Wednesday, 29 March 2017

அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது...

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*

*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*

*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*

*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*

*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*

*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*

*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*

*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*

*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*

*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*

*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*

*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*

*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*

*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.*

*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*

*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*

*சரின்னு ஒத்துகிட்டார்.*

*காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*

*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*

*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*

*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*

*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*

*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி நின்று “ இந்தா பார்த்துக்கோ “ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார்.*

*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*
*” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*

*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான்.அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்றாயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினான்.*

*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*

*“ உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*

*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*

*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*

*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*

*இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....*

அவன் அவன்       வேலையை             அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன்           வேலையிலே                 தலையிட க்கூடாது...
😆😆😆😆😆😆😆
இனிய நண்பகல் வணக்கம்.

Tuesday, 28 March 2017

What we can call Hindu GOD names in IT world.

What we can call Hindu GOD names in IT world.

Brahma: “System installer”

Vishnu: “System operator”

Shiva: “System programmer”

Narada: “Data Transmitter”

Yama: “Deleter”

Apsara & Rambha: “Virus”

Ganapati: “Anti virus”

Hanuman: “E-Mail”

Chitragupta: “Hard Disc”

Saraswati: “Google"

Parvati: “Mother Board”

Lakshmi: “ATM” 😊😝😝

Friday, 24 March 2017

<iframe
allowtransparency="true" scrolling="yes" frameborder="0" width="900" height="600"
src="http://dge.tn.nic.in/"
>
TITLE-FOR-THE-FRAME
</iframe>

இரத்தம் தானம்

🚑🚨🍁🍁🍁🚨🚑

*இரத்தம் தானம் செய்ய விரும்புகின்றவர்கள் உங்கள விபரங்களை  இணையதளம் வாயிலாக பதிவு செய்யவும்*

👁👁
*முக்கிய குறிப்பு*

*சும்மா பெயர்க்கு பதிவு செய்துவிட்டு அவசரநேரத்தில் பாதிக்கபட்ட நபரை கஷ்படுத்தாமல் தங்களால் உண்மையாக கொடுக்க முடியும் என்றால் மட்டும் மனசார தங்கள் பெயரை இந்த லீங்கு வழியாக சென்று பதிவு செய்யுங்கள்*.

http://www.kalamnanbargal.com/kalam-nanbargal-blood-donors-registeration.php

*காரணம் !*
இது அரசியல் களம் அல்ல கூட்டம் சேர்க்க !
இது சேவைகான களம் !

மனம் இல்லாமல் பெயர் மட்டும் பதிவு செய்யும் நண்பர்களால் பாதிக்கபடுவது உயிர்க்கு போராடும் நபரும் நமது உறவினர்களும் தான் என்பதை *மனதில் வைத்து கொள்ளவும் .*

மேலே உள்ள பதிவில் நண்பர்கள் மனம் புண்படுவதுபோல் இருந்தால் மன்னிக்கவும் .

சில நண்பர்கள் செய்யும் தவறால் சில நேரங்களில் அவசர சிகிச்சையில் உள்ள நண்பர்கள் நம் கண் முன்னே இறக்க நேரிடும் அவற்றை தவிர்க்கவே இந்த பதிவு  புரிதலுக்கு நன்றி

*பொதுநலம்! தான் எங்கள் சுயநலம் !*

*கலாம் நண்பர்கள் இயக்கம்*
*தமிழ்நாடு*

Thursday, 23 March 2017

பசுமைத் திட்டம் கலாம் நண்பர்கள் இயக்கம்-தமிழ்நாடு

*பசுமைத் திட்டம்*

*கலாம் நண்பர்கள் இயக்கம்*
*தமிழ்நாடு*

*பங்கீட்டாளர்கள் வரவேற்க்கப்படுகின்றார்கள்*

👍🏻 *70 பங்கு ரெடி... இன்னும் 30 பங்கு மட்டுமே*🏃🏼🏃🏼

புதிய உதயமாக விரைவில்
*நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு*🐐🐄🐓

