#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 31 December 2018

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுனர்கள் இணைந்து எஸ்.டென், ஹாலில் 2019-புத்தாண்டு  கொண்டாட்டம், மதுரையில் வருங்கின்ற ஐனவரி 5,6 ஆம்  தேதி நடைபெற உள்ள ரோட்டரி மாவட்ட மாநாட்டிற்கு வருகை பதிவு செய்தவர்;களுக்கு டிராவல் பேக் வழங்கும் நிகழ்ச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன் தலைமையேற்று முன்னதாக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். துணை ஆளுனர்கள் வழக்கறிஞர் எஸ்.பி.ராஜா, கி.அருண்குமார், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள், ரோட்டரி மாவட்ட 3000தின் ஆளுனர் ஆர்;.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாண்டு கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புதுக்கோட்டை வருவாய் மாவட்ட தலைவர் செயலாளர்களுக்கு டிராவல் பேக்குகளையும். புத்தாண்டு பரிசுகளையும் வழங்கி பேசும் போது ரோட்டரியில் புதுக்கோட்டை மாவட்டம் சேவை சிறப்பாக செய்து வருவது மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்றும் அனைவரும் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிறைவாக துணை ஆளுனர் கி.சுந்தரவேல் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கி.பிரசாத், பிரகாஷ் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.















Sunday, 30 December 2018

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலை பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லுரியில் 28.12.2018ந் தேதி புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பழகுநர் உரிமம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி செயலாளர் திரு.சண்முகம் தலைமையேற்றார். கல்லுரி முதல்வர் திரு.குமார் வரவேற்புறை நிகழ்த்தினார். புதுக்கோட்டை சுழற் சங்க செயலாளர் திரு. மோகன்ராஜ் சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். திரு.செந்தாமரை சாலை பாதுகாப்பின் அவசியம் ஓட்டுனர் உரிமத்தின் முக்கியதுவம் மற்றும் வாகனங்களுக்கு காப்பீடு செய்வதன்; முக்கியதுவம் குறித்து சிறைப்புறையாற்றினார். இம்முகாமில் கல்லுரி மாணவர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் என 20 பேருக்கு பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Thursday, 27 December 2018

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

*பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக*

இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...

*1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

*2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்

*3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்

*4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*

1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்

*5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*

1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்

*6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்

*7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*

1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு

*8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி

*9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*

1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி

*10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*

1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்

*11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*

1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்

*12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*

1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்

*13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை

*14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

*15. சேலம் பாராளுமன்ற தொகுதி*

1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி

*16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு

*17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*

1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்

*18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*

1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)

*19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி

*20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*

1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்

*21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*

1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்

*22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்

*23. கரூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை

*24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை

*25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*

1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)

*26. கடலூர் பாராளுமன்ற தொகுதி*

1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி

*27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)

*28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.*

1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்

*29. நாகபட்டினம் (தனி) பா

ராளுமன்ற தொகுதி*

1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்

*30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*

1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி

*31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*

1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)

*32. மதுரை பாராளுமன்ற தொகுதி*

1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு

*33. தேனி பாராளுமன்ற தொகுதி*

1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்

*34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*

1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை

*35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*

1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

*36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*

1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி

*37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி

*38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*

1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்

*39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*

1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்

5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரடி சலுகை

5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரடி சலுகை

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள, டீ கடை ஒன்றில், டீ பிரியர்களுக்காக, 5 ரூபாய்க்கு, டீ விற்பனை செய்யப்படுகிறது. மார்கழி குளிருக்கு இதமாக, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.சர்க்கரை, டீ துாள், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால், காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைகளில், மூன்று மாதங்களுக்கு முன், 8 ரூபாய்க்கு விற்ற டீ, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில், பிற இடங்களில் உள்ள கடைகளைவிட பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும்.இந்நிலையில், காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீ கடையில், 10 ரூபாய்க்கு விற்ற டீ, 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, டீ கடை உரிமையாளர், எஸ்.பிஜுகுமார் கூறியதாவது:கடந்த, 14 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருகிறேன். மார்கழி பனியில் பஸ் நிலையம் வருவோருக்கு, டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பலருக்கு, 10 ரூபாய் கொடுத்து டீ குடிக்க முடியாத நிலை உள்ளது.இதனால், 10 ரூபாய்க்கு விற்ற டீயை, மார்கழி மாத குளிர் சலுகையாக, அதே தரத்துடன், ஐந்து ரூபாய்க்கு விற்கிறேன்.வாடிக்கையாளர்களிடம் நல்ல ஆதரவு உள்ளதால், மார்கழி முடிந்தும், இதே விலைக்கு விற்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு....

அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு....

டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் ஒன்றே இன்று அனுப்பியது. அதில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். 

தடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டிக் கவர் வாங்க தேவஸ்தானம் உத்தரவிட்டது ஏன்?

👉👉தடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டிக் கவர் வாங்க தேவஸ்தானம் உத்தரவிட்டது ஏன்?

திருமலை:  திருப்பதி மாநகராட்சியில் கடந்த அக்டோபர் 2ம்தேதி காந்திஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திலும் நவம்பர் 1ம்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு  தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், திருமலையில் உள்ள அனைத்து கடைகளும், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேவஸ்தானம் அறிவித்திருந்த அதே நவம்பர் மாதத்தில் 6 மாதத்திற்கு லட்டு வழங்க தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 பிளாஸ்டிக் கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் குழு தலைவர்  சுதாகர்யாதவ் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ஆண்டுகளில் 11 கோடியே 78 லட்சம் பிளாஸ்டிக் கவர்களை தேவஸ்தானம் பக்தர்களுக்கு லட்டு விற்பனை மூலமாக வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

 இதனை பல மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக அட்டைப்பெட்டியில் லட்டு பிரசாதத்தை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. அதற்காக ஒரு லட்சம் அட்டை பெட்டிகள் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது 6மாதங்களுக்கு தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் உத்தரவு பிறப்பித்தது ஏன் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, 20 December 2018

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்.

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்.

1) காலை rush hour, Office Work..            *அஷ்ட லஷ்மி*

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*

4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*

6.) உபயோகப்படுத்திய  ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....

😂😂😂😂😂

Tuesday, 18 December 2018

ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு

ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2017-18 மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு 2017-18 ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர்  ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 15-12-2018 சனிக்கிழமை மாலை திருச்சி மொரேய்ஸ் சிட்டி ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், 2017-18 மாவட்டச் செயலாளருமான இராஜா ஏற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் தலைமையேற்றுப் பேசிய கோபாலகிருஷ்ணன் அவர்கள்சென்ற ஆண்டு மாவட்டம் செய்த சாதனைகளை விளக்கினார். 2017-18 ஆண்டு முழுக்க ஒத்துழைத்த மாவட்டப் பொறுப்பாளர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். 2017-18ம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 3000 செய்த சேவைகள் பின்வருமாறு:
 ரோட்டரி மாவட்டம் முழுக்க உள்ள சங்கங்கள் மூலமாக 9 கோடி ரூபாய்க்கு மேலாக சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 நவரத்னா திட்டம் மூலம் 9 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பின்வரும் சேவைத் திட்டங்கள் சங்கங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1. ஜீலை 1 - இரத்ததான முகாம்.
2. ஆகஸ்ட் 12, 2017 – 5000 மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல், போதைப்பொருள் ஆபத்து பற்றி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வுப் பேரணி.
3. அக்டோபர் 14 - வாழ்க்கைத் துணையைப் போற்றும் நிகழ்ச்சி.
4. நவம்பர் 11 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான கல்விச் சாதனங்கள் வழங்குதல்.
5. டிசம்பர் 9 - ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி வழங்குதல்.
6. பிப்ரவரி 10 - மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
7. மார்ச் 10 - பள்ளிக் குழந்தைகளின் பாடம் சாராத தனித்திறன் கண்டறிதல்.
8. ஏப்ரல் 7 - பசியால் வாடுவோர்க்கு உணவு வழங்குதல்.
9. மே 12 - சூரிய மின்ஒளி சாதனங்கள் சமூகப் பயன்பாட்டிற்கு வழங்குதல்.
 ஜெம்ஸ் பள்ளித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள், கை சுத்தம் செய்யும் வசதிகள், ஆழ்கிணறுகள், மேஜைகள், இருக்கைகள், மின்னியல் கல்விச் சாதனங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி உபகரணங்கள் மொத்தம் 3.4 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.
 எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 5000 ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மேம்பாட்டுப் பயிற்சியும், 3000 பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.
 இளைஞர் தலைமைத் திறன் வளர்க்கும் நோக்கத்துடன் ஒருநாள் தலைமைப் பண்புப் பயிற்சி 60 சங்கங்கள் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச செவிலியர் தகுதிக்கான ஓராண்டுப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி, நிழற்படக் கலைப் பயிற்சி, வாகனம் ஓட்டும் பயிற்சி, ஆபரணக் கைவினைப் பயிற்சி 19 ஊர்களில் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு சுழற்சி முறையில் இலவச தையல் பயிற்சி மையங்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு மேலும் வழிவகுக்கும் சான்றிதழ் பயிற்சி ரூ. 60 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 மேலும் ரோட்டரி அறக்கட்டளையின் நிதி உதவியோடு 11 கோடிக்கும் மேலாக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 ரோட்டரி அறக்கட்டளைக்கு 12 லட்சத்து, 72 ஆயிரத்து 5 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
 ரோட்டரி மாவட்டம் 3000 வரலாற்றில் இதுவே அதிகமான நன்கொடையாகும். 2017-18ம் ஆண்டு இந்திய ரோட்டரி மாவட்டங்கள் வழங்கிய நன்கொடைகளுள் ரோட்டரி மாவட்டம் 3000 இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உலக அளவில் 14வது இடம் பெற்றுள்ளது.
 தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் செலவிடும் நிதியினைப் பெற்று அதற்குச் சமமான ரோட்டரி அறக்கட்டளை நிதியினையும் பெற்று 7.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது.
 ஆறு இடங்களில் குறைந்த கட்டண இரத்தம் சுத்தம் செய்யும் மையங்கள் முழு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
 ஒரு கோடி ரூபாய் செலவில் நடமாடும் புற்றுநோய் கண்டறியும் மருத்துவச் செயலகம் துவங்கப்படவுள்ளது.
 40 இலட்சம் ரூபாய் செலவில் நடமாடும் இரத்தம் சேகரிக்கும் வங்கி.
 40 இலட்சம் ரூபாய் செலவில் இரத்த வங்கி அமைக்கப்படவுள்ளது.
 40 இலட்சம் ரூபாய் செலவில் நுண்கடன் திட்டம் துவங்கப்படவுள்ளது.
 60 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று நடமாடும் மருத்துவ மனைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
 45 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு ரோட்டரி கோபாலகிருஷ்ணன் அவர்களை ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பாராட்டி பேசினார்கள். நிறைவாக 2017-18 ரோட்டரி ஆண்டின் மாவட்டச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

உண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்

உண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்
திருவண்ணாமலை விவேகனந்தா மருத்துவமணை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகர்  உண்டு உறைவிடபள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது  திருவண்ணாமலை மேஜர் டாக்டர் சவுத்திரி மாவட்ட திட்ட அதிகாரி எஸ். ஆனந்தராஜ் மருத்துவ குழுவினர் இணைந்து மாணவர்களை பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை  வழங்கப்பட்டது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கதலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணிகுள்ளா, நோட்டு, பென்சில், ரப்பர், சோப்பு, பேஸ்ட்டு, ப்ரஸ், பிஸ்கட், வழங்கிதந்தார் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ. சாமிநாதன், வி.ஆh.எம். தங்கராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் ரோட்ராக்ட் சங்கதலைவர் அருண்சூர்யா, விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்

2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:

