#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 15 August 2017

''என் குப்பை என் பொறுப்பு ''

''என் குப்பை என் பொறுப்பு ''.                                                படியுங்கள் பகருங்கள்.   நமது நாடு ஏறத்தாழ 130 கோடி ஜனத்தொகையை அடையக்கூடிய நிலையில் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் மனம் போன போக்கில் தங்களுடைய குப்பைகளை பொது இடங்களில் பொறுப்பில்லாமல் வீசிச் செல்வது,பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற பொறுப்பற்ற செயல்களால் நாடு முழுவதும் கணக்கில் அடங்காத பெயர் தெரியாத பல நோய்கள் ஏற்பட்டு ஏல்லோரும் அவதிபடுகிறோம். நாட்டை தூய்மைப்படுத்தவும் நோய்களைத்தீர்க்கவும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதோடு அரசாங்கத்தைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கோடிக்காணோர் கொட்டும் கழிவுகளை அரசாங்கம்  ஒருசிலரைக்கொண்டு தூய்மைப்படுத்துவதென்பது வெறும் சிம்ம சொப்பனமே. இறுதியில் பெரும் துன்பத்திற்கு ஆளாவது மக்களாகிய நாம் மட்டுமே. எனவே வளர்ந்த நாடுகளில் மக்கள் தங்கள் குப்பைகளுக்கு தாங்களே பொறுப்பு என்கிற மனநிலையில் செயல்படுவதுபோல் நாமும் ஏன் செயல்படக்கூடாது? எனவே இந்தியபெருநாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ''என் குப்பை என் பொறுப்பு''                          என்கிற மனநிலையில் செயல்பட்டால் நாட்டைத் தூய்மையடையச்செய்வதோடு மக்களும் பெயர் தெரியாத பலபல நோய்களிலிருந்து விடுபட்டு சுகாதார இந்தியாவை உருவாக்குவோம். எனவே நம் நாட்டின் இன்றைய முக்கிய தேவை                     '' என் குப்பை என் பொறுப்பு''                என்கிற முழக்கமே. இந்த முழக்கத்தை கடைக்கோடி மக்களை அடையும் வரைப்  பகிரவும். பகிர்ந்து நீங்களும் நம் நாடு சுபிட்சமடைய வேண்டும் எனறு விரும்பும் பிரஜைகளில் ஒருவராக இணையுங்கள்.

No comments:

Post a Comment