https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 27 September 2017

ட்விட்டரில் இனி 280 எழுத்துக்களை டைப் செய்ய சோதனை நடவடிக்கை

ட்விட்டரில் இனி 280 எழுத்துக்களை டைப் செய்ய சோதனை நடவடிக்கை

💻சமூக வலைத்தளங்களில் பலராலும் உபயோக படுத்தப்படுவது 🐧ட்விட்டர். இதுவரை இந்த ட்விட்டரில் 140 எழுத்துக்களை கொண்டே 🐧ட்விட் செய்ய முடியும்😟. இது பலருக்கு அதிருப்தியை அளித்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே கூறுகையில், 🐧டிவிட்டரில் சிறிய மாற்றம் கொண்டு வரவுள்ளதாகவும், ஆனால் அது தங்களுக்கு மிகப்பெரிய நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார்🙁. இதையடுத்து 140 என்ற எண்ணிக்கையில் இருந்து, 280ஆக மாற்ற சோதனை செய்து வருவதாக கூறினார்😯. இது தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍. இந்த முயற்சி 🎉வெற்றி பெரும் பட்சத்தில், அனைத்து பயனாளர்களுக்கு 280 கேரக்டர் வசதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது🎙. ஆனால், அதேசமயம் ஜப்பானிஸ், சைனீஸ், கொரியன் மொழிகளில் மட்டும் 140 கேரக்டர் எழுத்துக்கள் தொடரும் என்றும்😳, கடந்த 2013ஆம் ஆண்டு பொதுப் பயன்பாட்டிற்கு வந்த டிவிட்டர், இதுவரை 💸லாபம் ஈட்டியது இல்லை😟 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது😯.

Tuesday, 26 September 2017

காவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்க உத்தரவு⚖-டிஜிபி

காவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்க உத்தரவு⚖-டிஜிபி

👮காவல் துறையை சார்ந்த அனைத்து பிரிவினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்⚖. காவல் துறையை சேர்ந்த கமிஷ்னா்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமேண்டோ உள்ளிட்ட அனைவரும் இன்றும் நாளையும் எந்த நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக 👮காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்⚖. மேலும், 💉மருத்துவ விடுப்பு தவிற பிற காரணங்களால் விடுப்பில் சென்றுள்ள அனைத்து காவல் துறையினரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் 👮காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது⚖. போர் காலத்திலும், அசாதாரணமான சூழலின் போதும் மட்டுமே அறிவிக்கப்படும்🔈 இந்த ⚖உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த இரு தினங்களில் எது போன்ற நடவடிக்கையையும் 🏛அரசு மேற்கொள்ளலாம்😯 என்று மக்கள் அச்சமடைந்துள்ளனா்😨.

Monday, 25 September 2017

மொபைல் போன் அடையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை

மொபைல் போன் அடையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை

📱மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டு சிறை⛓ அல்லது 💸அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்👍 என 🏛மத்திய தொலைத் தொடர்புத் துறை அரசாணை⚖ பிறப்பித்துள்ளது. 📱மொபைல் போனின் பேட்டரி செருகும் இடத்தில் இந்த எண் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். டபுள் சிம் போடும் மொபைல்களில் இரு ஐஎம்இஐ எண்கள் இருக்கும்👍. போன்கள் திருடு போனால் அந்த எண்ணை வைத்து கண்டறிய முடியும்😯. ஆனால், தற்போது சிலர் 💻சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, அந்த எண்ணை மாற்றி விடுவதால், திருடிய 📱போன்களை கண்டறிவது கடினமாகியுள்ளது😟. 
அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் தங்கள் சமூக விரோத செயல்களுக்கு😳 இது போன்ற திருட்டு போன்களைப் பயன்படுத்துவதாகவும், சமீபத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 📱18,000 போன்கள் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது😯. எனவே இவற்றைத் தடுக்கவே🚫 இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👏. மேலும், திருட்டு போன மொபைல் 📱போன்களை உடனே செயலிழக்க செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருவதாகவும் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

பட்டாசு வாங்கணுமா-பான், ஆதார் எண் வேண்டும்

பட்டாசு வாங்கணுமா-பான், ஆதார் எண் வேண்டும்

குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக 🎉பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும்👍 என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன🔈. பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் 🎉பட்டாசுகளை வாங்கி, அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்😯. ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக, நேரடியாக குடோன்களை அணுகுகின்றனர்😯. அவ்வாறு அணுகுபவர்களிடம் ஜி.எஸ்.டி. எண் இல்லாத காரணத்தினால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன🔈. இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் 💸வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும்👍 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன😯.

Sunday, 17 September 2017

தோல்வி

தோல்வி.

புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,

"நான் எங்கு செல்லட்டும்..?"புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"

ஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார்.

சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார்,
"அந்தப் பகுதிக்கா..? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள்.
இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..?"

"ஆமாம்!" என்றார் காஷ்யபர்.
"உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்,
அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..?" என்று கேட்டார் கெளதமர்.

"மிகவும் மகிழ்ச்சியடைவேன்.., ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே, என்று நன்றி சொல்வேன்.!"

"ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..?"
"என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என்று மகிழ்ச்சியடைவேன்."

"ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்..?'
"மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே..!" என்றார் காஷியபர்.

"நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா..!" என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழலையும் மகிழ்ச்சியாகவே காண முடியும். தோற்பதற்கு தயாராக இருப்பவன் ஒருபோதும் தோல்வியடைய முடியாது

வார்த்தையின் சக்தி

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்ற படி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

எண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்...
.
.
.
.

Thursday, 14 September 2017

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
வருகிற 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ள நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம்.

தைரியசாலி (நகைச்சுவை)


தைரியசாலி
★★★★★★★
கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!...

மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!...

நிச்சயம் பண்ணும்  போது 100 பேரோட வந்தே!!...

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!...

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே  வந்திருக்கேன் பாத்தியா!...
இப்ப புரியுதா யாரு  "தைரியசாலி" ன்னு...

கணவன்: 😳😳😳😳.

Wednesday, 13 September 2017

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)

அந்தமான் & நிக்கோபர் தீவுகள்  : 1 - 100
ஆந்திர பிரதேசம்:  27 - 3800
அஸ்ஸாம்: 6 - 726
பீகார்: 13 - 1250
சண்டிகர்:  1 - 100
சட்டீஷ்கர்: 6 - 700
டெல்லி: 8 - 1050
கோவா 1 -150
குஜராத்: 21 - 3230
ஹரியானா:  8 - 800
இமாச்சல பிரதேசம்:  3 - 350
ஜம்மு & காஷ்மீர்: 4 - 500
ஜார்கண்ட்: 3 - 290
கர்நாடகா: 50 - 7095
கேரளா:  30 - 3550
மத்திய பிரதேசம்: 14 - 1800
மகாராஷ்டிரா: 48 - 6245
மணிப்பூர்: 2 - 200
மேகலயா: 1 - 50
ஒடிசா: 8  -1050
புதுச்சேரி: 9 - 1275
பஞ்சாப்: 10 - 1145
ராஜஸ்தான்: 13 - 2100
சிக்கிம் 1 - 100
தமிழ்நாடு:  45 - 5660
தெலுங்கானா: 20 - 2750
திரிபுரா: 2 - 200
உத்திர பிரதேசம் 36 - 3749
உத்ரகாண்ட்: 4 - 500
மேற்கு வங்காளம்: 17 - 2450

மொத்தம் : 412 - 52965

Monday, 11 September 2017

ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார்

ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?

பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

Saturday, 9 September 2017

கட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்!

கட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்!

சென்னை: வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.

2014ல் பேஸ்புக் நிறஉவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. கட்டணம் இல்லாத, விளம்பரமும் இல்லாத ஒரு ஆப்புக்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து பேஸ்புக் வாங்கியது ஏன் என்ற கேள்வி அப்போது எல்லோரிடமும் எழுந்தது.
இதற்கான விடைதான் தற்போது வெளியாகியுள்ள தகவல். ஆம்.. வாட்ஸ்அப் இனிமேல் கட்டண சேவை அளிக்கும் ஆப் என்ற வகையில் மாறப்போகிறது.

வர்த்தக நோக்கம்

கட்டண சேவை என்றதும், நெட்டிசன்கள் ஆதங்கப்பட தேவையில்லை. வாட்ஸ்அப்பில் வர்த்தக டூல் ஒன்று சேர்க்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்குதான் கட்டணம். இந்தியாவில் 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள், அவர்களை குறிவைத்து வர்த்தக நிறுவனங்கள் இந்த கட்டண சேவையை பயன்படுத்தலாம்.


இந்தியாவில்தான் வேறெந்த நாட்டைவிடவும் அதிகப்படியானோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். இவர்களை, வணி நிறுவனங்களோடு இணைப்பதுதான் புதிய கட்டண சேவையின் நோக்கம். டிவிட்டர், பேஸ்புக் போலவே, வர்த்தக நிறுவனங்கள் ரியல்தான் என்பதை உறுதி செய்ய வெரிஃபைட் குறியீடு பயன்படப்போகிறது.


வாடிக்கையாளர்கள் தொடர்பு
கட்டணம் செலுத்தும் வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இவற்றை பிளாக் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு வசதி உண்டு. உணவகங்கள், சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள இது உதவும்.

பல சேவைகளுக்கு வாய்ப்பு
புக்மைஷோ ஏற்கனவே வாட்ஸ்அப்புடன் இணைந்து இதுபோன்ற சேவையை வெள்ளோட்ட அடிப்படையில் செய்து வருகிறது. எப்போது வெரிஃபைடு குறியீட்டுடன் வாட்ஸ்அப் தனது வணிக சேவையை தொடங்கப்போகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வீசாட் என்ற மெசேஜ் ஆப், பிறகு மேம்படுத்தப்பட்டு, கார், ஆட்டோ புக் செய்வது, பில் கட்டுவது உள்ளிட்ட பல சேவைகளை அளிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
.

Wednesday, 6 September 2017

இந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்!

இந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்!

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுகுறித்து, காவல்துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

அதன்படி, "அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்" என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை ஏதும் நடத்தப்படவில்லை' என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Sunday, 3 September 2017

எது உண்மையான தியானம்?

எது உண்மையான தியானம்?

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன்.

ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களைமூடி தியானம் செய்ய அமர்ந்தால், மன ம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக் கொரு நல்வழி கா ட்டவேண்டும் என் றான்.

அவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வ தற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகை யில், மூன்று ஞானிகள் நெடு நாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந் தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப்பதிலும் இல் லை.

மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இர ண்டாவது ஞானி, அது கறுப்பு நிறக்குதிரை யாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதி ரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ் சம் சும்மா இருக்க மாட்டீங்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியான த்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி.இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானி த்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையா ன தியானம்.

பிறகு விவேகானந்தர் இளைஞனின் கேள்வி க்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநல மற்ற பொதுசேவையில் ஈடுப டுவதுதான் என்கிறார். உன் வீட்டைசுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந் த உதவிகளை செய். கவனிப்பி ன்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்! பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையானமன திருப்தி இருக்கிறது. மனதில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடி கொ ள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னா ல் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு தான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித் தார் விவேகானந்தர்

நம்பலாமா?

நம்பலாமா?

கிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.

"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.

மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.

"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.

"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை.

"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"

"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.

பாம்பும் யோசித்தது.

நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது

கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.

நீதி :

"இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்"..

"நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பும் ஏமாற்றமும் நமக்குத்தான்"...