தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 4 February 2018

04.02.2018 இன்று 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது

தமிழகம் முழுவதும் இன்று (4-2-18) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே_*

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று (4-2-18) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்று மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், இன்று இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

.

கணிணிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. எனவே கணிணி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணிணியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே இன்று  ரயில்வே சேவையில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணிணியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்யுமாறு தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment