Monday, 29 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 29.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  29.02.2016

லீப் வருடம்  29.2.2016 நான்கு  ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த  நாள் வரும்

1.முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம்(1896)

2. ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)

3. செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)

4. பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)

5. சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.(1712)

மிகவும்  அரிதான  வரலாறு  குறிப்பு

உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.

தினம் ஒரு திருக்குறள் 29.2.2016

இன்றைய திருக்குறள் 29.02.2016

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

குறள் விளக்கம் :-

1.மு.வ : ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

2. சாலமன் பாப்பையா : ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்

Sunday, 28 February 2016

"பசித்திரு,தனித்திரு,விழித்திரு"

கிருபானந்த வாரியார், ஒரு  முறை  ஏராளமான  மாணவர்கள்  மத்தியில்  சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் . நாளைய  அறிஞர்களும், மேதைகளும்,  அதிகாரிகளும், இது உங்களுக்குள்  தான்  இருக்கிறார்கள்.  நீங்கள்  தான்  நாளைய  உலகில்  பல சாதனைகளைச் செய்யப் போகிறவர்கள்.நீங்கள்  எல்லாரும்  எப்பொழுதும்  கடைபிடிக்க வேண்டியது.
"பசித்திரு,தனித்திரு,விழித்திரு"
பசித்திரு - சுறுசுறுப்பாய் உள்ளவர்களிடையேதான் பசி இருக்கும்

தனித்திரு - இதுதான் கற்றவற்றையெல்லாம் செயல்படுத்தத் தூண்டும்

விழித்திரு - எந்த  ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்கப் பழக வேண்டும்

என்று  கூறி பேச்சை நிறுத்நிறுத்தினார்.
உடனே ஒரு சிறுவன்  இப்படியெல்லாம்  இருந்தால்  என்னங்க கிடைக்கும் ?  என்று  துடுக்குத்தனமாக கேட்டானாம்.  உடனே வாரியார்  "நான்  கூறிய மூன்று  பதத்தில் முதல் எழத்துக்களை இணைந்துப் பார் உனக்கே  புரியும் என்றாராம் நாசூக்காக

அது என்ன  வார்த்தை  என்று  உங்களுக்கு  தெரிந்தால் கருத்து  பெட்டியில்  கூறவும்

பச்சைக் கண்ணாடி

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.
அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.
அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.
தலைவலி குணமாகி விட்டது.
சன்னியாசி கூறியது சரிதான்.
உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!
நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.
அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.
சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.
சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.
பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.
“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.
“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.
“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.
ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது.
உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.
நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.
நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.
அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

தினம் ஒரு திருக்குறள்

இன்றைய திருக்குறள் (28/02/2016)

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

குறள் விளக்கம் :-

1.மு.வ : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

2. சாலமன் பாப்பையா : ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் நேசன்,
தமிழ் சன் ,
கிருஷ்ணன் மனோகரன்

வரலாற்றில் இன்றைய நாள் 28.02.2016

வரலாற்றில் இன்றைய நாள் 28.02.2016

1. இந்திய தேசிய அறிவியல் தினம்

2.இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)

3. எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)

4. வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)

5. முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)

Saturday, 27 February 2016

நம்பிக்கை

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார்
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா?
ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் " என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “ என வினவினார்.
அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் ..நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவராகிய எம்பெருமான் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “
என சொல்லி அழைத்து சென்றார்
"" நம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""....

மனிதன்

சூழ்நிலைக்கு ஏற்ற படி தன்னை மாற்றிக் கொண்டு எளிதான வழி தேடி ஓடுவதில் நீரைப் போலவும்,

நேரத்திற்கு ஏற்ற படி தன்னிடத்தை மாற்றிக் கொள்வதில் கடிகார முள்ளைப் போலவும்,

தான் இருக்கும் இடத்திற்கு ஏற்ற படி வண்ணத்தை மாற்றிக் கொள்வதில் பச்சோந்தியைப் போலவும்

ஒரு மனிதன் இருந்தால் ,
அவனை வெற்றி கொள்வது மிகவும் கடினம்.....!

வரலாற்றில் இன்றைய நாள் 27.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  27.02.2016

1. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

2. பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)

3. ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)

4. டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்

5.நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)

தினம் ஒரு திருக்குறள் 27.02.2016

இன்றைய திருக்குறள் (27/02/2016)

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

குறள் விளக்கம் :-

1.மு.வ : சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

2. சாலமன் பாப்பையா : கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் சன்
கிருஷ்ணன் மனோகரன்

Friday, 26 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 26.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  :26.02.2016

1. டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)

2. குவைத் விடுதலை தினம்(1991)

3. 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)

இன்றைய திருக்குறள் 26.02.2016

இன்றைய திருக்குறள் (26/02/2016)

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

குறள் விளக்கம் :-

1.மு.வ : தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

2. சாலமன் பாப்பையா : ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

"எண்ணம்போல் வாழ்வு"தீதும் நன்றும் பிறர் தர வாரா..,நல்லதே எண்ணுவோம்,நல்லதே நடக்கும்...

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்

அன்பு உலகை ஆளும்.

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது.
"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.
ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி"?

அதற்கு சாவி சொன்னது.

நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.
ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் என்றதாம்.

அன்பு உலகை ஆளும். . .

Thursday, 25 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 25.02.2016

வரலாற்றில் இன்றைய நாள் 25.02.2016

1. மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)

2. தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)

3.குவைத் தேசிய தினம்

4.சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)

தினம் ஒரு திருக்குறள் 25.02.2016

இன்றைய திருக்குறள் (25/02/2016)

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

குறள் விளக்கம் :-

1.மு.வ : தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

2. சாலமன் பாப்பையா : தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

வாழ்க்கை ஒரு மாயை எல்லாம் கடந்து போகும்! எல்லா நிலையும் மாறும்!!,
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. மனிதா சிந்தி ! வியர்வையைக் கொண்டு துயரினை வெல்லு! வேதனை தீர்ந்து விடும் உன் விடியலுக் கென்று குருதியைச் சிந்து !

விரைவினில் தோன்றி விடும் உயர்வதற் கென்று உழைத்திடும் போது உனக்கது வலிக்காது ! இந்த உலகினில் இது தான் தலைவிதி என்னும் கதையொன்றும் பலிக்காது!

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் நேசன்,
தமிழ் சன்
கிருஷ்ணன் மனோகரன்

Wednesday, 24 February 2016

தினம் ஒரு திருக்குறள்

குறள்  அமுதம்: இன்றைய திருக்குறள் (24/02/2016)

குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் விளக்கம் :-

1.மு.வ : காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

2. சாலமன் பாப்பையா : எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.

குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,

தமிழ் நேசன்,
தமிழ் சன் ,
கிருஷ்ணன் மனோகரன்

வரலாற்றில் இன்றைய நாள் 24.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  24.02.2016

1. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா    பிறந்த தினம்(1948)
2. எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)

3. கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)

4. மெக்சிகோ கொடி நாள்

5. நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)

Tuesday, 23 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 23.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  23.02.2016

1.உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)

2. புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

3. ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)

4. ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)

5.கயானா குடியரசு தினம்(1970)

Monday, 22 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 22.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  22.02.2016

1. சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)

2. ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)

3. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)

4. எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)

5. வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)

6. ஹுமாயூன் , முகலாயப் பேரரசன் இறந்த தினம்  (1556)

7. கஸ்தூரிபாய் காந்தி , மகாத்மா காந்தியின்  மனைவி  இறந்த தினம்  (1944)

8. WORLD THINKING  DAY

Sunday, 21 February 2016

போலியோ சொட்டு மருந்து முகாம்

மறந்து விடாதீர்கள் மறந்து இருந்து விடாதீர்கள் இன்று  தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் 21/02/2016 ஞாயிறு  போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

வரலாற்றில் இன்றைய நாளநாள் ர 21.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  21.02.2016

1. உலக தாய்மொழி தினம்

2. நீராவியால் இயங்கும்  முதல்  ரயில்  என்ஜின்  சோதித்து பார்க்கப்பட்டது  (1804)

3. வங்காள மொழி இயக்கம் , கிழக்கு  பாகிஸ்தானில்  ( தற்போதைய வங்கதேசம் ) உருவாக்கப்பட்டது  (1952)

4. இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அன்னை  பிறந்த தினம்  (1878)

5. எம்.ஆர். ராதா, நகைச்சுவை நடிகர்  பிறந்த தினம்  (1907)

6. இந்தியவின்  ஐதராபாத்  நகரில்  நிகழ்ந்த  தொடர் குண்டு வெடிப்பில்  20 க்கு  மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர் (2013)

Saturday, 20 February 2016

எலியும் எலிபெறியும்

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
______________________________
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர், அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்”

ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது, என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.
வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான் ”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது "வெள்ளி" என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது, அவர் ஒரு கையில் தங்க நாணயமும்,
மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு, என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும், சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது.
தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால், அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

‪‎நீதி‬:

வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது, நாம் தான் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

வரலாற்றில் இன்றைய நாள்  20.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  20.02.2016

1. சர்வதேச  சமூகநீதி  தினம்

2. தமிழறிஞர்  கா. நமச்சிவாயம்  பிறந்த  தினம்   (1876)

3. அருணாசலப்  பிரதேசம், அசாமில் இருந்து  பிரிந்து தனி மாநிலமானது  (1987)

4. ஹவாய்  தீவில்  முதல்  சட்டமன்ற  கூட்டம் நடைபெற்றது  ( 1901)

5. ஆறாம்  எட்வேர்ட்  இங்கிலாந்தின்  மன்னனாக  முடி சூடினார் (1547)