பொன்னமராவதி செப்-22
பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பி.எல்.கே. ரத்னா மகாலில் ரத்னா பவுண்டேசன் மற்றும் மக்கள் பாதை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பி.எல்.கே ரத்னா மகாலில் வலையப்பட்டி ரத்னா பவுண்டேசன், பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை, கோவை கே.ஜி. மருத்துவமனை மற்றும் கோவிலூர் காணலின் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தியது. இம்முகாமிற்கு வலையப்பட்டி ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன் தலைமை வகித்து துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார். ரத்னா குழும நிர்வாக இயக்குனர் திருமதி சித்ரா பழனியப்பன், இருதய சிகிச்சை நிபுணர் முத்தையா சுப்பிரமணியன், கோவை கே.ஜி மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராவ், வர்மா, மருத்துவர்கள் காணல் கோவிலூர் கண் மருத்துவமனை மருத்துவர் தெய்வா ஆகியோர் குத்துவிளக்கேற்றிவைத்து முகாமினை துவக்கினார். முகாமில் இருதய சிகிச்சை, சிறுநீரகம், மூளை நரம்பியல், கல்லீரல் குடல் நோய், எலும்பு முறிவு சிகிச்சை, இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை ஈ.சி.ஜி. நுரையீரல் செயல்திறன் பரிசோதனை சர்க்கரை, எக்கோ, பைப்ரோ ஸ்கேன், பிசியோ தெரப்பி, உணவு ஆலோசனை மற்றும் கண் சிகிச்சை என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பொன்னமராவதி ஒன்றியப்பகுதியில் சுமார் 471 பயணாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
இம்முகாமில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடத்தி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை நோய் அதிக நபர்களுக்கு இருப்பது தெரிய வந்தது. மேலும் சுமார் 15 சதவிகிதம் பேர் கோவை கே.ஜி. மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இனி நடத்தப்படும் முகாம்களில் இரண்டு சிறப்பு தனி மருத்துவ சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்முகாமில் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படும் என்றும் பொதுவாக நடக்கும் முகாம்களை விட இனி நடத்தப்படும் முகாமில் மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் அவை குணமடைய மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படும் என்றும் முகாமில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இம்முகாமில் மருத்துவர்கள் சிறுநீரக சிகிச்சை நிபுணர் ராமசாமி சேதுராமன், கல்லிரல் மற்றும் குடல் நோய் சிகிச்சை நிபுணர் கிருபாகரன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் அனில்குமார் பொது மருத்துவர் பல்லவி சுக்லா, மருத்துவ குழு மேலாளர்கள் பாலு, ரகுராம் மற்றும் கோவிலூர் காணல் கண் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் களப்பணிகளை வலையப்பட்டி ரத்னா மேலாளர் செந்தில், பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சமூகப்பணிகள் செய்தனர், முகாம் முடிவில் ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன் நன்றி கூறினார்.
☎
படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை #மாவட்டம்
#பொன்னமராவதி #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை #மாவட்டம்
#பொன்னமராவதி #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI
COMMENTS