👇👇👇👇👇👇👇👇

*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*

*2. பொங்கல் -* *15.01.2019- செவ்வாய்*

*3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்*

*4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்*

*5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி*

*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*

*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*

*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு*

*9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்*

*10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி*

*11. மே தினம் - 01.05.2019 - புதன்*

*12. ரம்ஜான் - 05.06.2019- புதன்*

*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*

*14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்*

*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*

*16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்*

*17.மொகரம் 10.09.2019- செவ்வாய்*

*18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்*

*19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்*

*20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்*

*21. தீபாவளி- 27.10.2019- ஞாயிறு*

*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*

*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*

Sunday, 16 December 2018

உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா

உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா
    திருவரங்குளம் ஒன்றியம் சத்தியமூர்த்தி நகர் உண்டுஉறைவிட பள்ளி மாணவியர் பயன்பெரும் விதமாக புத்தாடை வழங்கும் நிகழ்வு சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் தலைமையில் மாணவியர் அனைவருக்கும் புதிய புத்தாடைகளை வழங்கினார். மேலும் கூடுதலாக சோலார் விளக்குகளையும் பள்ளிக்கு வழங்கி தந்தார். வந்த வாசி இந்தியன் மருத்துவர்கள் சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி நகர மாவட்டம் 3231 லயன் கிளப் மாவட்டம் 324எ4 லயன்ஸ் கில்டவுன் மாவட்டம் 324எ4 இணைந்து இந்த உதவிகளை செய்தனர். நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் ச.மத்தியாஸ் மற்றும் பள்ளி ஆசிரியை ஸ்டெல்லா ரோட்ராக்ட் சங்க தலைவர் அருண் சூர்யா உறுப்பினர்கள் விஜயகுமார், செல்வகுமார் கலந்து கொண்டனர்.

மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை

மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை
     வந்தவாசியிலிருந்து அனுப்பபட்ட புத்தாடைகளை  அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கதலைவர் கண.மோகன்ராஜ் தலைமையில் புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமி புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் கே.திருப்பதி செயலாளர் ஆர்.ஜெயகுமார் முன்னால் தலைவர் பி.கருப்பையா புதுக்கோட்டை ரோட்ராக்ட்சங்கதலைவர் அருண் சூர்யா, விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி

வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி
குன்னன்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் பகுதியில் கஜா புயலால் வீட்டின் கூரை அடித்து செல்லப்பட்டது. மாணவர்கள் குழுவினர் சார்பாக வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு ஆசிரியர் மணிவண்னன் தலைமையில் நடைபெற்றது சாலை  விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் கலந்துகொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டின் கூரை இழந்தவர்க்கு தார்பாய் வழங்கி  தந்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி பள்ளி நிர்வாகம் பெரியதம்பி காப்பீட்டு திட்ட ஒருகிணைப்பாளர் சோ.சாமிநாதன் வட்டாரவளர்ச்சி ஆணையர் (ஒய்வு) மணிசேகரன் காப்பீட்டு திண்டுக்கல் ஒருகிணைப்பாளர் விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில் கார்த்திகேயன் கே.என்.செல்வரெத்தினம், சந்திரன்,தன்னார்வலர்கள் சங்கீதா,உஷா,பிரியா ,அரவிந்த், ஸ்ரீராம், பிரவின் ரோட்ராக் சங்கதலைவர் அருண்சூர்யா,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Tuesday, 11 December 2018

கஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்

கஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்
கஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம,; ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ்கிளப்ஸ் மாவட்டம் 324யு4 மற்றும் லயன்ஸ் கில் டவுன் மாவட்டம் 324யு4  இணைந்து புதுக்கோட்டை ரெங்கம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மருத்துவர் பிரபு தலைமையில் டி.குமார் அல்லா பாஸ்கான் தேவதாஸ்,மோகன,; ஆனந்த,; கோபிநாத,; ராஜா, சீனிவாசன், தேவசேனா, குமார் மற்றும் குழுவினர்கள் பொதுமக்களுக்கு ரத்தத்தின் சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின்னுடைய செயலாளர் புதுக்கோட்டை கே.எச்.சலிம் சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிகழ்ச்சியை  ஒருகிணைத்தனர். மருத்துவ முகாமில் ரோட்டரி மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் துணை ஆளுநர் ஆர். ஆரோக்கியசாமி முன்னால் மண்டல ஒருகிணைப்பாளர் கே.அப்துல்கபார்கான் புதுக்கோட்டை ரோட்ராக்ட் சங்க தலைவர் அருண்சூர்யா,பொருளாளர் விஜயகுமார் மற்றும் உறுப்பினர்கள் செல்வ கணபதி, செல்வமணி,பாரதி,ராம்குமார்,தமிழ்முகிலன், அமல் ஆகியோர் கலந்துகொண்டு சேவைசெய்தனர். முகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம்  நகரம்  3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 புதுக்கோட்டை மணிகண்டன் வேளாங்கன்னி ஈஸ்வர் குழுவினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை  மாணவர்கள் இணைந்து கறம்பகுடி ஒன்றியம் முத்தாணிப்பட்டியில் பொது மக்களுக்கு கொசுவலை,சோலார் விளக்கு, போர்வை, உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், சேலை, துண்டு, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சேமியா, நோட்டுபுத்தகம்,  தார்ப்பாலின் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத்துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள்  கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் புதுக்கோட்டை எஸ்.மணிகண்டன் கந்தர்வகோட்டை ஆ.மணிகண்டன் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி ஆணையர் (ஓய்வு) மணிசேகர் எம்.அரவிந்த் ஆகியோர் இணைந்து வீட்டுக்கு வீடு சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினார்கள் இந்தப்பகுக்கு இதுவரை நிவாரணப்பொருட்கள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

         கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம்  நகரம்  3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 மற்றும் ஜ.என்.டி.யு.சி பெல் இணைந்து; முத்துப்பேட்டை ஒன்றியம் இடையூர் கிராம  பொது மக்களுக்கு பெட்சீட்  ,சோலார் விளக்கு, நைட்டி, சோப்பு,உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், கொசுவர்த்தி,மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, நோட்டுபுத்தகம், தார்ப்பாலின் குழந்தைகளுக்கு புதிய துணிகள் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத்துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள்  கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட துணை காவல் கண்கானிப்பாளர் தலைமையில் நிவாரணப்பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் ஜானகி ராமன் டேவியஸ் முத்துக்குமார் கலந்துகொண்டனர் சுமார் 200 பேருக்கு நிவாரணப்பொருட்கள்  வழங்கப்பட்டது.
     




Friday, 7 December 2018

கஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்

கஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்
                      புதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி  மருத்துவமனை ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டதின்கீழ் கீரமங்கலம் பேருராட்சி மேடையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி  மருத்துவமனை குழு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம,; ரத்ததின் சர்க்;கரைஅளவு கண்டறியப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் சாலை விபத்து மற்றும் தடுப்பு மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ.சுவாமிநாதன,; துணை ஆளுநர் எஸ்.பி.ராஜா, முன்னால்தலைவர் ஜெரால்டு ஞானபிரகாசம,;   அருண்,, வியாகுலராபர்ட், சூசை, ஒருகிணைப்பாளர் முபாரக,; தொடர்பு அலுவலர் சுதாகா,; குலமங்களம் தெற்கு ரஞ்சித்குமார் கலந்துகொண்டனர்.
முகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

கஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்

கஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்
      புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை கஜாபுயல் நிவாரண மருத்துவ
முகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவரங்குளம்  ஊராட்சி ஒன்றியம் குளமங்களம் தெற்கு ஊராட்சி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.  புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவ குழுவினர்கள் செல்வராஜ் ஜெயசீலன் தலைமையில் பொதுமக்களுக்கும் 100நாள்வேலைதிட்ட பணியாளர்களுக்கும் ரத்த அழுத்தம,; ரத்ததின் சர்க்;கரைஅளவு கண்டறியப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் சாலை விபத்து மற்றும் தடுப்பு மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ.சுவாமிநாதன,; ஒருகிணைப்பாளர் முபாரக்,தொடர்பு அலுவலர் சுதாகா,; குலமங்களம் தெற்கு ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.