Thursday, 30 April 2020

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை மாநகரில் உள்ள அனைத்து அரசு & தனியார் பள்ளிகளை மே 2-ம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து அரசு & தனியார் பள்ளிகளை மே 2-ம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அனைத்து பள்ளிகளையும் பயன்படுத்த திட்டம்.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனி மவுசு உண்டு. 

தற்போது கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. 

உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் நீண்டகால கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

புவிசார் குறியீடு கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது.

மொபைலுக்குத் தாலிகட்டிய மணமகன்

மொபைலுக்குத் தாலிகட்டிய மணமகன்

இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கால் பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

பல மணமக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளிவிட்டும் விதிமுறைகளை கடைபிடித்து திருமணங்களை செய்து கொண்டனர்.  

இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், லக்னோவில் இருக்கும் பெண்ணுக்கும் வீடியோ கால் வழியாக திருமணம் நடைபெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா

சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா

சென்னையில் 98 சதவிகிதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னயைில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.


ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி தேவைப்படும்

ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி தேவைப்படும்

இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ எவ்வளவு கோடி தேவைப்படும் என ராகுல் காந்தி, ரகுராம் ராஜனிடம் கேட்டதற்குப் பதிலளித்த அவர், 

இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவ சுமார் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும். 

இந்தமாதிரியான சூழல் பொதுவாக எந்த நாட்டுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது. 

ஆனால். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.


நாடு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்யலாம்

நாடு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்யலாம்

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நாட்டிற்கு உடனடியாக திரும்ப விரும்புபவர்கள் அவர்களின் எண்ணிக்கையை அறியவும், அவர்களை தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

100% வைரஸை விரட்டுவது தற்போது சாத்தியமற்றது

100% வைரஸை விரட்டுவது தற்போது சாத்தியமற்றது

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இந்தியாவில் 100% வைரஸை விரட்டுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. 

இந்தியாவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை விகிதம் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் வெகுதொலைவில் உள்ளது. 

இந்தியாவில் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

எனவே வைரஸ் சோதனை விகிதத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


கோயம்பேடு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

கோயம்பேடு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காய்கறி மார்க்கெட்டில் சில நாள்களாக பணியாற்றி வந்தபோது கோயம்பேடு எஸ்ஐக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.


தூத்துக்குடியில் 14 சலூன் கடைகளுக்கு சீல்

தூத்துக்குடியில் 14 சலூன் கடைகளுக்கு சீல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மறைமுகமாக முடிதிருத்தம் செய்த வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதுடன், அனுமதியின்றி செயல்பட்டுவந்த 14 சலூன் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறும் முடிதிருத்துனர் மீது கொள்ளைநோய் தடுப்புச் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் முனைவர். ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.


மேதின வாழ்த்துக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மெக்கானிக் தொழிலாளர்கள்.!!

மேதின வாழ்த்துக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மெக்கானிக் தொழிலாளர்கள்.!! 

அழுக்கு சட்டையும் ஆயில் கரை படிந்த இவற்றுக்கு சொந்தக்காரர்களான மெக்கானிக்குகளின் மனக்குமுறல்கள் மற்றும் மே தின வாழ்த்துக்கள்!! எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி தனது குடும்பத்தோடு காரில் சென்றுகொண்டு இருக்கும்போது ஏதோ வது மெக்கானிக் செல் நம்பர் தான் அவர்களும் இரவு பகல் பாராது வந்து காரை சரி பண்ணித் தருவார்கள் வாகனம் எந்த இடத்தில் நின்றாலும் எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொழில் ஒன்றே கவனமாக எடுத்துக்கொண்டு அங்கேயே காரின் கீழே படுத்து சரி செய்வார்கள் இதுதான் மெக்கானிக் தர்மம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து பிழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களின் திகம் படித்தவர்களும், படிக்காதவர்களும் பிழைப்பு நடத்தக்கூடிய அனுபவத்தொழிலாக உள்ளது பெரும்பாலும் இந்த தொழிலாளர்கள் காலையில் காப்பி  குடித்தவுடன் வேலையை துவங்கி இரவு வரை வேலை பார்த்தாலும் பெரிய வருமானம் ஒன்றும் பார்த்து விட முடியாது கோடிக்கணக்கு மதிப்பில் உள்ள கார்களை பழுது பார்த்தாலும் மெக்கானிக்கின் வாழ்க்கை தரம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதே உண்மை புதுக்கோட்டையில் காந்தி நகர், போஸ் நகரில் கார் பழுது நீக்கும்  தொழில் செய்பவர்கள் அதிகமாக உள்ளனர் இந்தத் தொழிலில் மெக்கானிக், டிங்கரிங்,எலக்ட்ரிஷன், டோர் மெக்கானிக், ஏசி மெக்கானிக், சீட் லைனர், டயர் பஞ்சர் போன்று தனித்தனி பிரிவில் தொழிலாளர் உள்ளனர்    ஆயில் கரை போவதற்கு ரொம்ப நேரம் கை கழுவ வேண்டும் முதலில் கெரோசின் அதன் பிறகு சோப்பு போட்டு கை கழுவி உணவு சாப்பிட வேண்டும் அதன் காரணமாக சிலபேர் உணவு உண்பதை மதியநேரங்களில் தவிர்த்து விடுவார்கள் இன்றைக்கு ஆயில் கம்பெனிகள், மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், பேட்டரி கம்பெனிகள், டயர் கம்பெனிகள், போன்றுவிற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 5 கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவதாக கூறுகிறார்கள் இவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு நான்கு சக்கர பழுது நீக்கும் தொழிலாளர்கள் தான் என்பது உண்மை இந்த நேரத்தில் எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்று மனம் குமுறுகிறார்கள் மேலும் ஊரடங்கால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கின்றோம் வேறு தொழிலாளர்களுக்கு  வசதி மிக்கவர்கள் தன்னார்வலர்கள் உதவி செய்து கொண்டுள்ளனர் எங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடமும் தன்னார்வலரிமும்  கோரிக்கை வைத்து  உள்ளனர் தொழிலாளர்கள் தினமான மே 1 அன்றாவது எங்கள் வாழ்வாதாரம் செழிக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள் 

நன்றியுடன் மோகன்ராஜ்

கொரோனாவைப் பற்றி உலகநாடுகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவைப் பற்றி உலகநாடுகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார மையத்தின் அவசர சிகிச்சைகள் பிரிவு இயக்குனர் மைக் ரையன், ஒவ்வொருநாளும் செய்தியாளர் சந்திப்பில் எச்சரிக்கைகளை விடுத்ததாக தெரிவித்தார்.

சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளியை கொரோனா வைரஸ் மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வைரஸ் பரவிக் கொண்டு இருப்பதை உணர்ந்து, மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

வரும் காலங்களில் 140 நாடுகளில் மிகப்பெரிய அளவில் அனைத்து வகை பரிசோதனைகளும் அதிகரிக்கப்படும் என்றும் மைக் ரையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா வைரஸ்  காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து,  கண் சிவப்பாக இருத்தல், கண் எரிச்சல் , கண் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து தெரியவாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கண் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், கண்களை கைகளால் தொட கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவருக்கும் வெளியேறும்  கண்ணீர் துளிகள்  படிந்த இடத்தை தொட்டால் கூட கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவு வாய்ப்பு உள்ளதாக கண் மருத்துவர்கள் ஆய்வில் கூறியுள்ளதாகவும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் தொடர்ந்து லாப்டாப், டேப், மொபைல் போன் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

 
நாமக்கல் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு  குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

 அப்போது, கொரோனா நிவாரண நிதியாக  எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாயும்,  நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் ரூபாயும்  வழங்கப்பட்டது.

 அதேபோல் யுனைடட் வெல்ஃபேர் அறக்கட்டளை சார்பில், 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர்  பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. 

பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் ஏழை எளிய மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் ஜெ.ஜெ. நகர் வசிக்கும் பொதுமக்கள் சார்பில்  நலிந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி 
வட்டாசியர் திருநாவுக்கரசு, திமுக ஒன்றியசெயலாளர்  அடைக்கலமணி,  நகர செயலாளர் அழகப்பன் ஆகியோர் அரிசி, காய்கறிகள் என  200 நபர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி துவக்கி வைத்தனர்.  இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம அலுவலர் ரமேஷ், சிக்கந்தர், காளிதாஸ், விகாஷ், தட்சிணாமூர்த்தி,  ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன், ஜெ.ஜெ.நகர் தொழிலதிபர்கள் ராமனாதன், ரவி, ஜெயராஜ், வார்டு உறுப்பினர்கள்,  பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். 

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் நலிவடைந்த மக்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு சமயங்களில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.  இதில் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள்,  நலிவடைந்த மக்கள், ஏழை-எளிய மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறி பை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.  நிவாரண பொருட்களை பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு, கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, ஊராட்சி மன்ற தலைவர் அழகு ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்கள், கண்ணுச்சாமி, ஜெய் பழனியப்பன், முருகானந்தம், பாஸ்கரன், வெள்ளைச்சாமி, கருப்பையா, ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பயனாளிகளுக்கு வழங்கினர். 

படங்கள் மற்றும் செய்திகள்
 கீரவாணி அழகு இளையராஜா  
நிருபர் 
பொன்னமராவதி. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் திடீர் ஆய்வு ஆய்வு செய்தார்

5 ரூபாய் போட்டால் முகக்கவசம்

5 ரூபாய் போட்டால் முகக்கவசம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களின் தற்காப்புக்காக 5 ரூபாய் நாணயம் போட்டு முகக்கவசம் பெறும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 

கலெக்டர் திவ்யதர்ஷினி 5 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தி முகக்கவசத்தைப் பெற்று தொடங்கி வைத்தார். 

ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் சார்பில் இந்தத் தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினம்தினம் சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு....ஏன்..?? எதனால்..??

தினம்தினம் சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு....ஏன்..?? எதனால்..??

சென்னையில் 5 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் 4 நாட்கள் முன்பு தமிழக அரசு விடுத்த 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவின்  விளைவே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழக அரசு இந்த முழு ஊரடங்கு உத்தரவினால் பாதிப்பு குறையும் என்ற எண்ணத்தில் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், பொதுமக்கள் இந்த அறிவிப்பால் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மார்க்கெடில் காய்கறிகள் வாங்கப்போய் கொரோனாவை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. இதில் பச்சிளம் குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த முழு ஊரடங்கு முடிவை எடுப்பதற்கு முன்பு தமிழக அரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் இந்த நிலைமை மாறி இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.. மழை வாய்ப்பு குறைவு..!!

வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.. மழை வாய்ப்பு குறைவு..!!

தமிழகத்தின் டெல்டா கடலோரங்களில் நாளை காலை லேசான மழைக்கு வாய்ப்பு..

நாளை இரவோடு மழை விடுப்பு எடுக்க உள்ளது. வங்க கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வெப்பச்சலனம் மழை ஓய்வு எடுக்க போகின்றது.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு கடலிலே  வலுகுறைய வாய்ப்பு.. அந்த தாழ்வு  ஒடிசா மாநிலம் நோக்கி பயணம் எடுப்பதால் அந்த சுவடு கடலில் மறையும் வரை தமிழகத்தில் மழை இருக்காது..

மே மாதம் 2ம் வாரத்தில் மீண்டும் வெப்பச்சலனம் மழை தொடங்கும் மே மாதம் தமிழகத்தில் வெப்பச்சலனம் மழை சிறப்பாக இருக்கும்..

Wednesday, 29 April 2020

கொரோனா தொற்று விபரம் 29.04.2020.

 கொரோனா தொற்று விபரம் 29.04.2020

தமிழகத்தில், இன்று மட்டும் 104பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,162 ஆக உயர்வு.  இன்று மட்டும் சென்னையில் 94பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது வரை பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு -தமிழக சுகாதாரத்துறை

ஏ.சி-க்களை பயன்படுத்த வேண்டாம்

ஏ.சி-க்களை பயன்படுத்த வேண்டாம்

கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில் அலுவலகங்களில் ஏ.சி-க்களை பயன்படுத்த வேண்டாம் என ஹரியானா அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. 

அத்தியாவசியமாகத் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கட்டுப்பாடாக பயன்படுத்தவும் மற்ற நேரங்களில் ஜன்னல்களை பயன்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளது. 

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இதுவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.


சுகாதாரப் பணியாளர்களில் 4.11% பேருக்கு தொற்று

சுகாதாரப் பணியாளர்களில் 4.11% பேருக்கு தொற்று

டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களில் குறைந்தது 4.11% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது 

என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

இதில் 33 மருத்துவர்களும் 13 துணை மருத்துவர்களும் 26 செவிலியர்களும் 24 களப்பணியாளர்களும் அடங்குவர் என கூறியுள்ளார். 

மேலும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை தேவை

கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை தேவை

கோயம்பேடு சந்தையில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு சந்தைக்கு 1 அல்லது 2 நாள்கள் விடுமுறை தேவை. 

அப்போதுதான், கிருமி நாசினிகளை தெளிக்க முடியும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், சந்தையை இடமாற்றம் செய்வதால் காய்கறி வீணாகும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மக்கள் அவசரம் காட்டாமல் பொருள்களை வாங்க வேண்டும்

மக்கள் அவசரம் காட்டாமல் பொருள்களை வாங்க வேண்டும்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள் அவசரம் காட்டாமல் பொறுமையாக சமூச விலகலைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்க வேண்டும் என அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மே 2ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

மே 2ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் ‌ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் மே 2ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு ஆகியவற்றை பற்றி விவாதம் செய்து முக்கிய முடிவுகள் வெளியாகும் என கருதப்படுகிறது.

அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு : அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயன்

அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு : அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயன்
 
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவம் மிக்கதாக செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு காலத்தில் மட்டும் தினக்கூலிகள், ஆட்டோ லாரி ஓட்டுநர்கள் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து வரும் அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன்
தெரிவித்துள்ளது.

சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக பணிபுரிபவர் மணிவண்ணன்.

 இவரது மகன் ஜெயஸ்ரீவர்மன் , தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 

சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டாக உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார் ஜெயஸ்ரீவர்மன்.

தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் சுகாதார பணியாளர்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தனது தந்தை கூறுவதை கேட்டுக்கொண்டு இருக்கும் ஜெயஸ்ரீவர்மன் அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி சைக்கிள் வாங்க தான் உண்டியலில் சேர்த்த பணத்தை சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனால் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு செயல் அலுவலர் குகனனிடம் தான் சேர்த்து வைத்த ரூ.4586 பணத்தை சிறுவன் ஒப்படைத்தார். 
சிறுவனின் பெருந்தன்மை கண்டு வியந்த செயல் அலுவலர் இப்பணத்தை கொண்டு சுகாதார பணியாளர்களுக்கு மாலையில் சுண்டல் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். 
சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்


பொதுமுடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பொதுமுடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. 

ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

 மேலும், எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது தொடர்பாக ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு ...

இந்நிலையில், பொதுமுடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் உணவு டெலிவெரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உணவு டெலிவெரி செய்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உணவு டெலிவெரி செய்யும்  ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உணவு டெலிவெரி செய்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவெரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் வளசரவாக்கத்தை சேர்ந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அந்த ஊழியருக்கு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த அவரது தந்தையிடம் இருந்து தொற்று பரவியுள்ளது.

தற்போது, கொரோனா பாதித்த ஊழியர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி வரை அவர் பணியில் ஈடுபட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்துள்ளார்.

ஆகையால், தடுப்பு நடவடிக்கையாக, அவர் எந்தெந்த வீடுகளில் உணவு டெலிவெரி செய்தார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை  தனிமைபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாறு  அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டோர் டெலிவெரி பணியில் ஈடுபடும் நபர்களும், சம்பந்தபட்ட நிறுவனங்களும்  கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பிளாஸ்மா தெரபியை யாரும் பயன்படுத்தக் கூடாது

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பிளாஸ்மா தெரபியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிப்பது சட்டவிரோதம் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒரேநாளில் 684 பேர் குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

 இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 23.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.  

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டார்.

பிளாஸ்மா தெரபியை பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், தற்போது வரை பரிசோதனை என்ற கட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வு முடிந்து சரியான முடிவுகள் கிடைக்கும் வரை பிளாஸ்மா சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

பிளாஸ்மா தெரபியை ஆய்வு மற்றும் பரிசோதனைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, சரியான முறையில் பிளாஸ்மா தெரபியை பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் எனறும் லாவ் அகர்வால் எச்சரித்தார்.

பிளாஸ்மா சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், நிரூபிக்கப்படும் வரை அதனை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

 அவ்வாறு பயன்படுத்துவது நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும் என்பது மட்டுமின்றி, சட்டவிரோத நடவடிக்கையும் ஆகும் என்றும் லாவ் அகர்வால் எச்சரித்தார்.


கொரோனா தடுப்பு- மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை.

கொரோனா தடுப்பு- மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை.

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி.

பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை -  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் பேச்சு.

பொது முடக்கம் மே3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை.

ரேசன் கடைகள், காய்கறிக் கடைகளில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் - முதல்வர் பழனிசாமி.

மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை 
முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்- முதல்வர் பழனிசாமி.

முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3ஆக பிரித்து பணி வழங்க வேண்டும்- முதல்வர் பழனிசாமி.

100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம்- முதல்வர் பழனிசாமி.

கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்.

கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்- முதல்வர் பழனிசாமி.

காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்- முதல்வர் பழனிசாமி.


கொரானோ தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை - தமிழக காவல்துறை.

கொரானோ தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை - தமிழக காவல்துறை.

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு.

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 முதல் 50 வயதிற்குட்பட்டோருக்கு அழைப்பு.

விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக காவல்துறை.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்வு.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,17,813 ஆக உயர்வு.

இந்த 31 லட்சம் பேரில் 19,65,373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

19.08 லட்சம் பேருக்கு லேசான அறிகுறிகளே உள்ளதால் அச்சப்பட தேவையில்லை.

56,970 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

கொரோனா பணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அழைப்பு

கொரோனா பணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அழைப்பு

கொரோனா தொடர்பான தடுப்புப் பணிகளில் ஈடுபட மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் வரலாம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 

40 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.


செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் சுழலில் மூழ்கி உயிரிழப்பு

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் சுழலில் மூழ்கி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியைச் சேர்ந்த சிலர் குன்னூர் மரப்பாலம் வனப்பகுதியில் உள்ள அருவியில் குளிக்க வந்துள்ளனர். 

அப்போது நிகில் என்ற இளைஞர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

எதிர்பாரத விதமாக சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

யானை நடமாட்டம் காரணமாக உடலை மீட்பதில் தாமதமாகி வருகிறது.


மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு நகர திமுக சார்பில் பாராட்டு!! 41வது வட்ட திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு நகர திமுக சார்பில் பாராட்டு!!  41வது வட்ட திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது மனித உயிரை காப்பதற்காக இரவு பகல் பாராமல் தொய்வின்றி பணியாற்றும் மருத்துவத்துறை, காவல்துறை தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய துணை ஆய்வாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார் அவரை பாராட்டி மேனாள் நகர் மன்றத் துணைத்தலைவர் க. நைனா முஹம்மது, சால்வை அணிவித்தார் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ், கலந்து கொண்டனர் S.முத்துக்கருப்பன், தா.ராமகிருஷ்ணன், சுரேஷ், ரங்கம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம்!!

கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம்!!
சிவாஜி சமூக நலப்பேரவை, கணேஷ் நகர் காவல் நிலையம், புதுக்கோட்டை நகராட்சி இணைந்து மச்சு வாடியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் அ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், கணேஷ் நகர் காவல் நிலைய காவல் நண்பர்கள், கலந்து கொண்டனர் இந்த ஓவியத்தினை புதுக்கோட்டை ஓவியர் சங்க நண்பர்கள் வடிவமைத்தனர்

கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி

கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு சங்கம் சார்பாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் நடைபெற்றது வருகை தந்த அனைவரையும் செயலாளர்  R.ஆரோக்கியசாமி வரவேற்றார் நிகழ்ச்சியில் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க துணைத்தலைவர் AMS.இப்ராஹிம் பாபு, நிர்வாகிகள் R.ஜெயக்குமார் முஹம்மது மன்சூர், KLKA.ராஜா முஹம்மது, திருக்கோகர்ணம் காவல்நிலைய காவல் துணை ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த ஓவியத்தினை புதுக்கோட்டை ஓவியர் சங்க நண்பர்கள் வடிவமைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் கடைவீதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த பிரவுசிங் சென்டர் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மீமிசல் காவல் துறையினர் இணைந்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் கடைவீதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த பிரவுசிங் சென்டர் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மீமிசல் காவல் துறையினர் இணைந்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்

திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 26 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்களில் 23 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.

இம்மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்

ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்

ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் நடைமுறை ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கொரானா ஊரடங்கு காரணமாக சுமார் 90 சதவிகித ஐ.டி. ஊழியர்கள் ஏற்கனவே வீடுகளில் இருந்து பணியாற்றுகின்றனர். இன்று மாநில ஐ.டி. அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் காணொலி வாயிலாக பேசிய அவர், இம்மாதம் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஐ.டி.ஊழியர்களுக்கான வீட்டில் இருந்தே வேலை நடைமுறை நீட்டிக்கப்படுவதை அறிவித்தார்.

சேலம் மாநகரப் பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பால் வினியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அலுவலர்களின் செல்பேசி எண்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார் சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய் பாபு.

சேலம் மாநகரப் பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பால் வினியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அலுவலர்களின் செல்பேசி  எண்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார் சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய் பாபு. 

85 வயதில் அடுப்பை பற்ற வைத்து ஒரு ரூபாய்க்கு இட்லி

85 வயதில் அடுப்பை பற்ற வைத்து ஒரு ரூபாய்க்கு இட்லி

கொரனா காலத்திலும் விலையை ஏற்றாமல் மனிதாபிமானத்துடன் வியாபாரம் செய்யும் பாட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை வடிவேலம்பாளையம் சுற்றுப்புறங்களில் அறியாதவர்கள் யாரும் இல்லை. 

25 பைசாவுக்கு இட்லி கடை ஆரம்பித்தவர் பலவருடங்களாக அதே விலையை கடைபிடித்து வந்தார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் 75 பைசா விலையை ஏற்றி ஒரு ரூபாய்க்கு விற்று  வருகிறார். 

தற்போது இவ்வளவு கஷ்ட காலத்திலும் கொரானா நோய்த்தொற்று நோயின் காரணமாக 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் கூட பாட்டி அசராமல் அடுப்பை பற்றவைத்து உணவு தயாரித்து பலருக்கும் உணவு விற்று வருகிறார்.

 இந்த பாட்டிலயை  நம்பி பல தொழிலாளர்கள், வடமாநிலத்தவர்கள் என பலரும் உணவு சாப்பிட்டு வருகிறார்கள். 

உண்மையிலேயே இந்த கருணை காலத்தில் பாட்டியை தெய்வமாக நினைத்து உணவு அருந்துகின்றனர்.

மனம் உள்ளவர்கள் இந்த பாட்டி பாராட்டுங்கள்.

தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை இருக்கும்.

தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை இருக்கும். 

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மற்றும்  விழுப்புரம் மாவட்டத்தில் மழை, இது கடலூர்,  கள்ளகுறிச்சி மாவட்டங்களுக்கு பரவலாக லேசான மழை இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்த மழையளவு விபரம்:-

District Collector Office Tiruppur 87.00
KANGEYAM 64.00
TIRUPPUR 60.00
NAGERCOIL 52.40

DHARMAPURI
Harur 38mm
Palacode 32mm
Penukondapuram 43mm

VELLORE
Ambur 30mm
Katpadi 29mm

PERAMBALUR
Chettikulam 42mm
Perambalur 36mm

TRICHY
Samayapuram 45mm

TIRUPUR
Palladam 21mm
Avinashi 14mm
Sivagiri 24mm

Erode
Modalurichi 47.0mm
chennimalai 39.0mm

Coimbatore
Coimbatore south 58mm
Madukkarai-45mm
Coimbatore ap 37mm
TNAU-17mm

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 1 கோடி இந்தியர்களை மீட்க பிரமாண்ட நடவடிக்கை: விமானங்கள், கப்பல்கள் விரைகின்றன

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 1 கோடி இந்தியர்களை மீட்க பிரமாண்ட நடவடிக்கை: விமானங்கள், கப்பல்கள் விரைகின்றன

கரோனா தொற்று அதிகரித்து வரும் வளையில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கரோனா வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் கரோனா தொற்று பாதிப்புள்ள காரணத்தால் அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை குறித்து அவ்வப்போது இந்தியா கேட்டறிந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, தொலைபேசியில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவை, அழைத்துப் பேசினார்.

உரையாடலின் போது, இரு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி விவாதித்தனர்.

குவைத்தில், ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளுக்குள் நடத்தப்பட்ட சோதனைகளில் 28 வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் 24 பேர் இந்தியர்கள். 2 பேர் வங்க தேசத்தவர்கள். நேபாளத்தைச் சேர்ந்தவர் ஒருவர். வளைகுடா நாடுகளில் 2 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே இரு இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்தம் 26 இந்திய வெளிநாட்டவர்கள் குவைத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குவைத்தில் மொத்தம் 317 பேருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா மட்டுமின்றி பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் வளையில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

வளைகுடா நாடுகளில் சுமார ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிமான பகுதியினர் துறைமுக நகரங்களில் வசிக்கின்றனர். எனவே இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களை அனுப்பி தலா 1500 பேர் வீதம் என மொத்தம் 4500 பேர் வீதம் அழைத்து வர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக கடற்படை விரிவான அறிக்கையை அளித்துள்ளது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படும் போது முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.


ஊரடங்குக்குப் பிறகு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா்

ஊரடங்குக்குப் பிறகு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா்


ஊரடங்குக்குப் பிறகு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென பாஜக தமிழக தலைவா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழும்போதெல்லாம், மதுவுக்கு அடிமையானவா்கள் பாதிக்கப்படுவா், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றெல்லாம் கூறி அந்தக் கோரிக்கையை ஆட்சியாளா்கள் ஏற்க மறுப்பா். ஆனால், ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலத்தில் மது கிடைக்காமல் யாரும் தற்கொலை செய்யவில்லை. மன நோய்க்கு உள்ளாகவில்லை.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது.


தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இதுவாகும் என்பதால், நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்

12 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப பிரிட்டீஸ் ஏர்வேஸ் முடிவு

12 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப பிரிட்டீஸ் ஏர்வேஸ் முடிவு


லண்டன்: கொரோனா தாக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த வரும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனம் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் பலிகியுள்ளனர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கொரோனா பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.


சமீபத்தில் இந்நிறுவனத்தின் சர்வதேச போக்குவரத்து நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகம் எடுத்துளள முடிவால், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓரிரு நாளில் அனைவரும் டிஸ்சார்ஜ்; பச்சை மண்டலமாகிறது குமரி

ஓரிரு நாளில் அனைவரும் டிஸ்சார்ஜ்; பச்சை மண்டலமாகிறது குமரி


நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஐந்து பேர் குணமாகி வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் இரண்டு பேர் குணமானாலும் குடும்பத்தினர் குணமடைவதற்காக மருத்துவமனையிலேயே காத்திருக்கின்றனர்.இந்நிலையில் மேலும் மூன்று பேருக்கு சிகிச்சைக்ப்பின் எடுக்கப்பட்ட முதல் ரத்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. இரண்டாவது பரிசோதனையிலும் நெகட்டிவ் வந்தால் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக குறையும். இவர்களும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.


அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் மூன்றாம் தேதிக்கு பின்னர் குமரி மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி நிகர இழப்பு ரூ.1,387 கோடி

ஆக்ஸிஸ் வங்கி நிகர இழப்பு ரூ.1,387 கோடி


# தனியாா் துறையைச் சோந்த ஆக்ஸிஸ் வங்கி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,387.78 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கி ரூ.1,505.06 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

# வருவாய் ரூ.18,324.31 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.20,219.57 கோடியாக இருந்தது. வாராக் கடன்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,711.43 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.7,730.02 கோடியானது. மொத்த வாராக் கடன் விகிதம் 5.26 சதவீதத்திலிருந்து 4.86 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 2.06 சதவீதத்திலிருந்து 1.56 சதவீதமாகவும் குறைந்தது என ஆக்ஸிஸ் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது

Tuesday, 28 April 2020

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு


சென்னையில் மட்டும் ஒரே நாளில் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 673

செங்கல்பட்டில் மேலும் 12 பேர், காஞ்சிபுரத்தில் மேலும் ஒருவருக்கு இன்று வைரஸ் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேர், நாமக்கல்லில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,128 பேர் மீண்டுள்ளனர்

ஊரடங்கு முடிந்த பிறகும் மதுவிலக்கு தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு முடிந்த பிறகும் மதுவிலக்கு தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



ஊரடங்கால் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளதாகவும், அதில் முதன்மையானது மது பிரியர்கள் மதுவை மறந்திருப்பதுதான் என்றும் கூறியுள்ளார்.




தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 39 ஆண்டுகளாக தான் போராடி வருவதாகத் தெரிவித்துள்ள ராமதாஸ், ஊரடங்கால் தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 





மது இல்லாமல் மக்களால் வாழ இயலும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் நிச்சயம் அது சாத்தியப்படும் என கூறியுள்ளார்.இதுநாள் வரை ஆட்சி செய்தவர்கள் மதுக்கடைகளை மூடாமல் கபட நாடகம் ஆடியதாக விமர்சித்துள்ள அவர், மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் வரலாற்றில் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டால் ஒன்றரை கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழும் என தெரிவித்துள்ள ராமதாஸ், அதோடு, தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும் என்றும், வறுமை விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.*


தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது : சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது : சுகாதாரத்துறை


இதுவரை வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 ஆக உயர்வு

சென்னையில் ஒரே நாளில் 47 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

மதுரையில் மேலும் 4 பேர், விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இன்று மட்டும் 81 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் : சுகாதாரத்துறை

இதுவரை 1101 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்



தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைவு

தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும்

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசரேஷன் பொருட்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்

தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும்

தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்

சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாதம் அவகாசம் தேவை

டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்

-மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது : சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது : சுகாதாரத்துறை


இதுவரை வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 ஆக உயர்வு

சென்னையில் ஒரே நாளில் 47 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

மதுரையில் மேலும் 4 பேர், விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இன்று மட்டும் 81 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் : சுகாதாரத்துறை

இதுவரை 1101 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்



அமெரிக்காவில் 10.10 லட்சம் பேர் பாதிப்பு; பலி 56,796...

அமெரிக்காவில் 10.10 லட்சம் பேர் பாதிப்பு; பலி 56,796...


⭕ வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,383 பேர் பலியாயினர்; 22,963 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


⭕ அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,383 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 56,796 ஆக உயர்ந்தது. புதிதாக 22,963 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 10,10,123 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,38,989 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


⭕ வட அமெரிக்காவில் இதுவரை 10,89,437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 61,426 பேர் பலியாகி உள்ளனர்.


⭕ இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடா(48,458) உள்ளது.



⭕ தென் அமெரிக்காவில் 1,44,170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,730 பேர் உயிரிழந்துள்ளனர்.


⭕ இங்கு பிரேசிலில் அதிகபட்சமாக 66,501 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது...


கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம்!...

கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம்!...


⭕ நீலகிரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

⭕ ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அந்த ஒரு நபரும் குணமடைந்து வீடு திரும்பினார்.

⭕ இதனால் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த முதல் மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.

⭕ இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்...


பெரம்பலூரில் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு

பெரம்பலூரில் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு!...


⭕ தமிழகத்தை பொருத்தவரை 1,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


⭕ அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த சில பகுதிகளில் மட்டும் முழு பொது முடக்கம் தொடர்ந்து வருகிறது. மற்றபகுதிகளில் வழக்கமான பொதுமுடக்கமும் அமலில் உள்ளன.


⭕ இந்நிலையில் பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு பொது முடக்கம் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


⭕ பெரம்பலூரில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றி 8கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கம் இன்று வரை அமல்படுத்தப்பட்டது.


⭕ அந்த முழு பொதுமுடக்கம் தற்போது மறு உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


⭕ உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள் ஆகியவை திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


⭕ சூப்பர் மார்க்கெட் திறக்கத் தடை என்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய மளிகைக் கடைகள் மட்டும் மதியம் 1 மணிவரை திறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது...


ஆசியாவில் 4.83 லட்சம் பேருக்கு கொரோனா

ஆசியாவில் 4.83 லட்சம் பேருக்கு கொரோனா


ஆசியாவில் கொரோனா பாதிப்பு 4.83 லட்சமாக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 17,575 ஆனது.

ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளை துவம்சம் செய்து வரும் கொரோனாவின் பாதிப்பு, ஆசியாவில் 4.83 லட்சமாக அதிகரித்தது.

 ஆசியாவில் புதிதாக 10,786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 332 பேர் பலியாகினர். 

இதனையடுத்து மொத்த பாதிப்பு 4,83,053 ஆகவும், மொத்த பலி 17,575 ஆகவும் அதிகரித்தது.

துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்தது. 

ஆசியாவில் அதிக பாதிப்புகளை துருக்கி (1,12,261), இரான் (91,472), சீனா (82,830) நாடுகள் சந்தித்துள்ளன.

 இந்தியாவில் புதிதாக 58 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 939 ஆக உயர்ந்துள்ளது. 

1,561 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 29,451 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் 13,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 292 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஐரோப்பாவில் 13 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

ஐரோப்பாவில் 13 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு


லண்டன்: ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது. 1.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதிக உயிர்பலி மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

 இந்நிலையில் ஐரோப்பாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 24,089 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 2,047 பேர் பலியாயினர். 

இதனையடுத்து ஐரோப்பாவில் மொத்த பாதிப்பு 13,00,897 ஆக உயர்ந்தது; மொத்த பலி 1,23,932 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 4,46,423 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக ஸ்பெயினில், 2,29,422 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இத்தாலியில் 1,99,414 பேர், பிரான்சில் 1,65,842 பேர், ஜெர்மனியில் 1,58,434 பேர், பிரிட்டனில் 1,57,149 பேர், ரஷ்யாவில் 87,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டினி சாவுகள் கூடும்: ஐ.நா., சபை எச்சரிக்கை

பட்டினி சாவுகள் கூடும்: ஐ.நா., சபை எச்சரிக்கை


நியூயார்க் :'உலகின் பணக்கார நாடுகள், ஐ.நா., சார்பு நிறுவனங்களுக்கான நிதி உதவியை நிறுத்தினால், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், பட்டினியால் உயிரிழக்க நேரிடும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

இது குறித்து, ஐ.நா.,வின் உணவுத் திட்ட தலைவர் டேவிட் பெய்ஸ்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகம் முழுதும், 82 கோடி மக்கள், தினமும் இரவு உணவின்றி, பட்டினியுடன் உறங்குகின்றனர். 

மேலும், 14 கோடி மக்கள், பல்வேறு நெருக்கடி நிலை காரணமாக, பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளதாக, உலக உணவுத் திட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக, மேலும், 13 கோடி மக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், பசி மற்றும் பட்டினியால் கடும் பாதிப்புகளை சந்திப்பர் என, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

உலகில் உள்ள, 10 கோடி மக்களுக்கு, உணவு திட்டத்தின் கீழ், தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று கோடி பேர், இந்த உணவை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர். 

அந்த மூன்று கோடி மக்களுக்கு, உணவு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள், நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேர், பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலை உருவாகும். 

ஐ.நா.,வின், உலக உணவு திட்டத்துக்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற பணக்கார நாடுகள், நிதி உதவிகள் அளித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பால், இந்த பணக்கார நாடுகளின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. 

இதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்துக்கான நிதி உதவிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டால், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், பாதிக்கப்பட்ட பல நாடுகளில் வசிக்கும் மக்கள், பசி மற்றும் பட்டினியால் வாடும் நிலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, 22 April 2020

தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் மே 3-ம் தேதி வரை திறக்கப்படாது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் மே 3-ம் தேதி வரை திறக்கப்படாது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.


கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் ஐடி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். 

அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ஐடி நிறுவன ஊழியர்கள் முன்புபோல் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்படும் சரிவை மீட்டுவிட முடியும், ஆனால் மக்களின் உயிர்தான் தற்போது முக்கியம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பரவலுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம், அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற செயல்கள் பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையிலானது எனவும், அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை‌ எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் புகார்கள் வரும் பட்சத்தில் உடன‌‌டி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரசால், மோசமான விளைவுகளை இனிமேல் தான் உலகம் சந்திக்கப் போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரசால், மோசமான விளைவுகளை இனிமேல் தான் உலகம் சந்திக்கப் போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


பெருந்தொற்று காலத்தில் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, அதற்கு வழங்கி வந்த நிதியையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸை அரசியல் பிரச்னை ஆக்காதீர்கள் அது நோய்த்தொற்றை மேலும் அதிகரிக்க செய்யும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசியம் எனக் கூறினார்.

ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் எனக்கூறிய டெட்ரோஸ், கொரோனா வைரஸைப் பொருத்தவரையில், மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்க போகிறோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thursday, 16 April 2020

ஊரடங்கில் அதிகரிக்கும் வாட்ஸ்அப் ஹேக் : இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..!

ஊரடங்கில் அதிகரிக்கும் வாட்ஸ்அப் ஹேக் : இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..!
   
வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் (Whatsapp Verification Scam) என்ற பெயரில், வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கில் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாட்ஸ் -அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய, சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் மாறியிருக்கும் சூழலில், வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
 வாட்ஸ்அப் கணக்கை தொடங்குவதற்கு, ஒன் டைம் பாஸ்வேர்ட் (one time password) எனப்படும் ஓடிபி (OTP) எண் கட்டாயத்தேவையாக இருக்கும் சூழலில், யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஓடிபி தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

இந்த ஓடிபி தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கானது எனச் சொல்லி அவர் உங்களிடம் அந்த 6 இலக்க ஓடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார். 

அவரை நம்பி நீங்கள் அதை அனுப்பிவிட்டால், அந்த நொடியே உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும்.

அதன்பின்னர், உங்களுடைய வாட்ஸ்அப்பிற்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகள், புகைப்படங்களை நீங்கள் பார்ப்பதுபோல் நேரடியாக அவராலும் பார்க்க முடியும்.

 அதேபோல் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு மூலம், தவறான செய்திகளையும் அவரால் பகிரமுடியும். எனவே எந்த ஓடிபி எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள்.

 வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபுள் (enable) செய்துகொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறந்ததும் மேலே உள்ள 3 புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை (menu)க்ளிக் செய்யுங்கள். 

அதில் வரும் செட்டிங்க்ஸ் (Settings) ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், அதில் டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன்-ஐ கிளிக் (click) செய்து எனேபுள் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு 6 இலக்க ரகசிய (PIN) எண்ணை அமைக்க வேண்டும். 

இதை எனேபுள் செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழையவேண்டும் என்றால், இந்த பின் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை ஓரளவேனும் பாதுகாக்கலாம்.

ஊரடங்கை மீறி உற்சாக குளியல்: வெளிநாட்டினர் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கை மீறி உற்சாக குளியல்: வெளிநாட்டினர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: ஊரடங்கை மீறிய கடற்கரையில் குளித்த 17 வெளிநாட்டினர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோவளம் கடற்கரையில், கடலில் குளித்ததாக 17 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரளா வந்தபோது, ஊரடங்கினால் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், ஊரடங்கினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஏப்.,14ம் தேதி, கோவளம் கடற்கரையில் 17 வெளிநாட்டினர் குளித்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் மீது கேரள தொற்றுநோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், அவர்கள் தங்கியிருந்த ஐந்து ஓட்டல்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கொரோனாவால் உயிரிழந்தவர்களை, குணமடைந்தவர்கள் கணக்கில் சேர்க்கிறது தென் அமெரிக்க கண்ட நாடான சிலி. அதற்கு காரணமும் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை, குணமடைந்தவர்கள் கணக்கில் சேர்க்கிறது தென் அமெரிக்க கண்ட நாடான சிலி. அதற்கு காரணமும் சொல்லப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸின் தாக்கம் சர்வதேச அளவில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் தீவிரத்தில் உள்ளது. 

தற்போது வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 29 ஆயிரத்தை எட்டியுள்ளது.

 எனினும், ஆறுதல் தரும் செய்தியாக சுமார் 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் வேகம் பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 129 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா பரவலின் மையமாக உள்ள நியூயார்க்கில் உயிரிழப்பு 11 ஆயிரத்தை எட்டியுள்ளது.

பாதிப்பு பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

ஸ்பெயினில் திங்கட்கிழமை உயிரிழந்தோர் எண்ணிக்கை 567 ஆக இருந்த நிலையில், இது செவ்வாய்க்கிழமை 517 ஆக சரிந்துள்ளது. 

