--> வரலாற்றில் இன்று 10.09.2021 - HISTORY OF THE DAY 10.09.2021 | Whatsapp Useful Messages

வரலாற்றில் இன்று 10.09.2021 - HISTORY OF THE DAY 10.09.2021

முக்கிய நிகழ்வுகள் 10.09.21 வெள்ளிக்கிழமை

                    சிறப்பு நாள்
 உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்

          நிகழ்வுகள்

1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.

1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.

1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார்.

1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர்.

1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.

1798 – சென். ஜோர்ஜெசு கேய் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானிய ஒண்டுராசு எசுப்பானியாவைத் தோற்கடித்தது.

1817 – 1817-1818 பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது.[1]

1823 – சிமோன் பொலிவார் பெருவின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1846 – எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – "55 பண்டோரா" என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 – ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.

1918 – உருசிய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.

1919 – போலந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஆஸ்திரியாவும் அதன் கூட்டு நாடுகளும் அங்கீகரித்தன.

1937 – நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின..

1939 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஒக்சுலி என்ற நீர்மூழ்கி தவறுதலாக பிரித்தானியாவின் டிரைட்டன் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா செருமனி மீது போரை அறிவித்து, நேச நாடுகளான போலந்து, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய இராணுவம் மடகாசுகரில் தரையிறங்கி மடகாஸ்கர் சண்டையில் நேச நாடுகளின் தாக்குதல்களை மீள ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஆக்சே நடவடிக்கையின் போது, செருமனியப் படைகள் உரோமை மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.

1960 – எத்தியோப்பியாவின் அபீபி பிக்கிலா உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் வெறுங்காலுடன் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார்.

1965 – இந்தியா-பாகிஸ்தான் போர், 1965: அம்ரித்சர் நகரை பாக்கித்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1967 – கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 – கினி-பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யுகோசுலாவியாவின் சாகிரேப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் உயிரிழந்தனர்.

1977 – பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2000 – சியேரா லியோனியில் இரண்டு கிழமைகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பிரித்தானியப் போர்வீரர்களை பிரித்தானிய இராணுவம் நடத்திய பராசு நடவடிக்கையில் விடுவித்தனர். உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது.

2000 – இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.

2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

2007 – 1999 அக்டோபர் இராணுவப் புரட்சியை அடுத்து, ஏழாண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த பாக்கித்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.

2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.

2017 – கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.

             பிறப்புகள்

1487 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (இ. 1555)

1857 – ஜேம்சு எட்வார்டு கீலர், அமெரிக்க வானியலாளர் (இ. 1900)

1862 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழறிஞர், உரையாசிரியர், கவிஞர் (இ. 1914)

1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)

1892 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1962)

1909 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)

1912 – பசப்பா தனப்பா ஜாட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 2002)

1912 – மார்க் அந்தோனி பிரேசுகர்டில், பிரித்தானிய-ஆத்திரேலிய-இலங்கை மார்க்சியப் புரட்சியாளர் (இ. 1999)

1920 – சி. ஆர். ராவ், இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்

1929 – ஆர்னால்ட் பால்மர், அமெரிக்கக் குழிப்பந்தாட்ட வீரர், தொழிலதிபர் (இ. 2016)

1934 – பி. எம். சுந்தரம், தமிழக இசையியல் அறிஞர்

1937 – ஜேரட் டயமண்ட், அமெரிக்க உயிரியலாளர்

1957 – எஸ். கே. தேவமணி, மலேசிய அரசியல்வாதி

1957 – சுனந்தா முரளி மனோகர், இந்திய-பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2017)

1958 – கிரிஷ் கொலம்பஸ், அமெரிக்க இயக்குநர்

1960 – கொலின் பிர்த், ஆங்கிலேய நடிகர்

1964 – ஜாக் மா, சீன தொழில் முனைவர்

1965 – அதுல் குல்கர்ணி, இந்தியத் திரைப்பட நடிகர்

1971 – மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலி உறுப்பினர் (இ. 1990)

1975 – விவேகா, தமிழகத் திரையிசைப் பாடலாசிரியர்

1978 – மஞ்சு வாரியர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1980 – ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்

1984 – சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி

                இறப்புகள்

கிமு 210 – சின் சி ஹுவாங், சீனாவின் 1வது பேரரசர் (பி. கிமு 260)

1797 – மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1759)

1898 – பவேரியாவின் எலிசபெத் (பி. 1837)

1915 – பாகாஜதீன், இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1879)

1920 – ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (பி. 1894)

1925 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (பி. 1865)

1983 – அ. க. செட்டியார், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1911)

1997 – பாக்கீர் மாக்கார், இலங்கை அரசியல்வாதி (பி. 1917)

1998 – சி. பாலசுப்பிரமணியன், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1935)

2005 – எர்மன் போண்டி, ஆத்திரியக் கணிதவியலாளர், அண்டவியலாளர் (பி. 1919)

2008 – வி. கே. கானமூர்த்தி, இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1948)

2020 – வடிவேல் பாலாஜி, தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், திரைப்பட நடிகர் (பி. 1975)

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: வரலாற்றில் இன்று 10.09.2021 - HISTORY OF THE DAY 10.09.2021
வரலாற்றில் இன்று 10.09.2021 - HISTORY OF THE DAY 10.09.2021
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdGtsmONavPpcWf85jCdab1blNZ9c6doEiSqUo3a3z4Gz4dSeIDwEpNEHm8siFbzKzzkPYoqnMX6RvXNh-mW1XK3PGp0_-fjJ1dJktuhcK8VjU-vpO10XXSeVVqUqx7PTG7P2IoaSOG4Y/s1600/1631240665412055-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdGtsmONavPpcWf85jCdab1blNZ9c6doEiSqUo3a3z4Gz4dSeIDwEpNEHm8siFbzKzzkPYoqnMX6RvXNh-mW1XK3PGp0_-fjJ1dJktuhcK8VjU-vpO10XXSeVVqUqx7PTG7P2IoaSOG4Y/s72-c/1631240665412055-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2021/09/history-of-day.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2021/09/history-of-day.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content