ஒருங்கிணைந்த பண்ணை: திருச்சியில் ஆக.14இல் இலவச பயிற்சி வகுப்பு
திருச்சியில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கால்நடைபல்கலைக் கழக பயிற்சி மையத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 14ஆம்தேதி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
கால்நடை வளர்ப்புடன் மற்றொரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
ஆட்டுக்கொட்டகையுடன் நாட்டுக்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழியுடன் அசோலா வளர்ப்பு, கறவை மாடுகளுடன் மண்புழு உரம் தயாரித்தல், முயல் மற்றும் தீவனமரம் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள், கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS