Saturday, 3 February 2018

03.02.2018 இன்றைய செய்தி சுருக்கம்

 8am-3-2-2018-saturday-சனிக்கிழமை

1. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி பணியாளர் களை மோசமாக பேசுவதாக கூறி அரசு ஊழியர் சங்கம் 2.2.18 ந்தேதி மாலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நூற்றுக்கணக்கான பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரை விமர்சித்துக்கொண்டு இருந்தனர். கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வந்த ஆட்சியர் கந்தசாமி தன் தரப்பு நியாயத்தை நான் கூறுகிறேன் எனச்சொல்லி சில விளக்கங்களை தரத்துவங்கினார். எங்களை தனியே அழைத்து பேச வேண்டும், வீணாக குற்றச்சாட்டுகளை நிர்வாகிகள் மீது கூறாதீர்கள் என ஆட்சியரை பேச விடாமல் தடுத்தனர். பேச முயன்றும் பேச முடியாததால் அவர் தனது அலுவலகத்துக்கு திரும்பி சென்றார்.ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம், நான் என் தரப்பு விளக்கத்தை சங்க உறுப்பினர்கள் தெரிந்துக்கொள்ளட்டும் என கூறச்சென்றேன், சங்க நிர்வாகிகளாக உள்ள சிலர் செய்யும் தவறுகளை கூறியதும் அவர்கள் தான் பேசவிடாமல் தடுத்தார்கள் என்றார்.சங்க நிர்வாகிகளே, கலெக்டர் பொய் பேசுகிறார் என்கிறார்கள். ரசு ஊழியர் சங்கத்தின் மூலம் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்

2. மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் கோவிலின் அம்மன் சன்னதியில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து சம்பவம் குறித்து பேட்டியளி்தத மாவட்ட கலெக்டர் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறி இருந்தார். இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.மேலும் தீ விபத்து நிகழ்ந்த வாசலை தவிர்த்து பிற வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்

3.  சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பு மூன்று குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக அடிலெய்டு நகரில் ஒரு தொழிற்சாலை வளாகத்தை தோண்ட ஆஸ்திரேலிய காவல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் கடந்த 1966ஆம் ஆண்டு காணாமல் போன 'போமோண்ட்'குழந்தைகளின் மர்மம் அந்நாட்டில் அவிழ்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது.ஜேன்போமோண்ட்(9), அர்னா போமோண்ட்(7), கிராண்ட்போமோண்ட்(4) ஆகிய அம்மூவரும் இன்று வரைகண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்த வழக்கின் மர்மத்தை தீர்க்கக் கூடிய தகவல்களை அளிப்பவர்களுக்கு பத்து லட்சம் ஆஸ்திரேலிய டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று தெற்கு ஆஸ்திரேலிய மாகாண அரசு அறிவித்துள்ளது

4. நேற்று இரவு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்கிள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 50 கடைகள் தீயில் நாசமடைந்துள்ளன. மின்கசிவால் இத்தீபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்

5.  அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டாம், அரசுப்பள்ளிகளை ஆதரிக்க குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் தனியார் பள்ளியின் மோகம் இன்னும் பெற்றோர்களுக்கு முற்றிலும் நீங்கவில்லை.இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிரி.கே.ஜி,.எல்.கே.ஜி.யு.கே.ஜி ஆகிய மூன்று வகுப்புகளுக்கு இன்று விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் நேற்றிரவு முதலே பள்ளி வாசலில் வரிசையில் நிற்கின்றனர்..இந்த பள்ளி, குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில் சிறந்த பள்ளி என்றும், கட்டணத்திலும் சிறந்த பள்ளியாக இருப்பதால் இரவு முழுவதும் காத்து கிடப்பதாக வரிசையில் பெற்றோர்கள் தெரிவித்தனர்

6. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி, சரத்குமார்-ராதாரவி அணியை தோல்வி அடைய செய்து வெற்றி வாகை சூடியது. நாசர் தலைமையிலான இந்த அணி தற்போது சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று வருட நடிகர் சங்கத்தின் பதவி வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வருவதால் ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனால் கடந்தமுறை போல் ஏமாறாமல் இந்த முறை நடிகர் சங்கத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்று சரத்குமார் அணி முடிவு செய்துள்ளது.

