுமையான ஒரு ஒழுக்கமாகும்
ஆனால் இந்த ஒழுக்கமின்றி வாழ்க்கையில் நிறைவு கிடையாது !
- சுவாமி விவேகானந்தர்

செயல்களை விதையுங்கள் பழக்கம் உருவாகும்!
பழக்கத்தை விதையுங்கள் நல்ல குணம் உண்டாகும்!
குணத்தை விதையுங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும்!
- ஃபோர்ட்மன்

Saturday, 5 November 2016

நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 550-வது நாளன்று (23-11-2016) ஒலிபரப்பப்படும்.

நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 550-வது நாளன்று (23-11-2016)  ஒலிபரப்பப்படும்.

தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் பேச்சைத் துவங்கவும்.

பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 21-11-2016.

சாலைப்போக்குவரத்தில் விழிப்புணர்வு -என்ற தலைப்பில், 5 நிமிடங்களுக்கு மிகாமல்பேசி ஒலிப்பதிவு செய்து  8220999799 என்ற எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ  அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பவும்.

A பிரிவு – 5, 6-ம் வகுப்பு
B பிரிவு – 7,8-ம் வகுப்பு
C பிரிவு – 9,10-ம் வகுப்பு

 நற்றிணையின் 550, 575-வது நாட்களில் அடுத்த போட்டிகள் நடைபெறும்.  ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளர்கள் 600-வது நாளன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.


நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 550-வது நாளன்று (23-11-2016) ஒலிபரப்பப்படும்.

நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 550-வது நாளன்று (23-11-2016)  ஒலிபரப்பப்படும்.

தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் பேச்சைத் துவங்கவும்.

பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 21-11-2016.

சாலைப்போக்குவரத்தில் விழிப்புணர்வு -என்ற தலைப்பில், 5 நிமிடங்களுக்கு மிகாமல்பேசி ஒலிப்பதிவு செய்து  8220999799 என்ற எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ  அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பவும்.

A பிரிவு – 5, 6-ம் வகுப்பு
B பிரிவு – 7,8-ம் வகுப்பு
C பிரிவு – 9,10-ம் வகுப்பு

 நற்றிணையின் 550, 575-வது நாட்களில் அடுத்த போட்டிகள் நடைபெறும்.  ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளர்கள் 600-வது நாளன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.


கந்த சஷ்டி ஸ்பெஷல்

கந்த சஷ்டி  ஸ்பெஷல்
கந்த சஷ்டி கவசம்:
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட ... ... 4
மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக ... ... 8
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திரவடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக ... ... ... 12
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக ... ... ... 16
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ... ... ... 24
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் ... ... 28
கிலியுங் செளவும் கிளரொளியையும்
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ... ... 32
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ... ... 36
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... ... 40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நல் சீராவும் ... ... 44
இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென ... ... 48
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி ... ... 52
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து ... ... 56
என்றனை யாளும் ஏரகச் செல்வ ...
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலாவிநோத னென்று ... ... 60
உன்றிருவடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க ... ... 64
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க ... ... 68
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க ... ... 72
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க ... ... 76
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க ... ... 80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க ... ... 84
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ... ... 88
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க ... ... 92
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க ... ... 96
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ... ... 100
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க ... ... 104
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள் ... ... 108
அல்லல்படுத்தும் அடங்காமுனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும் ... ... 112
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் ... ... 116
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டா ளர்களும்
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும் ... ... 120
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ... ... 124
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட ... ... 128
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட ... ... 132
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு ... ... 136
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குசெக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் ... ... 140
பற்றுபற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும் ... ... 144
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ... ... 148
ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி ... ... 152
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பல்குத்து அரணை பருஅரை ஆப்பும்
எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் ... ... 156
நில்லாதோட நீயெனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் ... ... 160
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹணபவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே ... ... 164
அரிதிரு மருகா அமாராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை ... ... 168
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா ... ... 172
ஆவினன்குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் ... ... 176
என் நாஇருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை ... ... 180
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் ... ... 184
மெத்தமெத்தாக வேலா யுதனார்
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க
வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க ... ... 188
வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்கவாழ்க வாரணத் துவஜம்
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க ... ... 192
எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே ... ... 196
பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய ... ... 200
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடனொரு நினைவதுமாகிக் ... ... 204
கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய ... ... 208
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் ... ... 212
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத் தடியை
வழியாய்க்காண மெய்யாய் விளங்கும் ... ... 216
விழியால்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி ... ... 220
அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகை அதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த ... ... 224
குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி ... ... 228
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ்கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி ... ... 232
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் ... ... 236
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ... ... ... 238