#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் வாடாவிளக்கில் எண்ணை ஊற்ற உத்தரவு : பக்தர்கள் அதிருப்தி

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் வாடாவிளக்கில் எண்ணை ஊற்ற உத்தரவு : பக்தர்கள் அதிருப்தி

பெரம்பலூர்: பெரம்பலூர்அருகேயுள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் முன்புறமுள்ள வாடாவிளக்கில் நெய், எண்ணை ஊற்றி செல்லலாம் என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுகாளியம்மன் கோயில், பழனி, சமயபுரத்தை போல தங்கத்தேர் அமைந்துள்ள சிறப்புமிக்கது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகும். திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும், புத்தாண்டு, பவுர்ணமி, அமாவாசை தினங்களிலும் திறக்கப்படும். 

இந்நிலையில் பிரபலமான கோயில்களின் பாதுகாப்பு கருதி, திருச்சி மத்தியமண்டல ஐஜி வரதராஜ் உத்தரவின்பேரில் மெட்டல் டிடெக்டர் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கடந்த மாதம் முதல் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலிலும் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருப்பணிகள் கோடிக்கணக்கான மதிப்பில் நடைபெற கடந்த மாதம்  பூஜை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்ற பக்தர்களுக்குத்தடை விதித்து புதிதாக கோயில் நிர்வாகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடுஅரசு இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி, இக்கோயிலில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது ஜூலை 1ம் தேதி முதல் தடைசெய்யப்படுகிறது. தீபம் ஏற்ற விரும்பும் பக்தர்கள் கோயிலில் விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடாவிளக்கில் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றலாம் எனத்தெரிவித்துள்ளார். இது பக்தர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment