https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM

தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 24 February 2017

வாட்ஸ்-அப்

வாட்ஸ்-அப் செக் பண்ணுங்க... ஸ்டேட்டஸ் பாருங்க!

இன்று முதல் வாட்ஸ்-அப்பில் புதிய 'Status' வசதி அறிமுகமாகிறது. அப்படியே ஸ்நாப்சாட்டைப்போல இருக்கும் இந்த வசதிமூலம் இனி படங்கள், வீடியோ, GIFs என எப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

உங்கள் ஸ்டேட்டஸை யார் பார்த்தார்கள் என்றும் தெரிந்துகொள்ள முடியும். எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கன்ட்ரோலும் செய்ய முடியும். இந்த வசதியைப் பெற, வாட்ஸ்-அப் அப்டேட் செய்யத் தேவையில்லை. ஆனால், மிகப் பழைய வாட்ஸ்-அப் வெர்ஷன் வைத்திருந்தால், அப்டேட் செய்துகொள்ளுங்கள். 

Thursday, 23 February 2017

நில அளவுகள் அறிவோம்

நில அளவுகள் அறிவோம்.
♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

Wednesday, 22 February 2017

புட்டு

எம்ஜிஆர் ஆரம்பகாலத்தில் காலை நடைபயிர்ச்சி செல்லும் வழியில் ஒரு பாட்டி புட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அதைகண்டு எம்ஜிஆர் புட்டு விலைகேட்டுவிட்டு நடக்க பாட்டி ஏன் புட்டு வேண்டாமா எனகேட்க எம்ஜிஆர் வேண்டும் ஆனால் காசு கொண்டுவரவில்லை அதனால் நாளை வாங்கி கொள்கிறேன் என கூற

அதற்க்கு பாட்டி இந்த புட்டு நாளை காசு கொடு எனகூறினார்
அதற்க்கு எம்ஜிஆர் பாட்டிஎன்னை உங்களுக்கு தெரியாது நாளை நான் காசு தராவிட்டால்
அதற்க்கு பாட்டி தரா விட்டால்  ஒருவரின் பசிதீர்த்த புண்ணியகணக்கில் சேர்த்து கொள்வேன் எனகூறிஉள்ளார்

இந்த நிகழ்ச்சி தன்னை மிகவும் சிந்திக்க வைத்தது எனகூறி உள்ளார் எம்ஜிஆர்

யாரையும் குறைவாக எண்ணக்கூடாது

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..

இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு வெட்கி தலை குனிந்தான்..

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு..
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
நல்லதையே நினைப்போம்..
நாளும் நல்லதையே செய்வோம்.

மஹா சிவராத்திரி

ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!
ஓம் சிவ சிவ ஓம்!!!

" சிவராத்திரி " மற்றும் " மஹா சிவராத்திரி " பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம்

மஹா சிவராத்திரி ( 24.02.2017) – COMES IN A YEAR, முக்தி அளிக்கும் சிவராத்திரி

மஹா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால்

மன அமைதி,

முன்னேற்றம்,

தீய சக்திகள் வேரோடு அகலுதல்

போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து

கருட புராணம்,

கந்த புராணம்,

பத்ம புராணம்,

அக்னி புராணம்

உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹா சிவராத்திரி வரலாறு;-

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது ‘சிவராத்திரி‘ என்றே - கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

கடைபிடிக்க வேண்டிய விரத முறை;-

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம், இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய

பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது,

நூறு அசுவமேத யாகம் செய்வது,

பல முறை கங்கா ஸ்நானம் செய்வது

ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

விரதத்தின் அம்சங்கள்;-

மஹா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.

கோயில்களிலும் சிவ பூஜை செய்யலாம்.

ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய சிவாய நம என்ற சொல்லை உச்சரித்துப் பூஜிக்க வேண்டும்.

கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான

பவ,

சர்வ,

ஈசான,

பசுபதி,

உக்ர,

ருத்ர,

பீமா மற்றும்

மகாதேவா என்று கூறிப் பூஜிக்க வேண்டும்.

சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

வில்வ இலைகளைக் கோயில்களுக்கும் வழங்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவ புராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.

தவிர மஹா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்று புராணங்கள் கூறுகின்றன.

வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு ...

ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !!!! ஓம் நமசிவாய !!!! ஓம் நமசிவாய !!!!

​உளவியல் சொல்லும் உண்மைகள்..!!

​உளவியல் சொல்லும் உண்மைகள்..!!!!!​

1. ​அதிகம் சிரிப்பவர்கள்.....​ தனிமையில் வாடுபவர்கள்..

2. ​அதிகம் தூங்குபவர்கள்​, சோகத்தில் இருப்பவர்கள்..

3. ​வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்​,
அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. ​அழுகையை அடக்குபவர்கள்...​ மனதால் பலவீனமானவர்கள்..

5. ​முரட்டுத்தனமாக உண்பவர்கள்​..!!!
மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. ​சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!!​ அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. ​சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்...​ அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

​பேச்சு​ -
உளவியல் ஆலோசனைகள்...!

1. ​மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள்​. 
​அது உங்களை பலவீனமானவராக காட்டும்..​

2. ​மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும்​.
​அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!​
  3   ​மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்​ ..

4. ​நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.​.

5. ​நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.​ . 

6. ​பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்.​.. 
அது ​உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....​

7. ​நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..​ 

8. ​நம்பிக்கையோடு கூடிய புன்னகை​ , ​நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..​

9. ​குழந்தைகளோடு பேசும்போது,​ 
​அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.​ .

10. ​உங்கள் பேச்சை விளக்குவதற்கு​ , ​உங்கள் கைகளையும் பயன்படுத்தவும்​.
​சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.​. ... 

​தாழ்வு​ ​மனப்பான்மையை போக்க சில வழிகள்​...! 

1. ​நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்​.

​நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்​.
​யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....​

  ​நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்​. ​உங்களை நீங்களே ரசியுங்கள்​..

2. ​எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.​  ...

​உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்...​

​இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..​
 
3. ​உங்களால் எது முடியாது...​ ​உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..​, 

அதை ​விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.​. 

4. ​என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்...​

​எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....​
 
5. ​உங்களுக்கு எதுவும் தெரியாது...​. 

​எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்...​

​இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..​ 
 
6. ​கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்....​ 

​உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..​..  
7. ​அழும் போது தனியாக அழுங்கள்​...

​நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!​

​கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...​
 
8. ​உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,.​

​நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....​ 

​அலைபேசி வழியாக என்னிடம் வந்ததை​ 

​அலைபேசி வழியாகவே​

​தங்களிடமும்​...... 
​படர.... விடுகிறேன்​

Friday, 17 February 2017