NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 7 June 2016

அலுவலக கீதை.!!

அலுவலக கீதை.!!

நீ தனியாகத்தான் வந்தாய்,
தனியாகத்தான் போவாய்.

இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.

பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !

நீ தனியாகத்தான் போராட வேண்டும்.

யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !

உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை.
அவை அனைத்தும் மாயையின் சின்னங்கள்.

அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்குஉண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே!!

நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே!!

தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !

நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான்
இருந்தது.
நீ எப்பொழுது இருக்கப்போவதில்
லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம்நடந்து கொண்டுதான் இருக்கும்.
இதில் நீ என்று எதுவும் கிடையாது.

இன்று உனது வேலை எதுவோ, அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகிவிட போகிறது.

நீ என்பது ஒரு மாயை.
தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், என்கிற வார்த்தைகளை நீ மறந்துவிடு.

மாயையிலிருந்து விடு படு.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் all in all.

No comments:

Post a Comment