கருணாநிதியின் உடல் அடக்கம் குறித்து தலைமை கழகம்
சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல், நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து இன்று மாலையே அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா, பெரியார் சிலைகளை ஆகியவற்றை கடந்து அண்ணா சதுக்கம் சென்றடையும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும் இறுதி ஊர்வலம் நடந்து முடியும் வரை தொண்டர்கள் அமைதி காக்கும்படி திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
COMMENTS