NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

துப்பாக்கி உரிமம் பெறலாம்.

துப்பாக்கி உரிமம்

▫Indian Arms Act  ன்படி▫

🔳துப்பாக்கி உரிமம் பெறலாம்.
தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில் உள்ளவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது  தங்களது வருமான வரிச் சான்றிதழ்,  இருப்பிடச் சான்றிதழ் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு), தொழில்ரீதியான விவரங்கள் (பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட்), சொத்து விவரங்கள், அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எஃப்.ஐ.ஆர். நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும். அந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கமிஷனர்/கலெக்டர் அலுவலகத்தின் வாயிலாக விசாரணை நடைபெறும். அவர்களிடம், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் கேட்கப்படும். துப்பாக்கி வாங்க விரும்புபவர் வசிக்கும் பகுதியின் உள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி நேரில் வந்து விசாரிப்பார். இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி வாங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படும். அந்த லைசென்ஸை வைத்து துப்பாக்கி விற்கும் நிறுவனங்களில் துப்பாக்கி வாங்கலாம். துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது ஏற்கெனவே கிரிமினல், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது லைசென்ஸ் மனு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதவிர போலீஸுக்கு வேறு எந்த வகையில் சந்தேகம்  இருந்தாலும் அதன் பெயரிலும் லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன.  ஏர் கன் வகை (Air Gun) துப்பாக்கிகள் வாங்குவதற்கு லைசென்ஸ் எதுவும் தேவையில்லை.

🔳புதிதாக துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்க வேண்டும். அதற்கான லைசென்ஸ் மூன்று  வருட காலத்துக்கு கொடுக்கப்படுகின்றது. அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். அதைப் புதுப்பிக்க கமிஷனர்/ கலெக்டரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் உங்களின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை. உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்  மீது போலீஸுக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

🔳போலீஸ், ராணுவம் போன்றவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி வகைகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதில்லை. அவை தவிர்த்து சிலவகையான துப்பாக்கிகள் மட்டுமே  விற்கப்படுகின்றன. துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற ஒரு நபர் அதிகபட்சம் மூன்று துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். ரிவால்வர் (Revolver),  பிஸ்டல் (Pistol), சிங்கிள் பேரல் கன் (Single Barrel Gun), டூ பேரல் கன் (Two Barrel Gun), சிங்கிள் ரைபிள் (Single Rifle), டபிள் பேரல் ரைபிள் (Double Barrel Rifle) ஆகிய வகைகளில் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஒன்று மட்டுமே வாங்க முடியும். இந்த வகையான துப்பாக்கிகள் ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரையாகும். தோட்டாக்கள் எண்ணிக்கை என்கிற விஷயத்தில் ஒரு வருடத்துக்கு 100 தோட்டாக்கள் வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு.


🔳சென்னை அல்லது தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் துப்பாக்கி லைசென்ஸ்  பெற்று இருந்தால், தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் எடுத்துச் செல்லலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடி, போலீஸ் கமிஷனர்/கலெக்டரின் அனுமதி பெற்றே எடுத்துச் செல்ல வேண்டும்.


🔳தற்காலிகமாக வெளிநாடு போய்வரும் பட்சத்தில் துப்பாக்கியை வாங்கிய இடத்திலோ, அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய அதற்கான லைசென்ஸை காவல் நிலையத்தில் சரண்டர் செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment