NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 22 February 2018

உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ஆக இருக்கட்டும்.

உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ஆக இருக்கட்டும். பொதுத்துறை, தேசபக்தி, மக்கள் சொத்து இப்படி ஐடியாலஜிக்கலாக சொல்லலாம். அதை விட முக்கியமாக, இன்னிக்கு டெலிகாம் துறைல இருக்குற கடும் போட்டியையும் சமாளிக்கிற அளவு நல்ல கவரேஜும், அன்லிமிடட் ஆஃபர்களும் நிறையவே கொடுக்குறாங்க. ஓட்டப்பந்தயத்துல ஒருத்தரை மட்டும் காலைக் கட்டிக் கொண்டு ஓடவிடும் இந்நிலையிலும் இதோட வேகம் குறைவில்லை என்று தான் சொல்லனும்.

புயல், வெள்ளம் என்று எந்த பேரிடர் காலத்துலயும் துணைக்கு நிற்பது பி.எஸ்.என்.எல். மட்டும் தான்னு இன்னிக்கு மறந்திருப்போம், ஆனா அடுத்து ஒரு ஆபத்து வரும் போது, ஒரு வாரம் மட்டும் வாட்ஸப்ல ஃபார்வேர்ட் பண்ணி புல்லரிச்சுப்போம்.

கடைசியா, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கடையை சாத்தி விட்டு பி.எஸ்.என்.எல். ஓட மாட்டாங்க. அரசாங்கமே நினைச்சாக் கூட, பி.எஸ்.என்.எல்.ல வேலை பார்க்குற ஒன்றரை லட்சம் பேரத் தாண்டி தான் இது மேல கை வைக்கவே முடியும்.
"வருமுன் காப்போன்" மீன் கதை தெரியும் தானே. பொதுத்துறையைக் காக்கனும் என்ற பரிதாபத்தோட இல்ல, உண்மையான பெருமையோடயும், கொடுக்குற காசுக்குக் குறைவில்லாத சேவையைப் பெறுகிறோம் என்ற திருப்தியோடும் பி.எஸ்.என்.எல்.க்கு வாங்க. உங்க ஒவ்வொருத்தரோட ஆதரவும் இதை இன்னும் வலுப்படுத்தும்.

உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ஆக இருக்கட்டும்.

No comments:

Post a Comment