NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை, ஒருவர் உயிரிழப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை, ஒருவர் உயிரிழப்பு

🔸🔹தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், சென்னையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

🔸🔹சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது சென்னை, தாம்பரம், மீனம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

🔸🔹சூளைமேட்டைச் சேர்ந்த அரிகரராஜன் என்பவர் நேற்று இரவு மழை பெய்த நிலையில், வீட்டின் கேட்டைத் திறக்க முயன்ற போது, அதில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் உயிரிழந்தார். 

🔸🔹காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலையில் அதிக மேகமூட்டம் உருவான நிலையில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எதிர்பாராத பலத்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

🔸🔹திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக சாரல் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

🔸🔹இதனிடையே தமிழகத்தின் பல இடங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment