தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 4 February 2018

நற்றிணையின் உலகை வெல்லலாம்

அறிவியல் புரட்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகப் பாவிக்கும் போக்கை மாற்றி பயனுள்ளதாக்கும் முயற்சியில் உதித்ததே நற்றிணையின் "உலகை வெல்லலாம்" என்ற  முயற்சி.

ஆம். நுனிநாக்கு ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் செந்தமிழை கடைக்கோடிக்கு தள்ளும் அவலநிலை மாற வேண்டும். மாணவப் பருவத்திலேயே தமிழின் பெருமையை புரியவைக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் நற்றிணையின் "உலகை வெல்லலாம்".

ஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் செம்மைத் தமிழால் முழங்க வேண்டும். வார இறுதியில் சிறந்த மாணவருக்கு பரிசுகளை அள்ளி வழங்க வேண்டும். இதன்மூலம் செம்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கும்  எடுத்துச் செல்ல வேண்டும்.

எனவே உங்கள் வீட்டில் மற்றும் அருகாமையில் உள்ள மாணவர்களை இதில் பங்குபெற ஊக்குவியுங்கள்.

நமக்கெதற்கு -என்று ஒதுங்குவதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. தாய்த் தமிழுக்கு செய்யும் சேவை தாய்க்குச் செய்யும் சேவைக்கு நிகரானது என்பதை உணர்ந்து தாய்மொழி காப்போம். தலைமுறைகளுக்கும் உணர்த்துவோம்.

மேலும் விபரங்களுக்கு

http://www.natrinai.org/2018/01/31/ulagai-vellalaam/

நன்றி

No comments:

Post a Comment