தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 17 February 2018

இரயில்வேத்துறையில் வேலைவாய்ப்பு

நன்பன் 1- மாப்ள ஏதோ #இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே டா?
 நன்பன் 2- அட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா...?
இல்ல மாப்ள விண்ணப்பம் எங்க வாங்கனும், தபாலில் அனுப்பனுமா..?
நன்பன் 1-    இரயில்வேக்கும் #TNPSC மாதிரிதான் ONLINE லதான் விண்ணப்பிக்க முடியும்.
நன்பன் 2- எந்த தளத்துல மாப்ள விண்ணப்பிக்குறது...?
   
நன்பன் 1- www.rrbchennai.gov.in இது மட்டுமே அதிகாரப்பூர்வமான இணைய பக்கம்.
நன்பன் 2-சரி எவ்ளோ நாள் வரைக்கும் மாப்ள விண்ணப்பிக்கலாம்...?
     10ம் வகுப்பு தகுதிக்கு 12/3/18 வரையும்(CEN 02/2018) ,டிப்ளமோ-இஞ்சினியர்-ஐடிஐ தகுதிக்கு 05/3/18 வரையும்(CEN 01/2018) விண்ணப்பிக்கலாம்.
நன்பன் 1- மாப்ள நான் #ஐடிஐ படிச்சிருக்கேன் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாமா..?
  
  நன்பன் 2-       கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.இரண்டுமே தனித்தனி தேர்வுகள். ஒருவரே இரண்டு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.இரண்டு தேர்வும் வெவ்வேறு தினங்களில் தான் நடக்கும்.
நன்பன் 1-நல்லது மாப்ள  விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் செலுத்தனும் ...?
நன்பன் 2-         பொதுவாக--500ரூ, பெண்கள்,SC/ST, பிற்பட்ட வகுப்பினருக்கு --250ரூ. நீங்கள் OBC ஆக இருந்தாலும் உங்களால் இன்னும் ஆறு மாதத்தில் #வருமான_சான்றிதழ் 50000ரூ க்குள் பெற முடியுமானால் நீங்கள் ECONOMICALLY BACKWARD CLASS என்று கொடுத்து, 250ரூ செலுத்தினால் போதும்.
நன்பன் 1- சரி மாப்ள விண்ணப்பிக்க என்னென்ன #சான்றிதழ்கள் தேவை?
    
நன்பன் 2-  எந்த சான்றிதழும் #தேவை_இல்ல மச்சா( SC/ST தவிர), 

நன்பன் 1-நாம தேர்வுல வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது மட்டுமே சான்றிதழ்கள் தேவை.

நன்பன் 2-அட அப்ப விண்ணப்பிக்கிறது ரொம்ப சுலபமா போச்சு மாப்ள.இன்னொரு சந்தேகம் இருக்கு நான் MBC, மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கனும்னா #OBC சான்றிதழ் தேவைனு சொல்லுறாங்களே...?
நன்பன் 1-       வேனும்தான் மச்சா, ஆனா இப்ப தேவை இல்ல தேர்வு லாம் முடிந்து நீ வெற்றி பெற்று கடைசியா சான்றிதழ் சரிபார்ப்பு சமயத்துல நீ கண்டிப்பாக கொண்டு சென்றால் போதும்.
நன்பன் 2-அட நீ இப்படி சொல்ற மாப்ள ஆனா இணையத்துல விண்ணப்பிக்கும்போது  OBCல CREAMY LAYERஆ/ NON CREAMY LAYER ஆ னு கேக்குதே?
     நன்பன் 1-       நல்ல கேள்வி கேட்ட மச்சா, நாமெல்லாம் #NON_CREAMY_LAYER தான், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் அதிக உள்ளவங்க தான் CREAMY LAYER. இங்கே நீ கவனமா விண்ணப்பிக்கனும் தவறுதலாக நீ CREAMY LAYER னு குடுத்தீன்னா உனக்கு #OBC_சலுகைகள் கிடைக்காது.

நன்பன் 2- நல்ல வேளை நீ சொன்னீயே மாப்ள. சரி எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..?
நன்பன் 1-         10ம் வகுப்பு தகுதி பணிக்கு 33வயது (OBC)  வரையும் , டிப்ளமோ-இஞ்சினியர் தகுதி #LOCOPILOT பணிக்கு 31 வயது (OBC) வரையும் விண்ணப்பிக்கலாம்.
நன்பன் 2-சரி மாப்ள நான் தேர்வுல பாஸ் பன்னுனதற்கு பிறகு என்ன தூக்கி #டெல்லி___பீகார் பக்கம் போட்றுவாங்களா....?
    
நன்பன் 1-     இப்படிலாம் உனக்கு யாரு மச்சான் சொன்னான்.

நன்பன் 2-இந்திய இரயில்வே வை #17_மண்டலங்கலா பிரிச்சிருக்காங்க, நம்ம தமிழகம் தெற்கு இரயில்வே (SR) வில் வருகிறது.நீ விண்ணப்பிக்கும் போதே SOUTHERN RAILWAY #RRB_CHENNAI க்கு விண்ணப்பிச்சீனா, உனக்கு #வேலையும் கண்டிப்பாக தமிழகத்தில் தான் கிடைக்கும்.

நன்பன் 1-முக்கியமான கேள்வி மாப்ள, எனக்கு #ஹிந்தி_இங்கிலீஷ் லாம் தெரியாது, தேர்வ எப்புடி எழுதுறது?

 நன்பன் 2-      மச்சான் நம்ம #தாய்மொழி_தமிழ் ல தேர்வு எழுதலாம் டா, இது மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டம்.

நன்பன் 1-அப்ப சூப்பர் மாப்ள நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்.என்ன படிக்கனும்..?? எத்தனை கேள்விகள் வரும் னு ??மட்டும் சொல்லிடு..நான் படிக்க துவங்கிடுறேன்.
 
   நன்பன் 2-    #பொதுஅறிவு___கணிதம் மட்டும் பார்த்தா போதும், #100கேள்விகள் வரும் #90நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
நல்ல தகவல்லாம் சொன்ன நன்றி மாப்ள.

நன்பன் 1-நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்..

 நன்பன் 2-        சரி மச்சான், தேர்வில் வெற்றி கிட்டட்டும்..

நன்பன் 1-விண்ணப்பிக்க போகும்போது உன் #புகைப்படும் மட்டும் 20-45KB க்குள்ள #ஸ்கேன் பன்னிட்டு போ, வேற எந்த ஆவணங்களோ கையெழுத்தோ ஸ்கேன் செய்ய #தேவையில்லை.
                                                                                                              

No comments:

Post a Comment