நண்பர்களே... இளைஞர்களே...
தொழில் தொடங்க விருப்பம் உள்ள தோழர்களே...
நமது அமைப்பின் மூலமாக விரைவில் *நாட்டு மாடு ஆடு கோழி வளர்ப்பு பண்ணை* உருவாக்க ஏற்பாடு செய்து வருகின்றோம். முதலீடு அதிகமாக தேவைப்படுவதால் நமது நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

*ஒரு பங்கு பத்திரத்திற்கான தொகை = 10,000ரூ*

*100* பங்குதாரர்களைக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

*விதிமுறைகள்*

1.ஒருவர் பெயரில் பத்து பங்கு பத்திரம் மட்டுமே  பெற்றுக் கொள்ள முடியும்.
2.பங்கீட்டாளர்கள் அனைவரும் பங்கீட்டாளராக மட்டுமே தொடர்ந்து இருப்பர்.
நிர்வாகம் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் கையிலே தொடர்ந்து இருக்கும்.
3.ஆண்டுக்கு ஒரு முறை வரவு செலவு கணக்கு அறிவிக்க ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
4. 12 மாதங்களில் வரும் லாபம் 100 பங்கிட்டாளருக்கும் சரிபங்காக பிரித்துக் கொடுக்கப்படும். மேலும் ஒரு பங்கிற்கான லாபம் நமது அமைப்பு பெயரில் வரவு வைக்கப்படும்.
5. *A2 பால் எளிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கவும் இயற்கை உரம் மூலமாக விவசாய வளர்ச்சிக்காகவும் நாம் இந்த மாற்றுப் பாதையினை தேர்ந்தெடுக்கும் சூழலை புரிந்து கொண்டு முன் வாருங்கள்*
6.ஆடு மாடு மற்றும் கோழியின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பண்ணை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடங்கப்படும்.
------------------------
*பங்கு பத்திரம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள லிங் ஐ அழுத்தி பசுமை திட்டத்திற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள்*
http://www.kalamnanbargal.com/img/pdf/pasumai%20thittam.pdf
மேலும் தொடர்புக்கு👇🏼👇🏼👇🏼
*ராஜா 9176178444*
*கலாம் நண்பர்கள் இயக்கம்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்*
*தமிழ்நாடு*
*கலாம் நண்பர்களின் பசுமைத் திட்டம்*
🐄🐄🐄🐐🐐🐐🐐🐓🐓🐓
*விபரம்*👇🏻
http://www.kalamnanbargal.com/kalam-nanbargal-news.php
*படிவம்*👇🏻
http://www.kalamnanbargal.com/img/pdf/pasumai%20thittam.pdf
*விளக்கும் வீடியோ*👇🏻
https://youtu.be/N91AuBUiMpU

*மேலும் தொடர்புக்கு*👇🏼👇🏼👇🏼
ராஜா 9176178444
கலாம் நண்பர்கள் இயக்கம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

Sunday, 19 March 2017

what is Sunday???

what is Sunday???

6 நாள் வேலை செய்துவிட்டு ஒரே ஒரு நாள் வீட்டில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஆண்.

6 நாள் வீட்டிற்குள்ளேயே வேலை செய்து விட்டு ஒரு நாள் வெளியே செல்ல நினைக்கும் பெண்.

இந்த இருவருக்கும் நடக்கும் சண்டை தான்
இந்த Sunday...!!!

6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்

படித்த போதே கண்கலங்க வைத்த...
6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவச படவைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇👇

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...

முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...

'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....

தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...

தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...

அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.

ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.

ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.

நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.

மனம் சற்று நிம்மதி அடைந்தது.

அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..

அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.

சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...

அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...

இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..

சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....

அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...

பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...

அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....

கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??

காசு வேணுமா?? என்று கேட்டார்.

சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.

காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...

இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.

எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???

என்று கேட்டாள்.

ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?

உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...

இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.

உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...

இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...

சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.

என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..

"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."

தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.

சம்பவம்-5  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

"ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம்-6  👇👇👇👇👇👇👇

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.

அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

Read compulsory life theory