பொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டி மாணவ மாணவியர் மண்டல அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவன் P.சந்தோஷ் குமார், எட்டாம் வகுப்பு மாணவி J.ஜெனிஃபா பத்ம சாராள் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி சத்ய ஸ்ரீ, மாணவன் ஹரிஹரன் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். மணப்பாறையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்வாணன் மூன்றாமிடம் பெற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் களையும், பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு.வீரய்யா, திரு.போஜராஜன் ஆகியோரையும் பள்ளியின் நிறுவனர் மற்றும் சேர்மன் திரு.ஜோசப் சேவியர், தாளாளர் மற்றும் முதல்வர் திருமதி அமலா ஜோசப் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டினர்.


COMMENTS