Sunday, 30 April 2017

படித்ததில் பிடித்தது 30.04.2017

கடவுள் ஒருநாள்..,,
ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை Opan பண்ணுனார்...

அதற்க்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்.....

அதில் முதலில்,
வானத்தையும், பூமியையும் Add பண்ணுனார்,

அடுத்து... சூரியன், கடல், மழை, ஆறு, குளம், மரங்கள், விலங்குகள், பறவைகள், ஊரும் பிராணிகள் என வரிசையாக Add பண்ணி மகிழ்ந்தார்...

இறுதியாக,
மனிதனை Add பண்ணுனார்.
மனிதனை Add பண்ணிய கடவுள், மிகவும் மனமகிழ்ந்து, " இனி இந்த Group-கு நான் தேவை இல்லை, மனிதனே இந்த Group-ஐ நல்ல படியாக நடத்தி செல்வான்" என்று எண்ணி, மனிதனை Group Admin ஆக்கி விட்டு, அவர் Left ஆகி சென்று விட்டார்..!!!

கொஞ்ச நாட்க்கள் நன்றாக செயல்பட்ட மனிதன்,
காலப்போக்கில் தன் சுய நலத்திற்க்காகவும், சுய இலாபத்திற்க்காகவும், மரங்கள், குளம், ஆறு போன்றவற்றை Remove பண்ணி விட்டு, அதற்க்கு பதிலாக, Shoping Mall, Apartment, Factory's போன்றவற்றை Add பண்ணினான்.

இதனால் கோபம் கொண்ட மழை, "என் நண்பர்கள்" இல்லாத இந்த Group-ல் நானும் இருக்க மாட்டேன் என்று, கோபத்துடன் Left ஆகி சென்றது..!!!

ஆனால் சூரியன் Left ஆகாமல்,
Group-ல் இருந்த படியே, தன் கோபத்தை மனிதன் மீது காட்டிக் கொண்டிருக்கிறது..!!..??

Friday, 28 April 2017

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
🤔🤔🤔
*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*
☺😟😏
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
😔😒😞
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*
😪😥😰
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
😣😖🙁
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
😠😡☹️
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
🙂😊🤗
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*
☺☺☺
*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*
😨😱😀
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*
🤗🤗🤗🤗🤗🤗

Thursday, 27 April 2017

பெற்றோர்கள் கவனத்திற்கு: இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது

# பெற்றோர்கள் கவனத்திற்கு:
இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்.
(01) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள். வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள். A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
(02) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
(03) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
(04) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
(05) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள். இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். (என் பெற்றோர்கள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்.)
(06) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று.
(07) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
(08) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள். அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
(09) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள். அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
(10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள். அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
# இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள். இதுவே இப்பதிவின் வெற்றி

Wednesday, 26 April 2017

தினம் ஒரு தமிழ் வார்த்தை

இன்றைய தின தமிழ் வார்த்தை✍

தினம் ஒரு தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்வோம். அவ்வகையில் இன்றைய வார்த்தையும் அதன் அர்த்தமும்👇 
🔰அதிட்டித்தல் 
அர்த்தம் 1⃣ - நிலைப்படுத்தல்  
அர்த்தம் 2⃣ - விதித்தல்

Monday, 24 April 2017

அதற்க்கு அவர் சொன்ன பதில் ?

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் .......
ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..
அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .
இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..
அடக்க முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,
என்னை மன்னிக்கவும் ...
உங்களை disturb
செய்வதற்கு ...
ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை ..
எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...
இது யாருடைய
இறுதி ஊர்வலம் ......
முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது....
என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??
என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...
இரண்டாவது சவப்பெட்டி ??
என்னுடைய மாமியாருடையது !!
அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ...
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்
"இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா "
(அதற்க்கு அவர் சொன்ன பதில்)
.
.
.
.
.
.
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !

Sunday, 23 April 2017

பில் கேட்ஸின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை


*உலகின் முன்னணி கோடிஸ்வரரான பில் கேட்ஸின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை*

உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருக்கும் பில்கேட்ஸ் தனது பிள்ளைகள் 14 வயதை அடையும் வரை தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பில்கேட்ஸ் தனது பிள்ளைகளை 14 வயதின் பின்னர் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் தொலைப்பேசிகளுடன் பிள்ளைகள் செலவிட நேரம் தொடர்பில் எல்லை ஒன்றை விதிக்கவுள்ளார்.
பிரித்தானிய பத்திரிகை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரவு உணவு மேசையில் தொலைபேசியை பயன்படுத்துவதற்கும் பில்கேட்ஸினால் தடை செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ்சிற்கு 20, 17 மற்றும் 14 வயதுடைய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
நடுத்தர குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் கூட தங்கள் பெற்றவர்களின் பேச்சைக்கேட்காமல் சிறுவயதிலேயே மணிக்கணக்கில் ஸ்மார்ட் போன்களுடன் செலவிட்டு வருகிற இந்த காலகட்டத்தில் இந்த செய்தி அனைவரையுமே வியப்பில் ஆழ்த்துகிறது.
பிரித்தானியாவின் மிரர் பத்திரிகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பில் கேட்ஸ் எளிமையாக பங்கேற்றிருந்தார். இதன்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் 10 டொலர் பெறுமதியிலான கெசிகோ கடிகாரம் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.🍁🍁

Thursday, 20 April 2017

கட்டுமானப் பொருள்கள் சென்னை விலை விவரம்

கட்டுமானப் பொருள்கள் சென்னை விலை விவரம்

மணல், சிமென்ட், ஜல்லி, செங்கல், இரும்புக் கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம்.. .

