பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த கால்ப்பந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா..
பொன்னமராவதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்றுள்ளது. பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து திருவிழா என்ற பெயரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு நிலவளவங்கித்தலைவர் பழனியாண்டி தலைமைவகித்தார். தொழிலதிபர் ஜெயராமன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஜெபநேசர், ஆசிரியர் ஜோசப்ரவிக்குமார், இறகுப்பந்துக்கழக தலைவர் முகமதுஅப்துல்லா ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்தப்போட்டியினை டாக்டர் சின்னப்பா தொடங்கிவைத்தார். இதில் , புதுக்கோட்டை, பொன்னமராவதி, பாலகுறிச்சி, மணப்பாறை, திருச்சி, விராலிமலை, சேலம்,கண்டனூர் ஆகிய 8அணிகள் விளையாடினர். இதில் திருச்சி அணியினர் முதல்; பரிசும், சேலம் அணியினர் இரண்டாம் பரிசும், சிவகங்கை கண்டனூர்
அணியினர் மூன்றாம் பரிசும், பாலக்குறிச்சி அணியினர் 4வது பரிசும் பெற்றனர். சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற அணியினருக்கு கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஜெயராமன், சேதுராமன் பெட்ரோல் பங்க் மேலாளர் முத்து, பேராசிரியர் பழனியப்பன், தொழிலதிபர்கள் மூக்கையா,ஜாகீர்உசேன், டாக்டர்கள் செந்தமிழ்ச்செல்வி, நடராஜன் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் சொக்கலிங்கம், வில்லியம்ஸ், பாலுச்சாமி, மாநில கால்பந்தாட்ட வீரர் கறம்பக்குடி கணேசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் கதிரேசன், சிந்து, காமராஜ், சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், ராமசாமி, பழனிச்சாமி, ராஜாமுகமது உட்பட பலர் கலந்துகொண்டனர்.
COMMENTS