Sunday, 31 May 2020

தமிழகம் - கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்

தமிழகம் - கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்

தமிழகத்தில்  இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333ஆக உயர்வு

31-05-2020 கொரோனா விபரம்.

31-05-2020 கொரோனா விபரம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 804பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 22,333ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 163ஆக உயர்ந்து உள்ளது - தமிழக சுகாதார துறை.

ஒரே மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய பாஸ் தேவையில்லை.

மண்டலங்கள் வண்ணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஒரே மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய பாஸ் தேவையில்லை.


Tamil Nadu Zonal Separation Map Details Follows :



தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜுன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு

தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜுன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.  

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

 மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

 வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபடவும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை நீடிக்கும்.

 நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், பிற வெளியூர்களுக்கும் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்படுகிறது.   மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.

 மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை தொடர்ந்து இயங்காது.  திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உயிரியியல் பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடரும்.

 மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு.  என்றாலும், தொற்றின் தன்மைக்கேற்ப கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வு அளிக்கப்படும். இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.  திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

 தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு மண்டலங்களில் பேருந்துகள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, 7 வது மண்டலத்தில் வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் 8 வது மண்டலத்தில் வரும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

 பிற மாவட்டங்கள் அடங்கிய மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.    வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. எனினும், வெளி மாநிலங்களுக்கு சென்றுவரவும், மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும்

 மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

 சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாடு பகுதி தவிர பிற பகுதிகளில் நாளை முதல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களில் , நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது அதிகபட்சம் 40 பேருடன் இயங்க அனுமதி.

 தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.  வணிக வளாகங்கள் தவிர்த்து, நகை கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து ஷோரூம்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

 மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஜூன் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுவதுடன்  தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் சாப்பிட அனுமதி.

 குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக் கூடாது.   தேனீர் கடைகள், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
 வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோக்களில் ஓடுநர் தவிர்த்து 2 பயணிகளும் பயணம் செய்ய அனுமதி.  சைக்கிள் ரிக் ஷாக்களுக்கும் அனுமதி.

 முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.

 சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் ஐ டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

 பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தலா இரண்டாயிரத்து 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

 சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி முகாம்களில் தங்க வைக்கப்படும் ஏழை மக்களுக்கு, அவர்கள் வீடு திரும்பும் போது தலா ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம் வழங்கப்படும்.

 அனைத்து பகுதிகளிலும் நோய் பரவலை தடுக்க ஏதுவாக மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்கள் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடத்தக்கவை.

நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

-போக்குவரத்து துறை விளக்கம்

தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு

மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும்

ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்

மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்


புதிய ஊரடங்கு - முழு விவரம்

ஊரடங்கு - முழு விவரம்

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்.

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி- தமிழக அரசு.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி,

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி.

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்,

ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.

பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை.

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை- தமிழக அரசு.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.

ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.

கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு- தமிழக அரசு.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும் - தமிழக அரசு.

ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.

இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.

Lockdown Extended Till June 30th In Tamil Nadu With Some Relaxations.

50% Government Buses To Operate In TN Except Chennai, Kanchipuram, Thiruvallur, and Chengalpattu!

- TN Government

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:

1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.

2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.

6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

8 ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

ரூ.196 கோடி வருவாய் ஈட்டி போர்ப்ஸ் பட்டியலில்இடம்பிடித்த விராட் கோலி

ரூ.196 கோடி வருவாய் ஈட்டி போர்ப்ஸ் பட்டியலில்
இடம்பிடித்த விராட் கோலி

புதுடெல்லி, மே 30–

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் ரூ.196 கோடி வருவாய் ஈட்டி விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66–-வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 66–-வது இடம் கிடைத்துள்ளது.

2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் பெடரர் முதலிடம் பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரூ. 803 கோடி வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை அடைந்துள்ளார் பெடரர்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ.196 கோடி சம்பாதித்து 66-–வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100–-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை

ஜூலையில் பொதுத்தேர்வு முடிவுகள்

- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை, மே 30–

தமிழகத்தில் 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும். இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று கோபியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று தான் கூறினேன்.

படித்த பள்ளியிலேயே தேர்வு

தற்போது கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவர்கள் எந்தப் பள்ளிகளில் படித்தார்களோ அந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என்றார்.

பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த பின் பாடங்கள் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல்:5 லட்சத்து 53 ஆயிரம் பேர் கைது



சென்னை, மே 29–

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5 லட்சத்து 53 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணியாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 5 லட்சத்து 18 ஆயிரத்து 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 33 ஆயிரத்து 101 வாகனங்கள் போக்குவரத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு 8 கோடியே 84 லட்சத்து 87 ஆயிரத்து 944 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் நேற்று (29–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்ற காலை 6 மணி வரையில் 144 தடை உத்தரவை மீறய குற்றத்திற்காக 501 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 இருசக்கர வாகனங்கள், 57 ஆட்டோக்கள் மற்றும் 5 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 91 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது



சென்னை, மே.30–-

தமிழகத்தில் நேற்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–-

தமிழகத்தில் நேற்று 733 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 141 பேரும் என இதுவரை இல்லாத அளவுக்கு 874 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மராட்டியத்தில் இருந்து வந்த 135 பேரும், கேரளாவில் இருந்து வந்த 3 பேரும், மேற்கு வங்காளம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் 518 ஆண்கள். 356 பெண்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 737 ஆண்களுக்கும், 7 ஆயிரத்து 504 பெண்களுக்கும், 3–-ம் பாலினத்தவர்கள் 5 பேரும் அடங்குவர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 776 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 11 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் 6 ஆயிரத்து 269 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 86 வயது, 85 வயது, 63 வயது, 32 வயது ஆண்களும், 70 வயது, 66 வயது, 58 வயது பெண்களும், செங்கல்பட்டை சேர்ந்த 77 வயது ஆணும், திருவள்ளூரை சேர்ந்த 62 வயது பெண்ணும் அடங்குவர். தமிழகத்தில் இதுவரையில் 154 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 618 பேரும், செங்கல்பட்டில் 61 பேரும், திருவண்ணாமலையில் 48 பேரும், கள்ளக்குறிச்சியில் 19 பேரும், நெல்லையில் 15 பேரும், காஞ்சீபுரத்தில் 12 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், கடலூரில் 5 பேரும், அரியலூரில் 3 பேரும், விருதுநகர், விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வயதுக்கு உட்பட்ட 44 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 முதியவர்களும் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 1,203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,806 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என 71 ஆய்வகங்கள் மூலம் இதுவரை 4 லட்சத்து 66,550 பரிசோதனைகள் நடை பெற்றுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 11,334 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13,362 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை



நியூயார்க், மே 30–

அமெரிக்காவில் சில சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டை தற்போது மொத்தமாக புதிய மோசமான நிலையை அடைந்துள்ளது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று டிரம்ப் கூறி உள்ளார்.

உலக சுகாதார மையத்துடன் உறவை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதோடு சீனாவிற்கு எதிராகவும் அதிபர் டிரம்ப் இன்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதிபர் டிரம்ப் தனது பேச்சில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து சீனா மறைத்து விட்டது.

அமெரிக்காவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் சீனாவிடமும் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் குறித்து கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு சந்தையில் இருக்கும் சீனா நிறுவனங்களை கண்காணித்து வருகிறோம். அந்த நிறுவனங்கள் அமெரிக்க விதிக்கு எதிராக செயல்பட்டால் அந்த நிறுவனம் மீது தடை விதைக்கப்படும்.

அந்த நிறுவனங்களை மொத்தமாக கண்காணிக்க முடிவு செய்து இருக்கிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது அமெரிக்க சீனா மீது தொடுத்து இருக்கும் அறிவுபூர்வமான வர்த்தக யுத்தம் என்று கூறுகிறார்கள்.

இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற.....!!!



இரசாயனங்கள் என்றும் உங்களுக்கு நிரந்திரமான தீர்வை தரவல்லது அல்ல. தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற லாப நோக்குடன் தான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் இதில் சிலவன பக்கவிளைவுகள் தரக்கூடியதும் கூட. எனவே, இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும்.

கேரட் மற்றும் பால்

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

கேரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.

பால் மற்றும் கடற்சங்கு

கடற்சங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது பூசி வந்தால் இரண்டே நாட்களில் பருக்கள் குறையும்.

பப்பாளிப்பழம்

பப்பாளிப் பழத்தை நன்கு பிசைந்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.

அழிவின் விளிம்பில் தேனீக்கள்!!



‘உலகில் வாழும் உயிரினங்களில் மிக முக்கியமானது தேனீ...’’ என்று அடித்துச் சொல்கிறது ‘எர்த்வாட்ச் இன்ஸ்டிடியூட்’டின் ஆய்வு.

இதை விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். தேனீ கடித்தால் நமக்கு வலிக்கும்.ஆனால், அந்த தேனீக்கள் காணாமல் போய்விட்டால் அது கடித்து ஏற்படும் வலியைவிட பெரிய சோகம் நமக்கு நிகழும். ஆம்; 90 சதவீத தேனீக்கள் அழிந்துவிட்டன. மீதமிருக்கும் தேனீக்களையாவது காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

‘‘ஒருவேளை தேனீக்கள் அழிந்துவிட்டால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழாது...’’ என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இப்போது பலரும் பரிசீலித்து வருகின்றனர்.

 உலகளவில் நடக்கும் விவசாயத்தில் 70 சதவீதம் தேனீக்களைச் சார்ந்தே இருக்கிறது.தேனீக்களால் நிகழும் மகரந்தச் சேர்க்கையால் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. தவிர, தேன் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வழிகளில் மனிதனுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி நிறைய காரணங்களை அடுக்கி உலகின் முக்கிய உயிரினமாக தேனீயை முன்மொழிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

ஆஸ்திரேலியா உயிரியல் பூங்காவில் சிங்கம்தாக்கியதில் பெண் பராமரிப்பாளர் படுகாயம்


கான்பெர்ரா, மே.30–-

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஷோல்ஹெவன் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 35 வயதான ஜெனிபர் பிரவுன் என்ற பெண் ஒருவர் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் அங்கு ஒரு இடத்தை சுத்தம்செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை 2 சிங்கங்கள் ஓடி வந்து தாக்கியதால் அவர் அலறித் துடித்தவாறு ஓட்டம் எடுத்தார்.

படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிட்னி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவுவோம், மற்ற பணியாளர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்த பெண் பராமரிப்பாளர் பற்றி நியு சவுத்வேல்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பே ஸ்டாக்மேன் கூறும்போது, “அந்தப் பெண் மீது நடந்துள்ள தாக்குதல் கொடூரமானது. இந்த தாக்குதலுக்கு பிறகு சம்மந்தப்பட்ட விலங்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது” என குறிப்பிட்டார். சம்பவம் நடந்த உயிரியல் பூங்கா மார்ச் 25–-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த நமா ( Namah) என்பவர், இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில் அவர், நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில வார்த்தை எனவும், இது காலனியாதிக்கத்தை நினைவுபடுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.

ஆதலால் காலனியாதிக்க நினைவிலிருந்து மக்களை வெளிவருவதை உறுதி செய்ய அந்த பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்ற வேண்டும், இதற்காக  அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வர  மத்திய அரசுக்கு உத்தரவிட  கோரியுள்ளார். இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வரும் ஜூன் மாதம் 2ம் தேதி விசாரணை நடத்த வழக்கை பட்டியலிட்டுள்ளது.

11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு ட்ராய் பரிந்துரை



புதுடெல்லி, மே 30–

11 இலக்கத்தில் மொபைல் எண் ஒதுக்கீடு செய்ய தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவுக்கு தொடர்பு எண்களை ஒதுக்கீடு செய்ய ட்ராய் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

ட்ராய் அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் பிக்சட் கனெக்‌ஷன்கள் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய கனெக்‌ஷன்களுக்கு தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்’’ என்று ட்ராய் கூறியுள்ளது.

இந்த கொள்கைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி எண்கள் வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியானால் கூட, மீதம் 700 கோடி எண்கள் இருக்கும் என்று ட்ராய் கூறியுள்ளது. மேலும், டாங்கிள்களுக்கு வழங்கப்படும் 10 இலக்க எண்களை 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? கட்டுப்பாடுகள் தளர்வு பற்றி பிரதமர் மோடியுடன்அமித் ஷா ஆலோசனை





புதுடெல்லி, மே.30-–

4–-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் குறித்து தேவைக்கேற்ப மாநிலங்களே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25–-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

4–-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆகவும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4,706 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து உள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநில முதல் அமைச்சர்களை தொலைபேசியில் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு விவாகாரத்தில் அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார். எந்தெந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பது பற்றிய அவர்களுடைய யோசனைகளையும் கேட்டார்.

அப்போது, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழிவகுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான முதல்அமைச்சர்கள் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தான் மாநில முதல்- அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷாவும் அவருடன் இருந்துள்ளார். இந்த தடவை முதன் முதலாக அமித்ஷா தொலைபேசி மூலம் முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அமித்ஷாவுடன் பேசிய பின் கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது மாநில முதல்- அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

எனவே நாட்டில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்றும், மற்ற பகுதிகளில் தளர்வுகள் குறித்து தேவைக்கேற்ப மாநிலங்களே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது.

இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஜூன் 1-–ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை விதிப்பது, தளர்த்துவதில் மத்திய அரசின் பங்கு அதிகம் இருக்காது என்றும், உள்ளூர் சூழ்நிலையை பொறுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே இந்த விஷயத்தில் முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், கட்டுப்பாடுகள், தளர்வுகள் பற்றி மாநிலங்கள்தான் தீர்மானிக்கவேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களை திறக்கவும் இருந்து வரும் தடையை மத்திய அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.

பள்ளிகளை திறப்பது, மெட்ரோ ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கே வழங்கப்படும் என்று தெரிகிறது.

சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டல்கள் செயல்பட அனுமதி வழங்கப்படலாம்.

சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது. திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள், உடற்பயிற்சிக்கூடம், மதுபான கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும்உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்



வாஷிங்டன், மே 30–

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபோலிஸ் பகுதியில், மோசடி வழக்கில் சந்தேகத்தின் பேரில் கருப்பு இனத்தவர் ஒருவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அந்த நபரை போலீசார் ஒருவர் காலால் அழுத்தி பிடித்து கைகளில் விலங்கு மாட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவியான பட்டதாரி ஒருவரை கருப்பினத்தவர் என்ற காரணத்தால் மோசடி வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயன்றது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை ‘குண்டர்கள்’ என்று விமர்சித்தார். மேலும் போராட்டத்தைக் காரணம் காட்டி பொதுமக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானால், துப்பாக்கிச் சூடு தொடங்கப்படும். தேசிய பாதுகாப்புப் படையும் அனுப்பப்படும் என்றும் ட்விட்டரில் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிபரின் கருத்து வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக்கூறி ட்விட்டர் நிர்வாகம், அவரது கருத்தை பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, உண்மையை கூறும் குரல்களை சமூக வலைதளங்கள் சில அடக்கி வைக்கின்றன. இதனை சரி செய்யா விட்டால் அவற்றை முழுவதுமாக மூட நேரிடும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அதன்படி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சமூக வலைதளங்களின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் நேற்று அதி பர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பும், சட்டரீதியான பிரச்சினைகளும் ஏற்படும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, 30 May 2020

7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.! UNLOCK 1.0

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.!

May 30, 2020

நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்று வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8-ல் முதல் கட்ட தளர்வுகள் வழிபாடு தலங்கள், விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால் ஆகியவை திறக்க அனுமதி.

2ம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.

பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

கொரோனா தாக்கத்தை பொறுத்தே சர்வதேச விமானநிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும்.

3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு.

மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்துக்கு, சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை - இ - பாஸ் தேவையில்லை.

இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்

இன்று (30.05.2020) தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 938 ஆக உள்ளது.

இன்று (30.05.2020) தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 938 ஆக உள்ளது.

அதிகபட்சமாக இன்று மட்டும் சென்னையில் 616 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜீன் 30ந்தேதி வரை பொது முடக்கம் நீடிப்பு.

ஜீன் 30ந்தேதி வரை பொது முடக்கம் நீடிப்பு.

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து விட்டு, தளர்வுகளுடன் ஜீன் -30ந்தேதி வரை பொது முடக்கம் - மத்தியரசு அறிவிப்பு.

முடி திருத்துமிடங்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது

முடி திருத்துமிடங்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது

வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.

வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.

அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி - கல்லூரிகளைத் திறக்கலாம் - ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.

முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.

கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.

தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.

தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி.

இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.

நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.

2 மாதங்களுக்கு பின்னர் தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர்

  •  வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர்



  • பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது - வேளாண்துறை செயலாளர்



  • இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது - வேளாண்துறை செயலாளர்  

  • கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் - வேளாண்துறை செயலாளர்



  • தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன - வேளாண்துறை செயலாளர்



  • தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம் - வேளாண் துறை செயலாளர்



  • மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் - வேளாண் துறை செயலாளர்



  • வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - வேளாண் துறை செயலாளர்



  • வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன - வேளாண் துறை செயலாளர்

தமிழகத்தில் 01.06.2020 திங்கட்கிழமை முதல் ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே



தமிழகத்தில் வரும் ஜூன் 01ம் தேதியில் இருந்து குறிப்பிட்ட பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி வரும் 01.06.2020 திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் நான்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1. 02083/02084 கோயம்புத்தூர்- மயிலாடுதுறை– கோயம்புத்தூர் ஜனசதாப்தி சிறப்பு ரயில் (செவ்வாய்க்கிழமை தவிர)

2. 02636/02635 மதுரை- விழுப்புரம்- மதுரை Intercity அதிவேக சிறப்பு ரயில் (தினசரி)

3. 02627/02628 திருச்சிராப்பள்ளி- நாகர்கோவில்– திருச்சிராப்பள்ளி அதிவேக சிறப்பு ரயில் (தினசரி)

4. 02680/02679 கோயம்புத்தூர்- காட்பாடி- கோயம்புத்தூர் Intercity அதிவேக சிறப்பு ரயில்  (தினசரி)




கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் உள்ள வெட்டுகிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எருக்கன் செடிகளில் மட்டும் இருக்க கூடிய இந்த வெட்டு கிளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (30.05.2020) வேளாண்மை துறை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

திருச்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராதது ஏன்?.. ஐகோர்ட் கிளை கேள்வி



திருச்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராதது ஏன்? என உயர்நீதிமன்றம் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க தடை கோரிய வழக்கில், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர்  பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது

வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது; மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தின் மூலமாகவே முக்கிய விவரங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது

வெரிஃபிகேஷன் கோட் கொண்டு வேறொரு புதிய சாதனத்தில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டினை ஆக்டிவேட் செய்ய முடியும். வாட்ஸ்அப் ப்ரோஃபைல் படம் இருப்பதால், விவரம் அறியாத பலர் இந்த மோசடியில் ஏமாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது

வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களுக்கு செயலி மூலம் குறுந்தகவல் அனுப்பாது; ஒருவேளை அனுப்பும் பட்சத்தில் பச்சை நிற வெரிஃபைடு சின்னம் தெரியும்; மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒருபோதும் பயனர் விவரங்களை வழங்க கோரி அதன் பயனர்களிடம் கேட்காது

பொன்மகள் வந்தாள்-விமர்சனம்


பொன்மகள் வந்தாள்-விமர்சனம் :- 


2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா. 

சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார்? அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். 

தனக்கே உரிய நக்கல் நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது. 

பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக். 

மற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார். 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் 'பொன்மகள் வந்தாள்' ஏஞ்சல்.

Friday, 29 May 2020

பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி வையாபுரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பொன்னமராவதி மே-29 

பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி  வையாபுரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சியில் உள்ள வையாபுரியில்  பொது இடங்கள், கோவில் பகுதிகள், கண்மாய் பகுதி குடிநீர் ஊரணி கரைப்பகுதிகளில் சுமார் 100 மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்கவுன்சிலர் பாண்டியன், அரசமலை ஊராட்சி துணைத்தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஊராட்சி பகுதிகளில் நட்டு வைத்தனர். மேலும் இதில் வையாபுரி கிராம ஊர் முக்கியஸ்தர்கள்,  இளைஞர்கள், பொதுமக்கள்  என ஏராளமானோர் கலந்துகொண்டு கொண்டனர்.  முடிவில் ஊராட்சி செயலர் ரவி நன்றி கூறினார். 


படங்கள் மற்றும் செய்திகள் கீரவாணி அழகு இளையராஜா  நிருபர் பொன்னமராவதி.

#தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை

தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை 

வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.
20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயினரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.
பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு,பருத்திநூல்,சென்னா இலைகள்,பனைபொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1மில்லியன் சரக்குகளை கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குபாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெட்ப நிலையை கொண்ட பகுதியாகும். சிறய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரை பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சி திட்ட துறை தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்புற வளாச்சி திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

சுற்றுலா தலங்கள்

தூத்துக்குடி
திருச்செந்தூர்
மணப்பாடு
கழுகுமலை
ஒட்டப்பிடாரம்
எட்டயபுரம்
பாஞ்சாலங்குறிச்சி
கயத்தாறு
நவதிருப்பதிகள்.

வழிபாட்டிடங்கள்

திருச்செந்தூர் முருகன் கோவில்
மணப்பாடு புனித சிலுவை ஆலயம்
கழுகுமலை முருகன் கோவில்
நவதிருப்பதிகள்
திருவைகுண்டம்
பெருங்குளம்
வரகுணமங்கை
திருப்புளியங்குடி
தொலைவில்லி
மங்களம்
தென் திருப்பேரை
திருக்கழுவூர்,
ஆழ்வார் திருநகர்

தூத்துக்குடி

இந்தியாவின் தொழில்முக வாயிலாக மும்பை இருப்பது போல தமிழகத்தின் வாயிலாக இன்று தூத்துக்குடி சர்ச் திகழ்கிறது. முத்து அதிகம் குளிப்பதால் 'முத்து நகர்' எனப்படுகிறது. போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் இருந்த காரணத்தால் இங்குள்ள கிருத்தூவர்களின் பெயர்கள் மச்சாடோ, பெர்ணாண்டோ, கர்டோசா, மஸ்கரனேஸ், மெரேரா, மேத்தா, கோமஸ் போன்ற போர்த்துகீசிய நாமங்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். டச்சுக்காரர்கள் இருந்ததற்கடையாளமாக கடற்கரை சாலைக்கு நேராக பல டச்சுக் காரர்களின் சமாதிகள் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில கல்வி, மருத்துவம் வணிகம் முதலியவை வளர்ந்தன. நகரம் கீழூர், மேலூர் என இரண்டு பகுதிகளையும் பலநகர்களையும் கொண்டது. கீழூரில் துறைமுகமும் அதைச் சார்ந்த பகுதிகளையும் கொண்டது. மேலூர் சிவன் கோயில், பெருமாள் கோயில், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், வணிகத் தலங்களையும் கொண்டது. உப்பு காய்ச்சுதல், மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகிய தொழில்கள் இங்கு சிறந்துள்ளன. பருத்தி அரைக்கும் ஆலை, நெல் அரைக்கும் ஆலைகள், மரம் அறுக்கும் தொழிற்சாலைகள், பருப்பு உடைக்கும் ஆலைகள், பழைய சாக்குகளை பேலாக்கும் இயந்திர ஆலைகள் இவ்வூரில் மிகுந்துள்ளன.
தூத்துக்குடி துறைமுகம்
இது ஒரு இயற்கைத் துறைமுகம். மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ளது. இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் வாயிலாக விளங்குகிறது. 1963-ஆம் ஆண்டு 5 கோடி ரூபாய் அனுமதியோடு ஆழ்கடல் துறைமுக அமைப்பு தொடர்ந்தது. கடல் அரிப்பை தடுக்க வடபுறச்சுவர் 4103 மீ நீளம் கொண்டது. இது உலகத்திலேயே அதிக நீளமான அலைத் தடுப்புச் சுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1974-ஆம் ஆண்டு ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் 84 வரை 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்றே நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்க 5கி.மீ. தொலைவிற்கு தானியங்கியும் 1983-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 700 லி பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்ய 'மெரைன் அன்லோடிங் ஆர்மஸ்' என்ற சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது. துறைமுகத்தின் வருமானம் இன்று 30 கோடிக்கு மேல் வளர்ந்துள்ளது.
முத்துக்குளித்தல்
1955-இலிருந்து தூத்துக்குடியில் முத்துக் குளிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. 2000 பேருக்கு மேல் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் முதல் மே மாதம் வரை முத்துக் குளிப்பில் ஈடுபடுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வித சொறி ஏற்படுகிறது. இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் தரத்துடன், நல்ல எடையை கொண்டதாகும். இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

சங்கு எடுத்தல்

முத்துக் குளிப்பு நடைபெறாத மாதங்களில் சங்கெடுப்பில் ஈடுபடுகின்றனர் 100 அடி ஆழம் சென்று சங்கு எடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில் சங்கு எடுப்பவர்களும், சங்கு படிந்து கிடக்கும் இடங்களைக் காட்டுபவர்களும் பணியாற்று கின்றனர். உயர்தரச் சங்கை 'ஜாதிச்சங்கு' என்பர். இது பெரியளவில் கிடைக்கிறது. வலம்புரிச்சங்கு எப்போதாவது கிடைக்கும். இடிந்தகரை, உவரி, புன்னைக் காயல் முதலிய இடங்களில் சங்கு எடுக்கப்படுகிறது.
ஸ்பிக் உரத் தொழிற்சாலை
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலை 1975-ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இன்று யூரியா உற்பத்தியில் 100 வீதத்தை அடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரத்தின் அளவு இந்திய அளவில் 25% ஆகும்.

கோவில்பட்டி

மக்கள் கோவில் கட்டி குடியேறியதால் இப்பெயர் பெற்றது. விருதுநகர்-மணியாச்சி இரயில் பாதையில் அமைந்துள்ள முக்கிய நகரம். இவ்வூரில் இரண்டு பெரிய நூற்பாலைகளும், பருத்தி அறைக்கும் தொழிற்சாலையும் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உள்ளன. இங்குள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை விவசாய வளர்ச்சிக்குப் பணியாற்றுகின்றது. உருட்டுக் கம்பி முதலிய எஃகுப் பொருள்கள் செய்யும் நிறுவனமும் உள்ளது. திங்கள் சந்தை கூடுகிறது. கருவாட்டு வியாபாரத்தில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கண்டிப் பருத்தி கோவை, மதுரை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. விளையாட்டுத் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. சிறப்பாகச் சிலம்பத்திற்கு பெயர் பெற்றது.

எட்டையபுரம்

எட்டப்பன் என்ற பாளையக்காரரின் பெயரால் அமைந்தவூர். இவனும், இவன் பின் தோன்றல்களுமே வெள்ளையர்களை ஆதரித்து, கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவர்கள். இதற்கு பரிசாக இவர்களுக்கு 114 சிற்றுர்கள் கிடைத்தன. எட்டையபுரத்தில் உள்ள 18-ம் நூற்றாண்டு ஜமீன் அரண்மனைக் காணத்தகுந்தது. பாரதியார் வீடு, பாரதி மண்டபம், பாரதியார் கையெழுத்துச் சுவடி, நூலகம், அரண்மனை ஆகியவை இங்கு பார்க்கத் தக்கவை. ஆயுத பூசையன்று பாஞ்சாலங்குறிச்சி போரில் பயன்படுத்தப்பட்டப் போர்க் கருவிகளைப் பொதுமக்கள் பார்க்கலாம். கூட்டுறவுத் துறை, தனியார் துறைகளால் நடைபெறும் பருத்தி அறைக்கும் ஆலைகள் உள்ளன. இவ்வூரின் கைத்தறிச் சேலைகள் பல மாநிலங்களால் பெரிதும் வாங்கப்படுகின்றன. சனிக்கிழமைச் சந்தைநாள். இவ்வூர் ஆட்டுச் சந்தை புகழ் பெற்றது.

ஆற்றூர்

தாமிரபரணியாறு இவ்வூருக்கருகில் கடலுடன் கலக்கிறது. தை, ஆடி அமாவாசைகளில் மக்கள் இங்கு நீராடுவார்கள். தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையர் இவ்வூர்காரர். அவர் அளித்த கொடை விபரங்கள் இங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு நெல், வாழை, கொடிக்கால் மிகுதி.

ஆலந்தலை

மீன்பிடி தொழிலால் சிறந்து விளங்குகிறது. அனைவரும் கிருத்தவ மதத்தினர். இது ஒரு காலத்தில் டச்சுக்காரர்களுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருந்த ஊராகும்.

ஆறுமுக நேரி

இவ்வூருக்குத் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலேயே அதிக உப்பு விளையும் இடங்களில் இதுவும் ஒன்று. உப்பள ஊழியர் கூட்டுறவுச் சங்கம், சிறப்பாக இயங்கி வருகின்ற காரணத்தால், உப்பு வணிகமும் செழிப்பாக நடைபெறுகிறது; பெருமளவு கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் ஏற்றுமதியாகிறது.

ஆழ்வார் திருநகரி

ஸ்ரீவைகுண்டம் - நாசரேத் இரண்டிற்கும் நடுவே அமைந்துள்ள இரயில் நிலையம். இது புகழ்பெற்ற வைணவத்தலம். இவ்வூர் சிறந்த வியாபாரத் தலமாகவும் விளங்குகிறது.

ஆதிச்ச நல்லூர்

பாளையங்கோட்டை - ஸ்ரீவைகுண்டம் சாலையில் இவ்வூர் உள்ளது. 1876-இல் தொல் பொருள் துறையினரால் பெரிய தாழிகள் போர்க்கருவிகள், பாத்திரங்கள், பெட்டிகள், நகைகள், எலும்புக் கூடுகள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய நாகரிக வளர்ச்சியை அறிந்து கொள்ள ஆதிச்ச நல்லூர் அரியதோர் இடமாக விளங்குகிறது. மொகஞ்சதாரோ - ஆதிச்ச நல்லூர் கால முதுமக்கள் தாழிகளை ஒப்பிடும் போது ஆதிச்ச நல்லூர் கால நாகரிகமே முற்பட்டது என்று அறிவித்துள்ளனர். தொல்பொருள் விருப்பம் உள்ள சுற்றுலாவினர் காணத்தக்க ஊர்.

ஈரால்

எட்டையபுரத்திற்கு தெற்கில் உள்ள ஊர். பருத்தி, கம்பு, மிளகாய் சிறப்புப்பயிர்கள். பருத்தியும், மிளகாயும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பருத்தி அறைக்கும் ஆலைகள் மிகுதி. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் சமாதி இவ்வூரில் உள்ளது.

ஈராச்சி

இவ்வூர் கைத்தறிக்கு புகழ்பெற்றது. சுற்றுவட்டாரங்களில் கூடும் சந்தைகளில் இவ்வூர் துணிகள் வாங்கப்படுகின்றன.

ஏரல்

இது ஒரு நகரப் பஞ்சாயத்து. தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் வாணிகச் சிறப்பு பெற்றது. கதர் உற்பத்திக்கும், வெண்கலப் பாத்திர தொழிலுக்கும் பெயர் பெற்ற இடம்.

உடன் குடி

உடன்குடி நகர பஞ்சாயத்து. ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம். திங்கட் கிழமை சந்தை கூடுகிறது. பனைமரப் பொருட்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள் அதிகம். பனைவெல்லம் காய்ச்சுதல் இவ்வூரின் சிறப்புத்தொழில். பனைவெல்ல ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. பாய்முடைதல், வெங்காயக்கூடு முதலியவை முக்கியத் தொழில்கள். முஸ்லீம் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காயல்பட்டினம்

பாண்டியரின் துறைமுகமாக விளங்கியது. மார்க்கோபோலோ இவ்வூரின் சிறப்பை புகழ்ந்து எழுதியுள்ளார். கால்டுவெல் இப்பகுதிகளைப் பற்றி விரிவாக ஆய்ந்து நூலெழுதியுள்ளார். இங்கு கிடைத்த காசுகள், சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1937 வரை துறைமுகமாக செயல்பட்டு வந்தது. சீதக்காதி வாழ்ந்தவூர் என்று சொல்லப்படுகிறது. இந்நகரத்தினர் பலர் கொழும்பில் காசுக்கடை வைத்துள்ளனர். நகை வியாபாரமும் தோல் வியாபாரமும் இங்கு பலராலும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்குள்ள மசூதி அழகான முறையில் இந்தியக்கட்டடக்கலை மரபுடன் அமைந்துள்ளது.

குலசேகரப்பட்டினம்

திருச்செந்தூருக்கு 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆப்ரிக்காவில் மட்டுமே விளையும் பப்பரப்புளிய மரம் இங்கு காணப்படுவதால் ஆப்ரிக்காவுடன் வணிக உறவு இருந்ததை அறிய முடிகிறது. இராசேந்திர சோழன் கட்டிய கோவில் உள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் இங்கு சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. குலசேகரப் பாண்டியரிடம் இருந்த முஸ்லீம் வீரர்கள் வாழ்ந்த இடங்கள் மேல இராவுத்தர்மா பாளையம், கீழ ராவுத்தர்மா பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பெரிய உப்பளங்கள் உள்ளன. முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள் வெங்காயக்கூடு, கோரைப்பாய் முதலியனவாகும். இங்கு கீரை, கத்தரிக்காய் இரண்டும் அதிகம். கூட்டுறவு தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. எல்லை நாயக்கன் பட்டி
ஆடுவளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆடும்-ஆட்டுத் தோலும் இங்கு முக்கிய வணிகப் பொருள்கள்.

கலியாவூர்

பாய் முடைதலும், நெசவும் கூட்டுறவு முறையில் சிறப்பாக நடைபெறுகிறது.
கருங்குளம்
பெருமாள் கோவிலால் இவ்வூர் சிறப்பு பெறுகிறது. இங்கு ஆனைக் கொம்பன் நன்கு விளைகிறது.

காந்தீஸ்வரம்

தாமிரபரணியும் அதன் கிளை நதிகளும் இவ்வூரை தீவாக ஆக்கியுள்ளன.
கொற்கை
பாண்டியர் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் சிறந்திருந்த ஊர். சங்க இலக்கியங்கள் இங்கு முத்துக் குளித்தலை விவரிக்கின்றன. கால்டுவெல் முதன் முதலாக இவ்வூரில் புதைபொருள் ஆய்வு நடத்தி பழங்கால நாகரீகத்தைக் கண்டு வெளிப்படுத்தினார். தற்காலப்பெயர் உமரி மாநகர். இங்கு நெல், வாழை, வெற்றிலை, தென்னை, பனை மரங்கள் ஏராளம். சமணச் சிலையும், வன்னிமரமும் பழமையை நினைவூட்டுகின்றன. வெற்றிலையும், வாழையும் ஏற்றுமதியாகிறது.

கடம்பூர்

மணியாச்சியிலிருந்து 14கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகளும், உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. 'கடம்பூர் போளி' புகழ் பெற்றது.

கழுகுமலை

சமணர்கள் இங்கே கழுவேற்றப்பட்டதாலும், கழுகுகள் தங்கும் மலை என்பதாலும் 'கழுகுமலை' எனப்பெயர் பெற்றது. சங்கரன் கோயில் - திருநெல்வேலிச் சாலையில், தேவர் குளத்திலிருந்து 22கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெரிய தொழிலகங்கள் உள்ளன. சிறந்த துப்பட்டி (போர்வை) தயாரிக்கும் தொழிலகங்களும், பருத்தி அறைக்கும் ஆலைகளும் அம்பர் சர்க்கா உற்பத்தி நிலையமும், பெரிய சுண்ணாம்புக் கால்வாய்கள் இரண்டும் உள்ளன.
கழுகுமலையில் காணத்தக்கவை
முருகன் கோவில்
இக்கோவில் 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். இக்கோயில் பாடல் பெற்ற தலமாகும். முருகனை - கழுகுமலை கார்த்திகேயர், கழுகாசல மூர்த்தி, கந்தநாதன் என்றும் அழைக்கிறார்கள். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடியிருக்கிறார். அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சதர், முத்துசாமி பிள்ளை, பாரதியார் ஆகியோரும் பாடல்கள் பாடி உள்ளனர். இங்கு தைபூசம், பங்குனி உத்ரம், மாசிப்பெளணர்மி முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிள்ளையார் கோவில்
300 அடி உயர கழுகுமலையின் உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது. கார்த்திகை நாட்களில் விளக்கேற்றும் கம்பும் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் புத்தர் சிலையும் ஏராளமான சமண விக்கிரங்களும், சுனையுடன் கூடிய சிறிய கோயிலும் உள்ளன.
சிவன் கோவில்
மலையின் மற்றொரு பகுதியில் மேலிருந்து கீழாகக் குடைந்து வெட்டப்பட்ட கோயிலாகையால் 'வெட்டுவான் கோயில்' என்றும் இது அழைக்கப்படுகிறது. 30 அடி ஆழத்தில் சதுரமாகப் பாறைக்குள் குடைந்து அதன் நடுப்பகுதியில் கோயில் உண்டாக்கப் பட்டிருக்கிறது. இக் கோயிலின் நீளம் 47 அடி; அகலம் 24 அடி; உயரம் 30 அடி கோபுரத்தின் உச்சியில் தாமரை இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் பாண்டியரின் ஒற்றைக் கல் தளி ஆகும்; சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.
சக்கம்மா தேவி கோயில்
கட்டபொம்மன் குடும்பத்தாரின் குலதெய்வம் சக்கம்மாதேவி. நாட்டு விடுதலைக்கு பின் 10 நாள் திருவிழா, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
கயிலாசநாதர் கோயில்
பசுவந்தனை என அழைக்கப்படும் இக்கேயிலில் சித்திரைத் திருவிழா சிறப்புறநடைபெறுகிறது.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்
புதூரில் உள்ள இக்கோவில், தேவாங்கர் சமூகத்திற்குரியது.
முத்தளபுரம் சிவன் கோயில்
ஆனிமாதம் திருவிழா நடைபெறுகிறது.

குறுமலை

இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருத்துவ மலையின் பகுதி என இம்மலை கருதப்படுகிறது. இங்கு பல வகையான பச்சிலைகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன. இம்மலைக் காற்று நோய் தீர்க்கும் என நம்பப்படுகிறது. இம்மலை சுமார் 150 அடி உயரம் உள்ளது. அதன் மீது நீர் ஊற்று உள்ளது. மக்கள் மலைவளம் காண தை மாதத்தில் இங்கு வருவதுண்டு.
கடலை கைத்தறி நெசவுக்கும், துப்பட்டிக்கும் பெயர் பெற்ற ஊர்.

கயத்தாறு

திருநெல்வேலி-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உப்போடை ஆற்றுக்கு அருகில் உள்ள இவ்வூரை கடம்பூர் இரயில் நிலையத்திலிருந்து சென்றடையலாம். இது வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம். அதற்காதாரமாக புளியமரமும், சில கற்களும் காணப் படுகின்றன. பாய் பின்னுதல், துணி நெசவு முக்கியத் தொழில்கள். கயத்தாற்றில் சிதலமடைந்த, கல்வெட்டுகள் உள்ள, சோழ மன்னர் கட்டிய, பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூரில் பெரும் பான்மையோர் கிருத்துவர்கள். 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.

ஓட்டப்பிடாரம்

தேசபக்தர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த ஊர். அவர் நினைவாக நினைவில்லம் ஒன்று உள்ளது. எட்டையபுரம் - தூத்துக்குடி; திருநெல்வேலி - வேம்பார் ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் குறுக்குச் சாலையின் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நீர்வளம், நிலவளம் மிகுந்தது. கட்டமொம்முவின் அமைச்சர் தானாபதிப்பிள்ளையின் வம்சாவளியினர் இங்குள்ளனர். கூட்டுறவு இயக்கம் திறம்ட செயலாற்றுகிறது. ஓட்டப்பிடாரி கோயிலாலே-ஓட்டப்பிடாரம் என வழங்கப்படுகிறது.
சேர்வைக்காரன் மடம்
தென்னை, மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த செந்திலம்பலம் என்னும் ஊரில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர்.
செவந்தியாபுரம்
மூக்குப்பொடி உற்பத்தியால் சிறப்புப் பெற்றது.

சாயர்புரம்

கிருத்துவத்தைப் பரப்ப வந்த சாமுவேல் சாயர் என்ற போர்ச்சுகீசியரால் இவ்வூர் சாயர்புரம் என்று அழைக்கப்படுகிறது. பண்ணை விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் 1844-இல் சாயர்புரம் செமினரி என்ற பள்ளியை தோற்றுவித்தார். இங்கு அவர் காலத்தில ஐரோப்பிய மொழிகள் பல கற்பிக்கப்பட்டன. 1930 முதல் போப் நினைவுப்பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. 1962-ஆம் ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது. போப் படித்த நூல்கள், பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சாத்தான் குளம்
நாசரேத்திற்கு நேர் தெற்கே உள்ளது. கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது 'வியாழக்கிழமை சந்தை' புல், வைக்கோலுக்குத் தனிச் சந்தை உள்ளது. பனைவெல்லம், சர்க்கரை தயாரிப்பு சிறுதொழில் நடந்து வருகிறது. தமிழறிஞர் அ. இராகவன் பிறந்தவூர். செட்டிக் குளம் சுனை ஒன்று உள்ளது.
சாகுபுரம்
டால்மியா குடும்பத்தினரின் பெயரால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு இரசாயன தொழிற்சாலை உள்ளது.
திருக்கோளூர்
நம்மாழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார் பிறந்த ஊர்.

திருச்செந்தூர்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. வழிபாட்டிற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. கோவில் உக்கிரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப் படுகிறது. கோயிலில் வரகுணபாண்டியன் கல்வெட்டுக் காணக் கிடைக்கிறது. பாண்டியர்கள், பாளையக்காரர்கள், திருவிதாங்கூர் அரசர், சேதுபதிகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள் முதலியவர்களுடைய உதவிகள் கோயிலுக்கு பல காலம் கிடைத்துள்ளது.
கடற்கரையில் இவ்வூர் உள்ளதால் 'திருச்சீர் அலைவாய்' என அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் சந்தனாமலையும், வேங்கடாசலபதி சந்நிதியும் சண்முக விலாச மண்டபமும் உண்டு. ஓங்கார வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் கோபுரத்தின் வேல் வடிவம் நெடுந்தூரத்திலிருந்து காணும்படி அமைக்கப் பபட்டுள்ளது. இங்குள்ள குகைக்கு வள்ளிகுகை என்று பெயர். இன்று கடற்கரையில் காணப்படும் கோயில், முன்பு மலை உச்சியில் இருந்தது. கடல் பெருகி மலை மூழ்கவே இன்று கடற்கரையில் இக்கோயில் காட்சி தருகிறது. செந்திலாண்டவர் கோயில் வெள்ளை மணற்கல் மீது கட்டப்பட்டுள்ளது.

நாழிக்கிணறு

ஒரு சதுர அடிப்பரப்புள்ள சிறு கிணற்றில் நன்னீரும், 14 சதுர அடி பரப்பளவு கொண்ட பெரிய கிணற்றில் உப்பு நீரும் கிடைக்கின்றன. ஒன்றின் நீர் மற்றொன்றுடன் கலப்பதில்லை.

மண்டபங்கள்

நீண்ட மண்டபங்கள் வாயிலிலும், கோயிலைச் சுற்றியும் அமைக்கப் பட்டுள்ளன. பக்தர்கள் தங்கி இளைப்பாறத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கந்த சஷ்டி மண்டபம், பிள்ளையார் மண்டபம், பதினாறு தூண்களோடு அமைக்கப்பட்டுள்ள ஆனந்த விலாசமண்டபம் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும்.
செந்திலாண்டவர்
நின்ற திருக்கோலத்தில்-அபயம், வரதம், பூ செபமாலைகளை ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் மூலத்தானத்தில் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. யாவரும் சுற்றிப் பார்த்து வரத்தக்க முறையில் இவை அமைந்துள்ளன.

விழாக்கள்

ஒவ்வொரு நாளும் திருவிழாக் கோலத்தைத் திருச்செந்தூரில் காணலாம். வெள்ளிக்கிழமை, கார்த்திகை விசாக நாள்களில் முருகனுக்கு தங்கக் கவசம் சார்த்தப்படும். வைகாசி விசாகம், ஆவணி மூலம், கந்தசட்டி, மாசி மகம், பங்குனி உத்திரம், ஆவணித் திருவிழாவில், முன்பக்கம் முருகவேள் உருவிலும், பின்பக்கம் நடராசர் உருவிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

திம்மராஜபுரம்

இவ்வூர் மல்லிகைப்பூ, சிவந்திப்பூ, பிச்சிப்பூ, ரோஜாப்பூ ஏற்றுமதியில் புகழ் பெற்று விளங்குகிறது.
நாலாட்டின் புதூர்
பருத்தி விளைச்சல் மிகுதி. பருத்தி அரைக்கும் இயந்திரங்கள் பல உள்ளன.
விளாத்திக் குளம்
வட்டத் தலைநகர். இவ்வூரில் நெசவுத் தொழிலும் சாயத் தொழிலும் சிறப்புற நடந்து வருகிறது. கட்டமொம்முவுடன் தூக்கிலிடப்பட்ட வீரகஞ் செயதுரையும், இசையுலக மேதை விளாந்திக் குளம் - மலையப்பசுவாமிகளும் இந்த ஊர் பெருமக்கள்.

வேம்பார்

கத்தோலிக்கர் நிறைந்த கடற்கரையோர ஊர். கருப்பட்டி காய்சும் தொழிலால் இவ்வூர் புகழ் பெற்றது.
பாஞ்சாலங்குறிச்சி
வெள்ளையரை எதிர்த்து நின்ற பாளையக்காரன் கட்டபொம்மு வாழ்ந்த இடம். 1755-1800 வரை பல போர்களை கண்ட ஊர். இங்குள்ள கோட்டை வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. கட்டமொம்முவை நினைவு கூறும் முகமாக தமிழக அரசால் இங்கு சிறுகோட்டை வடிவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகில் பழைய கோட்டையின் சிதலங்களைக் காணலாம்.