கட்டுமானப் பொருள்   விலை

சிமென்ட்

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.390

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.410

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.42,400

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.40,900

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.44,400 

செங்கல்–மணல்

செங்கல் (3000 எண்ணிக்கை*)    ரூ.17,000

ஆற்று மணல் (ஒரு கன அடி)  ரூ.50 முதல் ரூ.55 வரை

ஜல்லிக்கல் (ஒரு கன அடி)

12 மி.மீ.     ரூ. 28

20 மி.மீ.    ரூ. 35

40 மி.மீ.    ரூ. 30

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூ.36,557

கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூ.37,518

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூ.550 முதல் 650 வரை   

சித்தாள் ஆண்    ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண்    ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர்    ரூ.500 முதல் 550 வரை

கார்பெண்டர்    ரூ.550 முதல் 650 வரை

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 22–4–2015 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.42,800–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.42,400 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.41,300 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.40,900 ஆக விற்பனையாகிறது.

பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 98417 43850
www.buildersline.in

EACH GIVES WHAT HE HAS

*முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.*

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் !)

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :

*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"*
*(“EACH GIVES WHAT HE HAS")*

எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

*உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?*
*அன்பா - பகையா ?*
*அமைதியா - வன்முறையா ?*
*வாழ்வா - சாவா ?*
*உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?*
*இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?*

*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"*

துருக்கி நாட்டுக் கதை

*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .*

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம். வெற்றி நமதே.

Wednesday, 19 April 2017

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள

*🅾✳பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.*🛑

ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது குறித்து குடும்ப அட்டை தாரர்கள் தங்கள் செல்பேசிக்கு வரும் பாஸ்வேர்டு நம்பர் குறுந்தகவலை தெரியாமல் அழித்து விட்டால் கவலை படவேண்டாம்.

1967 என்ற நம்பருக்கு போன் செய்து தங்கள் குடும்ப அட்டை பழைய எண் மற்றும் ரேஷன் கடையில் பதிவு செய்த செல்நம்பரையும் சொன்னால் தங்களது பாஸ்வேர்டு நம்பரை தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் தகவல்.

Tuesday, 18 April 2017

ராக்கெட் விண்ணில் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்... மிஸ் பண்ணிடாதீங்க!

🙋‍♂🙋🏻
1⃣8⃣🎋0⃣4⃣🎋1⃣7⃣
*ராக்கெட் விண்ணில் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்... மிஸ் பண்ணிடாதீங்க!"*
                ☀☀

ராக்கெட் விண்ணில் பாய்வதையும், செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுவதை 3டி வடிவிலும் நேரலையில் நாம் பலமுறை பார்த்திருப்போம். அதன்பின், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கியும், கட்டியணைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் கூட பார்த்திருப்போம். இதுவரை ராக்கெட் விண்ணில் பாய்வதை தொலைவில் இருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டதை தான் பார்த்திருப்போம். ஆனால் லாஞ்ச் பேடில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை இன்று நேரலையில் பார்க்க முடியும். அதுவும் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்க முடியும் என்பதால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

சிக்னஸ் விண்கலம் அட்லஸ் (Atlas V) வகை ராக்கெட் மூலம் அனுப்பப்படுவதை தான் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்கும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சிக்னஸ் விண்கலமானது அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமானது. இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் ஆளில்லா விண்கலம் ஆகும். இந்த ரக விண்கலங்கள் மூலமாக இதுவரை ஏழு முறை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்கள் வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் (Cape Canaveral) ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.31 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
Atlas V ராக்கெட்டில் இருந்து வெறும் 300 அடி தொலைவில், ராக்கெட் லாஞ்ச் பேடில் இதற்காக நான்கு சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் விண்ணில் பாயும்போது அதன் பூஸ்டர் இஞ்சின் உமிழும் வெப்பமானது அதிக அளவில் இருக்கும் என்பதால் அதை அருகில் இருந்து ஒளிப்பதிவு செய்வது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் தற்போது வெடிப்பு தாக்காத, அதிக வெப்ப நிலையைத் தாங்கக்கூடிய சிறப்பு பாக்ஸ்களுக்குள் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த வகை கேமராக்கள் மூலம் 360 டிகிரியிலும் காட்சியை ஒளிப்பதிவு செய்ய முடியும்.

லாஞ்ச் பேட் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் அனுப்புவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்பிலிருந்து நான்கு கோணங்களிலும், 360 டிகிரியில் இருந்தும் நேரலையில் கண்டுகளிக்க முடியும். 360 டிகிரியில் ஒளிப்பதிவு செய்யப்படும் ஒரு வீடியோவை, எந்தத் திசையிலும் விருப்பப்படி நகர்த்தி எந்தவொரு கோணத்திலும் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பு.
நாசா தனது தளத்தில் https://www.nasa.gov/nasalive என்ற முகவரியில் லாஞ்ச் செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்தும், https://www.youtube.com/user/NASAtelevision என்ற யூடியூப் சேனலில் 360 டிகிரி வீடியோவை ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பிலிருந்தும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. எனவே பயனாளர்கள் இதை தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து கூட கண்டுகளிக்க முடியும்.
இதற்கு முன்னதாக Delta IV என்ற ராக்கெட் விண்ணில் பாய்ந்தபோது இதே போன்று 360 டிகிரி வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. எனவே முதல்முறையாக நேரலையாக ராக்கெட் விண்ணில் பாய்வதை மிக அருகில் இருந்து 360 டிகிரி வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும்.

🍁🍁

Monday, 17 April 2017

மாமிசம் மனித உணவா?

மாமிசம் மனித உணவா?

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு.

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
                       காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:-

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
           
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

1.  வாழும் முறை :

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2.  இயல்பு :

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

மன இறுக்கம்:-

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )

உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.    

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.