*ஶ்ரீஅபிராமி கோ.ஶ்ரீநிவாசனின் காலை வணக்கங்கள்
தமிழால் இறைவனை தினம் பாடு
இன்றைய ராசி பலன்கள்
செப்டம்பர் வெள்ளி 10.09.2021.
பிலவ - ஆவணி - 25.
சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
*ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
*⚡திதி:* இன்று அதிகாலை 02.49 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.
*⭐நட்சத்திரம்:* இன்று மாலை 04.10 வரை சித்திரை பின்பு சுவாதி.
*⚡யோகம்:* இன்று முழுவதும் சித்தயோகம்.
*🌛சந்திராஷ்டமம்:* உத்திரட்டாதி, ரேவதி.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−
*🍁மேஷம்*
அயல்நாட்டில் பணிபுரிவோருக்கு நல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் இருந்து வந்த காலதாமதம் அகலும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும், சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 (இரண்டு)
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
அஸ்வினி : வரவுகள் ஏற்படும்.
பரணி : காலதாமதம் நீங்கும்.
கிருத்திகை : காரியங்கள் கைகூடும்.
*🍁ரிஷபம்*
வெளியூர் பயணங்கள் செல்வதற்காக இன்று திட்டங்களை தீட்டுவீர்கள். மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை பொறுமையுடன் வெளிப்படுத்தினால் அதில் வெற்றி காண்பீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9 (ஒன்பது)
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்.
கிருத்திகை : வேகம் அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
*🍁மிதுனம்*
வியாபாரம் சம்பந்தமாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழில் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கனவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு பின் மறையும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும், பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1(ஒன்று)
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : குழப்பங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : சாதாரணமான நாள்.
*🍁கடகம்*
உறவினர்களின் வழியில் சுபச் செய்திகள் வரும். இணைய வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சமுதாய சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் எதிர்காலம் பற்றிய குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும், தொழிலில் சுமாரான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 (நான்கு)
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
புனர்பூசம் : கவனம் தேவை.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : சிந்தனைகள் தோன்றும்.
*🍁சிம்மம்*
புதிய சிந்தனைகள் மனதினில் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும், உடல் சோர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
மகம் : சாதகமான நாள்.
பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.
*🍁கன்னி*
அனைத்து காரியங்கள், செயல்களிலும் நிதானமாக செயல்படவும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் வாய்க்கும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும், வாகனங்களைப் பழுது பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8 (எட்டு)
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
உத்திரம் : சிந்தனைகள் ஏற்படும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : முடிவுகளை எடுப்பீர்கள்.
*🍁துலாம்*
நண்பர்களுடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத உத்தியோக இட மாற்றம் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். பதற்றமான மனநிலை ஏற்பட்டு பின்னர் மறையும். இரவு நேரத்தில் தூக்கமின்மையால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழலும் உண்டாகும், மன தைரியம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 (ஆறு)
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
சித்திரை : மாற்றம் காண்பர்.
சுவாதி : எச்சரிக்கை அவசியம்.
விசாகம் : நெருக்கடிகள் ஏற்படும்.
*🍁விருச்சிகம்*
தாய்வழி வந்த உறவுகளால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். உங்கள் வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள், பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 (ஐந்து)
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : நம்பிக்கையான நாள்.
*🍁தனுசு*
குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். கடன் மற்றும் வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும், வியாபாரம் சம்பந்தமாக பயணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9 (ஒன்பது)
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : சாதகமான நாள்.
*🍁மகரம்*
தனவரவு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கற்ற கலைகளின் மூலம் இலாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுக்கு இடையே மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் நன்மை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும், உடன்பிறந்தோரால் நன்மைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8 (எட்டு)
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
உத்திராடம் : வாய்ப்புகள் வாய்க்கும்.
திருவோணம் : மதிப்புகள் உயரும்.
அவிட்டம் : முன்னேற்றம் காண்பர்.
*🍁கும்பம்*
தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாய்மாமன் வழி உறவினர்களுடன் சற்று அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகளை அடைவீர்கள். மனதில் கற்பனைத்திறன் மேலும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில கடன் உதவிகள் சாதகமாக அமையும், முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : பொருள் சேரும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
*🍁மீனம்*
மனதினில் உண்டாகும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வீர தீரமான செயல்களை செய்து அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், நெருங்கிய நண்பர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 (ஐந்து)
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
பூரட்டாதி : செயல்திறன் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் பெறுவீர்கள்.
ரேவதி : ஆர்வமான நாள்.
SRI Abirami Prabhancha kala Vayli Jothida Myyam (Sharva Gayathri Karya Sidha Yogam) No,7, Paramasivam Complex, Ariyur Main Road, Thorappadi, VLR.02. Cel.(9597095030 / 9445236163 / 9443333163)
COMMENTS