வாழையின் மருத்துவ குணங்களும், அதன் பயன்களும்
👉 உடல் நலத்திற்கு உதவும் பண்பும், அதிக லாபம் தரக் கூடியதாகவும் உள்ளது வாழை மரம். வாழையில் உள்ள பூ, தண்டு, இலை, காய், கனி என அனைத்தும் நன்மை தருவதாகவே உள்ளது. அது பற்றி காண்போம்.
வாழைப்பழம் :
🍌 ஒரு வாழைப்பழத்தில் 75 சதவீதம் நீர்ச்சத்தும், 25 சதவீதம் திடப்பொருளும் உள்ளன.
🍌 ஆப்பிள் பழத்துடன் ஒப்பிடுகையில் வாழையில் நான்கு மடங்கு புரதம், இரண்டு மடங்கு மாவுச்சத்து, மூன்று மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்பு சத்துகள், இரண்டு மடங்கு மற்ற வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உள்ளன.
🍌 தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் உணவு மண்டல கோளாறுகள் வராமல் தடுக்க முடியும். வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் என்ற புரதச்சத்து இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பும், மனதிற்கு நிம்மதியும் அளிக்க வல்லது.
🍌 பல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் செவ்வாழைப்பழம் சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.
🍌 உடல் சு+ட்டைத் தணிக்க பு+வன், ரஸ்தாளி ஆகியவற்றை சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும்.
🍌 வாழைக்காயை மற்ற காய்கறிகள் போல் அனைவரும் அதிக அளவில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
🍌 இந்த பழங்கள் இனிப்பு சுவையின்றி அதிக மாவுச்சத்தை கொண்டுள்ளது.
🍌 மொந்தன், நேந்திரம், சாம்பல் நிற மொந்தன், வயல் வாழை ஆகிய ரகங்களை காயாக உபயோகப்படுத்தலாம்.
🍌 வாழைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் பொடி, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய தன்மை கொண்டது.
🍌 இதை சிறு குழந்தைகளுக்கு சத்துமாவு போல் இணை உணவில் கலந்து கொடுத்தால் உடனடி சக்தியை கிடைக்க செய்யலாம்.
வாழைப்பூ :
🎋 வாழைப்பு+க்கள் நம் உணவில் சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ தேவைகளை பு+ர்த்தி செய்கிறது.
🎋 வாழைப்ப்பூக்களில் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் ஆகிய தாதுச்சத்துகள், நார்ச்சத்துக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.
🎋 சர்க்கரை நோய், இருதய நோய், மூச்சுக்குழாய் கோளாறு, அதிக உடல் பருமன், வயிற்றுப்புண் கோளாறு ஆகிய நோய்கள் வாழைப்பூவை தொடர்ந்து உண்பதன் மூலம் குணமாகும்.
COMMENTS