7.  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கண்காணிப்பில் சிறுமி உயிர்வாழ....சிறுமி நலம் பெற துரிதமான நடவடிக்கை எடுக்கும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார். மாடியிலிருந்து தற்கொலை செய்த வாலிபரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய மாண்புமிகு தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.சென்னை ராயபுரம் சஞீவிராயன் கோயில் தெருவில் ஒருவர் மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சில நாட்களுக்கு முன்பு.. அவர் விழும் நேரத்தில் ஒரு சிறுமி அங்கு வர அவர் மீது அவர் விழ அந்த சிறுமி பலமாக அடிப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார் . அவரை இன்று சந்தித்த தமிழக அமைச்சர் மாண்புமிகு திரு ஜெயக்குமார் அவர்கள் மருத்துவ சிகிச்சை யை துரிதப்படுத்தி அச்சிறுமி வெகு விரைவில் குணம் அடைந்து பழைய இயல்வு நிலை திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் தன் எம் எல் ஏ சம்பளத்தில் ஐம்பதாயிரம் ரூபாயும் கொடுத்து சிறுமி நலம் பெற வாழ்த்துகிறார்.என் காண்கானிப்பில் அந்த குழந்தை இருக்கிறது என்கிறார்

8.  காஞ்சிபுரம் - *கூடுவாஞ்சேரி - தைலாவரம் பகுதியில் தமிழ்செல்வி என்பவருக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 18சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து  அபகரிப்பு செய்த  பொத்தேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை  கைது செய்து துணை காவல் கண்காணிப்பாளர் பஞ்சாட்சரம் நடவடிக்கை. மேலும் தலைமறைவான தேன்மொழி, வனிதா, மகேஷ் ஆகியேரர்களுக்கு தீவிர வலைவீசு

9. அமெரிக்காவில் 12 வயதான சிறுமி ஒருவர் பள்ளி ஊழியர் ஒருவரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டு 40 முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது

10.  ஐ.என்.எக்ஸ் வழக்கு: பிப். 5-ல் டில்லி சிறப்பு கோர்ட்டில் இந்திராணி ஆஜர்

11. மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பணியில் 300போலீசார்

12.  ஜூனியர் உலக கோப்பை: ஆஸ்திரேலியா பேட்டிங்

13.    பிப்-03: பெட்ரோல் விலை ரூ. 75.81, டீசல் விலை ரூ.67.57   

14.       சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ராணுவம் மீது மெகபூபா ஆவேசம்

15.         அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

16.         அசாமில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

17.           கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சித்திபெற்ற இடமான மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள திருஅறை நேற்று மதியம்  1.30மணியளவில் திறக்கப்பட்டது. முன்னதாக ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் பெட்டி பூக்களால்  அலங்கரித்து,பல்லாக்கில் வைத்து மேளதாளம் முழங்க  வள்ளலார் நடந்து வந்த பாதை  வழியாக, வள்ளலார் வழிபட்ட பிள்ளையார், தண்ணீரில் விளக்கேற்றிய  இல்லம் ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டு, சித்திப்பெற்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது

18.           மதுரை, மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாக மாசி மாதப் பிறப்பை ஒட்டி, கோயிலில் மாசிமக கொடியேற்றம் நேற்று நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அலங்கார கோலத்தில் அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  விழா நாட்களில் தினமும் சித்திரை வீதிகளில் அம்மன்,சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை வலம் வருகின்றனர்

19.           விபத்தில் சிக்கிய எம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.புனே

20.             அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன் சுட்டுக்கொலை

21. பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல்,துப்பாக்கிச்சூடு

22. பாகிஸ்தானின் உள்பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை அமெரிக்கா மறுத்து உள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக் கென்சீ, அந்த எண்ணமே எழவில்லை என்றும், பயங்கரவாதிகள் ஒழிப்பில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் கூறினார் 

23.  அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பள்ளிக்கூடம் ஒன்றில் 12 வயதே ஆன மாணவி துப்பாக்கிச்சூடு நடத்தியது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில்5 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய மாணவி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது

24.   பாகிஸ்தானும், ரஷியாவும் வர்த்தகம், எரிசக்தி,ராணுவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முன்வந்து உள்ளன

நன்றி
  vishwarubam

No comments:

Post a comment