பொன்னமராவதி அக்-26
பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில்
ஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதி சேவை மாத விழா நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாதத்தின் 26 தேதியன்று கொப்பனாப்பட்டியில் சங்கம் தொடங்கப்பட்டது. மற்ற நாட்களில் சேவை செய்தாலும் கூட இந்த 26 ஆம் தேதியில் பிரத்தியேகமாக சேவை செய்யும் விழாவாக கருதவேண்டும் என்று சைன் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி கண்டவராயன்பட்டியில் உள்ள ட்ரூபா முதியோர் இல்லத்திற்கு 1மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து மற்றும் திருமதி.தமிழ்ச்செல்விமாரிமுத்து ஆகியோர் தலைமையில் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சங்கத்தின் முதல் நிலைத்தலைவரும், செம்பூதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவருமாகிய லயன் சிங்காரம், பொருளாளர் லயன்.வி.கிரிதரன் லயன்.ஜியாவுதீன், பொறியாளர் லயன்.பவளம்,ஜெ.ஜெ.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உரிமையாளர் பொறியாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது..
COMMENTS