தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 14 July 2018

ஆசிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

ஆசிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

*புதுடெல்லி: ஆசிய பணக்காரர்களின் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.*

ஆசிய பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் எண்ணெய் சுத்திகரிப்பு முதல் தொலைத்தொடர்பு வரை பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.6 சதவீதம் உயர்ந்து 4,430 கோடி டாலராக (சுமார் 3 லட்சம் கோடி) உள்ளது.

இதன்மூலம், அலிபாபா நிறுவனங்களில் தலைவர் ஜாக்-மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி. அமெரிக்க வர்த்தக முடிவில் ஜாக்-மாவின் சொத்து மதிப்பு 4,400 கோடி டாலராக (சுமார்2.99 லட்சம் கோடி) என அலிபாபா நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. பெட்ரோலிய சேமிப்பு திறன் அதிகரிப்பு மற்றும் ஜியோ அசுர வளர்ச்சியால் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 400 கோடி டாலராக (சுமார் 27,200 கோடி) அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment