NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 10 May 2018

சுவையான காரட் இட்லி செய்வது எப்படி

காரட் இட்லி

தேவையான பொருட்கள்:

1. வெங்காயம் (நறுக்கியது) – 1/2 கப்

2. காரட் (துருவியது) – 1/2 கப்

3. கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க

4. பச்சைக் கொத்தமல்லி – சிறிதளவு

5. உப்பு – தேவையான அளவு

6. மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

7. கறிமசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

8. துருவிய சீஸ் – 1/4 கப்

9. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

10. இட்லி மாவு – தேவைக்கேற்ப

செய்முறை :

1. முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

2. அத்துடன் மிளகாய் தூள், மசாலா தூள், துருவிய சீஸ் சேர்த்து பச்சைக் கொத்தமல்லி, உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.

3. இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும்.

4. இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.

வேக வைத்து எடுத்தால், ருசியான காரட் இட்லி தயார்.

No comments:

Post a Comment