https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 30 November 2017

மணல் குவாரிகளை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

மணல் குவாரிகளை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: மணல்குவாரிகளை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2 நீதிபதி அமர்வில் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட நீதிபதி மகாதேவன் நேற்று உத்தரவிட்டிருந்தார். வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை வழங்கியது.

Wednesday, 29 November 2017

மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்-உயர்நீதிமன்றம்

மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்-உயர்நீதிமன்றம்

வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிர, புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது. சோதனைச் சாவடிகளில் கேமரா பொருத்தி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதால் விவசாயம் மற்றும் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொண்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tuesday, 28 November 2017

ஜெயங்கொண்டம் அருகே ப்ளூவேல் விளையாட்டால் தாயை கொடுமைப்படுத்தும் மகன்

ஜெயங்கொண்டம் அருகே ப்ளூவேல் விளையாட்டால் தாயை கொடுமைப்படுத்தும் மகன்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் கருப்பையா நகரில் ப்ளூவேல் விளையாட்டால் தாயை மகன் கொடுமைப்படுத்துள்ளார். ப்ளூவேல் விளையாட்டால் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான ஜெயத்தை அடித்து துன்புறுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தாயை அடித்து துன்புறுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் பட்டத்தாரி மகன் செந்திலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்

🐊🐊ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.

அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.

அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 💸💵💸

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?😡😡😡

கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧

அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்😉😍😘

Monday, 27 November 2017

ஜெயலலிதாவின் மகள்

ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டி.என்.ஏ. மரபணு சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற 37 வயது பெண் மனு.

Sunday, 26 November 2017

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.

2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது

Saturday, 25 November 2017

ஒரே டிக்கெட்-ரயில், பஸ், மெட்ரோ ரயில் பயணம்

ஒரே டிக்கெட்-ரயில், பஸ், மெட்ரோ ரயில் பயணம்

சென்னையில் மாநகர 🚌பஸ்கள், 🚃மின்சார ரயில்கள், 🚆மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது😯. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது👌 என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்👏. சென்னை 🚇மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் 🚌போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது😮. கருத்தரங்கில் 🚇மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார்👍. 
அப்போது அவர், சென்னை நகரில் 'ஷேர் ஆட்டோ'வில் பயணம் செய்வதற்கும், 🚇மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே 💸கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது🙁. ஆனால் 🚇மெட்ரோ ரயிலில் ஏ.சி.வசதி உள்ளது🙂. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது👍. அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்😯. வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும்👍 என்றும் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

படிச்சுட்டு சிரிங்க பாஸ்

படிச்சுட்டு சிரிங்க பாஸ்
😂😂😂😂
ஒரு பெண்மணிக்கு மும்பையில்
*வேலை கிடைத்தது* பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு *தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள்.*
அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம்
*SMS feed செய்து அனுப்பினாள்.*
SMS தவறுதலாக கணவனுக்கு பதில் *வேறொறு நபருக்கு சென்று விட்டது.*
😳😳😳😳😳அந்த மனிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மனைவிக்கு *இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார்.*
அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார்.
*அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர்.* அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து.

*நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன்.* *தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது.*
*நீங்கள் என்னைபற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன்.*
இப்படிக்கு
தங்கள்
*மனைவி*

தனியாக சிரிக்க வேண்டாம்
Please
share it to others
😀😀😀😀😀😀😀😀😀😆

Friday, 24 November 2017

ஏர்டெல் நிறுவனம் தனது சொத்தில் 10 சதவீத பங்கை தானமாக வழங்க முடிவு

*ஏர்டெல் நிறுவனம் தனது சொத்தில் 10 சதவீத பங்கை தானமாக வழங்க முடிவு செய்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 2010ம் ஆண்டு முதல் உலக கோடீஸ்வரர்களை தங்கள் சொத்தின் ஒரு பகுதியை தானமாக வழங்க உறுதிமொழி ஏற்கும் வகையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து ஏர்டெல் குடும்பம் தங்கள் சொத்தில் 10 சதவீதமான 7,000 கோடி ரூபாயை தானமாக வழங்க முடிவு செய்துள்ளதாக ஏர்டெல் நிறுவனரும், தொழிலதிபருமான சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.*

Thursday, 23 November 2017

பேராசை பற்றி ஏதும் குட்டிக்கதை ஏதும் இருக்கா மிஸ்டர் K?

“பேராசை பற்றி ஏதும் குட்டிக்கதை ஏதும் இருக்கா மிஸ்டர் K?"

கதையையே சொல்றேன்” என்று ஆரம்பித்தான்.

