தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 July 2018

வட போச்சே: போலி கணக்குகளை நீக்கியதால் 1 லட்சம் ஃபாலோயர்களை இழந்த டிரம்ப்....

வட போச்சே: போலி கணக்குகளை நீக்கியதால் 1 லட்சம் ஃபாலோயர்களை இழந்த டிரம்ப்....

சமூக வலைத்தளங்களில் புரளிகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக  டிவிட்டரில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கடத்தல், நோய், பேரிடர் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக போலியான டிவிட்டர் கணக்குகள் மூலம் பரவும் புரளிகளால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் ஏற்படுவதால், டிவிட்டரை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதன் மூலம் சுமார் 70 லட்சம் போலிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் பல முக்கியத் தலைவர்களின் ஃபாலோயர்கள் குறைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இந்த அளவுக்குக் குறைவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த வகையில் போலியான டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஃபாலோயர்களில் சுமார் ஒரு லட்சம் பேரை இழந்துள்ளார். இதே போல முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 4 லட்சம் ஃபாலோயர்கள் மாயமாகிவிட்டனர்.

இதனால் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் லேசான தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஒரு சிலருக்கு ஃபாலோயர்கள் குறைந்தாலும் போலியான மற்றும் சந்தேகத்துக்கு உரிய டிவிட்டர் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையின் பயனாக சமுதாயத்துக்கு ஒரு சில நன்மைகள் நடந்தால் கூட வரவேற்கத்தக்க விஷயம்தான்.

No comments:

Post a Comment