NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 28 February 2018

டவர் சிக்னலில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஏர்செல் நிறுவன சிஇஒ சங்கரநாராயணன் அறிவிப்பு



ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவன சி.. தெரிவித்துள்ளார்.

கடன் சுமையால் தத்தளித்து வருவதால் ஏர்செல் நிறுவனத்தின் சேவைகள்நிறுத்தப்படவுள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அதற்குக் காரணம் கடந்த வாரம் பல இடங்களில் ஏர்செல் நிறுவன சேவைகள் கிடைக்கவில்லை என்பதுதான். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், கடன் சுமை இருப்பது உண்மைதான்; அதற்காக சேவை நிறுத்தப்படவில்லை. செல்போன் டவர் உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே சேவை தடைபட்டது என்று கூறி சேவையை மீண்டும் வழங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவன தென்னிந்திய சிஇஓ சங்கரநாராயணன் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ‘செல்போன் கோபுரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் மீண்டும் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் சேவை முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் முடங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment