உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி”
திருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கம் இணைந்து நடத்திய ‘உலக இருதய தின வாக்கத்தான் பேரணி” பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் இ.ஆ.ப மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘வாக்கத்தான் பேரணியை’ கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட 3000ன் ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.பொன்மலர், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.செந்தில்குமார் (எ.டி.எம்.எஸ்) மூத்த இருதய சிகிச்சை நிபுணர் என்.செந்தில்குமார் இருதய சிகிச்சை நிபுணர் விக்னேஷ்வரன் எம்.வெங்கட தேவநாதன், துணைப் பொதுமேலாளர் எஸ்.அருண் மேலாளர் கோபிநாத், குழந்தைகள் பிறப்பு சிகிச்சை நிபுணர் எல்.கே.செந்தில்குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.இராமர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியினை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி, பொருளாளர் சி.பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், ஆர்.எம்.துரைமணி, பி.அசோகன், ஜி.முருகராஜ், வி.என்.செந்தில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் வி.தனவேந்தன், துணை ஆளுநர் (2019-2020) எஸ்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள், இச்சடி என்.எம்.பாலிடெக்னிக் மாணவர்கள், டாக்டர்ஸ் கல்லூரி மாணவிகள், எஸ்.ஆர்.எம். கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள், சாய்பாலாஜி கேட்டரிங் காலேஜ் மாணவர்கள், கிங்ஸ் கேட்டரிங் காலேஜ் மாணவிகள், சுபபாரதி கல்லூரி மாணவர்கள், மகாத்மா கல்லூரி மாணவர்கள், கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரி மாணவர்கள், செந்தூரான் கல்லூரி மாணவர்கள், எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள், ரோட்டிராக்ட் மாணவர்கள், மாமன்னர் கல்லூரி மாணவர்கள், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செவிலியர்கள் ஆகிய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 17 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர். பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி அண்ணாசிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. நிறைவாக சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.
படம் : பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
‘
COMMENTS