இத்தாலியிலும் உயிரிழப்பு விகிதம் குறைந்து வருகிறது என்ற போதும், உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேரும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைக்க, ஒரு நாடு மட்டும், இறந்தவர்களையும் குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைக்கிறது.

தென் அமெரிக்க கண்ட நாடான சிலியில் தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. 

அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ம் மானலிச் இது தொடர்பாக கூறுகையில், “கொரோனா பாதித்து இறந்தவர்கள் மூலம் வேறு யாருக்கும் தொற்று அடுத்ததாக பரவாது. 

அவர்களின் நோய்த்தொற்று அவர்களோடு முடிந்துவிடுகிறது. அவர்களிடம் இருந்து நோய்த்தொற்று விலகியுள்ளது.

 இதனால் அவர்கள் குணமடைந்தவர்கள் பட்டியலில் வருவார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைப்படியே இப்படி கணக்கு எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்

. சிலியில் சுமார் 8200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மெட்ரோ நகரங்கள்...

 இந்தியாவில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மெட்ரோ நகரங்கள்...


⭕ இந்தியாவின் மும்பை,டெல்லி,சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

⭕ சுமார் 400 மாவட்டங்கள் எந்த பாதிப்பும் இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

⭕ கொரோனா பரவிய சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட பின் அது எப்படி பச்சை மண்டலத்திற்கு மாறுகிறது என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

⭕ கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத பகுதிகள் தாம் பச்சை மண்டலங்களாக உள்ளன.

⭕ இந்தியாவில் மொத்தம் உள்ள 718 மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்கள் என்றும் மேலும் 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

⭕ இப்பகுதிகளில் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

⭕ இப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன.

⭕ சிவப்பு பகுதி அல்லது ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்ட பகுதிகளில் நோய் வேகமாகப் பரவுவதால் அங்கு ஊரடங்கு மிகக்கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

⭕ 28 நாட்களாக பாதிப்பு அற்ற பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படுகின்றன..

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திருநங்கைகள் தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திருநங்கைகள் தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.
 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வருகிற  மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்து உள்ளது. 

இதன் காரணமாக அத்தியாவசிய தேவை தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இருப்பினும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது இன்றும் தொடர்கிறது.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 15-ஆம் தேதி மாலை வரை 2, 158 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

13,268 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்  மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடை மற்றும் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதனை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் காவல் துறையினருடன் என்சிசி, என்எஸ்எஸ்  மற்றும் தனியார் பாதுகாவலர்களையும் போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் பாகூர் கிராமத்தில்  இப்பணிக்காக திருநங்கைகளும் காவல் நிலையத்தில் விண்ணப்பம்  பதிவு செய்தனர்.

அவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் போலீசார் களமிறக்கியுள்ளனர். 

பாகூர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். 

மேலும்  சுற்றித்திரியும் நபர்களை எச்சரித்தும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது முகக்கவசம் அணியும் படியும் அறிவுறுத்துகின்றனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது,"கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாகூர் காவல் நிலையத்தில் தன்னார்வலர் பணியில் சேர அணுகினோம். அதற்கு போலீசார் அனுமதித்தனர்.

 இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு வெளியே வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

 அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்று போலீசாருடன் இணைந்து  பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்" என்றனர்.

ஏர்பேக் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள் மூலம் பாதுகாப்பு உடைகளை தயாரிக்கிறது ஃபோர்டு நிறுவனம்...

 ஏர்பேக் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள் மூலம் பாதுகாப்பு உடைகளை தயாரிக்கிறது ஃபோர்டு நிறுவனம்...


⭕ கார்களில் உள்ள ஏர்பேக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கவச உடையை ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.

⭕ உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை பல்வேறு தரப்பினரும் தயாரித்து வருகின்றனர்.


⭕ இதில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது.

⭕ குறிப்பாக கார்களில் விபத்தின் போது தப்புவிக்கப் பயன்படும் ஏர்பேக் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களில் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன.

⭕ எளிதில் கிழியாத இந்த வகை உடைகளை சுத்தப்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

⭕ இதற்காக ஏர்பேக் செய்யும் ஜாய்சன் நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது...

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் குழுவில் 6 இந்தியர்கள்

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் குழுவில் 6 இந்தியர்கள்


கொரோனாவால் சரிந்துள்ள அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள தொழில் குழுவில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவால் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது அமெரிக்கா. 

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட தொழில் குழுக்களை அதிபர் டிரம்ப் உருவாக்கியுள்ளார்.

இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை அதிபருக்கு வழங்குவார்கள்.

 இந்த தொழில் குழுக்களில் கூகுள் நிறுவன சி.இ.ஓவான சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெல்லா உள்ளிட்ட 6 இந்திவர்கள் பங்கேற்றுள்ளனர். 


சமையல் காஸ் தேவை 40 சதவீதம் அதிகரிப்பு

சமையல் காஸ் தேவை 40 சதவீதம் அதிகரிப்பு


புதுடெல்லி:  நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து கடந்த 14ம் தேதி வரை அமலில் இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து முடங்கியதால் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை 70 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், சமையல் காஸ் தேவை கிடு கிடுவென அதிகரித்துள்ளது.  

இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும், சமையல் காஸ் தேவை, முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் சப்ளை செய்வதற்காக, இந்த மாத துவக்கத்தில் மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்கள் 7,37,000 டன் சமையல் எரிவாயு வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளன. 

இதனால், சமையல் எரிவாயுவுக்கான விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.

 வீடுகளில் சமையல் அதிகரித்துள்ளதால் பயன்பாடு உயர்ந்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள் பலர் சமையல் காஸ் பயன்படுத்துவதை விட்டு விட்டனர்.

 ஆனால், தற்போது அவர்களுக்கு இலவச சமையல் காஸ் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் தேவை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு

144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு


ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனங்கள் மட்டுமே வழங்க உத்தரவு


நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்கு உள்ளாக இந்த வாகனங்கள் உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவு


ஒரே நாளில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு


ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.56 லட்சம் வாகனங்கள் பறிமுதல்


சரியான சமூக இடைவெளியை கடைபிடித்து வாகனங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்



#TNlockdown | #COVID19

Monday, 13 April 2020

புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்

*புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இதனை  பொதுமக்களுக்கு அதிக அளவில் விளம்பரப்படுத்திட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு  அவர் வலியுறுத்தி உள்ளார்.*

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, காய்கறி உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்கள் மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் தெரிவித்து பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.  