மணியாச்சி

விருது நகர் - தூத்துக்குடி வழியில் உள்ள இரயில் சந்திப்பு. இங்கு சைவ ஆதின மடம் உள்ளது. கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி நாதன் கட்டுக் கொன்ற இடம் என்பதால், சுந்திரப்போராட்ட காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
புதூர் நாகலாபுரத்திலிருந்து 6 கி.மீ அருப்புகோட்டை இரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உளுந்தும், மல்லியும், வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெருநாழி கடற்கரை ஊர். அழகான இடம். நீர் வளத்தால் நெல்லும் மணிலாவும் நன்றாக விளைகின்றன.
நாகலாபுரம் கட்டபொம்மக்கு உதவிய காரணத்தால் இவ்வூர் பாளையக்காரர் சாகும் வரை சென்னையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கு வியாழக்கிழமை சந்தை. இவ்வூரிலிருந்து தான் முதன்முதலாக பகலுணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

முடிசூடிவைத்தானேந்தல்

இவ்வூர் வேளாளர்களே பாண்டியர்களுக்கு முடி சூடுவார்களாம். அதன் காரணத்தாலே இவ்வூர் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சமண மேட்டில் சமண உருவச்சிலைகள் உள்ளன. பழைய கோட்டை ஒன்றின் சிதைந்த பகுதிகள் காணப்படுகின்றன.
பெருங்குளம் குளந்தை என்பது பழைய பெயர். தமிழின் முதல் நாவல்களில் ஒன்றாக 'பத்மாவதி சரித்திரம்' எழுதிய மாதவய்யா இவ்வூரை வைத்தே நாவலைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் ஒன்று. சிவ, விஷ்ணு கோயில்கள் உண்டு. பெருமாளுக்கு-மாயக்கூத்தர் என்றும்; சிவனுக்கு உத்தர வழுதீசுவரர் என்றும் பெயர். சிவன் கோயிலில் சங்கப் புலவர் 49 பேரின் சிலைகள் உள்ளன.
பேரூர் விவசாய செழிப்பு உள்ள ஊர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களும், களஞ்சியமும் இவ்வூரில் உள்ளன. வல்லநாடு மஞ்சளுக்கு புகழ் பெற்றது. நெல்லும், காய்கறிகளும் மிகுதி. நூல் நூற்பு, செங்கல் தொழிற்சாலையும் இங்குள்ளது.
பெரியதாளை கிருத்துவர்கள் நிறைந்த மீன்பிடி கிராமம். பரமன் குறிப்பு கருப்பட்டி உற்பத்திஉள்ள ஊர்.
மணப்பாடு மக்கள் அனைவரும் கிருத்துவர்கள். மணல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மீன்பிடிப்பு முக்கியத் தொழில். பனை ஓலையிலிருந்து பலவித பொருள்கள் இங்குச் செய்யப்படுகின்றன. தேவாலயத்திலுள்ள பலிபீடம் இத்தாலிய பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
புன்னைக் காயல் புன்னை மரங்கள் நிறைந்த கடற்பகுதியாதலால் இப்பெயர் பெற்றது. கிருத்துவத்தின் வளர்ச்சி காரணமாக கல்வி, மருத்துவ மனைகள் வளர்ந்துள்ளன. முதல் கத்தோலிக்க தேவாலயம் 1551-இல் கட்டப்பட்டது.
நாசரேத் கிருத்தவ தேவாலயம் உள்ளது. கிருத்துவர்கள் நிறைந்த ஊர். பழங்காலப் பெயர் சாணார் பத்து.

ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி சாலைக்கு வடக்கே கயிலாயபுரமும், தெற்கே வைகுண்டபதியும் உள்ளன. நலதிருப்பதிகளில் ஒன்று. பெருமாள் பெயர் கள்ளபிரான். சிற்பக்கலை சிறப்புடன் இக்கோயில் விளங்குகிறது. திருவேங்கடமுடையார் மண்டபத்தின் கதவுகள் ஏகாதேசி அன்று மட்டுமே திறக்கின்றன. கட்டபொம்மு போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப்பபட்டது.

புதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு


புதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுவரை  52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 40 பேர் சிகிச்சை பெற்று  வந்தனர். இந்நிலையில் தற்போது முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆகவும்,  மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆகவும் உள்ளது.

ஏற்கனவே  12 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது புதுச்சேரியில் 7  பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும் என 9 பேர் குணமாகியுள்ளனர். இதனால்  குணமடைந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்  செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 40 பேர்  சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தற்போது புதுச்சேரியில் நெட்டப்பாக்கம்,  லாஸ்பேட்டை, அரும்பார்த்தபுரம், குருமாம்பேட் ஆகிய பகுதியைச் சேர்ந்த 7  பேரும், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 9 பேர்  குணமாகியுள்ளனர். அதே வேளையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

இதனால்  தற்போது வரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆகவும், குணமடைந்தோர்  எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது. அதுபோல் 6,917 பேருக்கு கரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. இதில் 6,826 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 29 பேருக்கு  முடிவு வரவேண்டியுள்ளது என்றார்.

சுகாதாரத்துறை இயக்குநர்  மோகன்குமார் கூறும்போது, தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் மட்டும் சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை.

குறிப்பாக  முத்தியால்பேட்டை சோலை நகரில் 6 பேரும், முத்தையா முதலியார் வீதி,  மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே மக்கள்  இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.

ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்


புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட  அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை  வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "மத்திய அரசு  உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் கோயில், மசூதி, தேவாலயங்கள்  மூடப்பட்டன. வீட்டிலேயே கடவுளை வழிபட வேண்டும் என புதுவை அரசு சார்பில்  கேட்டுக் கொண்டோம். மக்கள் கடந்த 2 மாதங்களாக கோயில், மசூதி,  தேவலயங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே கடவுளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில்  நேற்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், இந்துக்கள் கோயிலுக்கு  சென்று இறைவனை வணங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரர்த்தணை  செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை செய்ய வேண்டும்.

சமூக  இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து இறைவனை வழிபட மக்கள் தயார் நிலையில்  உள்ளனர். எனவே, ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயங்களை திறந்து  மக்கள் இறைவனை வழிபட மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என  கூறியுள்ளேன். இதனை பிரதமர் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்பார் என்ற  நம்பிக்கை உள்ளது.

புதுச்சேரி  மாநிலத்தில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட வேண்டும் என்று மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரமானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில்  உள்ளது. இதனை முடிவு செய்வதற்கு மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் செய்ய  முடியாது. இதனால் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு  நடவடிக்கை எடுக்கிறது.

ஆனால் புதுச்சேரியும், டெல்லியும்  சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம், ஏழைய எளிய மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்,  தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகையும் அளித்து வருகிறோம். ஆனால்,  மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும்  திணிக்க பார்க்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

புதுச்சேரியை  பொறுத்தவரை இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதற்கு  மாநிலங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி மாநிலம்  ஏற்றுக் கொள்ளாது. நாங்கள் தெளிவாக உள்ளோம். எக்காரணத்தை கொண்டும்  புதுச்சேரி மின்துறையை நானோ, அமைச்சர்களா, எம்எல்ஏக்களோ தனியார் மயமாக்க  ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுசம்பந்தமாக  சட்டப்பேரவையில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.மத்திய அரசு மக்கள்  உணர்வுகளையும், மாநில அரசு உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.  மின்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக உள்ளதே தவிர லாபம் ஈட்டும்  துறையாக இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று எனக்கு ஒரு கடிதம்  அனுப்பினார். அதில், மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை திமுக  எதிர்க்கிறது. ஆகவே, நாங்கள் உங்கள் அரசுடன் துணை நிற்கிறோம் என்று  எழுதியுள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மாநிலங்கள்  விரும்பாவிட்டால் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள  முடியாது என தெளிவுபட கூறியிருக்கிறார். மின்சாரத்தை தனியார் மயமாக்கினால்  புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும்,  தொழிற்சாலை வருவதும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு மின்சார  வினியோகத்தை தனியார் மயமாக்குவதை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம்.

காங்கிரஸ்  - திமுக கூட்டணிக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதற்கான வேலையை  ஒரு சிலர் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று உள்ள இந்த சமயத்தில் நானும்,  அமைச்சர்களும், எம்எல்எக்களும் இரவு பகல் பார்க்காமல் மக்கள் பணியில்  ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மாநில வருவாய்  குறைந்துவிட்டது. அப்படி இருந்தாலும் கூட அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும்  ஊதியம், பென்ஷன் கொடுத்து வருகிறோம். இலவச அரிசி திட்டத்தை  நிறைவேற்றுகிறோம். ஆளுநர் கிரண்பேடி தலையீட்டால் இலவச அரிசி வழங்குவதில்  காலதாமதம் ஏற்படுகிறது. இந்த தடையையும் மீறி அதனை செய்ய உள்ளோம். நாளை  அல்லது நாளை மறுநாள் முதல் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச  அரிசி வழங்க உள்ளோம்.

ஆனால், சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையில்லாமல் அறிக்கை விடுவதும்,  மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதும் மிகப்பெரிய வருத்தத்தை  அளிக்கிறது. இது அரசியல் செய்யும் நேரமில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும்  ஒருங்கிணைந்து அரசோடு பாடுபட வேண்டும். மக்களின் உயிர் முக்கியம்.  புதுச்சேரி பொருளாதாரம் முக்கியம்.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க  வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அரசு செய்யும் காரியங்களுக்கு ஒத்துழைப்பு  கொடுப்பது மற்ற அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், அதனை எல்லாம் தவிர்த்து  அரசை விமர்சிப்பது, அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது, விவரம் தெரியாமல்  பேட்டி கொடுப்பதெல்லாம் விந்தையாக உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும்.

மக்கள்  நலத்திட்டங்களை நிறைவேற்றவும், வருமானத்தை பெருக்கவும், வருகின்ற நிதியை  முறையாக செலவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவரம் தெரிந்த  அரசியல் கட்சிகள் நிறைய உள்ளன. ஆனால், ஒரு சிலர் கட்சி தலைமையின்  அனுமதியில்லாமல் தேவையில்லாமலும், ஆதாரமில்லாமலும் காங்கிரஸ் - திமுக  கூட்டணி இடையே பிளவு ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இது  பலிக்காது, தவிடு பொடியாக்கப்படும். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் இந்த  அறிக்கை விடுவது யார், அவர்களுடைய பின்னணி என்ன? என்று தெரியும். நாங்கள்  தொடர்ந்து எங்கள் கடமையை செய்வோம் என முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறியதாக 3,353 வழக்குகள் பதிவு


புதுச்சேரி: 

கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16,435 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சாலைகளில் சுற்றிய 1,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதற்காக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.4 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கம் மூலம் காணொளி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாணவர்கள் கேட்ட 110 கேள்விகளுக்கு ஆசிரியர் விளக்கங்கள் அளித்தனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருநின்றவூரில் 6 கிலோ தங்கக்கட்டிகள்கடத்தி வந்த 3 பேர் கைது


சென்னை , மே.29 –

காரில் தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருநின்றவூர் போலீசார் நேற்றிரவு வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அங்கு வந்த ஒரு காரில் சோதனை செய்தனர். அக்காரிலிருந்த 5 கிலோ 847 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவற்றைக் கடத்தி வந்த ஆவடியைச் சேர்ந்தபாபு சங்கர் வயது 38 , ஜதேந்தர்குமார் வயது 45 , பழைடய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ராகேஷ் மேத்தா வயது 25 ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

சமைத்தலில் முட்டையின் பயன்கள்



முட்டை ஒரு திடப்படுத்தும் காரணி [THICKENING AGENT]

முட்டையில் உள்ள புரதம் வெப்பப்படுத்தும் பொழுது கொழகொழப்புத் தன்மையை அடைகிறது. கொழகொழப்பான புரதமானது தண்ணீருடன் ஒன்று சேர்ந்து பிசுபிசுப்பான பாகு நிலையை அடைகிறது. எனவே முட்டை திடப்படுத்தும் காரணியாக செயல்படுகிறது.

*

முட்டை ஒரு இணைப்பு காரணி [BINDING AGENT) :

முட்டையில் உள்ள புரதம் 65°C லிருந்து 70°C வெப்பநிலையில் கொழகொழப்புத்தன்மை அடைய ஆரம்பிக்கிறது. இது உணவிற்கு வடிவத்தை கொடுக்கிறது. கட்லெட் தயார் செய்யும் போது அவற்றிற்கு சரியான வடிவம் தர பயன்படுகிறது.

*

முட்டை ஒரு மிருதுவாக்கும் காரணி (LEAVENING AGENT)

முட்டையை அடிக்கும் பொழுது காற்று குமிழ் ஏற்படுகிறது. இந்த காற்று குமிழ்கள் 'பேக்கிங்' (Baking) செய்யப்படும் பொருட்களில் சேருவதால் அவை பெரியதாகவும் மிருதுவான பஞ்சு போன்ற பொருட்களை கொடுக்கிறது.

*

முட்டை ஒரு பால்மயமாக்கும் காரணி (EMULSIFYING AGENT)

முட்டையில் புரதச்சத்து மட்டுமல்லாமல் பாஸ்போலிப்பிட் வகையை சார்ந்த லெசித்தின் என்ற பால்மமாக்கும் தன்மை உடைய பொருளும் உள்ளது. எனவே முட்டை 'மயோனைஸ்' (Mayonnaise) என்ற உணவு தயாரிப்பில் பால்மமாக்கும் காரணியாக பயன்படுகிறது. ஏனெனில் இது நீரில் எண்ணெய் விரவிய கூழ்மத்திற்கு பால்ம நிலைப்புத் தன்மையை அளிக்கிறது.

*

முட்டை ஒரு வாசனை மற்றும் நிறக்காரணி [FLAVOURING AND COLOURING AGENT) :

முட்டையை கேக், புட்டிங் உணவுவகைகளில் சேர்க்கப்படும்போது அவற்றிற்கு மணம் கொடுப்பதற்கும் நிறம் கொடுப்பதற்கும் சிறந்த காரணியாக செயல்படுகிறது.

*

முட்டை ஒரு தெளிவுபடுத்தும் காரணி [CLARIFYING AGENT]:

முட்டை தெளிந்த சூப் (clear soup) தயாரிப்பில் பயன்படுகிறது. அதாவது சிறிதளவு சாறுடன் வெள்ளைக்கரு சேர்த்து சூடுபடுத்தும் பொழுது, அதில் உள்ள ஆல்புமின் (albumin) குழகுழப்புத் தன்மை அடைகிறது. இந்த தன்மை அடைந்த ஆல்புமின் சாறில் படிந்துள்ள துகள்களை அதனுடன் சேர்த்துக் கொள்வதால் தெளிந்த சாறு கிடைக்கிறது.

*

முட்டை ஒரு அழகுபடுத்தும் காரணி [GARNISHING AGENT):

நன்றாக வேக வைத்த முட்டை உணவுப் பொருட்களை அலங்கரிக்க பயன்படுகிறது.

எ.கா. பிரியாணி.

*

முட்டை உணவு சத்துக்களை அதிகரிக்கும் காரணி (ENRICHING AGENT) :

உணவு பண்டங்கள் தயாரிப்பில், ஊட்டச் சத்துக்களின் அளவை அதிகரிக்க முட்டை பயன்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் உப்பு ஏரிகள்



பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில் பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும் காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும் அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தபுலத்தை((magnetic field)) இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டின் நிலை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையினால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. சந்தைக்கு தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும் என்று கெருகம்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜான் கிங்ஸ்லி ஆஜரானார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,    கோயம்பேடு மார்கெட் நிர்வாக குழு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயம்பேடு மார்கெட்டில் எடுக்கப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருமழிசையில் தற்காலிகமாக 207 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி உள்ளது. சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் தடையில்லாமல் செல்ல மார்க்கெட்டில் அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை செய்யப்படுகிறது. ஊழியர்கள், வியாபாரிகளுக்கு மாஸ்க் வழங்கப்படுகிறது. கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறு வியாபாரிகளுக்கு அனுமதியில்லை. சாலையோரங்களில் வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், திருமழிசை மார்க்கெட்டில் வீணாவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை, கோயம்பேடு மார்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து போட்டோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.