தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 18 July 2018

ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு !

ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு !
--------------------------------------------------------------------------------------

🔲 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறையில் உள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் பொதுமன்னிப்பில்                            விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில்

▪ இக்கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக அரசினால் பத்தாண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

▪  இதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில் NCHRO அமைப்பும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கின்றது.

▪ இதுவரை ஒரே அறிவிப்பில் அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல கட்டங்களாக ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்ற இதுவரை இல்லாத புதிய நடைமுறையை தற்போதைய தமிழக அரசு கடைபிடித்து வருவது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

▪  இதன்மூலம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

▪ மேலும் தமிழக ஆளுநரின் நேரடி தலையீட்டின் கீழ் நடைபெறுவதாக கூறப்படும் சிறைவாசிகள் விடுதலையில் சிலருக்கு பாரபட்சம் காட்டபடுகின்றதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

▪ எனவே ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் இல்லாத நிலையை ஏற்படுத்தவும் இது குறித்து தமிழக அரசிற்கு வலியுறுத்தும் வண்ணமும்  கலந்துரையாடல் நிகழ்ச்சியை தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு(NCHRO) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌 இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் நம்முடைய பங்களிப்பை செலுத்துமாறு கேட்டுகொள்கின்றோம்.

நாள் : 21.07.2018 சனிக்கிழமை
இடம் : ரிப்போடர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை
நேரம் : காலை 10.30 Am

📞 தொடர்புக்கு :
பேராசிரியர் அ.மார்கஸ்-தேசியதலைவர் ,
NCHRO-94441 20582

வழக்கறிஞர் N முகம்மது ஷாஜகான் -மாநில பொதுச்செயலாளர் , NCHRO-9443977943
National Confederation of Human Rights Organizations-NCHRO
Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal, New Delhi - 110014. Tel: 011-40391642 Mob: 94898 71185, 96 00 222 930

Email: nchromail@gmail.com, www.nchro.org

No comments:

Post a Comment