*ஜனப்பிரியா சூப்பர் மார்கெட் -*
04322 233244, 
75988 83299, 
78450 05050, 
95780 99990 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  

*ஜனப்பிரியா பார்மஸி -* 
04322 233277,
95667 03040 என்ற எண்களில்  புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 2 வரையிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 
அதேபோன்று  
*சதர்ன் மளிகை மண்டி -* 
04322 221429, 
8012434567 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 2 வரையிலும், 

*புதுமை சூப்பர் மார்கெட் -* 
04322 233522, 
04322 233533, 
98424 95459, 
70105 74337, 
96553 35113 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 10 முதல் மாலை 4 வரையிலும்,  

*அன்பு மருந்தகம் -* 
9360604747 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*ஜிஆர் பார்முலேசன் -* பெரியார்நகர் 
98650 66762 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  24 மணி நேரமும் மருந்து பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.. 
பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு மளிகை, மருந்து பொருட்களை உரிய விலையை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 
அறந்தாங்கி நகராட்சியில்   *எஸ்எம்என்எஸ் சூப்பர் மார்கெட் -* 
89736 09270, 
73733 72341, 
97861 69699 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  

*வாகை சூப்பர் மார்கெட் -* 
97887 70181, 
75023 79901 அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  

*மாருதி சூப்பர் மார்கெட் -* 
73730 63010, 
73730 63013, 
98650 47710 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*இறைவன் மளிகை -* 
89400 75406, 
97862 01680, 
90037 29054 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  

*ராயல் சூப்பர் மார்கெட் -* 
97151 55571, 
96267 05353, 
04371 222555 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  
*கிவானி ஸ்டோர் -* 
97504 84552 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 
*பிஎல்ஆர் மளிகை -* 
99431 98361 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*சையது மளிகை -* 
87600 99721 என்ற  எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*ஏஆர்எம் மளிகை -*  
84897 13876 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*விகேஆர்  மளிகை -* 
90951 80056 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*பாலு மளிகை -* 
96260 18767 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*அழகு காய்கறிகடை -*  
97519 56316 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

*சுந்தர்ராஜ் காய்கறிகடை -* 
98659 65840 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மதியம் 2 வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
கூடுதலான விலைக்கு பொருட்களை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை உணர்ந்து அனைவரும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

*இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்...*

Sunday, 12 April 2020

தமிழகத்தில் கொரோவானால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரவிவரமிவரம்


தமிழகத்தில் கொரோவானால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரவிவரமிவரம்

*🔵🔴சிவப்பு, 🟠ஆரஞ்சு, 🟡மஞ்சள் என பாதிப்புகளுக்கு ஏற்றவாறு பிரித்து வெளியிடப்பட்டுள்ளது.🔵*
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
🔴சிவப்பு நிற பகுதி:-

சென்னை - 182

கோவை - 97

திண்டுக்கல் - 55

திருநெல்வேலி - 56

ஈரோடு - 60

நாமக்கல் - 41

ராணிப்பேட்டை - 36

தேனி - 40

கரூர் - 23

செங்கல்பட்டு - 41

மதுரை - 25

திருச்சி - 39

விழுப்புரம் - 23

திருவள்ளூர் - 29

தூத்துக்குடி - 24

நாகப்பட்டினம் - 24

 திருப்பூர் 26


ஆரஞ்சு நிற பகுதிகள்:-

விருதுநகர் - 11

திருப்பத்தூர் - 16

திருவாரூர் - 13

சேலம் - 14

கடலூர் - 15

திருவண்ணாமலை - 11

கன்னியாகுமரி - 15🟡

வேலூர்  - 11

தஞ்சாவூர் - 11


மஞ்சள் நிற பகுதிகள்:-
சிவகங்கை - 06

காஞ்சிபுரம் - 6

நீலகிரி - 9

ராமநாதபுரம் - 2

கள்ளக்குறிச்சி - 3

பெரம்பலூர் - 1

அரியலூர் - 01

தென்காசி - 03

 *🔵🔵புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தற்போது புதிய மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை.🔵🔵*

தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை

'தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை':

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை.

நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்புப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்புப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.*_



இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கிருமிநாசினி தெளிப்பு பாதைகள் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்க வாய்ப்புள்ளதோடு, நோய்த்தொற்றை தடுக்கும் கைகளை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை திசை திருப்பக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், வேதிப்பொருட்களின் கலவையை மக்கள் மீது தெளிப்பது என்பது ஆபத்தானதோடு மட்டுமின்றி பயனற்றது எனவும் தெரிவித்துள்ளார். 

எனவே, கிருமிநாசினி தெளிப்பு பாதைகளை அமைக்க வேண்டாம், அதை பயன்படுத்தவும் வேண்டாம் என தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார்.


Saturday, 11 April 2020

கோடைகால வானிலை அறிக்கை

*கோடைகால வானிலை அறிக்கை:*

*சித்திரையில் புயல் உருவாகும்!*

தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் வெப்பநிலை அதிகரித்தது உள்மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 40°செல்சியஸை தாண்டியது. அதேபோல் பல மாவட்டங்களில் ஏப்ரல் 5 முதல் 10 வரை பரவலாக மழை பெய்தது.

அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலன மழை குறைந்து காணப்படும்.

*சித்திரையில் மழை வாய்ப்பு!*

இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த இரு வாரங்களுக்கு இயல்பைவிட சற்று குறைந்தே காணப்படும். 

உள் மாவட்டங்களில் வெப்பநிலை 37°செல்சியஸ் முதல் 39°செல்சியஸ் வரையிலும், ஒரிரு இடங்களில் 40°/41° செல்சியஸ் வரை பதிவாகும்.

ஏப்ரல் நான்காவது வாரம் முதல் தமிழகத்தின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15/20ம் தேதி வரை தமிழகத்தில் அவ்வப்போது கோடைகால மழை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக மேற்குதொடர்ச்சிஒட்டிய மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் இவ்வருடம் சித்திரை முதல் வைகாசி மாத முதல் பத்து தினங்களுக்குள் மழை வாய்ப்பு உள்ளது.

இந்திய பெருங்கடலின் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், மழை வாய்ப்புக்கான அலைவு இம்மாத இறுதி அல்லது மே முதல் வாரத்தில் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வர வாய்ப்பு. 

கடல் சார்ந்த அலைவும், கடல் வெப்பமும் சாதகமாக அமையும் காரணத்தால் தென்மேற்கு வங்ககடலில் ஏப்ரல் இறுதி முதல் மே இரண்டாவது வாரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.

பொதுவாக கோடைகால புயல்கள் தமிழகம் நோக்கி நகர்வது அரிது என்றாலும் இவ்வருடம் உருவாகும் உருவாகும் தாழ்வு பகுதி தமிழக கடற்கரை அருகே வந்து பரவலாக நல்ல கனமழை தர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் கடலோர மாவட்டமும் பெரிதாக பயன்பெறும்.

சித்திரையில் காற்று சுழற்சி ஏற்பட்டு வெப்பசலன மழையை பரப்பளவையும், அளவையும் அதிகரிக்கும்.

இந்த கோடைக்கால புயல் ஏற்பட்டு ஒரிரு நாட்கள் மழையை தந்து தமிழகத்திற்கு வடக்கே சென்ற பிறகு அல்லது வலுவிழந்த பிறகு கோடை வெப்பம் உச்சத்தை தொட்டு மாநிலம் முழு வறண்ட வானிலை தொடங்கும்.

நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்