“ஒரு ஊர்ல ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். தன்கிட்ட இருக்கற ஏராளமான பணத்தை செலவு பண்ணாம, சேர்த்துகிட்டே இருந்தான். தங்கக்காசுகளா மாத்தி, சின்னச் சின்ன ஜாடில போட்டு அங்கங்க பதுக்கி வெச்சுப்பான். ஒரு தடவை அப்படி அவன் வெச்சிருந்த ஜாடி ஒண்ணு காணாமப் போச்சு. அதுல 50 தங்கக்காசுகள் இருந்தன.
இவன் அக்கம்பக்கம், வேலையாட்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டான். கிடைக்கல.
சிலநாட்கள் கழிச்சு, அந்தப் பணக்காரனுக்கு பக்கத்து தோட்டத்துல இருந்த ஒரு ஏழை விவசாயி வீட்ல இருக்கற பாப்பாவுக்கு ஒரு ஜாடி கெடைச்சது. அத அந்தப் பாப்பா அப்பாகிட்ட காமிச்சப்போ, “ஐயையோ இது அவரோடதாச்சே”ன்னு கொண்டுபோய் உடனே கொடுத்தாரு.
அந்தப் பணக்காரர் “அப்பாடா”ன்னு மனசளவுல நெனைச்சாலும், அதுல இருக்கற காசுகள் எண்ணிக்கை சரியா இருக்குமானு சந்தேகம். எண்ணினார். 50 இருந்தது. ஆனாலும் எண்ணிட்டு இருக்கும்போதே அவர் மனசுல பேராசை பிடிக்க ஆரம்பிச்சது. எண்ணி முடிச்சதும், “ஐயோ இதுல75 தங்கக்காசுகள் இருந்தது. ஆனா இப்ப 50தான் இருக்கு. இவன் எடுத்துட்டான்”னு சொல்லி அந்த ஏழை விவசாயியையும், அந்தப் பாப்பாவையும் மன்னர் முன்னாடி நிறுத்தினார். “75 தங்கக்காசு வெச்சிருந்தேன். இப்ப இந்த ஜாடில 50தான் இருக்கு” - இதான் பிராது!
மன்னர் கொஞ்சநேர  விசாரணையிலேயே,  ‘இவன் பேராசைக்காரன்.. பொய் சொல்றான்’னு  கண்டுபிடிச்சுட்டார். உடனே இப்படித் தீர்ப்பு சொன்னாராம்:
”அவர் தொலைச்ச ஜாடில  75 தங்கக்காசுகள் இருந்ததா உறுதியாச் சொல்றார். ஆனா இப்ப கிடைச்சிருக்கற ஜாடில 50தான் இருக்கு. ஆக இது அவர் தொலைச்ச ஜாடி அல்ல. அதுனால அந்த 75 இருக்கற ஜாடி கிடைக்கறவங்க என்கிட்ட வந்து கொடுக்கலாம். 50 தங்கக்காசு தொலைச்சதா யாரும் புகார் தராததால, இந்த 50 தங்கக்காசு இருக்கற h ஜாடியை, இந்த விவசாயியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கே கொடுக்கறேன்”னு சொல்லிக் கொடுத்துட்டாராம்.
இதத்தான் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’னு எங்க பாட்டி சொல்லுவாங்க!” 
​சொல்லிவிட்டு கெக்கபெக்கவென்று சிரித்தான் மிஸ்டர் K!

நம்பிக்கை

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன, இடியும் மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆடுகிறது. அவரின் மனைவி நடுங்குகிறாள். அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்
"உங்களுக்கு பயமாக இல்லையா" என்று.
கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார்.
அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள். கணவன் "இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?" என்று. அதற்கு அவள் சொல்கிறாள்
" கத்தி பயங்கரமானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர் அதனால் பயமில்லை" என்று.கணவன் புன்முறுவலோடு
"இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும், பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் , என் அன்புக்குரியவன்,
அதனால் எனக்கு பயமில்லை என்கிறார்.

"எவ்வளவு 'நம்பிக்கை "

நம்பிக்கை தாங்க வாழ்க்கை...👍

Sunday, 19 November 2017

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

வாங்க 🌊கடலில் அடுத்த வாரம் மீண்டும் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது🔈. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது📜. அதில் கூறப்பட்டுள்ளதாவது😯. வரும் 21ம் தேதி வட 🏝அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க 🌊கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்😳 என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. 🏝அந்தமான் அருகே உருவாகும் :tornado:புயல் தமிழகத்தில் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை😯 என்பது குறிப்பிடத்தக்கது😳. இருப்பினும் காற்றின் :tornado:சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு :rain_cloud:மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது😯.

Friday, 17 November 2017

ஆர்.கே.நகரில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகரில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் ஆணையம்

சென்னை ஆர்.கே நகரில் 30,495 போலி வாக்காளர்கள் 🚫நீக்கப்பட்டுள்ளதாக 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. மேலும் வாக்காளர் 📜பட்டியல் தொடர்பாக, 15 ஆயிரம் 📜மனுக்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது😯. ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்📜, "திமுக புகாரின் அடிப்படையில், ஆர் கே நகரில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது👍. 🏛நீதிமன்ற ⚖உத்தரவுக்கு பின் ஆர்.கே நகரில் 🗳இடைத்தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது🔈. மேலும் தமிழகம் முழுதும் 10.55 லட்சம் பேரை வாக்காளர் 📜பட்டியலில் இருந்து நீக்க🚫 நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக 🗳தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது👍.

Thursday, 16 November 2017

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு-புதிய வழிகள் அறிவிப்பு

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு-புதிய வழிகள் அறிவிப்பு

மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சிரமங்கள் மக்களை பாதிக்காமல் இருக்க மொபைல் நிறுவனங்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொபைல் நிறுவனங்கள் மூன்று புதிய முறைகளை அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது. 
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியிருப்பதாவது,"மொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த மூன்று புதிய வழிமுறைகள் மூலம் மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்" என்று கூறியுள்ளார். அறிவிக்கப்பட்ட வழிமுறைகள் வருமாறு👇 
🔰 ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை 
🔰 புதிய மொபைல் ஆப்  
🔰 ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை

Wednesday, 15 November 2017

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி.

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி.

ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர். குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால்தான், குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது; அதிவேகமாக ஓடுகிறது; இதன் காரணமாகத்தான் இதை, `குதிரைக் கொள்ளு’ என்றும் சொல்கிறார்கள்.

ஆரோக்கியப் பலன்கள்

புரதம் நிறைந்தது
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.

உடல் எடை குறைக்கும்!
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

சளி, காய்ச்சல்
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்;  காய்ச்சலையும் குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.  இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும்.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக, `கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) வகை சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும்’ என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. மேலும், கொள்ளுவையும் இந்துப்பையும்   சிறிது எடுத்துக்கொண்டு, அவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் கற்களைக் கரைக்கும்.

சர்க்கரைநோய் தடுக்கும்
நாம் உண்ணும் உணவில் உள்ள  சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்' எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

கொள்ளு

மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம்; சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்த்தல் நல்லது.....

4அரசு மருத்துவமனைகளில் குழந்தை பராமரிப்பு மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

4அரசு மருத்துவமனைகளில்🏥 குழந்தை👶 பராமரிப்பு மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் அரசினர் மகப்பேறு மற்றும் குழந்தைகள்👶 நல மருத்துவமனையில்🏥 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவின் செயல்பாட்டினை இன்று ஆய்வு🔍 செய்தார்.

மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு பதக்கமும், பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டகமும், அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு நினைவு பரிசும், சிறப்பாக பணிபுரிந்து வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கேடயமும் வழங்கினர்.

தமிழகத்தில் வருடத்திற்கு 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இவற்றில் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் என்.ஐ.சி.யு- மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் நடப்பு ஆண்டில் பத்மநாபபுரம், பட்டுக்கோட்டை, பெரிய குளம், திருமங்கலம் ஆகிய அரசு மருத்துவமனையில் இளம் சிசு பராமரிப்பு மையங்கள் ரூ. 2 கோடியே 40 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

வேலூர், திருநெல்வேலி, ஸ்டான்லி மருத்துவமனை, நாமக்கல், காஞ்சீபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 5 தாய்ப்பால் வங்கிகள் ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்🎙.

Tuesday, 14 November 2017

உலகில் மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும்

உலகில் மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும்

பேங்க் ஆப் அமெரிக்காவின் மூலதனப் பிரிவான மெர்ரில் லிஞ்ச், இந்தியா 2028 என்ற தலைப்பில் இந்திய 💸பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து 🌎உலகில் மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது👍. அந்த அறிக்கையில்📜, உள்நாட்டு உற்பத்தியில் 7% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும்😯, இதே வேகத்தில் வளர்ச்சி நீடித்தால் 2028-ம் ஆண்டில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 83% வளர்ச்சியை எட்டும்😍 என்றும் தற்போது 🌎உலகளவில் 💸பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு👏, மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக உருவெடுக்கும்👍 என்றும் கூறப்பட்டுள்ளது😯.