Friday, 31 May 2019

புகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி!!புகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி!!
பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்தியாலயத்தின் சார்பில் அகில உலக புகையிலை ஒழிப்பு தின கண்காட்சி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது காலை ஒன்பது முப்பது மணிக்கு துவங்கியது இக்கண்காட்சியை குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர் மருத்துவர் ராமதாஸ் பேசும்போது தினமும் ஆயிரக்கணக்கில் புகைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் போதை பழக்கவழக்கங்களால் மனிதர்கள் இறக்கின்றனர் இந்த விழிப்புணர்வின் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  புகைப்பிடிப்பது, மற்றும் போதை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் மேலும் மோகன்ராஜ் பேசும்போது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல நச்சுப் பொருட்கள் சிகரெட்டில் கலந்திருக்கின்றன இது குடிப்பவர்களுக்கு மட்டுமின்றி அருகில் இருப்பவர்களுக்கும் அதிகம் பாதிக்கின்றது என்றார் மருத்துவர் ராமமூர்த்தி பேசுகையில் ஒரு மனிதன் தன்னிடம் பலம் இல்லாத காரணத்தினால் தான் இந்த வகையான புகைப்பிடிப்பது மற்றும் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர் இதிலிருந்து விடுவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு கண்காட்சி அவசியம் கண்காட்சியில் உள்ள அனைத்து சித்திரங்களுக்கான பட விளக்கத்தை  நிலையத்தின் பொறுப்பாளர் பி .கு. பாலாஜி எடுத்துரைத்தார் கவிநாடு ஊராட்சி ஒன்றியமுன்னாள் தலைவர் இராஜசேகர், விஜயன் ,கணபதி, சத்தியசீலன், ராம்குமார், வனிதா, வைரக்கண்ணு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு  கையேடுகள் வழங்கப்பட்டது                                                                                                                          

Saturday, 25 May 2019

மனச்சிதைவு நாள் உறுதிமொழி ஏற்பு!!

மனச்சிதைவு நாள் உறுதிமொழி ஏற்பு!!
மனச்சிதைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மிஷன் மென்டல் ஹெல்த் வாழ்வாதார பயிற்சி மையம் சார்பாக பெரியார் நகர் மைய வளாகத்தில் செயற்குழு உறுப்பினர் சி. பிரசாத் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவரும் ,மைய செயற்க்கை குழு உறுப்பினருமான கண. மோகன்ராஜ் கலந்து கொண்டார் ,திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயமதி மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகிறது என்ற உண்மையை மக்களுக்கு எடுத்து வைப்போம்!
மனநல பாதிப்பு மூளையில் உள்ள திரவமாறுபாடுகளாலும் உளவியல் காரணங்களாலும் ஏற்படுகிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம்! மனநலம் பாதிக்கப்பட்டவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைப்போம்!
அவர்களும் அன்றாடப் பணியில் ஈடுபட  ஊக்குவிப்போம்!
மன வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு செயல்பாட்டு திறன் பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சை தொடர்ந்து கொடுக்க பரிந்துரைப்போம்!
வாழ்வாதார பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஊக்குவிப்போம்! என்று இந்த உலக மனச்சிதைவு நாளில் உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர் நிகழ்வில் மைய ஒருங்கிணைப்பாளர் சே. மைக்கேல்ராஜ் இயன்முறை சிகிச்சை மருத்துவர் எம். மணிகண்டன் ,சிறப்பு ஆசிரியர் அமுதா ,அலுவலக மேலாளர் இளவரசி , பெரியநாயகி, கோமதி மற்றும் சிறப்பு குழந்தைகள் உறுதிமொழி நிகழ்வில் கலந்து கொண்டனர் நிறைவாக  செயற்கை  குழு உறுப்பினர்  கே.அப்துல் கபார்கான் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

Friday, 24 May 2019

டெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்

டெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்

சென்னை: 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். பல தொகுதிகளில் இந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவோர் ₹25 ஆயிரமும், சட்டமன்ற தேர்தலில் ₹10 ஆயிரமும் டெபாசிட் கட்ட வேண்டும். அந்த வகையில் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டை பெற்றால் மட்டுமே அவருக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டுகளை பெறவில்லை. அதனால் அவர்கள் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.  இதேபோல் மக்களவை தேர்தலிலும் மக்கள்  நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில்  மிகவும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்ளவை தேர்தலிலும் மக்கள்  நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில்  மிகவும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்

பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி

பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி

தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோர், இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பதவிக்காலம் முடிவடையவுள்ள, 16வது லோக்சபாவில், 41 பெண்கள், எம்.பி.,யாக உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பா.ஜ.,வின் ஹேமமாலினி, மேனகா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், 16 பேர், தற்போதைய தேர்தலில், தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட்டனர். மேலும் சிலர், தொகுதி மாறி போட்டியிட்டனர்.

நேற்று, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட பெண், எம்.பி.,க்களில், சோனியா, கிரண் கெர், மேனகா, டிம்பிள் யாதவ் உட்பட, 28 பேர், மீண்டும் வெற்றி பெற்று உள்ளனர்.

மாநிலவாரியாக கட்சிகள் பெற்ற வெற்றிகள்

மாநிலவாரியாக கட்சிகள் பெற்ற வெற்றிகள்

May 24, 2019

*தமிழ்நாடு 38*

தி.மு.க. –23
காங்கிரஸ்–8
மார்க்சிஸ்ட் கம்யூ.–2
இந்திய கம்யூ.–2
விடுதலை சிறுத்தைகள் –1
இ.யூ.முஸ்லிம் லீக்–1
அ.தி.மு.க. –1

*ஆந்திரா 25*
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22
தெலுங்கு தேசம் –3

*அசாம் 14*
பா.ஜனதா –9
காங்கிரஸ்–3
ஐக்கிய ஜனநாயக முன்னணி–1
சுயேச்சை –1

*பீகார் 40*
பா.ஜனதா –17
ஐக்கிய ஜனதாதளம் –16
லோக் ஜனசக்தி –6
காங்கிரஸ் –1

*சத்தீஷ்கார் 11*
பா.ஜனதா –9
காங்கிரஸ்–2

*கோவா 2*
பா.ஜனதா –1
காங்கிரஸ்–1

*குஜராத் 26*
பா.ஜனதா –26

*அரியானா 10*
பா.ஜனதா –10

*இமாசல பிரதேசம் 4*
பா.ஜனதா –4

*காஷ்மீர் 6*
பா.ஜனதா –3
தேசிய மாநாடு –3

*ஜார்கண்ட் 14*
பா.ஜனதா –11
ஜா.மு.மோ –1
காங்கிரஸ்–1
ஏ.ஜே.எஸ்.யூ.–1

*கர்நாடகம் 28*
பா.ஜனதா –25
காங்கிரஸ்–1
ம.ஜ.தளம் –1
சுயேச்சை –1

*கேரளா 20*
காங்கிரஸ் –15
மார்க்சிஸ்ட் கம்யூ.–1
இ.யூ.முஸ்லிம் லீக் –2
பிற கட்சிகள் –2

*மத்தியபிரதேசம் 29*
பா.ஜனதா –28
காங்கிரஸ்–1

*மராட்டியம் 48*
பா.ஜனதா –23
சிவசேனா –18
தேசியவாத காங்.–4
காங்கிரஸ்–1
பிற கட்சிகள் –2

*மணிப்பூர் 2*
பா.ஜனதா –1
நா.ம.மு. –1

*மேகாலயா 2*
காங்கிரஸ்–1
தேசிய மக்கள் கட்சி–1

*மிசோரம் 1*
மி.தே.முன்னணி–1

*நாகாலாந்து 1*
தே.ஜ.மு.க. –1

*ஒடிசா 21*
பிஜூ ஜனதாதளம் –12
பா.ஜனதா –8
காங்கிரஸ்–1

*பஞ்சாப் 13*
காங்கிரஸ்–8
அகாலிதளம் –2
ஆம் ஆத்மி –1
பா.ஜனதா –2

*ராஜஸ்தான் 25*
பா.ஜனதா –24
பிற கட்சிகள் –1

*சிக்கிம் –1*
சி.கி.மோ–1

*அருணாசலபிரதேசம் 2*
பா.ஜனதா –2

*தெலுங்கானா 17*
தெலுங்கானா ராஷ்டிர சமிதி–9
பா.ஜனதா –4
காங்கிரஸ்–3
மஜ்லிஸ் கட்சி–1

*திரிபுரா 2*
பா.ஜனதா –2

*உத்தரபிரசேதம் 80*
பா.ஜனதா –62
பகுஜன் சமாஜ்–10
சமாஜ்வாடி –5
அப்னாதளம் –2
காங்கிரஸ் –1

*உத்தரகாண்ட் 5*
பா.ஜனதா –5

*மேற்கு வங்காளம் 42*
திரிணாமுல் காங்.–22
பா.ஜனதா –18
காங்கிரஸ்–2

*அந்தமான் நிகோபார் 1*
காங்கிரஸ்–1

சண்டிகார் 1
பா.ஜனதா –1

தத்ராநகர் ஹவேலி–1
சுயேச்சை –1
டாமன் டையூ 1
பா.ஜனதா –1
டெல்லி 7
பா.ஜனதா –7
லட்சத்தீவு 1
காங்கிரஸ்–1
புதுச்சேரி 1
காங்கிரஸ் –1

Tuesday, 21 May 2019

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக) ..!!!

உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....