NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 22 October 2018

தினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள். அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப்பாக இருக்கும்.

தினமும் காலண்டர் காண்பிக்கப்படும்  கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள். அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப்பாக இருக்கும்.

பொதுவாக நட்சத்திரங்களின் அடிப்படையில் தான் இந்நாள் மேல்நோக்கு நாள், இந்நாள் கீழ்நோக்கு நாள் என்று வந்ததாக கூறப்படுகிறது.

மேல்நோக்கு நாள் :

உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. அதாவது கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது போன்று மேல்நோக்கி வரக்கூடிய வேலைகளை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள் :

கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது கிணறு தோண்ட ஆரம்பிப்பது, போர் போடுவது, சுரங்கம் தோண்டுவது என கீழ் வரக்கூடிய பணிகளை செய்யலாம்.

சமநோக்கு நாள் :

அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் சமமாக செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது சாலை அமைப்பது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்ற வேலைகளை செய்யலாம்.

No comments:

Post a Comment