https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 11 February 2018

4pm-11-2-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை மாலை நேர முக்கிய செய்திகள்

 4pm-11-2-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை

♈🇮🇳🌴கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய பாஜக அரசு மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். எதிர்க்கட்சி தலைவர்களுடைய தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பெரும் புயலை கிளப்பினார்.மிகவும் உண்ணிப்பாக கவனிக்க கூடிய விஷயம் இது. தங்கள் அரசியல் லாபத்திற்காக பாஜக இதனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தங்களை தீவிரவாதிகளை போல கண்காணிப்பதாக கூறியுள்ளார். இதே போல டெல்லி தரப்பு தமிழகத்திலும் போன்களை டேப் செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.அதில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தினகரன் ஆகியோரது தொலைப்பேசிகளும் ஒட்டுகேட்கப்படலாம் என பேசப்படுகிறது. அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாஜக இதனை செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.தனது தொலைப்பேசி அழைப்புகள் டேப் செய்யப்படுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியுமாம். அதனால் தான் அவர் எந்த முக்கியமான விஷயங்களையும் போனில் பேசுவதில்லையாம். தனது அழைப்புகள் டேப் செய்யப்படுவதால் தான் தினகரன் ஒருமுறை போன் செய்த போது கூட எடப்பாடி பழனிச்சாமி பேசாமல், அவர் பிஸியாக இருக்கிறார் என அவரது உதவியாளர் கூறியதாக பேசப்படுகிறது

♈🇮🇳🌴பெண்கள் பலர் தங்களது பெற்றோருடன் பீர் குடிக்கும் பகைப்படம் மற்றும் வீடியோக்கைளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது. இது தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.#GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டாக் பயன்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்

♈🇮🇳🌴கணவன் இறந்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, 6 இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து16 லட்சம் ரூபாய் மோசடி செய்த்துள்ள சம்பவம் ஒன்று  டெல்லியில் நடந்துள்ளது

♈🇮🇳🌴ராமநாதபுரத்தில் பொது மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

♈🇮🇳🌴சட்டீஸ்காரில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படை வீரர் ஒருவர் இன்று காலை பலியானார்

♈🇮🇳🌴புதுச்சேரி ஆரோவில் பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி அருகே உள்ள பன்னாட்டு நகரமான ஆரோவில் 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உருவாக்கப்பட்டது. ஆரோவில் உருவான நாளை முன்னிட்டுக் கடந்த 10 ஆண்டுகளாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது

♈🇮🇳🌴மும்பை வான்பரப்பில் ஏர் இந்தியா, விஸ்தாரா விமானங்கள் மோதவிருந்தது கண்டறியப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் 27ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, டெல்லியில் இருந்து மும்பை வழியாகப் புனே செல்லும் விஸ்தாரா விமானமும் மும்பைக்கு வந்துள்ளது.29ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விஸ்தாரா விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து 27ஆயிரம் அடி உயரத்துக்கு வந்தபோது எதிரே ஏர் இந்தியா விமானமும் வந்துள்ளது. இரு விமானங்கள் ஒரேதடத்தில் வந்து மோதுவதைத் தவிர்க்கும் அமைப்புக்கு இது தெரிந்து இரு விமானங்களின் விமானிகளுக்கும் அபாய எச்சரிக்கை அனுப்பட்டது.இதையடுத்து விமானிகள் விரைந்து செயல்பட்டு விமானங்கள் மோதுவதைத் தவிர்த்துவிட்டனர். இரு விமானங்களுக்கிடையே 100அடி உயரமும் 3கிலோமீட்டர் தொலைவும் இடைவெளி இருக்கும்போதே இது கண்டறியப்பட்டதால் ஒருசில நொடிகள் நேரத்தில் நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது

♈🇮🇳🌴உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் லாரி தறிகெட்டு ஓடியதில் 3பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் சாலையில் வலப்புறமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிச் சாலையில் நடந்து சென்றவர்களின் மீது மோதிவிட்டு மீது வாகனங்களின் மீதும் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த 3பேர் உயிரிழந்தனர். இலேசான காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

♈🇮🇳🌴ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கொண்டைஊசி வளைவில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு நின்ற சரக்கு லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது

♈🇮🇳🌴கோவை அருகே மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபருடன் வந்தவரை பொதுமக்கள் அடித்து உதைத்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

♈🇮🇳🌴மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது

♈🇮🇳🌴ஹாங்காங்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18பேர் உயிரிழந்தனர்

♈🇮🇳🌴ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்தது

♈🇮🇳🌴பொலிவியாவில் பாரம்பரியமிக்க கலாச்சாரத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

♈🇮🇳🌴இங்கிலாந்தில் பேருந்து மோதியதில் சுமார் 45 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நபர், சாவகாசமாக எழுந்து நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன

♈🇮🇳🌴புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை உயிரிழப்பு

♈🇮🇳🌴திருவாரூர்: ஓஎன்ஜிசி முற்றுகை குறித்து 129 பேர் மீது வழக்கு

♈🇮🇳🌴காஷ்மீர் ராணுவ முகாமில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

♈🇮🇳🌴பெரு நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

♈🇮🇳🌴மீனாட்சி கோயிலில் நிபுணர் குழு 2ம் நாளாக ஆய்வு

♈🇮🇳🌴சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: புது கட்சி துவங்குவோருக்கு பதில் சொல்ல முடியாது. தமிழகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது எனக்கூறினார்

♈🇮🇳🌴சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அரசியல் காரணங்களாலேயே காவிரி விவகாரத்தில் தலையிட மத்திய அரசு மறுக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களை கருத்தில் கொண்டே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. என தெரிவித்தார்

♈🇮🇳🌴சென்னை சூளைமேட்டில் ரவுடி பினுவின் கூட்டாளியான வினோத் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று தலைமறைவாக இருந்த ஸ்கெட்ச் அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகிய 3ரவுடிகளையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

♈🇮🇳🌴மும்பையில் ஷாப்பிங் ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மும்பை கிழக்கு பகுதியான மன்குர்த் என்ற இடத்தில் மாயா ஓட்டல் உள்ளது. இதன் அருகே உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 20 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுக்க தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்

♈🇮🇳🌴தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளத்தை துவக்கினார் நடிகர் கமல் www.naaalainamdhe .maiam.com என்ற புதிய இணையதளத்தை துவக்கி உள்ளார். தன்னார்வலர்,சி.எஸ்.ஆர்., என்.ஜி.ஓ., அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி,தொழில், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, வேளாண்மை,நிதி உள்ளிட்ட துறைகளிலும் பதிவு செய்யலாம்

♈🇮🇳🌴தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

♈ 🇮🇳🌴    செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார். பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினராக உள்ளார்

♈🇮🇳🌴 எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் வீட்டுக்குப்போக உள்ளது என்று தலைமைச் செயலகத்தில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் பேட்டி அளித்துள்ளார். ஆட்சி போகும் நிலை என்பதால் அவசர அவசரமாக ஜெயலலிதா படம் திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴 ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நாளை ஜெயலலிதா பட திறப்பு விழாவையொட்டி சட்டப்பேரவைச் செயலாளர் பூபதியிடம் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் மனு அளித்துள்ளார்

♈🇮🇳🌴 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4தேர்வு நிறைவடைந்துள்ளது. காலை10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் ஒரு மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் 301மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳🌴 பட்டு, பருத்தி, கம்பளி நூல்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பட்டு பருத்தி, கம்பளி நூலுக்கான இறக்குமதி வரி 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴37 ஆண்டுகளாக அரசியலில் உள்ளதாக தற்போது கூறும் கமல்,இதை இத்தனை ஆண்டுகளாக ஏன் கூறவில்லை? என்று சீமான் கூறியுள்ளார். சென்னையில் 72ரவுடிகள் கைது செய்யப்பட்டதுதான் தமிழக அரசின் ஓராண்டு சாதனை. மேலும் டீக்கடைக்காரர் பக்கோடா விற்பதை பற்றித்தான் பேச முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴துபாயில் இந்து கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். போகசன்வாசி ஸ்ரீஅக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் கோயில் துபாய் நகரில் காட்டப்படுகிறது. மேலும் துபாயில் இந்து கோயில் கட்டப்படுவதற்கு 125கோடி இந்தியர்கள் சார்பில் இளவரசருக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்.சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்துகிறது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் பலமுறை முதல்வராக இருந்தவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳🌴ஜெயலலிதா படத்தை திறந்து சட்டப்பேரவை மாண்பை குலைக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்

நன்றி
vishwarubam

No comments:

Post a Comment